வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
சேர்த்தெழுதல்
காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

Correct Answer: A [காட்டாறு]

Notes:

காடு + ஆறு = காட்டாறு. நெடில்தொடர்க் குற்றியலுகரத்தின் ‘ட்’ ஒற்று இரட்டித்து (டறவொற்று இரட்டும்), பின் உகரம் கெட்டு, ட் + ஆ = டா எனப் புணர்ந்தது.

2.  
சேர்த்தெழுதுதல்
உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

Correct Answer: B [உள்ளுவதெல்லாம்]

Notes:

உள்ளுவது + எல்லாம் = உள்ளுவதெல்லாம்.

3.  
சேர்த்தெழுதுதல் :
எட்டு + திசை – சேர்த்து எழுதுக

Correct Answer: D [எட்டுத்திசை]

Notes:

எட்டு + திசை = எட்டுத்திசை. எண்ணுப்பெயர்களுள் எட்டு, பத்து ஆகியவற்றின் பின் வரும் வல்லினம் மிகும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு).

4.  
சேர்த்தெழுதுதல்.
‘கட்டி + அடித்தல்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

Correct Answer: B [கட்டியடித்தல்]

Notes:

கட்டி + அடித்தல் = கட்டியடித்தல்.

5.  
சேர்த்தெழுதுதல்
தூக்கி + கொண்டு

Correct Answer: C [தூக்கிக் கொண்டு]

Notes:

தூக்கி + கொண்டு = தூக்கிக் கொண்டு.

6.  
சேர்த்தெழுதுதல்.
நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

Correct Answer: B [நிலவென்று]

Notes:

நிலவு + என்று = நிலவென்று. ‘நிலவு’ முற்றியலுகர ஈறு; உயிர் வரும்போது முற்றியலுகரமும் சில இடங்களில் கெடும் என்ற விதிப்படி உகரம் கெட்டு, வ் + எ = வெ எனப் புணர்ந்தது.

7.  
சேர்த்தெழுதுதல்.
நெடுமை + தேர் – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

Correct Answer: C [நெடுந்தேர்]

Notes:

நெடுமை + தேர் = நெடுந்தேர். பண்புப்பெயர்ப் புணர்ச்சி: ‘மை’ விகுதி கெட்டது (ஈறுபோதல்); நெடு + தேர் – வருமொழி வல்லினத்திற்கு இனமான ‘ந்’ தோன்றியது (இனமிகல்).

8.  
சேர்த்தெழுதுதல்.
பூ + சோலை

Correct Answer: D [பூஞ்சோலை]

Notes:

பூ + சோலை = பூஞ்சோலை. ‘பூ’ என்னும் பெயரின் முன் வல்லினம் வரும்போது இனமான மெல்லெழுத்தும் தோன்றும் – ச என்பதற்கு இனமான ‘ஞ்’ தோன்றியது (பூங்கா, பூஞ்சோலை).

9.  
சேர்த்தெழுதுதல் :
பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

Correct Answer: A [பொங்கலன்று]

Notes:

பொங்கல் + அன்று = பொங்கலன்று. ‘உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ – நிலைமொழி இறுதி மெய் ‘ல்’ உடன் வருமொழி முதல் உயிர் ‘அ’ சேர்ந்து ‘ல’ ஆனது.

10.  
சேர்த்தெழுதுதல்
வான் + ஒலி

Correct Answer: B [வானொலி]

Notes:

வான் + ஒலி = வானொலி. ‘உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ – ன் + ஒ = னொ.

11.  
சேர்த்தெழுதுதல்.
விழித்து + எழும்

Correct Answer: B [விழித்தெழும்]

Notes:

விழித்து + எழும் = விழித்தெழும்.

12.  
சேர்த்தெழுதுக :
தமிழ் + எங்கள்

Correct Answer: B [தமிழெங்கள்]

Notes:

தமிழ் + எங்கள் = தமிழெங்கள். ‘உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ – ழ் + எ = ழெ.

13.  
சேர்த்தெழுதுக:
தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

Correct Answer: A [தம்முயிர்]

Notes:

தம் + உயிர் = தம்முயிர். ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ – ‘தம்’ தனிக்குறிலை அடுத்த ஒற்று ஆதலால் ‘ம்’ இரட்டித்து, ம் + உ = மு எனப் புணர்ந்தது.

