வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
கியூரி அம்மையார் போலந்து நாட்டைச் சேர்ந்தவர்.
கியூரி அம்மையார் போலந்து நாட்டைச் சேர்ந்தவர்.
Correct Answer: B [கியூரி அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?]
Notes:
‘போலந்து’ என்பது ஒரு நாடு. நாட்டை வினவ ‘எந்த நாட்டைச் சேர்ந்தவர்?’ என்பதே பொருந்தும்.
2.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.
Correct Answer: A [குடியரசுத் தலைவர் என்று தமிழகம் வருகிறார்?]
Notes:
‘நாளை’ என்பது காலத்தைக் குறிக்கும் சொல்.
3.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
‘சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகிறது’.
‘சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகிறது’.
Correct Answer: D [சீத்தலைச் சாத்தனார் பாடிய காப்பியம் யாருடைய வரலாற்றைக் கூறுகிறது?]
Notes:
தொடர் தரும் செய்தி, சாத்தனார் பாடிய காப்பியம் ‘மணிமேகலையின்’ வரலாற்றைக் கூறுகிறது என்பதே.
4.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
“செய்தக்க செய்யாமை யானும் கெடும்”
“செய்தக்க செய்யாமை யானும் கெடும்”
Correct Answer: D [எதைச் செய்யாமையால் கெடும்?]
Notes:
‘செய்தக்க செய்யாமை யானும் கெடும்’ – செய்யத் தக்கவற்றைச் செய்யாமையாலும் கேடு வரும் என்பது பொருள்.
5.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
டாக்டர் அப்துல்கலாம் ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படுகிறார்.
டாக்டர் அப்துல்கலாம் ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படுகிறார்.
Correct Answer: C [இந்திய ஏவுகணை நாயகன் யார்?]
Notes:
தொடரில் உள்ள அடைமொழி ‘இந்திய ஏவுகணை நாயகன்’ என்பதே.
6.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
தமிழர்களின் வீர விளையாட்டு ஏறு தழுவுதல் ஆகும்.
தமிழர்களின் வீர விளையாட்டு ஏறு தழுவுதல் ஆகும்.
Correct Answer: B [தமிழர்களின் வீர விளையாட்டு எது?]
Notes:
தொடரில் ஏறு தழுவுதல் என்னும் ஒரு விளையாட்டு குறிக்கப்படுகிறது.
7.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
திருக்குறள் மூன்று பிரிவுகளை உடையது.
திருக்குறள் மூன்று பிரிவுகளை உடையது.
Correct Answer: B [திருக்குறள் எத்தனை பிரிவுகளை உடையது?]
Notes:
‘மூன்று’ என்னும் எண்ணிக்கையை வினவ ‘எத்தனை’ பயன்படும்.
8.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.
துவ்வாமை என்னும் சொல்லின் பொருள் வறுமை
துவ்வாமை என்னும் சொல்லின் பொருள் வறுமை
Correct Answer: C [துவ்வாமை என்னும் சொல்லின் பொருள் யாது?]
Notes:
தொடர் ஒரு சொல்லின் பொருளைத் தருகிறது; எனவே ‘பொருள் யாது?’ என்னும் வினாவே பொருந்தும்.
9.
விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க.
சாலைச் சந்திப்பில் நுழையும்போது அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
சாலைச் சந்திப்பில் நுழையும்போது அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
Correct Answer: D [சாலைச் சந்திப்புகளில் எவற்றுக்கு முதலிடம் தர வேண்டும்?]
Notes:
‘வாகனங்கள்’ அஃறிணைப் பன்மை. அஃறிணைப் பன்மையை வினவ ‘எவற்றுக்கு’ பயன்படும்; உயர்திணைக்குரிய ‘யாருக்கு’ பொருந்தாது.
10.
விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க :
‘தமிழில் திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்த நூலாகும்’.
‘தமிழில் திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்த நூலாகும்’.
Correct Answer: C [உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது?]
Notes:
‘எனக்கு மிகவும் பிடித்த நூல் திருக்குறள்’ என்பது, ‘உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம் எது?’ என்ற வினாவுக்கு விடையாகும்.
11.
விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க.
மனிதர்கள் செய்ய இயலாத கடினமான செயல்களை ரோபோக்கள் செய்கின்றன.
மனிதர்கள் செய்ய இயலாத கடினமான செயல்களை ரோபோக்கள் செய்கின்றன.
Correct Answer: B [மனிதர்களால் செய்ய இயலாத செயல்களைச் செய்பவை எவை?]
Notes:
தொடரில் செய்பவை ‘ரோபோக்கள்’ (எழுவாய்).
12.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க :
இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.
இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.
Correct Answer: B [எக்காலத்தும் துன்பம் அடையார் யார்?]
