வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
‘அணிகலன், புன்னகை’ என்ற பொருள்களைத் தரும் சொல்லைக் கண்டறிக.
Correct Answer: C [நகை]
Notes:
‘நகை’ என்னும் சொல் அணிகலன் (பொன்னகை), புன்னகை (சிரிப்பு) என இரு பொருள் தரும்.
2.
அழகு – இரு பொருள் தருக.
Correct Answer: D [வனப்பு, அணி]
Notes:
வனப்பு, அணி ஆகிய இரண்டும் ‘அழகு’ என்னும் பொருளைத் தரும் சொற்கள்.
3.
ஆறு – இரு பொருள் தருக.
Correct Answer: C [நதி – எண்ணிக்கை]
Notes:
‘ஆறு’ என்னும் சொல் நதி (ஆறு ஓடுகிறது), எண்ணிக்கை (6) என இரு பொருள் தரும்.
4.
‘இசை’ என்பதன் இரு பொருள்களைக் கண்டறிக
Correct Answer: A [பாடல், புகழ்]
Notes:
‘இசை’ என்னும் சொல் பாடல் (இசைக்கலை), புகழ் என இரு பொருள் தரும்.
5.
சரியான இணையைக் கண்டறிக :
Correct Answer: A [அளை - தயிர், பிசை]
Notes:
‘அளை’ என்னும் சொல் தயிர், பிசைதல் (கலத்தல்) எனப் பொருள்படும்.
6.
சரியான இணையைத் தேர்ந்தெடு :
மெய்
மெய்
Correct Answer: C [உண்மை, உடல்]
Notes:
‘மெய்’ என்னும் சொல் உண்மை, உடல் என இரு பொருள் தரும்.
7.
சொல் - இருபொருள் தருக
Correct Answer: D [நெல் - பதம்]
Notes:
‘சொல்’ என்னும் சொல் பதம் (வார்த்தை), நெல் என இரு பொருள் தரும்.
8.
இரு பொருள் தருக.
அணி
அணி
Correct Answer: C [அழகு, அணிகலன்]
Notes:
‘அணி’ என்னும் சொல் அழகு, அணிகலன் என இரு பொருள் தரும்.
9.
இரு பொருள் தருக
அலை
அலை
Correct Answer: C [கடல் அலை – அலைந்து திரிதல்]
Notes:
‘அலை’ என்னும் சொல் கடல் அலை (திரை), அலைந்து திரிதல் என இரு பொருள் தரும்.
10.
இரு பொருள் தருக : ஆழி
Correct Answer: B [கடல், மோதிரம்]
Notes:
‘ஆழி’ என்னும் சொல் கடல், மோதிரம் என இரு பொருள் தரும்.
11.
இருபொருள் தருக :
இடி
இடி
Correct Answer: D [பேரொலி – தகர்த்தல்]
Notes:
‘இடி’ என்னும் சொல் மேகத்தில் தோன்றும் பேரொலி, தகர்த்தல் (இடித்தல்) என இரு பொருள் தரும்.
12.
இரு பொருள் தருக.
இடும்பை
இடும்பை
Correct Answer: A [துன்பம், வறுமை]
Notes:
‘இடும்பை’ என்பது துன்பம் எனப் பொருள்படும்; வறுமையால் வரும் துயரத்தையும் குறிக்கும்.
13.
இரு பொருள் தருக
இதழ்
இதழ்
Correct Answer: C [கண் இமை, உதடு]
Notes:
‘இதழ்’ என்னும் சொல் உதடு, கண் இமை என்னும் பொருள்களைத் தரும்.
14.
சரியான இருபொருள் இணையைத் தேர்ந்தெடு :
“ஓவியம்”
“ஓவியம்”
Correct Answer: D [சித்திரம், படம்]
Notes:
‘ஓவியம்’ என்பதற்குச் சித்திரம், படம் என்பன பொருள்கள்.
15.
இருபொருள் தருக :
‘உரம்’
‘உரம்’
Correct Answer: C [வலிமை, எரு]
Notes:
‘உரம்’ என்னும் சொல் வலிமை (மன உரம்), எரு (பயிருக்கு இடும் உரம்) என இரு பொருள் தரும்.
16.
ஒரு சொல்லால் நிரப்புக :
மழலை பேசும் _____ அழகு.
இனிமைத் தமிழ் _____ எமது.
மழலை பேசும் _____ அழகு.
இனிமைத் தமிழ் _____ எமது.
Correct Answer: B [மொழி]
Notes:
‘மொழி’ என்பது பேச்சு (மழலை மொழி), மக்கள் பேசும் மொழி (தமிழ்மொழி) என இரு பொருள் தரும்.
17.
இரு பொருள் தருக.
