வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
சரியான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு.
நச்சுக் காற்று ஓசோன் படலத்தைத் தாக்குகிறது. _____ புறஊதாக் கதிர்கள் உங்களைத் தாக்குகின்றன.
நச்சுக் காற்று ஓசோன் படலத்தைத் தாக்குகிறது. _____ புறஊதாக் கதிர்கள் உங்களைத் தாக்குகின்றன.
Correct Answer: A [இதனால்]
Notes:
நச்சுக் காற்று ஓசோன் படலத்தைத் தாக்குவது காரணம்; புறஊதாக் கதிர்கள் நம்மைத் தாக்குவது விளைவு.
2.
சரியான இணைப்புச் சொல் தருக.
நான் நேற்றுப் பள்ளி செல்லவில்லை _____ என் உடல்நிலை சரியில்லை.
நான் நேற்றுப் பள்ளி செல்லவில்லை _____ என் உடல்நிலை சரியில்லை.
Correct Answer: A [ஏனெனில்]
Notes:
பள்ளி செல்லாததற்குக் காரணம் உடல்நிலை சரியில்லாதது; காரணம் கூறும் ‘ஏனெனில்’ பொருந்தும்.
3.
சரியான இணைப்புச் சொல்
நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும் _____ துன்பப்பட நேரிடும்
நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும் _____ துன்பப்பட நேரிடும்
Correct Answer: C [இல்லையென்றால்]
Notes:
இனிய சொற்களைப் பேசாவிட்டால் துன்பப்பட நேரிடும் – நிபந்தனை/மாற்று விளைவைக் காட்ட ‘இல்லையென்றால்’ பொருந்தும்.
4.
சரியான இணைப்புச் சொல்லை நிரப்புக.
எமது மக்கள், இந்தப் பூமியை எப்பொழுதும் மறப்பதேயில்லை. _____ இதுவே எமக்குத் தாயாகும்.
எமது மக்கள், இந்தப் பூமியை எப்பொழுதும் மறப்பதேயில்லை. _____ இதுவே எமக்குத் தாயாகும்.
Correct Answer: A [ஏனெனில்]
Notes:
மக்கள் பூமியை மறவாததற்குக் காரணம் ‘இதுவே எமக்குத் தாய்’ என்பது; காரணம் கூறும் ‘ஏனெனில்’ பொருந்தும்.
5.
சரியான இணைப்புச் சொல்லைப் பயன்படுத்தி வாக்கியம் அமை.
நாளை புயல் கரையைக் கடக்கிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
நாளை புயல் கரையைக் கடக்கிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
Correct Answer: B [நாளை புயல் கரையைக் கடக்கிறது. எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்]
Notes:
‘எனவே’ என்பது முன் சொன்ன காரணத்தின் விளைவைக் கூற வரும் இணைப்புச் சொல்.
6.
பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தார் பாரதியார். ஏன் அப்படிப் பெயர் வைத்தார்? _____ கல்விக் கூடங்களில்தான் குழந்தைகளின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.
சரியான இணைப்புச் சொல்லைத் தேர்வு செய்க.
சரியான இணைப்புச் சொல்லைத் தேர்வு செய்க.
Correct Answer: D [ஏனெனில்]
Notes:
‘ஏனெனில்’ என்பது முன் சொன்ன செய்திக்குக் காரணம் கூற வரும் இணைப்புச் சொல்.
7.
சரியான இணைப்புச் சொல் தருக.
மழை _____ உலகில் உயிர்கள் இல்லை.
மழை _____ உலகில் உயிர்கள் இல்லை.
Correct Answer: B [இல்லையெனில்]
Notes:
‘இல்லையெனில்’ என்பது ஒன்று நிகழாவிட்டால் விளையும் நிலையைக் கூறும் இணைப்புச் சொல்.
8.
சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
அற இலக்கியங்கள் கூறும் கருத்துகளை வாழ்வில் பின்பற்ற வேண்டும். _____ அவை நம் வாழ்வை வளமாக்கும்.
அற இலக்கியங்கள் கூறும் கருத்துகளை வாழ்வில் பின்பற்ற வேண்டும். _____ அவை நம் வாழ்வை வளமாக்கும்.
Correct Answer: B [ஏனெனில்]
Notes:
‘ஏனெனில்’ காரணம் கூறும் இணைப்புச் சொல்.
9.
சரியான இணைப்புச்சொல்லால் நிரப்புக.
