வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
பிரித்து எழுதுக
பாசிலை

Correct Answer: A [பசுமை + இலை]

Notes:

பாசிலை = பசுமை + இலை.

2.  
பிரித்தெழுதுக : பாடாண்திணை

Correct Answer: C [பாடு + ஆண் + திணை]

Notes:

பாடாண்திணை = பாடு + ஆண் + திணை.

3.  
பின்வரும் சொல்லின் சரியான பிரித்தெழுதும் முறையை எடுத்தெழுதுக.
ஊன்பொதியவிழா

Correct Answer: D [ஊன் + பொதி + அவிழா]

Notes:

ஊன்பொதியவிழா = ஊன் + பொதி + அவிழா.

4.  
பிரித்தறிதலில் சரியான விடையைத் தேர்க.
நீணிலம்

Correct Answer: C [நீள் + நிலம்]

Notes:

நீணிலம் = நீள் + நிலம். நிலைமொழி இறுதி ளகர ஒற்றின் முன் வருமொழி நகரம் வர, நகரம் ணகரமாகத் திரிந்து, ளகர ஒற்று கெட்டு நீணிலம் ஆனது.

5.  
பிரித்தலில் எது சரியானது என அறிக.
தீந்தமிழ்

Correct Answer: C [தீம் + தமிழ்]

Notes:

தீந்தமிழ் = தீம் + தமிழ். தீம் = இனிமை.

6.  
பிரித்தெழுது – “அருந்துணை”

Correct Answer: C [அருமை + துணை]

Notes:

அருந்துணை = அருமை + துணை. பண்புப்பெயர் புணர்ச்சியில் ‘மை’ விகுதி கெட்டு (ஈறுபோதல்) அரு + துணை ஆகி, வல்லினத்துக்கு இனமான மெல்லினம் மிகுந்து (இனமிகல்) அருந்துணை ஆனது.

7.  
பிரித்தெழுது – “நன்செய்”

Correct Answer: C [நன்மை + செய்]

Notes:

நன்செய் = நன்மை + செய். பண்புப்பெயர் புணர்ச்சியில் ‘மை’ விகுதி கெட்டு (ஈறுபோதல்) நன்செய் ஆனது.

8.  
பிரித்து எழுதுக : ‘புளியங்கன்று’

Correct Answer: B [புளி + அம் + கன்று]

Notes:

புளியங்கன்று = புளி + அம் + கன்று.

9.  
‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

Correct Answer: B [பூட்டும் + கதவுகள்]

Notes:

பூட்டுங்கதவுகள் = பூட்டும் + கதவுகள்.

10.  
பெயரறியா – பிரித்து எழுதுக.

Correct Answer: C [பெயர் + அறியா]

Notes:

பெயரறியா = பெயர் + அறியா. ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ – நிலைமொழி இறுதி ரகர மெய் வருமொழி அகரத்துடன் சேர்ந்து ‘ர’ ஆனது.

11.  
பிரித்தெழுதுக : பெரியன்

Correct Answer: C [பெருமை + அன்]

Notes:

பெரியன் = பெருமை + அன். ஈறுபோதல் (பெரு), இடையுகரம் இய்யாதல் (பெரி), ‘ய்’ உடம்படுமெய் தோன்றல் (பெரி + ய் + அன்) என்னும் விதிகளால் பெரியன் ஆனது.

12.  
பிரித்து எழுதுதல் :
“பெருங்கடல்” – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

Correct Answer: B [பெருமை + கடல்]

Notes:

பெருங்கடல் = பெருமை + கடல்.

13.  
பைங்கூழ் – பிரித்தெழுதுக

Correct Answer: D [பசுமை + கூழ்]

Notes:

பைங்கூழ் = பசுமை + கூழ். பண்புப்பெயர் புணர்ச்சி விதிகளின்படி ‘பசுமை’ ‘பை’ எனத் திரிந்து, வருமொழி வல்லினத்துக்கு (க) இனமான மெல்லினம் (ங்) மிகுந்து பைங்கூழ் ஆனது.

14.  
பைந்நிணம் – பிரித்தெழுதுக

Correct Answer: C [பசுமை + நிணம்]

Notes:

பைந்நிணம் = பசுமை + நிணம். பண்புப்பெயர் புணர்ச்சி விதிகளின்படி ‘பசுமை’ ‘பை’ எனத் திரிந்து, வருமொழி முதல் நகரத்தின் ஒற்று (ந்) மிகுந்து பைந்நிணம் ஆனது.

15.  
‘பொய்யகற்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

Correct Answer: A [பொய் + அகற்றும்]

Notes:

பொய்யகற்றும் = பொய் + அகற்றும்.

16.  
பொருட்டன்று — பிரித்து எழுதுக. உரிய விடையைக் குறிப்பிடுக

Correct Answer: C [பொருட்டு + அன்று]

Notes:

பொருட்டன்று = பொருட்டு + அன்று.

17.  
பொருந்தாததைக் கண்டறிக

Correct Answer: D [நாம் + இன் = எங்களின்]

Notes:

‘நாம்’ வேற்றுமை உருபு ஏற்கும்போது ‘நம்’ எனத் திரியும்: நாம் + இன் = நம்மின்.

18.  
“பொருளுடைமை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

Correct Answer: C [பொருள் + உடைமை]

Notes:

பொருளுடைமை = பொருள் + உடைமை. ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ – நிலைமொழி இறுதி ளகர மெய் வருமொழி உகரத்துடன் சேர்ந்து ‘ளு’ ஆனது.

19.  
மாசற – பிரித்தெழுதுக.

