வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
ஒரு பொருள் தரும் பல சொற்கள் :
மூசு, கவ்வை, நுழாய், கருக்கல்
மூசு, கவ்வை, நுழாய், கருக்கல்
Correct Answer: C [பிஞ்சுவகை]
Notes:
வடு, மூசு, கவ்வை, கச்சல், நுழாய், கருக்கல், குரும்பை ஆகியவை பிஞ்சு வகையைக் குறிக்கும் சொற்கள்.
2.
ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
சொல்லுதல்
சொல்லுதல்
Correct Answer: B [செப்புதல், கூறல்]
Notes:
செப்புதல், கூறல், உரைத்தல், மொழிதல், விளம்புதல் ஆகியவை ‘சொல்லுதல்’ என்னும் ஒரே பொருள் தரும் சொற்கள்.
3.
ஒருபொருள் தரும் பல சொற்கள்
“வயல்”
“வயல்”
Correct Answer: B [கழனி, பழனம்]
Notes:
கழனி, பழனம், செய் ஆகியவை ‘வயல்’ என்னும் பொருள் தருவன.
4.
ஒரு பொருள் தரும் பல சொற்கள்
வாயு, தென்றல், வளி, புயல், சூறாவளி எனப் பல்வேறு பெயர்களில் கூறப்படுவது எது? தேர்ந்து எழுதுக.
வாயு, தென்றல், வளி, புயல், சூறாவளி எனப் பல்வேறு பெயர்களில் கூறப்படுவது எது? தேர்ந்து எழுதுக.
Correct Answer: C [காற்று]
Notes:
வளி, கால், தென்றல், புயல், சூறாவளி ஆகியவை காற்றைக் குறிக்கும் சொற்கள்.
5.
ஒரு பொருள் தரும் பல சொற்கள்
வெற்பு, சிலம்பு, பொருப்பு, குன்று ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
வெற்பு, சிலம்பு, பொருப்பு, குன்று ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
Correct Answer: B [மலை]
Notes:
வெற்பு, சிலம்பு, பொருப்பு, குன்று, அடுக்கம் ஆகியவை மலையைக் குறிக்கும் சொற்கள்.
6.
ஒரு பொருள் தரும் பல சொற்கள் :
உறைக்கிணறு, ஊருணி, அகழி, அணை
உறைக்கிணறு, ஊருணி, அகழி, அணை
Correct Answer: A [நீர் நிலை]
Notes:
உறைக்கிணறு, ஊருணி, அகழி, அணை, ஏரி, குளம், கண்மாய் ஆகியவை நீர்நிலைகளின் வகைகள்.
7.
ஒரு பொருள் பல சொற்கள் அறிதல்.
மலைக்குகை
மலைக்குகை
Correct Answer: B [பிலம், முழை]
Notes:
முழை, பிலம் ஆகியவை மலைக்குகையைக் குறிக்கும் சொற்கள்.
8.
‘கடற்கலன்கள்’ எவை எனக் கண்டறிக.
Correct Answer: B [நாவாய், வங்கம், தோணி]
Notes:
நாவாய், வங்கம், தோணி, கலம், அம்பி, மிதவை ஆகியவை கடலில் செல்லும் கலன்களைக் குறிக்கும் சொற்கள்.
9.
கடலைக் குறிக்காத சொல்லைக் கண்டறிக :
Correct Answer: B [புணை]
Notes:
பௌவம், புணரி, பரவை, ஆழி, முந்நீர், அளக்கர் ஆகியவை கடலைக் குறிப்பன.
10.
கப்பல் செலுத்துபவரை இப் பெயர்களாலும் அழைப்பர்
Correct Answer: B [மீகாமன், நீகான்]
Notes:
கப்பலைச் செலுத்துபவர் மீகாமன், நீகான் என்று அழைக்கப்பட்டார்.
11.
கரி என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க.
Correct Answer: D [இறைச்சி]
Notes:
‘கரி’ என்பதற்கு யானை, அடுப்புக்கரி, கருமை, சான்று (சாட்சி) ஆகிய பொருள்கள் உண்டு.
12.
காண் – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்ந்தெடுக்க
Correct Answer: B [கண்டு]
Notes:
காண் என்னும் வேர்ச்சொல்லிலிருந்து ‘கண்டு’ என்பது வினையெச்சம் (வினையைக் கொண்டு முடிவது: கண்டு மகிழ்ந்தான்).
13.
காற்றினைக் குறிக்காத சொல்லினைத் தேர்க.
Correct Answer: D [பொருப்பு]
Notes:
‘பொருப்பு’ என்பது மலையைக் குறிக்கும் சொல்.
14.
கீழுள்ள நூல் பட்டியலில் பொருந்தா நூல் எது?
Correct Answer: D [தமிழியக்கம்]
Notes:
வேதியர் ஒழுக்கம், சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியவை வீரமாமுனிவர் இயற்றியவை.
