வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
நடத்தல் – என்பதன் வேர்ச்சொல்லை எழுதுக.

Correct Answer: C [நட]

Notes:

நடத்தல் = நட + த் + தல். ‘நட’ வேர்ச்சொல்; ‘த்’ சந்தி, ‘தல்’ தொழிற்பெயர் விகுதி.

2.  
நடப்பாள் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக

Correct Answer: B [நட]

Notes:

நடப்பாள் = நட + ப் + ப் + ஆள்.

3.  
‘நட்டு’ — இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.

Correct Answer: C [நடு]

Notes:

நட்டு = நடு(நட்) + ட் + உ. ‘நடு’ (ஊன்று) என்ற வேர் ‘நட்’ எனத் திரிந்து, ‘ட்’ இறந்தகால இடைநிலையும் ‘உ’ வினையெச்ச விகுதியும் ஏற்றது.

4.  
“நின்றான்” – என்பதன் வேர்ச்சொல் கண்டறிக.

Correct Answer: A [நில்]

Notes:

நின்றான் = நில் + ற் + ஆன். ‘நில்’ என்ற வேரின் லகரம் இறந்தகால இடைநிலை ‘ற்’ முன் னகரமாகத் திரிந்தது.

5.  
‘நிறுத்தல்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.

Correct Answer: A [நிறுத்து]

Notes:

நிறுத்தல் = நிறுத்து + அல். ‘அல்’ தொழிற்பெயர் விகுதியை நீக்க எஞ்சுவது ‘நிறுத்து’ என்ற ஏவல் வடிவம்; அதுவே வேர்ச்சொல்.

6.  
‘நிறுத்தாதீர்’ — இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.

Correct Answer: A [நிறுத்து]

Notes:

நிறுத்தாதீர் = நிறுத்து + ஆ + த் + ஈர்.

7.  
“நொந்தான்” சொல்லின் வேர்ச்சொல் யாது?

Correct Answer: A [நொ]

Notes:

நொந்தான் = நொ + த்(ந்) + த் + ஆன்.

8.  
படித்தான் – வேர்ச்சொல்லைத் தருக

Correct Answer: B [படி]

Notes:

படித்தான் = படி + த் + த் + ஆன்.

9.  
‘படைத்தோன்’ — இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.

Correct Answer: D [படை]

Notes:

படைத்தோன் = படை + த் + த் + ஓன்.

10.  
பட்டியல் I-ஐப் பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I – பட்டியல் II
1. வாடுவான் – அ. நில்
2. போக்கி – ஆ. இரு
3. இருந்து – இ. போக்கு
4. நிற்றல் – ஈ. வாடு

Correct Answer: A [ஈ இ ஆ அ]

Notes:

வாடுவான் – வாடு; போக்கி – போக்கு; இருந்து – இரு; நிற்றல் – நில்.

11.  
பாடினாள் – வேர்ச்சொல் தருக.

Correct Answer: C [பாடு]

Notes:

பாடினாள் = பாடு + இன் + ஆள். ‘இன்’ இறந்தகால இடைநிலை, ‘ஆள்’ பெண்பால் விகுதி.

12.  
பின்வரும் தொடரில் உள்ள வினைச்சொல்லைத் தேர்வு செய்து, அதன் வேர்ச்சொல்லை எழுதுக.
இட்டதோர் தாமரைப்பூ

Correct Answer: A [இடு]

Notes:

இத்தொடரில் வினைச்சொல் ‘இட்டதோர்’ (இட்டது + ஓர்).

13.  
பின்வரும் வினைமுற்றின் வேர்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக
பார்த்தான்

Correct Answer: C [பார்]

Notes:

பார்த்தான் = பார் + த் + த் + ஆன்.

14.  
பெற்றான் – வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.

Correct Answer: C [பெறு]

Notes:

பெற்றான் = பெறு + ற் + ஆன். ‘பெறு’ என்ற வேர் ‘பெற்’ எனத் திரிந்து, ‘ற்’ இறந்தகால இடைநிலை ஏற்றது.

15.  
‘பேசினாள்’ - இதன் வேர்ச்சொல்லை அறிக.