தனக்கான ஆற்றலைச் சேகரித்து வைக்க மூளைக்குள் இடம் இல்லை. _____ அதற்குக் குருதியோட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
தனக்கான ஆற்றலைச் சேகரித்து வைக்க மூளைக்குள் இடம் இல்லை. _____ அதற்குக் குருதியோட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
Correct Answer: A [அதனால்]
Notes:
‘அதனால்’ காரணத்தைத் தொடர்ந்து விளைவைக் கூறும் இணைப்புச் சொல்.
10.
சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
தமிழகத்தில் மழை பெய்து வருகிறது _____ இரண்டு நாட்கள் மழை நீடிக்கும்.
தமிழகத்தில் மழை பெய்து வருகிறது _____ இரண்டு நாட்கள் மழை நீடிக்கும்.
Correct Answer: A [மேலும்]
Notes:
‘மேலும்’ என்பது முன் சொன்ன செய்தியுடன் கூடுதல் செய்தியைச் சேர்க்கும் இணைப்புச் சொல்.
11.
சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
“தமிழ்மொழிதான் மிகப்பழமையான மொழி _____, தமிழ்மொழியை நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்” என்றார் காயிதே மில்லத்.
“தமிழ்மொழிதான் மிகப்பழமையான மொழி _____, தமிழ்மொழியை நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்” என்றார் காயிதே மில்லத்.
Correct Answer: B [எனவே]
Notes:
‘எனவே’ காரணத்தின் விளைவைக் கூறும் இணைப்புச் சொல்.
12.
சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
தீயினால் சுட்ட புண் ஆறிவிடும். _____ கடுஞ்சொல்லால் ஏற்படும் காயம் ஆறாது.
தீயினால் சுட்ட புண் ஆறிவிடும். _____ கடுஞ்சொல்லால் ஏற்படும் காயம் ஆறாது.
Correct Answer: B [ஆனால்]
Notes:
‘ஆனால்’ என்பது முரண்பட்ட இரு கருத்துகளை இணைக்கும் சொல்.
13.
சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
பூமி அகல் விளக்காகவும், கடல் நெய்யாகவும் கதிரவன் சுடராகவும் உருவகப்படுத்தப்பட்டு உள்ளன. _____ இப்பாடல் உருவக அணி.
பூமி அகல் விளக்காகவும், கடல் நெய்யாகவும் கதிரவன் சுடராகவும் உருவகப்படுத்தப்பட்டு உள்ளன. _____ இப்பாடல் உருவக அணி.
Correct Answer: A [எனவே]
Notes:
‘எனவே’ முன் சொன்ன காரணத்தின் விளைவை / முடிவைக் கூறும்.
14.
சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக :
முருகன் படித்து முடித்துவிட்டான். _____ முகிலன் படிக்கவில்லை.
முருகன் படித்து முடித்துவிட்டான். _____ முகிலன் படிக்கவில்லை.
Correct Answer: A [ஆனால்]
Notes:
‘ஆனால்’ முரண்பட்ட கருத்துகளை இணைக்கும்.
15.
இருபொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.
அரசுக்குத் தவறாமல் _____ செலுத்த வேண்டும்.
ஏட்டில் எழுதுவது _____ வடிவம்.
அரசுக்குத் தவறாமல் _____ செலுத்த வேண்டும்.
ஏட்டில் எழுதுவது _____ வடிவம்.
Correct Answer: C [வரி]
Notes:
‘வரி’ இருபொருள் தரும்: 1. அரசுக்குச் செலுத்தும் வரி; 2.
16.
இரு சொற்களின் சரியான புதிய சொற்களைத் தெரிவு செய்க.
மா, சிட்டு, கனி, இலை, தேன், மரம், கூடு, குருவி
மா, சிட்டு, கனி, இலை, தேன், மரம், கூடு, குருவி
Correct Answer: A [சிட்டுக்குருவி, மாவிலை, தேன் கூடு]
Notes:
சிட்டு + குருவி = சிட்டுக்குருவி, மா + இலை = மாவிலை, தேன் + கூடு = தேன்கூடு – மூன்றும் பொருளுடைய புதிய சொற்கள்.
17.
இருசொற்களை இணைத்துச் சரியான புதிய சொல் அமைக்கப்பட்ட தொடரைத் தேர்க
மழை, பூ, பொன், வான், மேகலை, மணி, மேகம், செய்
மழை, பூ, பொன், வான், மேகலை, மணி, மேகம், செய்
Correct Answer: B [மணிமேகலை, வான்மழை, பூமணி]
Notes:
மணி + மேகலை = மணிமேகலை (ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று), வான் + மழை = வான்மழை, பூ + மணி = பூமணி.
