வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
அணித்து – எதிர்ச் சொல்லைக் கண்டறிக.
Correct Answer: A [தொலைவில்]
Notes:
அணித்து என்பது அருகில், அண்மையில் என்னும் பொருள் தரும்.
2.
எதிர்ச்சொல் தருக
அணுகு
அணுகு
Correct Answer: A [விலகு]
Notes:
அணுகு என்பது நெருங்கு, அருகில் செல் என்னும் பொருள் தரும்.
3.
அந்நியர் – எதிர்ச்சொல் தருக.
Correct Answer: C [உறவினர்]
Notes:
அந்நியர் என்பது அயலார், பிறர் எனப் பொருள்படும்.
4.
“அருகுற” என்னும் சொல்லின் எதிர்ச்சொல் தருக.
Correct Answer: B [தொலைவில்]
Notes:
அருகுற என்பது அருகில் பொருந்த, நெருங்க என்னும் பொருள் தரும்.
5.
எதிர்ச்சொல் அறிதல் :
ஊக்கம்
ஊக்கம்
Correct Answer: C [சோர்வு]
Notes:
ஊக்கம் என்பது முயற்சியில் உள்ள மன எழுச்சி, உற்சாகம்.
6.
அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே
–இவ்வடியிலுள்ள ‘அல்’ என்பதன் எதிர்ச்சொல்லைக் கண்டறிக
–இவ்வடியிலுள்ள ‘அல்’ என்பதன் எதிர்ச்சொல்லைக் கண்டறிக
Correct Answer: D [பகல்]
Notes:
அல் என்பது இரவு, இருள் எனப் பொருள்படும் பழந்தமிழ்ச் சொல்.
7.
“அல்லவை” என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
Correct Answer: C [நல்லவை]
Notes:
அல்லவை என்பது அறம் அல்லாதவை, தீயவை எனப் பொருள்படும்.
8.
அழுக்காறுடையான் - எதிர்ச்சொல் தருக
Correct Answer: C [பொறாமையற்றவன்]
Notes:
அழுக்காறு என்பது பொறாமை. அழுக்காறுடையான் = பொறாமை உடையவன்; அதன் எதிர்ச்சொல் பொறாமையற்றவன்.
9.
அவல் எதிர்ச்சொல்
Correct Answer: B [மேடு]
Notes:
அவல் என்பது பள்ளம் (தாழ்ந்த நிலம்) எனப் பொருள்படும்.
10.
இடர் ஆழி என்பதன் எதிர்ச்சொல்
Correct Answer: C [இன்பக் கடல்]
Notes:
இடர் = துன்பம், ஆழி = கடல்; இடர் ஆழி = துன்பக்கடல்.
11.
‘இடர் ஆழி நீங்குகவே’ - இத்தொடரில் இடர் என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக
Correct Answer: A [இன்பம்]
Notes:
இடர் என்பது துன்பம் எனப் பொருள்படும்.
12.
எதிர்ச்சொல் :
‘இடும்பை’ என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி.
‘இடும்பை’ என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி.
Correct Answer: B [இன்பம்]
Notes:
இடும்பை என்பது துன்பம் எனப் பொருள்படும்.
13.
‘இன்சொல்’ – என்பதன் எதிர்ச்சொல்லை எழுது.
Correct Answer: C [வன்சொல்]
Notes:
இன்சொல் என்பது இனிமையான சொல். அதன் எதிர்ச்சொல் கடுமையான சொல்லாகிய வன்சொல்.
14.
‘இன்னாச்சொல்’ என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி
Correct Answer: A [இனிய சொல்]
Notes:
இன்னாச்சொல் என்பது துன்பம் தரும் கடுஞ்சொல் (இன்னா = இனிமையல்லாத).
15.
எதிர்ச்சொல் தருக :
இம்மை என்பதன் எதிர்ச்சொல்
இம்மை என்பதன் எதிர்ச்சொல்
Correct Answer: B [மறுமை]
Notes:
இம்மை என்பது இப்பிறப்பு (இவ்வுலக வாழ்வு).
16.
எதிர்ச்சொல் எழுதுக
இரவலர் ×
இரவலர் ×
Correct Answer: D [புரவலர்]
Notes:
இரவலர் என்பவர் இரந்து பொருள் பெறுபவர் (யாசகர்).
17.
எது எதிர்ச்சொல் இல்லை?
Correct Answer: B [கடைக்கொட்க × கடைசியில்]
Notes:
கடைக்கொட்க என்பது செயலை முடித்த பின்னரே வெளிப்படுத்துக எனப் பொருள்படும்; ‘கடைசியில்’ என்பது அதன் எதிர்ச்சொல் அன்று.
18.
இளமை – என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
Correct Answer: A [முதுமை]
Notes:
இளமை என்பது இளம் பருவம். அதன் எதிர்ச்சொல் முதுமை.
19.
இவற்றுள் எது தவறான இணை எதிர்ச்சொல் என்பதைத் தெரிவு செய்க.