15.
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமில்லாததை எழுதுக.
நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு.
நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு.
Correct Answer: D [பத்துப்பாட்டு]
Notes:
நற்றிணை, பரிபாடல், கலித்தொகை ஆகியவை எட்டுத்தொகை நூல்கள்.
16.
கீழ்க்கண்டவற்றுள் வேற்றுமை உருபுகள் அடிப்படையில் பொருந்தாதவற்றைக் கண்டறிக.
ஐ, ஆல், உறு, கு
ஐ, ஆல், உறு, கு
Correct Answer: C [உறு]
Notes:
ஐ (2), ஆல் (3), கு (4) ஆகியவை வேற்றுமை உருபுகள்.
17.
கீழ்க்காணும் சொற்களுள் ‘நிலவு’ என்னும் பொருள் குறிக்காத சொல்
Correct Answer: B [ஞாயிறு]
Notes:
திங்கள், மதி, இந்து, நிலா ஆகியவை சந்திரனைக் குறிக்கும் சொற்கள்.
18.
கீழ்க்காணும் சொற்களுள் பொருந்தாத சொல்லைத் தெரிவு செய்க.
Correct Answer: D [ஆடினாள்]
Notes:
சொன்னாள், நவின்றாள், பகர்ந்தாள் ஆகியவை ‘கூறினாள்’ என்ற ஒரே பொருள் தருவன.
19.
கீழ்க்காணும் சொற்களுள் ‘யானை’ என்னும் பொருள் குறிக்காத சொல்
Correct Answer: D [கேழல்]
Notes:
கரி, களிறு, வேழம், கயம், பகடு ஆகியவை யானையைக் குறிக்கும் சொற்கள்.
20.
குட்டி, பிள்ளை, மடலி, வடலி ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
Correct Answer: A [தாவரங்களின் இளநிலை]
Notes:
குட்டி, பிள்ளை, மடலி, வடலி ஆகியவை தாவரங்களின் இளநிலையைக் குறிக்கும் சொற்கள்.
21.
குணக்கு, குடக்கு எனும் பெயர்கள் குறிப்பது
Correct Answer: C [திசை]
Notes:
குணக்கு – கிழக்கு; குடக்கு – மேற்கு.
22.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், இல்லம் – பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
Correct Answer: C [இல்லம்]
Notes:
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகியவை நிலத்திணைகள் (பாலையுடன் ஐந்திணை).
23.
குற்றியலுகரத்தோடு பொருந்தாத சொல்லைத் தேர்க.
Correct Answer: D [அது]
Notes:
ஆறு, மாசு, பாகு – நெடிலை அடுத்து வல்லின மெய்யேறிய உகரம் வருவதால் நெடிற்றொடர்க் குற்றியலுகரம்.
24.
குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.
Correct Answer: D [பசு]
Notes:
சார்பு – இடைத்தொடர், மருந்து – மென்றொடர், கஃசு – ஆய்தத்தொடர் குற்றியலுகரங்கள்.
25.
குற்றியலுகர வகையறிந்து பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
Correct Answer: C [அமிழ்து]
Notes:
நெஞ்சு, இரும்பு, வண்டு – மெல்லின மெய்யை அடுத்து வரும் உகரம் என்பதால் மென்றொடர்க் குற்றியலுகரம்.
26.
குலைவகை : பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் :
Correct Answer: B [அளியல்]
Notes:
கொத்து, தாறு, அலகு ஆகியவை குலை வகையைச் சார்ந்த சொற்கள் (எ.கா.
27.
சால, உறு, தவ, நனி, கூர், கழி – என்ற ஆறு சொற்களும் ஒரே பொருளைத் தரும் அவற்றைக் கண்டறிக.
Correct Answer: C [மிகுதி]
Notes:
சால, உறு, தவ, நனி, கூர், கழி ஆகிய ஆறும் ‘மிகுதி’ என்னும் ஒரே பொருள் தரும் உரிச்சொற்கள் (நன்னூல்).
28.
சூம்பல், சிவியல், அளியல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
Correct Answer: C [கெட்டுப் போன காய்கனி வகை]
Notes:
சூம்பல், சிவியல், அளியல், சொத்தை, அழுகல் ஆகியவை கெட்டுப்போன காய்கனி வகைகளைக் குறிக்கும் சொற்கள்.
29.
‘ஞாயிறு’ என்னும் சொல் குறிக்காத பொருள்
Correct Answer: C [சந்திரன்]
Notes:
பகலவன், சூரியன், கதிரவன், ஞாயிறு ஆகியவை ஒரே பொருள் தருவன.
30.