18.
எந்த இரண்டு சொற்களை இணைத்தால் கீழ்க்கண்ட புதிய சொல் கிடைக்கும்
(பாடறிந்து)
(பாடறிந்து)
Correct Answer: C [பாடு + அறிந்து]
Notes:
பாடறிந்து = பாடு + அறிந்து. ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ – நிலைமொழி இறுதி உகரம் கெட்டு, ட் + அ = ட என்று புணர்ந்தது.
19.
கீழ்க்கண்டவற்றுள் இரண்டு சொற்கள் இணைந்து உருவாக்கப்படாத சொல்லைக் கண்டறிக.
Correct Answer: A [தலைவன்]
Notes:
தலைவன் = தலை + வ் + அன்; இதில் ‘அன்’ ஆண்பால் விகுதி, தனிச்சொல் அன்று.
20.
கீழ்க்கண்டவற்றில் சரியான இணைப்புச் சொல்லை எழுதுக.
பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன்.
_____ பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.
பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன்.
_____ பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.
Correct Answer: C [எனவே]
Notes:
‘எனவே’ முன் சொன்ன கருத்தின் விளைவை / முடிவைக் கூறும்.
21.
கீழ்க்கண்டவற்றில் சரியான இணைப்புச் சொல்லினைத் தேர்ந்தெடு.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்துவிடும். நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி அழியும்.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்துவிடும். நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி அழியும்.
Correct Answer: B [அதுபோல]
Notes:
‘அதுபோல’ ஒப்புமை காட்டும் இணைப்புச் சொல்.
22.
கீழ்க்காணும் தொடர்களை இணைக்கும் சரியான இணைப்புச் சொல்லைத் தேர்க.
1. தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும்
2. உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியமாகும்.
1. தினமும் உடற்பயிற்சி செய்யவேண்டும்
2. உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியமாகும்.
Correct Answer: D [ஏனெனில்]
Notes:
‘ஏனெனில்’ முன் சொன்ன செய்திக்குக் காரணம் கூறும்.
23.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கல்.
Correct Answer: C [விண் - மீன்]
Notes:
விண் + மீன் = விண்மீன் (நட்சத்திரம்).
24.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கல் :
சரியான இணையைக் கண்டறிக.
சரியான இணையைக் கண்டறிக.
Correct Answer: C [நீதி + நூல் – நீதிநூல்]
Notes:
நீதி + நூல் = நீதிநூல் – சரியான இணை.
25.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கல் (ஒலி மரபு)
பசு
பசு
Correct Answer: A [கதறும்]
Notes:
ஒலி மரபுப்படி ‘பசு கதறும்’. யானை பிளிறும், புலி உறுமும், சிங்கம் முழங்கும், ஆடு கத்தும்.
26.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கல் (ஒலிமரபு)
யானை
யானை
Correct Answer: C [பிளிறும்]
Notes:
ஒலி மரபுப்படி ‘யானை பிளிறும்’.
27.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கல்
சாவி
சாவி
Correct Answer: C [கொத்து]
Notes:
தொகுதி மரபுப்படி ‘சாவிக் கொத்து’.
28.
சொற்களை இணைத்துப் புதிய சொல்லை உருவாக்கல் :
சிங்கம் _____ சரியான சொல்.
சிங்கம் _____ சரியான சொல்.
Correct Answer: B [முழங்கும்]
Notes:
ஒலி மரபுப்படி ‘சிங்கம் முழங்கும்’.
29.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கல்.
தென்னம்
தென்னம்
Correct Answer: A [கீற்று]
Notes:
தென்னை + கீற்று = தென்னங்கீற்று (தென்னை ஓலை).
30.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கல்
தேன், மழை, வான், செய், பூ எனும் சொற்களைக் கொண்டு உருவாக்கினால் வரும் தவறான சொல்லைக் கண்டறிக.
தேன், மழை, வான், செய், பூ எனும் சொற்களைக் கொண்டு உருவாக்கினால் வரும் தவறான சொல்லைக் கண்டறிக.
Correct Answer: C [வான் செய்]
Notes:
வான் + மழை = வான்மழை, பூ + மழை = பூமழை, தேன் + மழை = தேன்மழை – பொருளுடைய சொற்கள்.