14.  
தாம் + இனி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.

Correct Answer: C [தாமினி]

Notes:

தாம் + இனி = தாமினி. ‘தா’ நெடில் ஆதலால் ஒற்று இரட்டாது; ‘உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ – ம் + இ = மி.

15.  
சரியான விடையைத் தேர்க.

Correct Answer: A [கண் + அழகு = கண்ணழகு]

Notes:

கண் + அழகு = கண்ணழகு. ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ – ண் இரட்டித்து ண் + அ = ண.

16.  
சரியான விடையைத் தேர்க.

Correct Answer: A [கண் + உண்டு = கண்ணுண்டு]

Notes:

கண் + உண்டு = கண்ணுண்டு. ‘கண்’ தனிக்குறிலை அடுத்த ஒற்று; வருமொழி முதலில் உயிர் வருவதால் ‘ண்’ இரட்டித்து, ண் + உ = ணு எனப் புணர்ந்தது.

17.  
சரியான விடையைத் தேர்க.

Correct Answer: B [பண் + அழகு – பண்ணழகு]

Notes:

பண் + அழகு = பண்ணழகு – தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்.

18.  
நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

Correct Answer: A [நாடென்ற]

Notes:

நாடு + என்ற = நாடென்ற. ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ – குற்றியலுகரம் கெட்டு, ட் + எ = டெ எனப் புணர்ந்தது.

19.  
நீலம் + வான் – சேர்த்து எழுதுக.

Correct Answer: D [நீலவான்]

Notes:

நீலம் + வான் = நீலவான். நிலைமொழி இறுதி மகர மெய் கெட்டு, இயல்பாகப் புணர்ந்தது (நீலம் + கடல் = நீலக்கடல் என வல்லினம் வரும்போது மிகும்).

20.  
சேர்த்து எழுதுக :
பனி + காற்று

Correct Answer: B [பனிக்காற்று]

Notes:

பனி + காற்று = பனிக்காற்று. நிலைமொழி இகர ஈற்றுப் பெயரின் பின் வருமொழி முதலில் வல்லினம் ‘க’ வருவதால், ‘க்’ மிகுந்து புணர்ந்தது.

21.  
சேர்த்து எழுதுக.
பனை + ஓலை =

Correct Answer: A [பனையோலை]

Notes:

பனை + ஓலை = பனையோலை. ‘இ ஈ ஐ வழி யவ்வும்’ – ஐகார ஈற்றின் முன் உயிர் வர ‘ய்’ உடம்படுமெய் தோன்றி, ய் + ஓ = யோ எனப் புணர்ந்தது.

22.  
பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

Correct Answer: C [பயனிலா]

Notes:

பயன் + இலா = பயனிலா. ‘உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ – ன் + இ = னி.

23.  
சேர்த்து எழுதுக
பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

Correct Answer: B [பருத்தியெல்லாம்]

Notes:

பருத்தி + எல்லாம் = பருத்தியெல்லாம்.

24.  
‘பாட்டு + இருக்கும்’ - என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.

Correct Answer: A [பாட்டிருக்கும்]

Notes:

பாட்டு + இருக்கும் = பாட்டிருக்கும்.

25.  
பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

Correct Answer: B [பாலூறும்]

Notes:

பால் + ஊறும் = பாலூறும். ‘உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ – ல் + ஊ = லூ.

26.  
பின்வரும் வாக்கியங்களுள் சந்திப் பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக.

Correct Answer: B [மெய்க்கீர்த்திகள் புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை.]

Notes:

‘எழுதப்பட்டுக் கல்தச்சர்களால்’ – வன்தொடர்க் குற்றியலுகர வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.

27.  
பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் தொடர்

Correct Answer: C [எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது]

Notes:

எட்டு, பத்து ஆகிய எண்ணுப்பெயர்களின் பின் வல்லினம் மிகும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு); எனவே ‘மிகாது’ என்பது தவறான செய்தி.

28.  
பிழைதிருத்தம்
சந்திப் பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக.

Correct Answer: A [காலத்தை ஆராய்ந்து அறிந்து கொண்டால் நிகழ்காலத்தைச் செம்மைப்படுத்திக் கொள்ளலாம்.]

Notes:

‘நிகழ்காலத்தைச் செம்மை’ – ஐ உருபின் பின் வல்லினம் மிகும்.

