வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க.
Correct Answer: A [ஆற்றங்கரை - சாயக்கறை]
Notes:
ஆற்றங்கரை (இடையின ர – ஓரம்), சாயக்கறை (வல்லின ற – அழுக்கு) இரண்டும் சரியானவை.
2.
ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல் :
அமைதியான _____ தேவை.
அமைதியான _____ தேவை.
Correct Answer: C [உறக்கம்]
Notes:
உறக்கம் (வல்லின ற) = தூக்கம். துறக்கம் = சுவர்க்கம் (வானுலகம்); ‘உரக்கம்’, ‘துரக்கம்’ என்பவை இங்குப் பொருந்தாத வடிவங்கள்.
3.
ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல். சரியான தொடரைத் தேர்க.
Correct Answer: A [கார் பருவத்தில் நன்றாக விளைந்தும், தானியங்களின் விலை குறையாமல் இருந்தது]
Notes:
பருவம் (ர), நன்றாக (ன்ற), தானியம் (ன), விளைந்தும் (ள), குறையாமல் (ற), இருந்தது (ர) – இவை அனைத்தும் சரியாக அமைந்த தொடர் இதுவே.
4.
ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல்
மன _____ தீர்வாகாது.
மன _____ தீர்வாகாது.
Correct Answer: B [உளைச்சல்]
Notes:
உளைச்சல் என்பது மன வேதனை, மனத் துன்பம் என்னும் பொருளுடையது; ‘மன உளைச்சல்’ என்பதே வழக்கு.
5.
ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து சரியான இணையைத் தேர்வு செய்க.
‘இளை–இழை’
‘இளை–இழை’
Correct Answer: A [மெலிந்து போதல் – நூல் இழை]
Notes:
இளை = மெலிந்து போதல் (இளைத்தல்); இழை = நூல் இழை (மெல்லிய நூல்).
6.
ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து தவறான இணையைக் கண்டறிக.
Correct Answer: B [மன்னரிடம் இருப்பது – வால்]
Notes:
வால் = விலங்கின் உறுப்பு (குரங்கின் வால்); வாள் = போர்க்கருவி (மன்னனின் வாள்).
7.
ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து சரியான சொல்லைத் தேர்ந்தெடு
ஆணி – ஆனி
ஆணி – ஆனி
Correct Answer: A [எழுத்தாணி – மாதம்]
Notes:
ஆணி = எழுத்தாணி, இரும்பாணி; ஆனி = தமிழ் மாதங்களுள் மூன்றாவது மாதம் (சித்திரை, வைகாசி, ஆனி).
8.
ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிந்து சரியான சொல்லைத் தேர்ந்தெடு :
திண் – தின்
திண் – தின்
Correct Answer: B [வலிமை – உண்]
Notes:
திண் = வலிமை (திண்மை, திண்ணிய தோள்); தின் = உண் (தின்னுதல்).
9.
ஒலி மற்றும் பொருள் வேறுபாடு.
இராமன் _____ எய்தான்.
இராமன் _____ எய்தான்.
Correct Answer: A [கணை]
Notes:
கணை = அம்பு; எனவே ‘இராமன் கணை எய்தான்’ என்பதே பொருத்தம்.
10.
ஒலி வேறுபாடறிந்து பொருள் அறிக.
Correct Answer: A [வயலில் களை எடுத்தனர்]
Notes:
களை = பயிருக்கு இடையே வளரும் தேவையற்ற செடி; ‘களை எடுத்தல்’ = அவற்றை நீக்குதல்.
11.
ஒலி வேறுபாடறிந்து சரியான இணையைத் தேர்வு செய் :
மரை – மறை
மரை – மறை
Correct Answer: C [தாமரை – மறைத்தல்]
Notes:
மரை = தாமரை; மரை என்பதற்கு மான் வகை என்ற பொருளும் உண்டு.
12.