Correct Answer: B [அகலாது × போகாது]
Notes:
அகலாது, போகாது இரண்டும் ‘நீங்காது’ என்னும் ஒரே பொருள் தருபவை; எனவே இது எதிர்ச்சொல் இணை அன்று.
20.
எதிர்ச்சொல் எழுதுக
ஈதல் ×
ஈதல் ×
Correct Answer: B [ஏற்றல்]
Notes:
ஈதல் என்பது கொடுத்தல். அதன் எதிர்ச்சொல் பெற்றுக்கொள்ளுதல் ஆகிய ஏற்றல்.
21.
உண்மை – என்பதன் எதிர்ச்சொல் தருக.
Correct Answer: C [பொய்மை]
Notes:
உண்மை என்பதன் எதிர்ச்சொல் பொய்மை.
22.
‘உதித்த’ என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் எழுதுக.
Correct Answer: A [மறைந்த]
Notes:
உதித்த என்பது தோன்றிய (கதிரவன் எழுந்த) எனப் பொருள்படும்.
23.
“உழவன்” எதிர்ப்பாலுக்கு உரிய சொல்
Correct Answer: B [உழத்தி]
Notes:
உழவன் என்பதன் பெண்பால் உழத்தி.
24.
எதிர்ச்சொல் எடுத்தெழுதுதல்.
எளிது
எளிது
Correct Answer: A [அரிது]
Notes:
எளிது என்பது சுலபமானது. அதன் எதிர்ச்சொல் அரிது (கடினமானது).
25.
எதிர்ச்சொல் எடுத்தெழுதுதல்
“நீக்குதல்” எதிர்ச்சொல் தருக
“நீக்குதல்” எதிர்ச்சொல் தருக
Correct Answer: D [சேர்த்தல்]
Notes:
நீக்குதல் என்பது விலக்குதல், அகற்றுதல்.
26.
எடுப்பு – எதிர்ச்சொல் தருக.
Correct Answer: B [முடித்தல்]
Notes:
எடுப்பு என்பது தொடக்கம் (தொடங்குதல்) எனப் பொருள்படும்.
27.
எதிர்ச்சொற்களைப் பொருத்துக :
(a) எளிது – 1. புரவலர்
(b) ஈதல் – 2. அரிது
(c) அந்நியர் – 3. ஏற்றல்
(d) இரவலர் – 4. உறவினர்
(a) எளிது – 1. புரவலர்
(b) ஈதல் – 2. அரிது
(c) அந்நியர் – 3. ஏற்றல்
(d) இரவலர் – 4. உறவினர்
Correct Answer: C [2 3 4 1]
Notes:
எளிது × அரிது (2), ஈதல் × ஏற்றல் (3), அந்நியர் × உறவினர் (4), இரவலர் × புரவலர் (1).
28.
எதிர்ச் சொற்களைப் பொருத்துக.
(a) அணுகு – 1. தெளிவு
(b) ஐயம் – 2. சோர்வு
(c) ஊக்கம் – 3. பொய்மை
(d) உண்மை – 4. விலகு
(a) அணுகு – 1. தெளிவு
(b) ஐயம் – 2. சோர்வு
(c) ஊக்கம் – 3. பொய்மை
(d) உண்மை – 4. விலகு
Correct Answer: C [4 1 2 3]
Notes:
அணுகு × விலகு (4), ஐயம் × தெளிவு (1), ஊக்கம் × சோர்வு (2), உண்மை × பொய்மை (3).
29.
சரியான எதிர்மறைச் சொல்லைக் கொண்டு நிரப்புக :
மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் ______
மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் ______
Correct Answer: B [அல்லள்]
Notes:
எழுவாய் ‘மணிமேகலை’ உயர்திணைப் பெண்பால் ஒருமை.
30.
எல் – எதிர்ச்சொல் தருக.
Correct Answer: D [இரவு]
Notes:
எல் என்பது பகல், ஒளி, கதிரவன் எனப் பொருள்படும்.
31.
ஏற்றம் - என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக
Correct Answer: D [இறக்கம்]
Notes:
ஏற்றம் என்பது உயர்வு, மேலே ஏறுதல்.
32.
எதிர்ச்சொல் தருக.
ஐயம்
ஐயம்
Correct Answer: B [தெளிவு]
Notes:
ஐயம் என்பது சந்தேகம். அதன் எதிர்ச்சொல் தெளிவு.
33.
ஒப்புரவு – எதிர்ச்சொல் – தருக
Correct Answer: B [உதவாமை]
Notes:
ஒப்புரவு என்பது உலக நடை அறிந்து பிறர்க்கு உதவுதல்.
34.
‘ஒறுத்தார்’ – எதிர்ச்சொல் தருக
Correct Answer: D [பொறுத்தவர்]
Notes:
ஒறுத்தார் என்பது (தீங்கு செய்தவரைத்) தண்டித்தவர்.
35.
கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் – இத்தொடருக்குரிய சரியான எதிர்ச்சொல்லைத் தருக.
Correct Answer: A [கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்]
Notes:
எழுதினாள் என்னும் உடன்பாட்டு வினைக்கு எதிர்மறை வடிவம் எழுதிலள் (எழுது + இல் + அள்).
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