29.  
பிழை திருத்தம்
சந்திப் பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக.
1. பிறநாட்டுச் சிற்பங்களைக் காட்டிலும் தமிழகச் சிற்பங்கள் தனித்தன்மையுடன் திகழ்கின்றன.
2. பிறநாட்டுச் சிற்பங்களை காட்டிலும் தமிழக சிற்பங்கள் தனிதன்மையுடன் திகழ்கின்றன.
3. முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களைப் புடைப்புச் சிற்பங்கள் எனலாம்.
4. முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்களை புடைப்புச் சிற்பங்கள் எனலாம்.

Correct Answer: A [1 மற்றும் 3]

Notes:

(1) ‘சிற்பங்களைக் காட்டிலும்’, ‘தமிழகச் சிற்பங்கள்’, ‘தனித்தன்மை’ – சரி.

30.  
பிழை திருத்தம் – சந்திப்பிழையை நீக்குக.
தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்

Correct Answer: A [சிக்கனமாகப் பயன்படுத்துவேன்]

Notes:

‘சிக்கனமாகப் பயன்படுத்துவேன்’ – ‘ஆக’ என்னும் அகர ஈற்றின் பின் வல்லினம் மிகும்.

31.  
பிழையை நீக்கி எழுதுக :
நல்ல தமிழுக்கு எழுதுவோம்

Correct Answer: B [தமிழில்]

Notes:

‘தமிழுக்கு எழுதுவோம்’ என்பது வேற்றுமை உருபுப் பிழை.

32.  
‘மானம் + இல்லா’ – என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

Correct Answer: B [மானமில்லா]

Notes:

மானம் + இல்லா = மானமில்லா. ‘உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ – ம் + இ = மி.

33.  
முதுமை + மொழி : சேர்த்து எழுதும் போது கிடைக்கும் சொல் அறிக.

Correct Answer: A [முதுமொழி]

Notes:

முதுமை + மொழி = முதுமொழி. பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் ‘மை’ விகுதி கெட்டது (ஈறுபோதல்).

34.  
சேர்த்து எழுதுக.
முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

Correct Answer: D [முத்துச்சுடர்]

Notes:

முத்து + சுடர் = முத்துச்சுடர்.

35.  
வட்டு + ஆடினான் என்பதைச் சேர்த்தெழுதுக.

Correct Answer: C [வட்டாடினான்]

Notes:

வட்டு + ஆடினான் = வட்டாடினான்.

36.  
வல்லினம் மிகா இடத்தைக் காண்க.

Correct Answer: A [குடி தண்ணீர்]

Notes:

‘குடிதண்ணீர்’ – வினைத்தொகை; வினைத்தொகையில் வல்லினம் மிகாது (ஊறுகாய், சுடுசோறு).

37.  
வல்லினம் மிகும் மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக.
(a) பாலை பாடினான் – 1. தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்
(b) பாலைப் பாடினான் – 2. தேரினைப் பார்த்தான்
(c) தேரை பார்த்தான் – 3. பாலினைப் பாடினான்
(d) தேரைப் பார்த்தான் – 4. பாலைத் திணை பாடினான்

Correct Answer: C [4 3 1 2]

Notes:

‘பாலைப் பாடினான்’, ‘தேரைப் பார்த்தான்’ – பால் + ஐ, தேர் + ஐ; இரண்டாம் வேற்றுமை உருபின் பின் வல்லினம் மிகும்.

38.  
‘வாசல் + அலங்காரம்’– என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

Correct Answer: C [வாசலலங்காரம்]

Notes:

வாசல் + அலங்காரம் = வாசலலங்காரம்.

39.  
‘வானம் + அறிந்த’ – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

Correct Answer: C [வானமறிந்த]

Notes:

வானம் + அறிந்த = வானமறிந்த. ‘உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’ – ம் + அ = ம எனப் புணர்ந்தது.

40.  
வாழை + இலை – சேர்த்தெழுதுக.

Correct Answer: D [வாழையிலை]

Notes:

வாழை + இலை = வாழையிலை. ‘இ ஈ ஐ வழி யவ்வும்’ – ஐகார ஈற்றின் முன் உயிர் வர ‘ய்’ உடம்படுமெய் தோன்றி, ய் + இ = யி எனப் புணர்ந்தது.

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0