ஒலி வேறுபாடறிந்து சரியான தொடரை எழுது
Correct Answer: A [வானில் வாணம் வெடித்தது]
Notes:
வானம் = ஆகாயம்; வாணம் = வெடிக்கும் வாண வேடிக்கை (பட்டாசு).
13.
ஒலி வேறுபாடறிந்து சரியான தொடரைக் கண்டறிக :
Correct Answer: C [தோட்டத்தில் மலர்கள் மணம் வீசியதால் மனம் மகிழ்ந்தது]
Notes:
மணம் = நறுமணம், வாசனை; மனம் = உள்ளம்.
14.
ஒலி வேறுபாடறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க :
(a) அளை – 1. இளைத்தல்
(b) களை – 2. நீக்கு
(c) தளை – 3. புற்று
(d) இளை – 4. விலங்கு
(a) அளை – 1. இளைத்தல்
(b) களை – 2. நீக்கு
(c) தளை – 3. புற்று
(d) இளை – 4. விலங்கு
Correct Answer: C [3 2 4 1]
Notes:
அளை = புற்று (பாம்பு வாழும் இடம்), களை = நீக்கு, தளை = விலங்கு (கட்டு), இளை = இளைத்தல்.
15.
ஒலி வேறுபாடறிந்து பொருத்துக :
(a) களை – 1. விலங்கு
(b) கழை – 2. தழைத்தல்
(c) தளை – 3. மூங்கில்
(d) தழை – 4. நீக்கு
(a) களை – 1. விலங்கு
(b) கழை – 2. தழைத்தல்
(c) தளை – 3. மூங்கில்
(d) தழை – 4. நீக்கு
Correct Answer: A [4 3 1 2]
Notes:
களை = நீக்கு, கழை = மூங்கில், தளை = விலங்கு (கட்டு), தழை = தழைத்தல் (செழித்து வளர்தல்).
16.
ஒலி வேறுபாடறிந்து பொருத்துக :
(a) வலை – 1. பொந்து
(b) வளை – 2. மீன்வகை
(c) வாளை – 3. மரவகை
(d) வாழை – 4. மீன்பிடி வலை
(a) வலை – 1. பொந்து
(b) வளை – 2. மீன்வகை
(c) வாளை – 3. மரவகை
(d) வாழை – 4. மீன்பிடி வலை
Correct Answer: C [4 1 2 3]
Notes:
வலை = மீன்பிடி வலை, வளை = பொந்து (எலி, நண்டு வாழும் இடம்), வாளை = மீன்வகை, வாழை = மரவகை.
17.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்.
சூல், சூழ், சூள்
சூல், சூழ், சூள்
Correct Answer: A [கருப்பம், சுற்று, சபதம்]
Notes:
சூல் = கருப்பம், சூழ் = சுற்று (சூழ்தல்), சூள் = சபதம், ஆணை.
18.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைக் கண்டறிக
பரவை – பறவை
பரவை – பறவை
Correct Answer: D [கடல் – புள்]
Notes:
பரவை = கடல்; பறவை = புள். கடலுக்கு ஆழி, முந்நீர் போன்ற பெயர்களும் உண்டு.
19.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
அரை – அறை
அரை – அறை
Correct Answer: B [பாதி – அறைதல்]
Notes:
அரை = பாதி; அறை = அறைதல் (அடித்தல்), வீட்டின் ஒரு பகுதி.
20.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
ஆணை – ஆனை
ஆணை – ஆனை
Correct Answer: B [கட்டளை – யானை]
Notes:
ஆணை = கட்டளை; ஆனை = யானை. ண – ன வேறுபாட்டால் பொருள் மாறுகிறது.
21.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
இர – இற
இர – இற
Correct Answer: C [இரப்பு – இறப்பு]
Notes:
இர = இரத்தல் (பிச்சை கேட்டல்) – இரப்பு; இற = இறத்தல் (சாதல்) – இறப்பு.
22.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
எரி – எறி
எரி – எறி
Correct Answer: C [தீ – வீசு]
Notes:
எரி = தீ (எரிதல்); எறி = வீசு (கல்லை எறிந்தான்).