Correct Answer: C [மாசு + அற]

Notes:

மாசற = மாசு + அற. ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ – நிலைமொழி இறுதிக் குற்றியலுகரம் கெட்டு, ச் + அ = ச என்று புணர்ந்தது.

20.  
‘மின்னணு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

Correct Answer: A [மின் + அணு]

Notes:

மின்னணு = மின் + அணு. ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ – மின் என்பது தனிக்குறிலை அடுத்த ஒற்று என்பதால் னகரம் இரட்டித்து (மின்ன் + அ) மின்னணு ஆனது.

21.  
பிரித்து எழுதுக : முன்னரண்

Correct Answer: A [முன் + அரண்]

Notes:

முன்னரண் = முன் + அரண். ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ – னகரம் இரட்டித்து (முன்ன் + அ) முன்னரண் ஆனது.

22.  
மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

Correct Answer: A [மூச்சு + அடக்கி]

Notes:

மூச்சடக்கி = மூச்சு + அடக்கி. ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ – நிலைமொழி இறுதிக் குற்றியலுகரம் கெட்டு, ச் + அ = ச என்று புணர்ந்தது.

23.  
பிரித்து எழுதுக : மைத்தடங்கண்

Correct Answer: C [மை + தட + கண்]

Notes:

மைத்தடங்கண் = மை + தட + கண். ‘தட’ என்பது பெருமை குறிக்கும் உரிச்சொல்; தட + கண் → மெல்லினம் (ங்) மிகுந்து தடங்கண் ஆனது.

24.  
‘வண்கீரை’ – பிரித்தெழுதுக.

Correct Answer: D [வண்மை + கீரை]

Notes:

வண்கீரை = வண்மை + கீரை. பண்புப்பெயர் புணர்ச்சியில் ‘மை’ விகுதி கெட்டு (ஈறுபோதல்) வண் + கீரை = வண்கீரை ஆனது.

25.  
வண்டாயெழுந்து என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.

Correct Answer: B [வண்டாய் + எழுந்து]

Notes:

வண்டாயெழுந்து = வண்டாய் + எழுந்து.

26.  
சரியானவற்றைக் காண்க
1. யான் + கு = எனக்கு
2. யான் + கண் = என்னின்கண்
3. யான் + அது = என்னது
4. யான் + ஆல் = என்னால்

Correct Answer: C [1, 4 – சரி]

Notes:

‘யான்’ வேற்றுமை உருபு ஏற்கும்போது ‘என்’ எனத் திரியும்.

27.  
‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

Correct Answer: C [வானம் + அளந்தது]

Notes:

வானமளந்தது = வானம் + அளந்தது. ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ – நிலைமொழி இறுதி மகர மெய் வருமொழி அகரத்துடன் சேர்ந்து ‘ம’ ஆனது.

28.  
பிரித்தெழுதுக :
‘வாயினீர்’

Correct Answer: C [வாயின் + நீர்]

Notes:

வாயினீர் = வாயின் + நீர். நிலைமொழி இறுதி னகர ஒற்றின் முன் வருமொழி நகரம் னகரமாகத் திரிந்து, நிலைமொழி ஒற்று கெட்டு வாயினீர் ஆனது (நீள் + நிலம் = நீணிலம் போல).

29.  
பிரித்து எழுதுக :
விளங்காய்

Correct Answer: B [விள + காய்]

Notes:

விளங்காய் = விள + காய். மரப்பெயர்களின் முன் வல்லினம் வரும்போது இனமான மெல்லினம் மிகுவதும் உண்டு; அதன்படி ங் மிகுந்து விளங்காய் ஆனது (மா + காய் = மாங்காய் போல).

30.  
பிரித்து எழுதுக : வீடினதன்றறன்

Correct Answer: C [வீடினது + அன்று + அறன்]

Notes:

வீடினதன்றறன் = வீடினது + அன்று + அறன்.

31.  
வெங்கரி – பிரித்தெழுதுக.

Correct Answer: D [வெம்மை + கரி]

Notes:

வெங்கரி = வெம்மை + கரி. பண்புப்பெயர் புணர்ச்சியில் ‘மை’ விகுதி கெட்டு (ஈறுபோதல்) வெம் + கரி ஆகி, மகரம் வல்லினத்துக்கு இனமான மெல்லினமாக (ங்) திரிந்து வெங்கரி ஆனது.

32.  
பிரித்தெழுதுக : வெஞ்சுடர்

Correct Answer: B [வெம்மை + சுடர்]

Notes:

வெஞ்சுடர் = வெம்மை + சுடர். ஈறுபோதல் (வெம்), மகரம் வருமொழி வல்லினத்துக்கு (ச) இனமான மெல்லினமாக (ஞ்) திரிதல் என்னும் விதிகளால் வெஞ்சுடர் ஆனது.

33.  
பிரித்தெழுதுதல்.
‘வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

Correct Answer: B [வெண்மை + குடை]

Notes:

வெண்குடை = வெண்மை + குடை. பண்புப்பெயர் புணர்ச்சியில் ‘மை’ விகுதி கெட்டு (ஈறுபோதல்) வெண் + குடை = வெண்குடை ஆனது.

34.  
பிரித்தெழுதுதல் :
‘வேதியுரங்கள்’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதுக.

Correct Answer: B [வேதி + உரங்கள்]

Notes:

வேதியுரங்கள் = வேதி + உரங்கள்.

35.  
பிரித்து எழுதுக
வேறில்லை

Correct Answer: C [வேறு + இல்லை]

Notes:

வேறில்லை = வேறு + இல்லை. ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ – நிலைமொழி இறுதிக் குற்றியலுகரம் கெட்டு, ற் + இ = றி என்று புணர்ந்தது.

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0