வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தைத் தேர்வு செய்க :

Correct Answer: B [தோழிக்கு மரபுப்படி திருமணம் நடந்தது]

Notes:

‘சம்பிரதாயம்’ (வடசொல்) – மரபு, ‘மேரேஜ்’ (ஆங்கிலம்) – திருமணம்.

2.  
பிறமொழிச் சொற்களை நீக்குக.
யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்குப் போனாள்

Correct Answer: B [சீருடை அணிந்து பள்ளிக்குப் போனாள்]

Notes:

யூனிஃபார்ம் – சீருடை, ஸ்கூல் – பள்ளி.

3.  
பிறமொழிச் சொற்களை நீக்குதல்
நமஸ்காரம் என்று சாஷ்டாங்கமாக விழுந்தவனை ஆசீர்வதித்தேன்

Correct Answer: C [வணக்கம் என்று நெடுஞ்சாண் கிடையாக விழுந்தவனை வாழ்த்தினேன்]

Notes:

நமஸ்காரம் – வணக்கம், சாஷ்டாங்கமாக – நெடுஞ்சாண் கிடையாக, ஆசீர்வதித்தல் – வாழ்த்துதல்.

4.  
பிறமொழிச் சொற்கள் கலந்த தொடரைக் கண்டறிக.

Correct Answer: B [அதிகாரிகள் உத்தரவு போட்டனர்]

Notes:

‘உத்தரவு’ என்பது பிறமொழிச் சொல்; இதற்கு இணையான தமிழ்ச்சொல் ‘ஆணை’.

5.  
பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக.

Correct Answer: B [வானூர்தி ஓர் அறிவியல் ஆக்கம்]

Notes:

வானூர்தி, அறிவியல், ஆக்கம் ஆகியவை தமிழ்ச்சொற்கள்.

6.  
பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக

Correct Answer: A [கணியன் பள்ளி முடிந்து வீடு திரும்பினான்]

Notes:

இத்தொடரில் பிறமொழிச் சொல் இல்லை.

7.  
பிறமொழிச்சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக.

Correct Answer: B [கடல் நீர் உப்பாக இருக்கிறது]

Notes:

‘கடல் நீர் உப்பாக இருக்கிறது’ – அனைத்தும் தமிழ்ச்சொற்கள்.

8.  
பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுது.

Correct Answer: B [என் நண்பன் வானூர்தியில் பயணம் செய்தான்]

Notes:

‘ஏரோப்பிளேன்’ என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் ‘வானூர்தி’.

9.  
பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுது.

Correct Answer: D [திருவிழாவிற்கு முதன்மையானவர் வருகை புரிந்தார்.]

Notes:

‘முதன்மையானவர்’ தமிழ்ச்சொல். முக்கியஸ்தர், பிரதானமானவர், உத்தியோகஸ்தர் (அலுவலர்) ஆகியவை வடமொழிச் சொற்கள் அல்லது அவற்றின் கலப்பு.

10.  
பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரைக் கண்டறிக.

Correct Answer: D [காற்றின் உதவியால் செலுத்தப்படுபவை பாய்மரக் கப்பல்கள்]

Notes:

‘காற்றின் உதவியால் செலுத்தப்படுபவை பாய்மரக் கப்பல்கள்’ – அனைத்தும் தமிழ்ச்சொற்கள்.

11.  
பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரைக் கண்டறி.

Correct Answer: D [எவ்வகையான செயற்கைக்கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது]

Notes:

‘எவ்வகையான செயற்கைக்கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது’ – அனைத்தும் தமிழ்ச்சொற்கள்.

12.  
பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

Correct Answer: C [அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது]

Notes:

‘உரையாடல்’ தமிழ்ச்சொல். கான்வர்சேசன், ஸ்பீச் (பேச்சு) ஆகியவை ஆங்கிலச் சொற்கள்; ‘விவாதம்’ வடசொல்.

13.  
பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

Correct Answer: C [கண்ணன் தேநீர்க் கடைக்குச் சென்றான்]

Notes:

‘கண்ணன் தேநீர்க் கடைக்குச் சென்றான்’ – அனைத்தும் தமிழ்ச்சொற்கள்.

14.  
பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

Correct Answer: C [கோவிலில் தெய்வத்திற்கு வழிபாடு நடந்தது]

Notes:

பிற தொடர்களில் நாஷ்டா (சிற்றுண்டி), அனுமதி (இசைவு), ஆசீர்வாதம் (வாழ்த்து) ஆகிய பிறமொழிச் சொற்கள் உள்ளன.

15.  
பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

Correct Answer: D [அலுவலகத்தில் கையூட்டு வாங்கக் கூடாது]

Notes:

‘கையூட்டு’ என்பது லஞ்சம் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்.

16.  
பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்.
‘அலர்ஜி’ என்பதன் தமிழ்ச் சொல்

Correct Answer: B [ஒவ்வாமை]

Notes:

‘அலர்ஜி’ (Allergy) என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் ‘ஒவ்வாமை’.

17.  
பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்
‘ஆன்டிபயாடிக்’ என்பதன் தமிழ்ச் சொல்

Correct Answer: C [நுண்ணுயிர் முறி]

Notes:

‘ஆன்டிபயாடிக்’ (Antibiotic) என்பதற்கு இணையான கலைச்சொல் ‘நுண்ணுயிர் முறி’.