Correct Answer: C [பேசு]

Notes:

பேசினாள் = பேசு + இன் + ஆள். ‘இன்’ இறந்தகால இடைநிலை, ‘ஆள்’ பெண்பால் விகுதி.

16.  
பொருத்தமான வினையடிச்சொல்லைக் கண்டறிக.
புத்தகம் மேசையில் இருக்கிறது.

Correct Answer: A [இரு]

Notes:

இருக்கிறது = இரு + க் + கிறு + அது.

17.  
வேர்ச்சொல் பொருத்துக :
(a) வென்றான் – 1. நல்கு
(b) தருவான் – 2. கல்
(c) நல்கினர் – 3. வெல்
(d) கற்று – 4. தா

Correct Answer: D [3 4 1 2]

Notes:

வென்றான் – வெல்; தருவான் – தா; நல்கினர் – நல்கு; கற்று – கல்.

18.  
சரியான வேர்ச்சொல் - பொருந்தாத இணையைத் தேர்க.

Correct Answer: B [கோடல் – கோடு]

Notes:

கோடல் (கொள்ளுதல்) என்பதன் வேர் ‘கொள்’; ‘கோடு’ அன்று.

19.  
பொறித்த – வேர்ச்சொல்லை எழுதுக

Correct Answer: B [பொறி]

Notes:

பொறித்த = பொறி + த் + த் + அ. ‘பொறி’ (செதுக்கு, பதி) வேர்ச்சொல்.

20.  
போட்டேன் – வேர்ச்சொல்லைக் கண்டறிக.

Correct Answer: B [போடு]

Notes:

போட்டேன் = போடு + ட் + ஏன். ‘ட்’ இறந்தகால இடைநிலை, ‘ஏன்’ தன்மை ஒருமை விகுதி.

21.  
போவாள் - வேர்ச்சொல்லைக் கண்டறிக

Correct Answer: A [போ]

Notes:

போவாள் = போ + வ் + ஆள். ‘வ்’ எதிர்கால இடைநிலை, ‘ஆள்’ பெண்பால் விகுதி.

22.  
‘மகிழ்ந்தனன்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிக.

Correct Answer: D [மகிழ்]

Notes:

மகிழ்ந்தனன் = மகிழ் + த்(ந்) + த் + அன் + அன்.

23.  
“மயங்கிய” - வேர்ச்சொல்லைத் தருக.

Correct Answer: C [மயங்கு]

Notes:

மயங்கிய = மயங்கு + இ(ன்) + ய் + அ.

24.  
‘மிக்க’ — இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.

Correct Answer: C [மிகு]

Notes:

மிக்க = மிகு + க் + அ. ‘மிகு’ என்ற வேர் இறந்தகாலத்தில் ‘மிக்’ என வரும்; ‘அ’ பெயரெச்ச விகுதி.

25.  
வேர்ச்சொல்லைக் கண்டறிக – ‘உரைத்தல்’

Correct Answer: D [உரை]

Notes:

உரைத்தல் = உரை + த் + தல். ‘தல்’ தொழிற்பெயர் விகுதி, ‘த்’ சந்தி.

26.  
வேர்ச்சொல்லைக் கண்டறிக. ‘கற்றார்’

Correct Answer: B [கல்]

Notes:

கற்றார் = கல் + ற் + ஆர். ‘கல்’ என்ற வேரின் லகரம் இறந்தகால இடைநிலை ‘ற்’ முன் றகரமாகத் திரிந்தது; ‘ஆர்’ பலர்பால் விகுதி.

27.  
சரியான வேர்ச்சொல்லைக் காண்க
‘கொண்டிலன்’

Correct Answer: B [கொள்]

Notes:

கொண்டிலன் = கொள் + ட் + இல் + அன்.

28.  
வேர்ச்சொல்லைக் காண்க : ‘சுடுதல்’

Correct Answer: A [சுடு]

Notes:

சுடுதல் = சுடு + தல். ‘தல்’ தொழிற்பெயர் விகுதியை நீக்க எஞ்சும் ‘சுடு’ வேர்ச்சொல்.

