வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
‘அமர்ந்தான்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்க.
Correct Answer: A [அமர்]
Notes:
அமர்ந்தான் = அமர் + த்(ந்) + த் + ஆன்.
2.
‘அயர்ந்தவன்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
Correct Answer: B [அயர்]
Notes:
அயர்ந்தவன் = அயர் + த்(ந்) + த் + அ + வ் + அன்.
3.
அறியேன் – வேர்ச் சொல்லைத் தருக.
Correct Answer: B [அறி]
Notes:
அறியேன் = அறி + ய் + ஆ + ஏன். ‘அறி’ (தெரிந்துகொள்) வேர்ச்சொல்; இது எதிர்மறை வினைமுற்று.
4.
“அறைந்தனன்” வேர்ச்சொல்லைத் தருக.
Correct Answer: A [அறை]
Notes:
அறைந்தனன் = அறை + த்(ந்) + த் + அன் + அன்.
5.
“ஆடினான்” – வேர்ச் சொல்லைத் தருக.
Correct Answer: D [ஆடு]
Notes:
ஆடினான் = ஆடு + இன் + ஆன். ‘ஆடு’ வேர்ச்சொல்; ‘இன்’ இறந்தகால இடைநிலை, ‘ஆன்’ ஆண்பால் விகுதி.
6.
‘ஆற்றீர்’ - வேர்ச்சொல்லைத் தேர்வு செய்
Correct Answer: C [ஆற்று]
Notes:
ஆற்றீர் = ஆற்று + ஈர். ‘ஆற்று’ (செய், நிகழ்த்து) என்பதே வேர்ச்சொல்; ‘ஈர்’ முன்னிலைப் பன்மை விகுதி.
7.
‘இகழ்ந்தனர்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.
Correct Answer: C [இகழ்]
Notes:
இகழ்ந்தனர் = இகழ் + த்(ந்) + த் + அன் + அர்.
8.
‘இயைந்தவர்’ — இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
Correct Answer: B [இயை]
Notes:
இயைந்தவர் = இயை + த்(ந்) + த் + அ + வ் + அர்.
9.
ஈகலான் – இவ்வினைமுற்றின் வேர்ச்சொல்லைத் தேர்க.
Correct Answer: D [ஈ]
Notes:
‘ஈகலான்’ என்பது ‘ஈ’ (கொடு) என்னும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்த வினைமுற்று.
10.
‘உண்கிறேன்’ - இதன் வேர்ச்சொல்லைக் கண்டறிக.
Correct Answer: B [உண்]
Notes:
உண்கிறேன் = உண் + கிறு + ஏன். ‘உண்’ வேர்ச்சொல்; ‘கிறு’ நிகழ்கால இடைநிலை, ‘ஏன்’ தன்மை ஒருமை விகுதி.
11.
உரைத்த – வேர்ச்சொல்லைத் தருக.
Correct Answer: A [உரை]
Notes:
உரைத்த = உரை + த் + த் + அ. ‘உரை’ (சொல்) வேர்ச்சொல்; ‘அ’ பெயரெச்ச விகுதி.
12.
‘உறங்கினாள்’ – இதன் வேர்ச்சொல்லைக் கண்டறிக.
Correct Answer: C [உறங்கு]
Notes:
உறங்கினாள் = உறங்கு + இன் + ஆள்.
13.
உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது?
Correct Answer: B [உலவு]
Notes:
‘உலகம்’ என்னும் சொல் ‘உலவு’ (சுற்றிவருதல்) என்னும் சொல்லின் அடியாகப் பிறந்தது என்பர்; உலவுவது (சுற்றுவது) உலகம்.
14.
எச்சொல் வேர்ச் சொல் அல்ல?
Correct Answer: D [இனிது]
Notes:
அடி, இரு, அறி ஆகியவை ஏவல் வடிவில் உள்ள வேர்ச்சொற்கள் (அடித்தான், இருந்தான், அறிந்தான்).
15.
‘தருக’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
Correct Answer: C [தா]
Notes:
தருக = தா(தரு) + க. ‘தா’ என்பதே வேர்ச்சொல்; இது வியங்கோள் வினைமுற்று.
16.
எறிந்தான் – வேர்ச்சொல்லைத் தருக.
Correct Answer: C [எறி]
Notes:
எறிந்தான் = எறி + த்(ந்) + த் + ஆன்.
17.
ஓடியவர் – என்பதன் வேர்ச்சொல்லை எழுதுக.
Correct Answer: B [ஓடு]
Notes:
ஓடியவர் = ஓடு + இ(ன்) + ய் + அ + வ் + அர்.
18.
“கண்டார்” – என்பதன் வேர்ச்சொல் கண்டறிக
Correct Answer: C [காண்]
Notes:
கண்டார் = காண் + ட் + ஆர். ‘காண்’ (பார்) வேர்ச்சொல்; ‘காண்’ என்பது ‘கண்’ எனக் குறுகியது (விகாரம்).
19.
‘கற்றவன்’ — இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
Correct Answer: C [கல்]
Notes:
கற்றவன் = கல் + ற் + அ + வ் + அன்.
20.
‘கற்றான்’ – என்பதன் வேர்ச்சொல் அறிக.
Correct Answer: A [கல்]
Notes:
கற்றான் = கல் + ற் + ஆன். ‘கல்’ வேர்ச்சொல்; ‘ற்’ இறந்தகால இடைநிலை, ‘ஆன்’ ஆண்பால் விகுதி.
21.