18.  
பிற மொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி.
“இதே எக்ஸ்பெரிமெண்ட்டை ரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள்”

Correct Answer: A [இதே செய்முறையை மீண்டும் செய்து விடையைக் கண்டுபிடியுங்கள்]

Notes:

எக்ஸ்பெரிமெண்ட் – செய்முறை/சோதனை, ரிப்பீட் – மீண்டும், ஆன்சர் – விடை.

19.  
பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக
சர்க்கார்

Correct Answer: A [அரசாங்கம்]

Notes:

‘சர்க்கார்’ என்பது பாரசீகச் சொல்; இதற்கு இணையாக ‘அரசாங்கம்’ என்பது வழங்குகிறது.

20.  
பிற மொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
சினிமா

Correct Answer: A [திரைப்படம்]

Notes:

‘சினிமா’ என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் ‘திரைப்படம்’.

21.  
பிற மொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.
புஸ்தகம், Books

Correct Answer: A [நூல்கள்]

Notes:

‘புஸ்தகம்’ (வடசொல்), Books (ஆங்கிலம்) ஆகியவற்றுக்கு இணையான தமிழ்ச்சொல் ‘நூல்கள்’.

22.  
பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
போலீஸ் ஸ்டேஷன்

Correct Answer: A [காவல் நிலையம்]

Notes:

‘போலீஸ் ஸ்டேஷன்’ என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் ‘காவல் நிலையம்’.

23.  
பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் தருக.
‘லைட் ஹவுஸ்’ என்பதன் தமிழ்ச் சொல்

Correct Answer: A [கலங்கரை விளக்கம்]

Notes:

‘லைட் ஹவுஸ்’ (Light house) என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் ‘கலங்கரை விளக்கம்’.

24.  
பிறமொழிச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லை எழுது.
ப்ளாக்போர்டு

Correct Answer: A [கரும்பலகை]

Notes:

‘ப்ளாக்போர்டு’ (Blackboard) என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் ‘கரும்பலகை’.

25.  
பிறமொழிச் சொல் கலவாத தொடரைக் கண்டுபிடி

Correct Answer: C [வானத்தில் பறவை பறந்தது]

Notes:

‘வானத்தில் பறவை பறந்தது’ – அனைத்தும் தமிழ்ச்சொற்கள்.

26.  
பிறமொழிச் சொற்களை நீக்கி எழுது.
சான்றோர் கூறும் உபதேசங்கள் நம் வாழ்க்கைக்கு ஏற்றமளிப்பவை.

Correct Answer: A [அறிவுரைகள்]

Notes:

‘உபதேசம்’ என்ற வடசொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் ‘அறிவுரை’.

27.  
பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்.
(a) சூரன் – 1. பெரும்பரப்பு
(b) பொக்கிஷம் – 2. மிகுதி
(c) சாஸ்தி – 3. செல்வம்
(d) விஸ்தாரம் – 4. வீரன்

Correct Answer: D [4 3 2 1]

Notes:

சூரன் – வீரன், பொக்கிஷம் – செல்வம், சாஸ்தி – மிகுதி, விஸ்தாரம் – பெரும்பரப்பு.

28.  
பொருத்துக :
(a) கரன்சி நோட் – 1. மின்னணு வணிகம்
(b) செக் – 2. வரைவோலை
(c) ஈ காமர்ஸ் – 3. பணத்தாள்
(d) டிமாண்ட் டிராஃப்ட் – 4. காசோலை

Correct Answer: C [3 4 1 2]

Notes:

கரன்சி நோட் – பணத்தாள், செக் – காசோலை, ஈ காமர்ஸ் – மின்னணு வணிகம், டிமாண்ட் டிராஃப்ட் – வரைவோலை.

29.  
பொருத்துக
பிறமொழிச்சொல் – தமிழ்ச் சொல்
(a) ஐதீகம் – 1. விருந்தோம்பல்
(b) இருதயம் – 2. சொத்து
(c) ஆஸ்தி – 3. உலக வழக்கு
(d) உபசரித்தல் – 4. நெஞ்சகம்

Correct Answer: B [3 4 2 1]

Notes:

ஐதீகம் – உலக வழக்கு, இருதயம் – நெஞ்சகம், ஆஸ்தி – சொத்து, உபசரித்தல் – விருந்தோம்பல்.

30.  
பௌதிகம் – என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தேர்க.

Correct Answer: C [இயற்பியல்]

Notes:

‘பௌதிகம்’ என்ற வடசொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் ‘இயற்பியல்’.

31.  
மரக்கலத்திற்குத் தமிழில் வழங்கும் பெயர்களில் ஒன்று

Correct Answer: D [திமில்]

Notes:

‘திமில்’ என்பது மரக்கலத்தை, அதாவது படகைக் குறிக்கும் தமிழ்ச்சொல்.

32.  
மெய்நிகர் உதவியாளர் நாம் கேட்பதை ப்ரௌசரில் தேடும்.
– இத்தொடரில் ‘ப்ரௌசர்’ என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.

Correct Answer: C [உலாவி]

Notes:

‘ப்ரௌசர்’ (Browser) என்பதற்கு இணையான தமிழ்க் கலைச்சொல் ‘உலாவி’.

33.  
ரெடிமேட் டிரஸ் - என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் தேர்க.

Correct Answer: C [ஆயத்த ஆடை]

Notes:

‘ரெடிமேட் டிரஸ்’ என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் ‘ஆயத்த ஆடை’.

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0