23.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
கரை – கறை
கரை – கறை
Correct Answer: C [ஓரம் – அழுக்கு]
Notes:
கரை = ஓரம் (ஆற்றங்கரை, குளக்கரை); கறை = அழுக்கு, மாசு, களங்கம்.
24.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
குரவர் – குறவர்
குரவர் – குறவர்
Correct Answer: B [ஆசிரியர் – ஓர் இனத்தார்]
Notes:
குரவர் = ஆசிரியர், பெரியோர் (ஐம்பெருங்குரவர்); குறவர் = குறிஞ்சி நில மக்கள் (ஓர் இனத்தார்).
25.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
மாரி, மாறி
மாரி, மாறி
Correct Answer: C [மழை, வேறு]
Notes:
மாரி = மழை (மாரிக்காலம் = மழைக்காலம்); மாறி = வேறுபட்டு, மாறுபட்டு (மாறுதல்).
26.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
வலை – வளை – வழை
வலை – வளை – வழை
Correct Answer: A [சிலந்தி வாழிடம், துவாரம், புன்னை மரம்]
Notes:
வலை = சிலந்தி வாழிடம் (சிலந்தி வலை), வளை = துவாரம், பொந்து, வழை = சுரபுன்னை மரம்.
27.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
வாழை, வாளை, வாலை
வாழை, வாளை, வாலை
Correct Answer: A [மரம், மீன், இளம்பெண்]
Notes:
வாழை = மரம், வாளை = மீன்வகை, வாலை = இளம்பெண்.
28.
ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.
விரை - விறை
விரை - விறை
Correct Answer: B [விதை - மரத்தல்]
Notes:
விரை = விதை (வித்து); நறுமணம், விரைவு என்ற பொருள்களும் உண்டு.
29.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருள் தரும் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
புலி – புளி
புலி – புளி
Correct Answer: A [விலங்கு – பழம்]
Notes:
புலி = விலங்கு; புளி = புளியம்பழம் (புளிப்புச் சுவை உடையது).
30.
ஒலி வேறுபாடு அறிந்து பொருத்தமான இணையைத் தேர்க.
அலை – அளை – அழை
அலை – அளை – அழை
Correct Answer: C [கடல் அலை – புற்று – கூப்பிடு]
Notes:
அலை = கடல் அலை; அளை = புற்று; அழை = கூப்பிடு (அழைத்தல்).
31.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக.
Correct Answer: A [ஆறு – நதி]
Notes:
ஆறு = நதி; ஆறு என்பது எண்ணையும் (6), வழியையும் குறிக்கும்.
32.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக.
Correct Answer: B [ஒளி – வெளிச்சம்]
Notes:
ஒளி = வெளிச்சம்; ஒலி = ஓசை, சத்தம்; ஒழி = நீக்கு, அழி.
33.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிக.
நாட்டுக்குத் தேவை _____
நாட்டுக்குத் தேவை _____
Correct Answer: D [அரண்]
Notes:
அரண் = கோட்டை, பாதுகாப்பு; திருக்குறளில் ‘நாடு’ அதிகாரத்தை அடுத்து ‘அரண்’ அதிகாரம் அமைந்துள்ளது.
34.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை எழுதுக.
திணை – தினை
திணை – தினை
Correct Answer: B [ஒழுக்கம் – தானியம்]
Notes:
திணை = ஒழுக்கம் (அகத்திணை, புறத்திணை), உயர்திணை–அஃறிணை எனப் பிரிவு; தினை = ஒருவகைத் தானியம் (சிறுதானியம்).
35.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெழுதுக.
கலை – களை
கலை – களை
Correct Answer: A [கலைத்தல் - நீக்குதல்]
Notes:
கலை = கலைதல், கலைத்தல்; ஆடை, கலைகள் என்ற பொருள்களும் உண்டு.
36.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடு.