Notes:
‘இன்புற்று வாழும் இயல்புடையார் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது’ – இன்பமாக வாழும் இயல்புடையவர் எக்காலத்திலும் துன்புற்று வாழ மாட்டார் என்பது பொருள்.
13.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
‘இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா’
‘இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா’
Correct Answer: C [இரட்டிற் பிரிந்திசையாதது எது?]
Notes:
‘இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா’ – இரட்டைக்கிளவி இரட்டித்தே வரும்; பிரித்தால் பொருள் தராது.
14.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
“இழப்பினும் பிற்பயக்கும் நற்பாலவை”
“இழப்பினும் பிற்பயக்கும் நற்பாலவை”
Correct Answer: C [இழந்தாலும் பிற்பயப்பவை எவை?]
Notes:
‘இழப்பினும் பிற்பயக்கும் நற்பாலவை’ – நல்வழியில் வந்தவை இழந்தாலும் பின்னர் நன்மை தரும் என்பது பொருள் (திருக்குறள், வினைத்தூய்மை).
15.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர் ஆவார்.
எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர் ஆவார்.
Correct Answer: C [நேர்மையான வாழ்வு வாழ்பவர் யார்?]
Notes:
தொடரின் பயனிலைப் பகுதி ‘நேர்மையான வாழ்வு வாழ்பவர் ஆவார்’.
16.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க :
கபிலர் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்.
கபிலர் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்.
Correct Answer: B [நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் யார்?]
Notes:
கபிலர் ‘நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்’ என்னும் முழுச் செய்தியையும் உள்ளடக்கிய வினா ‘நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் யார்?’ என்பதே.
17.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க :
“கீழோர் ஆயினும் தாழ உரை”
“கீழோர் ஆயினும் தாழ உரை”
Correct Answer: C [கீழோரிடம் எப்படிப் பேச வேண்டும்?]
Notes:
‘கீழோர் ஆயினும் தாழ உரை’ – நம்மைவிடத் தாழ்ந்தவரிடமும் பணிவாகப் பேச வேண்டும் என்பது பொருள்.
18.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க :
“பயவாக் களரனையர் கல்லாதவர்”
“பயவாக் களரனையர் கல்லாதவர்”
Correct Answer: D [கல்லாதவர் எதைப் போன்றவர்?]
Notes:
‘பயவாக் களரனையர் கல்லாதவர்’ – கல்லாதவர் விளைச்சல் தராத களர் (உவர்) நிலத்தைப் போன்றவர் என்பது பொருள் (திருக்குறள், கல்லாமை).
19.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
‘பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்’
‘பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்’
Correct Answer: B [பொறையெனப்படுவது எது?]
Notes:
‘பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்’ – தம்மை மதியாதவரையும் பொறுத்துக் கொள்வதே பொறுமை என்பது பொருள் (கலித்தொகை).
20.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
“மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!”
“மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!”
Correct Answer: D [இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுவது எது?]
Notes:
‘சிலம்பு’ (சிலப்பதிகாரம்), ‘மணிமேகலை’ ஆகிய இரண்டும் இவ்வடியில் சுட்டப்படுகின்றன; இவை ‘இரட்டைக் காப்பியங்கள்’ எனப்படும்.
21.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க :
‘மன்னுயிர்க் கெல்லாம் வரம் மரம்தான்’
‘மன்னுயிர்க் கெல்லாம் வரம் மரம்தான்’
Correct Answer: B [மன்னுயிர்க்கு வரம் எது?]
Notes:
‘மன்னுயிர்க்கெல்லாம் வரம் மரம்தான்’ – உலக உயிர்கள் அனைத்துக்கும் வரமாக அமைவது மரமே என்பது பொருள்.
22.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை’
‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை’
Correct Answer: A [தமிழர்க்குப் பெருமை தராதது எது?]
Notes:
பாரதியார் பாடல் அடி: நமக்குள்ளே மறைவாகப் பழங்கதைகள் பேசுவதில் பெருமை இல்லை என்பது பொருள்.
23.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க :
“முதல் இலார்க்கு ஊதியம் இல்”
“முதல் இலார்க்கு ஊதியம் இல்”
Correct Answer: A [முதலீடு இல்லாதவருக்கு எது கிடைக்காது?]
Notes:
‘முதலிலார்க்கு ஊதியம் இல்லை’ – முதலீடு இல்லாதவருக்கு ஊதியம் (இலாபம்) இல்லை என்பது பொருள் (திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல்).
24.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
தேவநேயப் பாவாணர் மொழி ஞாயிறு என்றழைக்கப்படுகிறார்.
தேவநேயப் பாவாணர் மொழி ஞாயிறு என்றழைக்கப்படுகிறார்.
Correct Answer: A [தேவநேயப் பாவாணர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?]