தவறான இணைகளைத் தேர்ந்தெடு :
ஆசிரியர் – பணியாற்றிய இதழ்கள்
I. ந. பிச்சமூர்த்தி – அன்னம் விடு தூது
II. பாரதியார் – இந்தியா, விஜயா
III. பெருஞ்சித்திரனார் – தென்மொழி, தமிழ்ச்சிட்டு
IV. மீ. இராசேந்திரன் – நவ இந்தியா, ஹனுமான்
ஆசிரியர் – பணியாற்றிய இதழ்கள்
I. ந. பிச்சமூர்த்தி – அன்னம் விடு தூது
II. பாரதியார் – இந்தியா, விஜயா
III. பெருஞ்சித்திரனார் – தென்மொழி, தமிழ்ச்சிட்டு
IV. மீ. இராசேந்திரன் – நவ இந்தியா, ஹனுமான்
Correct Answer: B [Iம் IVம்]
Notes:
‘அன்னம் விடு தூது’ இதழை நடத்தியவர் மீ.
31.
தானியங்களைக் குறிக்கும் சொல் அல்லாதது
Correct Answer: D [சிவியல்]
Notes:
கூலம் என்பது தானியத்தைக் குறிக்கும் சொல்; பயறு, முதிரை ஆகியவை பயறு வகைத் தானியங்கள்.
32.
தாவரத்தின் இளம் பயிர் வகையைச் சுட்டாத சொல் எது?
Correct Answer: B [இளநீர்]
Notes:
நாற்று, கன்று, குருத்து, பிள்ளை, மடலி, வடலி ஆகியவை தாவரத்தின் இளம்பயிர் வகைகள்.
33.
தாவரத்தின் நுனிப் பகுதிகளைக் குறிக்கும் சொற்களுள் அல்லாதது
Correct Answer: D [தோகை]
Notes:
துளிர், முறி, குருத்து, கொழுந்து, கொழுந்தாடை ஆகியவை தாவரத்தின் நுனிப்பகுதியைக் குறிப்பன.
34.
தாவரத்தின் நுனிப் பகுதியைக் குறிக்கும் சொல் _____
Correct Answer: C [கொழுந்து]
Notes:
‘கொழுந்து’ தாவரத்தின் நுனிப்பகுதியைக் குறிக்கும் (எ.கா.
35.
தாவரத்தின் பிஞ்சு வகைகளுள் இடம்பெறாத சொல் தேர்க.
Correct Answer: D [தாறு]
Notes:
வடு (மா), மூசு (பலா), கவ்வை (எள்) ஆகியவை பிஞ்சு வகைகள்.
36.
தில்லம், அழுவம், பதுக்கை, கணையம், அடவி எனும் சொற்கள் எதனைக் குறிக்கும் வேறு பெயர்கள்?
Correct Answer: A [காடு]
Notes:
தில்லம், அழுவம், பதுக்கை, கணையம், அடவி, கானகம், வனம் ஆகியவை காட்டைக் குறிக்கும் சொற்கள்.
37.
தென்திராவிட மொழிக் குடும்பத்திற்குப் பொருந்தாதது கண்டறிக.
Correct Answer: C [தெலுங்கு]
Notes:
தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு ஆகியவை தென்திராவிட மொழிகள்.
38.
நான்கறிவு உயிரினம்
Correct Answer: A [நண்டு, தும்பி]
Notes:
‘நண்டும் தும்பியும் நான்கறிவினவே’ என்கிறது தொல்காப்பியம்; மெய், வாய், மூக்கு, கண் ஆகிய நான்கு புலன்களால் அறிபவை.
39.
நிலவகை அல்லாத சொல்லைக் கண்டறிக.
Correct Answer: B [பரிசு]
Notes:
தரிசு (பயிரிடாத நிலம்), சுவல் (மேட்டு நிலம்), அவல் (பள்ளமான நிலம்) ஆகியவை நிலவகைகள்.
40.
பண் – என்னும் சொல்லுக்கு இணையற்ற சொல் எது?
Correct Answer: D [பணி]
Notes:
பண் என்பது இசையைக் குறிக்கும்; இசை, பாடல், ஓசை ஆகியவை அதற்கு இணையான சொற்கள்.
41.
பண்புத் தொகை அல்லாத சொல் தேர்க.
Correct Answer: D [கண்ணுதல்]
Notes:
நன்னுதல் (நன்மை + நுதல்), மூதூர் (முதுமை + ஊர்), கொடுஞ்செலவு (கொடுமை + செலவு) – ‘மை’ விகுதி கெட்டுப் பண்பு நிலைமொழியாக வருவதால் பண்புத்தொகை.
42.
‘பயிற்சி’ என்ற சொல்லோடு இணைக்க இயலாத சொல்
Correct Answer: D [மலை]
Notes:
நடைப்பயிற்சி, மொழிப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி என்று ‘பயிற்சி’யுடன் இணைந்து வழங்கும்.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
