வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
அடிக்கோடிட்ட சொல்லின் எழுத்து வழக்கைத் தேர்ந்தெடு.
வயித்துக்குக் கஞ்சி ஊத்தி நாமும் குடிப்போம் (அடிக்கோடு: வயித்துக்குக்)

Correct Answer: D [வயிற்றுக்கு]

Notes:

‘வயித்துக்கு’ என்பது பேச்சு வழக்கு; ‘வயிறு’ என்னும் சொல் வேற்றுமை உருபு ஏற்கும்போது ‘வயிற்று’ என்று றகர ஒற்று இரட்டித்து ‘வயிற்றுக்கு’ என அமையும்.

2.  
இப்ப ஒசரமா வளந்துட்டான்
இத்தொடருக்கு மிகவும் பொருத்தமான எழுத்து வழக்கைக் கண்டறிக.

Correct Answer: A [இப்பொழுது உயரமாக வளர்ந்துவிட்டான்]

Notes:

இப்ப → இப்பொழுது, ஒசரமா → உயரமாக, வளந்துட்டான் → வளர்ந்துவிட்டான்.

3.  
‘இருக்கு’ என்ற பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று

Correct Answer: C [இருக்கிறது]

Notes:

‘இருக்கு’, ‘இருக்குது’ என்பன பேச்சு வழக்கு; எழுத்து வழக்கில் ‘இருக்கிறது’ என நிகழ்கால இடைநிலை ‘கிறு’ சேர்த்து எழுத வேண்டும்.

4.  
எங்க நிக்கற? – இந்தப் பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக்கும் பொழுது எவ்வாறு அமையும்?

Correct Answer: B [எங்கே நிற்கிறாய்?]

Notes:

எங்க → எங்கே, நிக்கற → நிற்கிறாய்.

5.  
சரியான எழுத்து வழக்கினைக் கண்டறிக:
தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சது

Correct Answer: C [தேங்காய் விழுந்து மண்டை உடைந்தது]

Notes:

தேங்கா → தேங்காய், மண்ட → மண்டை, உடைஞ்சது → உடைந்தது.

6.  
எழுத்து வழக்கில் அமைந்துள்ள வாக்கியங்களைக் கண்டறிக.
I. நானும் அவனும் உள்ளே சென்றோம்.
II. “எனக்கு மிதிவண்டின்னா ரொம்ப ஆசை” என்றான்.
III. “மிதிவண்டியில அவ்ளோ தூரம் போகலாமா?”
IV. “ஏன் முடியாது?”

Correct Answer: D [I, IV மட்டும்]

Notes:

‘நானும் அவனும் உள்ளே சென்றோம்’, ‘ஏன் முடியாது?’ ஆகியவை எழுத்து வழக்கு.

7.  
எழுத்து வழக்கில் அமைந்துள்ள வாக்கியங்களைக் கண்டறிக
I “பசிக்குது அண்ணா” என்கிறான் தம்பி.
II “அம்மா ஏன் நமக்குச் சாப்பாடு கொடுத்தனுப்புறதில்ல?” என்றான் தம்பி.
III “மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தப் போகிறேன்” என்றார் முதல்வர்.
IV “தமிழ்நாட்டுக் குழந்தைகள் பசியறியாமல் படிக்க வேண்டும்” என்றார் தலைவர்.

Correct Answer: B [III, IV]

Notes:

III, IV தொடர்கள் முழுமையாக எழுத்து வழக்கில் உள்ளன.

8.  
சரியான எழுத்து வழக்குச் சொல்லைக் கண்டுபிடி.

Correct Answer: B [நாய் குரைக்கும்]

Notes:

நாயின் ஒலியை ‘குரைத்தல்’ என்பதே மரபு.

9.  
சரியான எழுத்து வழக்குச் சொல்லினைத் தேர்ந்தெடு :

Correct Answer: D [பதில் சொல்]

Notes:

‘சொல்லுச்சு’, ‘சொன்னியா’, ‘சொல்லிக்கினியா’ ஆகியவை பேச்சு வழக்கு வடிவங்கள்.

10.  
சரியான எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக.

Correct Answer: D [உயிரே போனாலும் பொய் சொல்ல மாட்டேன்]

Notes:

உசுரு, உசுர் → உயிர். ‘உயிரே போனாலும் பொய் சொல்ல மாட்டேன்’ என்பதே எழுத்து வழக்கு.

11.  
எழுத்து வழக்குத் தொடரைத் தேர்ந்தெடு :

Correct Answer: D [என் கதை பெரியது]

Notes:

எங்கதெ → என் கதை, பெரிசு → பெரியது.

12.  
எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக :

Correct Answer: C [உயிர் இருக்கும் வரை தவறு செய்ய மாட்டேன்]

Notes:

உசிர் → உயிர், தப்பு → தவறு.

13.  
சரியான எழுத்துவழக்குத் தொடரைக் கண்டறிக.