Notes:
‘மொழி ஞாயிறு’ என்பது தேவநேயப் பாவாணருக்குரிய சிறப்புப் பெயர்.
25.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
Correct Answer: C [சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து எது?]
Notes:
தொடரின் செய்தி – சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து ஆய்தம்.
26.
சரியான இணையைக் கண்டறிக.
Correct Answer: C [உறுவது கூறல் விடை – நீ விளையாடவில்லையா? வினாவிற்குக் ‘கால் வலிக்கும்’ என்று உறுவது உரைப்பது.]
Notes:
‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவுக்கு ‘கால் வலிக்கும்’ என இனி நேர்வதைக் கூறுவது உறுவது கூறல் விடை.
27.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள
நூலகம் கன்னிமாரா நூலகமே
உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள
நூலகம் கன்னிமாரா நூலகமே
Correct Answer: A [உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் எது?]
Notes:
தொடர் தரும் செய்தி ‘உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம்’ கன்னிமாரா நூலகம் என்பதே.
28.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
உவமையும் உவமேயமும் ஒன்றாக அமைவது உருவக அணி.
உவமையும் உவமேயமும் ஒன்றாக அமைவது உருவக அணி.
Correct Answer: C [உருவக அணியை விளக்குக.]
Notes:
தொடர் உருவக அணியின் இலக்கணத்தைக் கூறுகிறது; எனவே ‘உருவக அணியை விளக்குக’ என்பதே பொருந்தும்.
29.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
எங்கள் வீட்டில் தக்காளி இல்லை
எங்கள் வீட்டில் தக்காளி இல்லை
Correct Answer: B [உங்கள் வீட்டில் தக்காளி இருக்கிறதா?]
Notes:
‘எங்கள் வீட்டில் தக்காளி இல்லை’ என்பது ‘உங்கள் வீட்டில் தக்காளி இருக்கிறதா?’ என்ற வினாவுக்கான மறை விடை.
30.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்
எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்
Correct Answer: B [இயற்சொல் என்றால் என்ன?]
Notes:
தொடர் இயற்சொல்லுக்கு வரையறை தருகிறது; எனவே ‘இயற்சொல் என்றால் என்ன?’ என்பதே பொருந்தும்.
31.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்
Correct Answer: B [தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் யார்?]
Notes:
‘தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்.
32.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
“தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு”
“தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு”
Correct Answer: A [தமிழர் பண்பாட்டில் எதற்குத் தனித்த இடமுண்டு?]
Notes:
‘வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு’ என்பதில் வாழை இலையையே வினவ வேண்டும்.
33.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
திருக்குறள் 1330 குறட்பாக்களைக் கொண்டுள்ளது.
திருக்குறள் 1330 குறட்பாக்களைக் கொண்டுள்ளது.
Correct Answer: A [திருக்குறள் எத்தனை குறட்பாக்களைக் கொண்டுள்ளது?]
Notes:
1330 என்னும் எண்ணிக்கையை வினவ ‘எத்தனை’ பயன்படும்.
34.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
தூது இலக்கியம் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது.
தூது இலக்கியம் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது.
Correct Answer: A [தூது இலக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?]
Notes:
‘சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது’ என்பதை வினவ ‘எவ்வகையைச் சார்ந்தது?’ என்பது பொருந்தும்.
35.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையை நாட்டுப்புறப் பாடல் கூறுகிறது
நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையை நாட்டுப்புறப் பாடல் கூறுகிறது
Correct Answer: A [நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையை எந்தப் பாடல் கூறுகிறது?]
Notes:
வந்தவரை உபசரிக்கும் முறையைக் கூறுவது ‘நாட்டுப்புறப் பாடல்’ என்பதே தொடரின் செய்தி.
36.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
மாணவரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று ஆசிரியர் வினவும் வினா?
மாணவரிடம், “இந்தக் கவிதையின் பொருள் யாது?” என்று ஆசிரியர் வினவும் வினா?
Correct Answer: A [அறிவினா]
Notes:
தான் விடையை அறிந்திருந்தும், பிறர் அறிவை ஆராயும் நோக்கில் கேட்கும் வினா அறிவினா.
37.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
மாணவர்களே ‘இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?’ என வினவுதல் என்ன வினா?
மாணவர்களே ‘இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?’ என வினவுதல் என்ன வினா?
Correct Answer: B [ஐயவினா]
Notes:
இரண்டில் எது என்று தெளிவு பெறாமல், ஐயம் நீங்கக் கேட்கும் வினா ஐயவினா.
38.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல். மாணவர்கள் ஆசிரியரிடம், ‘இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று கேட்கும் வினா
Correct Answer: C [அறியா வினா]
Notes:
தான் அறியாத ஒன்றை அறிந்துகொள்வதற்காகக் கேட்கும் வினா அறியா வினா.