29.  
வேர்ச்சொல்லைக் கண்டறிதல்.
கேட்டார்

Correct Answer: D [கேள்]

Notes:

கேட்டார் = கேள் + ட் + ஆர். ‘கேள்’ வேரின் ளகரம் இறந்தகால இடைநிலை ‘ட்’ முன் டகரமாகத் திரிந்தது; ‘ஆர்’ பலர்பால் விகுதி.

30.  
வேர்ச்சொல்லைக் கண்டறிக – ‘நடத்தல்’

Correct Answer: A [நட]

Notes:

நடத்தல் = நட + த் + தல். ‘தல்’ தொழிற்பெயர் விகுதி, ‘த்’ சந்தி.

31.  
வேர்ச்சொல்லைக் கண்டறிக.
வாழிய

Correct Answer: A [வாழ்]

Notes:

வாழிய = வாழ் + இய. ‘இய’ வியங்கோள் வினைமுற்று விகுதி.

32.  
வேர்ச்சொல்லைக் கண்டறிக
‘வாழ்க்கை’

Correct Answer: A [வாழ்]

Notes:

வாழ்க்கை = வாழ் + க் + கை. ‘கை’ தொழிற்பெயர் விகுதி, ‘க்’ சந்தி.

33.  
வேர்ச்சொல்லைக் கண்டறிக :
‘விரித்த’

Correct Answer: B [விரி]

Notes:

விரித்த = விரி + த் + த் + அ. ‘த்’ சந்தி, ‘த்’ இறந்தகால இடைநிலை, ‘அ’ பெயரெச்ச விகுதி.

34.  
வேர்ச்சொல்லைத் தெரிவு செய் : ஆண்ட

Correct Answer: B [ஆள்]

Notes:

ஆண்ட = ஆள் + ட் + அ. ‘ஆள்’ வேரின் ளகரம் டகரத்தின் முன் ணகரமாகத் திரிந்தது; ‘அ’ பெயரெச்ச விகுதி.

35.  
வேர்ச்சொல்லைத் தெரிவு செய் : ஓடிய

Correct Answer: B [ஓடு]

Notes:

ஓடிய = ஓடு + இ(ன்) + ய் + அ. ‘அ’ பெயரெச்ச விகுதி, ‘ய்’ உடம்படுமெய்.

36.  
வேர்ச்சொல்லைத் தெரிவு செய் : தேடிய

Correct Answer: C [தேடு]

Notes:

தேடிய = தேடு + இ(ன்) + ய் + அ.

37.  
வேர்ச்சொல்லைத் தெரிவு செய் : நல்கிய

Correct Answer: B [நல்கு]

Notes:

நல்கிய = நல்கு + இ(ன்) + ய் + அ.

38.  
வேர்ச்சொல்லைத் தெரிவு செய் :
வாடினான்

Correct Answer: C [வாடு]

Notes:

வாடினான் = வாடு + இன் + ஆன். ‘இன்’ இறந்தகால இடைநிலை, ‘ஆன்’ ஆண்பால் விகுதி.

39.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
“ஓடினான்”

Correct Answer: B [ஓடு]

Notes:

ஓடினான் = ஓடு + இன் + ஆன். ‘இன்’ இறந்தகால இடைநிலை, ‘ஆன்’ ஆண்பால் விகுதி.

40.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
“சொன்னார்”

Correct Answer: A [சொல்]

Notes:

சொன்னார் = சொல் + ன் + ஆர். ‘சொல்’ வேரின் லகரம் னகரமாகத் திரிந்தது; ‘ன்’ இறந்தகால இடைநிலை, ‘ஆர்’ பலர்பால் விகுதி.

41.  
வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
மலர் வீட்டுக்குச் ‘சென்றாள்’.

Correct Answer: C [செல்]

Notes:

சென்றாள் = செல் + ற் + ஆள். ‘செல்’ வேரின் லகரம் இறந்தகால இடைநிலை ‘ற்’ முன் னகரமாகத் திரிந்தது; ‘ஆள்’ பெண்பால் விகுதி.

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0