31.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கல் :
பாரதிதாசனின் சிறந்த படைப்பு குடும்ப _____.
பாரதிதாசனின் சிறந்த படைப்பு குடும்ப _____.
Correct Answer: B [விளக்கு]
Notes:
‘குடும்ப விளக்கு’ பாரதிதாசனின் புகழ்பெற்ற படைப்பு; குடும்பப் பெண்ணின் சிறப்பைப் போற்றும் நூல்.
32.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கல்.
பின்வரும் சொற்களில் ‘புல்’ என்னும் சொல்லுடன் இணைந்து புதிய சொல்லைத் தரும் சொல்லைக் கண்டறிக.
பின்வரும் சொற்களில் ‘புல்’ என்னும் சொல்லுடன் இணைந்து புதிய சொல்லைத் தரும் சொல்லைக் கண்டறிக.
Correct Answer: A [வெளி]
Notes:
புல் + வெளி = புல்வெளி (புல் நிறைந்த திறந்த நிலப்பகுதி).
33.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கல் :
புலியின் இளமைப் பெயர்
புலியின் இளமைப் பெயர்
Correct Answer: A [பறழ்]
Notes:
இளமைப் பெயர் மரபுப்படி புலியின் குட்டி ‘பறழ்’ – புலிப்பறழ்.
34.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கல்
பூ
பூ
Correct Answer: B [சோலை]
Notes:
பூ + சோலை = பூஞ்சோலை. பூ என்னும் சொல்லின் பின் வல்லினம் வரின் அதன் இனமான மெல்லினமும் மிகுவது உண்டு: பூஞ்சோலை, பூங்கொடி, பூந்தோட்டம்.
35.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கல்
பொருத்துக
(a) கண் – 1. மழை
(b) பொன் – 2. தேன்
(c) மலை – 3. விலங்கு
(d) வான் – 4. மணி
பொருத்துக
(a) கண் – 1. மழை
(b) பொன் – 2. தேன்
(c) மலை – 3. விலங்கு
(d) வான் – 4. மணி
Correct Answer: B [4 3 2 1]
Notes:
கண் + மணி = கண்மணி, பொன் + விலங்கு = பொன்விலங்கு, மலை + தேன் = மலைத்தேன், வான் + மழை = வான்மழை.
36.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கல்
பொருத்துக.
(a) மணி – (1) வெளி
(b) எழுது – (2) நூல்
(c) தமிழ் – (3) கோல்
(d) விண் – (4) மாலை
பொருத்துக.
(a) மணி – (1) வெளி
(b) எழுது – (2) நூல்
(c) தமிழ் – (3) கோல்
(d) விண் – (4) மாலை
Correct Answer: C [4 3 2 1]
Notes:
மணி + மாலை = மணிமாலை, எழுது + கோல் = எழுதுகோல் (பேனா), தமிழ் + நூல் = தமிழ்நூல், விண் + வெளி = விண்வெளி.
37.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கல்
விளக்கு, விண், மணி, விலங்கு, மேகலை எனும் சொற்களைக் கொண்டு உருவாக்கினால் வரும் சரியான சொல்லைக் கண்டறிக
விளக்கு, விண், மணி, விலங்கு, மேகலை எனும் சொற்களைக் கொண்டு உருவாக்கினால் வரும் சரியான சொல்லைக் கண்டறிக
Correct Answer: C [மணி மேகலை]
Notes:
மணி + மேகலை = மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார் இயற்றிய காப்பியம்; ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று; பௌத்த சமயச் சார்புடையது.
38.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கு.
ஆடு - சரியான சொல்
ஆடு - சரியான சொல்
Correct Answer: B [குட்டி]
Notes:
இளமைப் பெயர் மரபுப்படி ஆட்டின் இளமை ‘குட்டி’ – ஆட்டுக்குட்டி.
39.
சொற்களை இணைத்துப் புதிய சொல்லை உருவாக்கு.
ஆழ், வயல், நாடு, கடல், விண், வளி
ஆழ், வயல், நாடு, கடல், விண், வளி
Correct Answer: A [ஆழ் கடல்]
Notes:
ஆழ் + கடல் = ஆழ்கடல் (ஆழமான கடல்); இது வினைத்தொகை.
40.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குக.
உற்றார் _____
உற்றார் _____
Correct Answer: A [உறவினர்]
Notes:
‘உற்றார் உறவினர்’ – இணைந்தே வழங்கும் இணைமொழி.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