‘கப்பல்’
‘கப்பல்’
Correct Answer: C [வங்கம், நாவாய்]
Notes:
வங்கம், நாவாய் ஆகிய இரண்டும் ‘கப்பல்’ என்னும் பொருளைத் தரும் சொற்கள்.
18.
கல் – இரு பொருள் தருக.
Correct Answer: A [கற்றல் – இயற்கையாகக் கிடைக்கும் திடப்பொருள்]
Notes:
‘கல்’ என்னும் சொல் கற்றல் (வினை), இயற்கையாகக் கிடைக்கும் திடப்பொருள் (பாறைக்கல்) என இரு பொருள் தரும்.
19.
களை – இருபொருள் தருக
Correct Answer: A [பயிருடன் வளரும் புல்பூண்டுகள், அழகு]
Notes:
‘களை’ என்னும் சொல் பயிருடன் வளரும் புல்பூண்டுகள், அழகு (முகக்களை) என இரு பொருள் தரும்.
20.
இரு பொருள் தருக.
கால்
கால்
Correct Answer: A [கால் பங்கு பிரித்துக்கொடு, ஈரம் பார்த்து கால் வை]
Notes:
‘கால்’ என்னும் சொல் கால் பங்கு (நான்கில் ஒரு பகுதி), உடல் உறுப்பாகிய கால் என இரு பொருள் தரும்.
21.
இரு பொருள் தருக.
கூவல்
கூவல்
Correct Answer: A [நீர்நிலை, பள்ளம்]
Notes:
‘கூவல்’ என்பது கிணறு போன்ற நீர்நிலையையும், பள்ளத்தையும் குறிக்கும்.
22.
இரு பொருள் கொண்ட ஒரு சொல்.
அன்னை தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை _____ பழகும்.
அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழி _____.
அன்னை தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை _____ பழகும்.
அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழி _____.
Correct Answer: C [நடை]
Notes:
‘நடை’ என்னும் சொல் நடத்தல் (குழந்தை நடை பழகும்), எழுத்து அல்லது பேச்சின் பாங்கு (மொழி நடை) என இரு பொருள் தரும்.
23.
இருபொருள் கொண்ட ஒரு சொல்
நீதிமன்றத்தில் தொடுப்பது _____
‘நீச்சத் தண்ணி குடி’ என்பது பேச்சு _____
நீதிமன்றத்தில் தொடுப்பது _____
‘நீச்சத் தண்ணி குடி’ என்பது பேச்சு _____
Correct Answer: D [வழக்கு]
Notes:
‘வழக்கு’ என்னும் சொல் நீதிமன்ற வழக்கு, பேச்சு வழக்கு (வழக்கத்தில் உள்ள மொழி) என இரு பொருள் தரும்.
24.
இருபொருள் சுட்டுக :
பார்
பார்
Correct Answer: A [பார்த்தல், உலகம்]
Notes:
‘பார்’ என்னும் சொல் பார்த்தல் (வினை), உலகம் (பெயர்) என இரு பொருள் தரும்.
25.
இருபொருள் தரக்கூடிய சொல்
ஆடை தைக்க உதவுவது _____
மூதுரை அற _____
ஆடை தைக்க உதவுவது _____
மூதுரை அற _____
Correct Answer: B [நூல்]
Notes:
‘நூல்’ என்னும் சொல் ஆடை தைக்கும் இழை, புத்தகம் என இரு பொருள் தரும்.
26.
இருபொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு :
அரண்
அரண்
Correct Answer: A [பாதுகாப்பு, கோட்டை]
Notes:
‘அரண்’ என்னும் சொல் பாதுகாப்பு, கோட்டை என இரு பொருள் தரும்.
27.
இரு பொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு.
செய்
செய்
Correct Answer: C [செயலைச் செய், வயல் நிலம்]
Notes:
‘செய்’ என்னும் சொல் செயலைச் செய் (வினை), வயல் நிலம் என இரு பொருள் தரும்.
28.
இரு பொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு :
துனி
துனி
Correct Answer: B [துன்பம், கோபம்]
Notes:
‘துனி’ என்னும் சொல் துன்பம், கோபம் (வெறுப்பு, ஊடல்) எனப் பொருள்படும்.
29.
இரு பொருள் தருக.
தலை
தலை
Correct Answer: A [முதன்மை, சிரம்]
Notes:
‘தலை’ என்னும் சொல் சிரம் (உடல் உறுப்பு), முதன்மை (தலைவன், தலைசிறந்த) என இரு பொருள் தரும்.
30.
இருபொருள் தருக :
தாமம்
தாமம்
Correct Answer: C [கயிறு, பூமாலை]
Notes:
‘தாமம்’ என்னும் சொல் பூமாலை, கயிறு என இரு பொருள் தரும்.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