Correct Answer: A [எண்ணெய் தேய்த்துக் குளித்தேன்]

Notes:

எண்ணை → எண்ணெய் (எள் + நெய்), தேச்சு → தேய்த்து, குளிச்சேன் → குளித்தேன்.

14.  
எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக:

Correct Answer: B [சோலைக்குள் சத்தமில்லாமல் தென்றல் வீசியது]

Notes:

‘தென்றலு’ என உகரம் சேர்த்து ஒலிப்பது பேச்சு வழக்கு.

15.  
சரியான எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக.

Correct Answer: B [பாகற்காய் வற்றல் வாங்கி வந்தேன்]

Notes:

பாவக்கா → பாகற்காய், வத்தல் → வற்றல், வாங்கிட்டு → வாங்கி.

16.  
எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக :

Correct Answer: B [பெயரன் பெயர்த்தியுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்]

Notes:

பேரன் → பெயரன், பேத்தி → பெயர்த்தி, சந்தோசம் → மகிழ்ச்சி, இருக்கேன் → இருக்கிறேன்.

17.  
எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக.

Correct Answer: B [வாருங்கள் சுவாமி! வாருங்கள்.]

Notes:

வாங்க → வாருங்கள். ‘வாருங்கள் சுவாமி!

18.  
சரியான எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக

Correct Answer: D [வாடைக் காற்று வீசியது]

Notes:

காத்து → காற்று; ‘காற்று’ ஒருமை என்பதால் ‘வீசியது’ என ஒருமை வினையே பொருந்தும்.

19.  
சரியான எழுத்து வழக்குத் தொடரினைத் தெரிந்தெடு.

Correct Answer: D [நேற்று நீ வந்தாயா?]

Notes:

‘நேற்று’ என்னும் இறந்தகாலச் சொல்லுக்கு இறந்தகால வினை ‘வந்தாயா?’ பொருந்தும்.

20.  
எழுத்து வழக்குத் தொடரைத் தேர்ந்தெடு.

Correct Answer: A [அதிக தொலைவிலிருந்து வருகிறேன்]

Notes:

ரொம்ப → அதிக, தொலவட்லயிருந்து → தொலைவிலிருந்து, வர்ரென் → வருகிறேன்.

21.  
சரியான எழுத்து வழக்குத் தொடரைத் தேர்க :

Correct Answer: B [யார் நீ? எங்கு வந்தாய்?]

Notes:

‘யாரப்பா’, ‘எங்க’, ‘வந்தே’, ‘வந்த’ ஆகியவை பேச்சு வழக்கு.

22.  
சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக.

Correct Answer: C [வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன]

Notes:

மானம் → வானம், பயிறு → பயறு. ‘வகைகள்’ பன்மை எழுவாய் என்பதால் ‘பயிரிடப்படுகின்றன’ என்னும் பன்மை வினையே பொருந்தும்; ‘பயிரிடப்படுகின்றது’ எண் வழு.

23.  
சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக.
ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்.

Correct Answer: C [இரவுக்குச் சிறிய தந்தையைக் காவலுக்குப் போகுமாறு சொல்]

Notes:

ரவை → இரவு, சித்தப்பன் → சிறிய தந்தை, போவ சொல் → போகுமாறு சொல்.

24.  
ஒருத்தன் ஒண்டியாய்ப் போனால் அது ஊர்கோலமா?
சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக.

Correct Answer: A [ஒருவன் தனியாகப் போனால் அது ஊர்வலமா?]

Notes:

ஒருத்தன் → ஒருவன், ஒண்டியாய் → தனியாக.

25.  
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பேச்சு வழக்கில் அமைந்துள்ள வாக்கியத்தைக் கண்டறிக.

Correct Answer: D [தமிழ் படிச்சவங்களால் வளர்க்கப்பட்டது]

Notes:

‘படிச்சவங்களால்’ (படித்தவர்களால்) என்பது பேச்சு வழக்கு.

26.  
கீழ்க்கண்ட பேச்சு வழக்குச் சொல்லை எழுத்து வழக்குச் சொல்லாக மாற்றுக.
‘நான் நேத்து வந்த’

Correct Answer: C [நான் நேற்று வந்தேன்]

Notes:

நேத்து → நேற்று. ‘நான்’ என்னும் தன்மை ஒருமை எழுவாய்க்கு ‘ஏன்’ விகுதி பெற்ற ‘வந்தேன்’ என்னும் வினைமுற்றே பொருந்தும்.

27.  
கீழ்க்கண்டவற்றுள் எழுத்து வழக்குச் சொல்லைத் தேர்ந்தெடு

Correct Answer: B [காகம் கரையும்]

Notes:

காகத்தின் ஒலியைக் ‘கரைதல்’ என்பதே மரபு.

28.  
கீழ்வருவனவற்றுள் பேச்சு வழக்கு, எழுத்து வழக்குச் சொற்களைக் கண்டுபிடி.

Correct Answer: C [வந்தியா – வந்தாயா?]

Notes:

‘வந்தியா’ என்பது பேச்சு வழக்கு; அதற்கு இணையான எழுத்து வழக்கு ‘வந்தாயா?’.