39.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
‘மூதுரை’ என்னும் நூலை எழுதியவர் ஔவையார்.
‘மூதுரை’ என்னும் நூலை எழுதியவர் ஔவையார்.
Correct Answer: C [மூதுரை என்னும் நூலை எழுதியவர் யார்?]
Notes:
விடையில் ‘ஔவையார்’ என்னும் ஆள் பெயர் உள்ளதால் ‘யார்’ என்னும் வினாச்சொல் பொருந்தும்.
40.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
விருதுநகரின் முந்தைய பெயர் விருதுப்பட்டி
விருதுநகரின் முந்தைய பெயர் விருதுப்பட்டி
Correct Answer: A [விருதுநகரின் முந்தைய பெயர் என்ன?]
Notes:
விடை ‘விருதுப்பட்டி’ என்னும் பெயர்; ஆகவே ‘முந்தைய பெயர் என்ன?’ என்று வினவுவதே பொருத்தம்.
41.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்
“கல்வியில் பெரியவர் கம்பர்”
“கல்வியில் பெரியவர் கம்பர்”
Correct Answer: D [கல்வியில் பெரியவர் யார்?]
Notes:
விடையில் ‘கம்பர்’ என்னும் ஆள் பெயர் உள்ளது; ‘கல்வியில் பெரியவர்’ என்னும் தொடர் மாறாமல் வினாவில் வர வேண்டும்.
42.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
“சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற புதினத்திற்குச் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
“சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற புதினத்திற்குச் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
Correct Answer: A [சாகித்திய அகாதமி விருது எந்தப் புதினத்திற்குக் கிடைத்தது?]
Notes:
விடை ஒரு புதினத்தின் பெயர்; ஆகவே ‘எந்தப் புதினத்திற்கு’ என்று வினவ வேண்டும்.
43.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
“தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் இரண்டாயிரம் ஆண்டு காலத் தொன்மையுடையது”
“தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் இரண்டாயிரம் ஆண்டு காலத் தொன்மையுடையது”
Correct Answer: C [தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் எத்தனை ஆண்டுகாலத் தொன்மையுடையது?]
Notes:
விடை ‘இரண்டாயிரம் ஆண்டு’ என்னும் எண்ணிக்கை; எனவே ‘எத்தனை ஆண்டுகாலம்’ என்று வினவ வேண்டும்.
44.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுதல்
“தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது தமிழர் மரபாகக் கருதப்படுகிறது.”
“தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது தமிழர் மரபாகக் கருதப்படுகிறது.”
Correct Answer: B [தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது யார் மரபாகக் கருதப்படுகிறது?]
Notes:
விடை ‘தமிழர்’; ஆகவே ‘யார் மரபாக’ என்று வினவ வேண்டும்.
45.
விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக
“தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்”
“தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்”
Correct Answer: B [நம் இளைஞர்களிடையே எந்த எண்ணம் வளர வேண்டும்?]
Notes:
விடையில் உள்ள ‘வளர வேண்டும்’, ‘நம் இளைஞர்களிடையே’ என்னும் செய்திகள் மாறாமல், எண்ணத்தை மட்டும் ‘எந்த எண்ணம்’ என வினவுவதே சரி.
46.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
வினா ஆறு வகைப்படும்.
வினா ஆறு வகைப்படும்.
Correct Answer: C [வினா எத்தனை வகைப்படும்?]
Notes:
எண்ணிக்கையை வினவ ‘எத்தனை’ என்னும் வினாச்சொல் வேண்டும்.
47.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
நடவாமை என்பது எதிர்மறைத் தொழிற்பெயருக்கான சான்று.
நடவாமை என்பது எதிர்மறைத் தொழிற்பெயருக்கான சான்று.
Correct Answer: D [எதிர்மறைத் தொழிற்பெயர் சான்று தருக.]
Notes:
‘நடவாமை’ எதிர்மறைத் தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளதால், ‘எதிர்மறைத் தொழிற்பெயர் சான்று தருக’ என்பதே ஏற்ற வினா.
48.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்”
“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்”
Correct Answer: A [நன்றிக்கு வித்தாவது எது?]
Notes:
விடை ‘நல்லொழுக்கம்’; ‘நன்றிக்கு வித்தாகும்’ என்னும் செய்தி மாறாமல் ‘எது’ என வினவ வேண்டும்.
49.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
நல்ல சொற்களைப் பேச வேண்டும்
நல்ல சொற்களைப் பேச வேண்டும்
Correct Answer: B [என்ன சொற்களைப் பேச வேண்டும்?]
Notes:
விடையில் வினவப்படுவது சொற்களின் தன்மை (‘நல்ல’); ஆகவே ‘என்ன சொற்களை’ என்பது பொருந்தும்.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