கரி – கறி
கரி – கறி
Correct Answer: D [யானை – காய்கறி]
Notes:
கரி = யானை; கரிக்கட்டை, சாட்சி என்ற பொருள்களும் உண்டு.
37.
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க
தால் – தாள்
தால் – தாள்
Correct Answer: A [தாலாட்டு – பாதம்]
Notes:
தால் = நாக்கு; நாவை அசைத்துப் பாடுவதால் ‘தாலாட்டு’ எனப்பட்டது.
38.
ஔ என்ற நெட்டெழுத்துக்கு இன எழுத்தாக வருவது
Correct Answer: D [உ]
Notes:
‘ஐ’ என்ற நெட்டெழுத்துக்கு ‘இ’ இனமாகும்; ‘ஔ’ என்ற நெட்டெழுத்துக்கு ‘உ’ இனமாகும்.
39.
கலி, களி, கழி – ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.
Correct Answer: C [ஒலி, மகிழ்ச்சி, கோல்]
Notes:
கலி = ஒலி (ஆரவாரம்); களி = மகிழ்ச்சி; கழி = கோல்.
40.
‘கான் – காண்’ – இச்சொற்களின் ஒலி வேறுபாடறிந்து எழுதுக.
Correct Answer: B [காட்டிற்குச் சென்று பூந்தோட்டத்தைப் பார்த்தான்]
Notes:
கான் = காடு; காண் = பார். எனவே இரண்டு சொற்களின் பொருளும் ‘காட்டிற்குச் சென்று பூந்தோட்டத்தைப் பார்த்தான்’ என்ற தொடரில் அமைகின்றன.
41.
கிலி, கிழி, கிளி போன்ற சொற்களுக்குச் சரியான பொருள் வேறுபாட்டைத் தேர்வு செய்க.
Correct Answer: A [பயம், கிழித்தல், ஒரு பறவை]
Notes:
கிலி = பயம், அச்சம்; கிழி = கிழித்தல்; கிளி = ஒரு பறவை.
42.
கீழ்க்கண்டவற்றுள் மெல்லினத்திற்கான இனவெழுத்து இடம் பெறாத சொல் எது?
Correct Answer: C [கல்வி]
Notes:
மெல்லின எழுத்துகள் தம் இனமான வல்லின எழுத்துகளோடு சேர்ந்து வரும்: மஞ்சள் (ஞ்ச), திங்கள் (ங்க), தென்றல் (ன்ற).
43.
குரங்கு – குறங்கு – ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிக.
Correct Answer: B [வானரம் – தொடை]
Notes:
குரங்கு = வானரம்; குறங்கு = தொடை.
44.
குறில் நெடில் அடிப்படையில் சரியான இணையைத் தேர்வு செய்க.
Correct Answer: C [பெறு, பேறு]
Notes:
பெறு (பெ – குறில்), பேறு (பே – நெடில்) எனக் குறில்–நெடில் மாற்றத்தால் பொருள் மாறுகிறது.
45.
குறில் நெடில் அடிப்படையில் தவறான இணையைக் கண்டறிக.
Correct Answer: C [கோள் – கேள்]
Notes:
கோள் (கோ), கேள் (கே) இரண்டும் நெடில்களே; இது குறில்–நெடில் இணை அல்ல.
46.
குறில் நெடில் அடிப்படையில் பொருள் வேறுபாடு காண்க.
விடு – வீடு
விடு – வீடு
Correct Answer: B [விட்டுவிடுதல் – தங்குமிடம்]
Notes:
விடு (வி – குறில்) = விட்டுவிடுதல்; வீடு (வீ – நெடில்) = தங்குமிடம், வாழும் இடம்.
47.
குறில்-நெடில் பிழையான சொல் எது?
Correct Answer: D [கெண்டை - கொண்டை]
Notes:
கெண்டை, கொண்டை இரண்டிலும் முதலெழுத்து (கெ, கொ) குறிலே; எனவே இது குறில்–நெடில் இணை அல்ல.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