‘கல்லாமை’ — இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
Correct Answer: A [கல்]
Notes:
கல்லாமை = கல் + ஆ + மை. ‘கல்’ வேர்ச்சொல்; ‘ஆ’ எதிர்மறை இடைநிலை, ‘மை’ தொழிற்பெயர் விகுதி.
22.
வேர்ச்சொல் காண்க – தந்தான்
Correct Answer: D [தா]
Notes:
தந்தான் = தா(த) + த்(ந்) + த் + ஆன்.
23.
“காப்பார்” – என்பதன் வேர்ச்சொல் கண்டறிக.
Correct Answer: B [கா]
Notes:
காப்பார் = கா + ப் + ப் + ஆர்.
24.
‘கிளர்ந்த’ வேர்ச்சொல் அறிக
Correct Answer: A [கிளர்]
Notes:
கிளர்ந்த = கிளர் + த்(ந்) + த் + அ.
25.
கீழ்க்கண்ட சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.
‘பயின்றான்’
‘பயின்றான்’
Correct Answer: D [பயில்]
Notes:
பயின்றான் = பயில்(பயின்) + ற் + ஆன்.
26.
கீழ்க்கண்டவற்றுள் சரியான வேர்ச்சொல் இணையைக் கண்டறிக.
Correct Answer: A [நட – நடக்கிறது]
Notes:
நடக்கிறது = நட + க் + கிறு + அ + து; இதன் வேர்ச்சொல் ‘நட’ – இணை சரி.
27.
கீழ்க்கண்டவற்றுள் சரியான வேர்ச்சொல் இணையைக் கண்டறிக.
Correct Answer: C [பொறி - பொறித்த]
Notes:
பொறித்த = பொறி + த் + த் + அ; வேர்ச்சொல் ‘பொறி’ – இணை சரி.
28.
குமைந்தனை – வேர்ச்சொல்லைத் தருக
Correct Answer: D [குமை]
Notes:
குமைந்தனை = குமை + த்(ந்) + த் + அன் + ஐ.
29.
‘கேட்டான்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறி.
Correct Answer: B [கேள்]
Notes:
கேட்டான் = கேள் + ட் + ஆன். ‘கேள்’ வேர்ச்சொல்; புணர்ச்சியில் ள், ட் ஆகத் திரிந்தது.
30.
கேட்டார் – இச்சொல்லின் வேர்ச்சொல் யாது?
Correct Answer: C [கேள்]
Notes:
கேட்டார் = கேள் + ட் + ஆர். ‘கேள்’ (செவிமடு) வேர்ச்சொல்; ‘ஆர்’ பலர்பால் விகுதி.
31.
கொடுக்கப்பட்டுள்ள தொழிற்பெயரிலிருந்து வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
படித்தல்
படித்தல்
Correct Answer: B [படி]
Notes:
படித்தல் = படி + த் + தல். ‘படி’ வேர்ச்சொல்; ‘த்’ சந்தி, ‘தல்’ தொழிற்பெயர் விகுதி.
32.
கொடுத்தோர் - வேர்ச்சொல்லைக் கண்டறி
Correct Answer: C [கொடு]
Notes:
கொடுத்தோர் = கொடு + த் + த் + ஓர்.
33.
‘கொல்லாமை’ என்ற எதிர்மறைத் தொழிற்பெயரிலிருந்து வேர்ச்சொல்லை எழுதுக.
Correct Answer: A [கொல்]
Notes:
கொல்லாமை = கொல் + ஆ + மை. ‘கொல்’ வேர்ச்சொல்; ‘ஆ’ எதிர்மறை இடைநிலை, ‘மை’ தொழிற்பெயர் விகுதி.
34.
சென்றனர் - வேர்ச்சொல்லைத் தருக.
Correct Answer: D [செல்]
Notes:
சென்றனர் = செல்(சென்) + ற் + அன் + அர்.
35.
சென்றான் – வேர்ச்சொல் தருக.
Correct Answer: D [செல்]
Notes:
சென்றான் = செல்(சென்) + ற் + ஆன்.
36.
செய்கின்றாள் – வேர்ச்சொல் தருக
Correct Answer: B [செய்]
Notes:
செய்கின்றாள் = செய் + கின்று + ஆள்.
37.
‘தணிந்தது’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
Correct Answer: A [தணி]
Notes:
தணிந்தது = தணி + த்(ந்) + த் + அ + து.
38.
வேர்ச்சொல் தெரிவு செய்:
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்
Correct Answer: B [அஞ்சு]
Notes:
அஞ்சுவது = அஞ்சு + வ் + அ + து; அஞ்சல், அஞ்சாமை ஆகிய அனைத்துக்கும் வேர்ச்சொல் ‘அஞ்சு’ (பயப்படு).
39.
வேர்ச்சொல் தெரிவு செய்: வந்தான்
Correct Answer: B [வா]
Notes:
வந்தான் = வா(வ) + த்(ந்) + த் + ஆன்.
40.
வேர்ச்சொல் தேர்க:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
Correct Answer: D [பற்று]
Notes:
பற்றுக = பற்று + க (வியங்கோள் வினைமுற்று); இதன் வேர்ச்சொல் ‘பற்று’ (பிடி).
41.
“தொட்டு” – வேர்ச்சொல்லைத் தருக.
Correct Answer: D [தொடு]
Notes:
தொட்டு = தொடு + ட் + உ. ‘தொடு’ வேர்ச்சொல்; இது வினையெச்சம்.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