29.  
நாங் கெளம்பிட்டேன் – என்பதற்கான சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக.

Correct Answer: C [நான் புறப்பட்டு விட்டேன்]

Notes:

கெளம்பிட்டேன் → புறப்பட்டு விட்டேன்.

30.  
பதனம் - என்பதன் வட்டார வழக்குச் சொல் எது?

Correct Answer: A [கவனமாக]

Notes:

‘பதனம்’ என்பது வட்டார வழக்குச் சொல்; இதன் பொருள் ‘கவனமாக / பத்திரமாக’.

31.  
பின்வரும் தொடர்களில் எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக.

Correct Answer: C [காலையில் எழுந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்]

Notes:

‘காலையில் எழுந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்’ முழுவதும் எழுத்து வழக்கு.

32.  
பின்வருவனவற்றுள் எது சரியானது? (பேச்சு வழக்கு)

Correct Answer: A [அம்மா பசிக்குது. எனக்குச் சோறு வேணும்.]

Notes:

‘பசிக்குது’ (பசிக்கிறது), ‘சோறு வேணும்’ (வேண்டும்) – இரண்டும் பேச்சு வழக்கில் அமைந்த தொடர் முதல் விடையே.

33.  
பின்வருவனவற்றுள் பேச்சு வழக்கு அல்லாத தொடரைக் கண்டறிக :

Correct Answer: C [உழவர்கள் வயலில் இறங்கினார்கள்]

Notes:

‘இறங்கினார்கள்’ என்பது எழுத்து வழக்கு வினைமுற்று.

34.  
பின்வருவனவற்றுள் பேச்சு வழக்கு அல்லாத தொடரைக் கண்டறிக :

Correct Answer: A [சரியாகச் சொன்னாய்]

Notes:

‘சரியாகச் சொன்னாய்’ என்பது எழுத்து வழக்கு.

35.  
பின்வருவனவற்றுள் பேச்சு வழக்கு அல்லாத தொடரைத் தேர்க :

Correct Answer: C [எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்]

Notes:

‘கொள்ளணும்னு’ (கொள்ள வேண்டும் என்று), ‘தெரிஞ்சிக்கணும்’, ‘விரும்பறேன்’ (விரும்புகிறேன்) ஆகியவை பேச்சு வழக்கு.

36.  
பிழை நீக்கி எழுதுக.
அந்தப் புஞ்சை ரோட்டோரத்தில் இருந்தது

Correct Answer: A [அந்தப் புன்செய் சாலையோரத்தில் இருந்தது]

Notes:

புஞ்சை → புன்செய், ரோடு → சாலை.

37.  
பிழையற்ற தொடரை எழுதுக.

Correct Answer: C [வலப் பக்கச் சுவரில் எழுதாதே]

Notes:

‘வலப்பக்கம்’, ‘சுவர்’ என்பனவே சரியான வடிவங்கள்.

38.  
பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்ந்தெடு.

Correct Answer: A [அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்]

Notes:

‘நல்லாத் தெரியும்’ (நன்றாகத் தெரியும்) என்பது பேச்சு வழக்கு.

39.  
பேச்சுவழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.
அப்ப அவனுக்கு மூணு வயசு இருக்கும்

Correct Answer: C [அப்பொழுது அவனுக்கு மூன்று வயது இருக்கும்]

Notes:

அப்ப → அப்பொழுது, மூணு → மூன்று, வயசு → வயது.

40.  
பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.
அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான்

Correct Answer: A [அவன் பாட்டியுடன் வெளியூர் போய் இருக்கிறான்]

Notes:

அவம்பாட்டியோட → அவன் பாட்டியுடன், போயிருக்கான் → போய் இருக்கிறான்.

41.  
பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.
உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்

Correct Answer: B [உங்கள் ஊருக்கே அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்]

Notes:

உங்கூருக்கே → உங்கள் ஊருக்கே, அவனெ → அவனை, கூட்டிக்கிட்டு → கூட்டிக்கொண்டு, வர்றேன் → வருகிறேன்.

42.  
பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.
பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு.

Correct Answer: B [செய்தித்தாளைப் படித்துக்கொண்டு இரு]

Notes:

பேப்பர் → செய்தித்தாள், படிச்சிக்கிட்டு → படித்துக்கொண்டு.

43.  
பேச்சு வழக்கிற்கு இணையான எழுத்து வழக்குச் சொல் பொருத்தமானதைத் தேர்க.

Correct Answer: C [மூணு வயசு – மூன்று வயது]

Notes:

‘மூணு வயசு’ என்பதன் எழுத்து வழக்கு ‘மூன்று வயது’.

44.  
பேச்சு வழக்கிற்கு இணையான எழுத்து வழக்கைத் தேர்க :
எங்கருந்து வர்ரீங்க

Correct Answer: D [எங்கிருந்து வருகிறீர்கள்]

Notes:

எங்கருந்து → எங்கிருந்து, வர்ரீங்க → வருகிறீர்கள்.

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0