வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
பேச்சு வழக்கிற்கு ஏற்ற எழுத்து வழக்குச் சொற்களை எழுதுக.
எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது

Correct Answer: D [எதிரில் ஒரு தேநீர்க்கடை இருக்கிறது]

Notes:

எதிர்த்தாப்புல → எதிரில், டீ ஸ்டால் → தேநீர்க்கடை, இருக்குது → இருக்கிறது.

2.  
பேச்சு வழக்கில் இருந்து எழுத்து வழக்காக மாற்றுக.
இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சுக்கோ.

Correct Answer: B [இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்.]

Notes:

புரிஞ்சு போச்சு → புரிந்துவிட்டது, புரிஞ்சுக்கோ → புரிந்துகொள்.

3.  
பேச்சு வழக்கு அல்லாத தொடரைக் கண்டறிக.

Correct Answer: D [அவன் பாட்டியோடு வெளியூர் போயிருக்கிறான்]

Notes:

‘பாட்டியோடு’, ‘போயிருக்கிறான்’ என்பவை எழுத்து வழக்கு வடிவங்கள்.

4.  
பேச்சு வழக்கை எழுத்து வழக்காக்குக.
‘நாட்கள்’

Correct Answer: C [நாள்கள்]

Notes:

நாள் + கள் = நாள்கள் என்பதே இலக்கண நெறிப்படி பரிந்துரைக்கப்படும் எழுத்து வடிவம்.

5.  
பேச்சு வழக்கு – எழுத்து வழக்கு
அதுக்குள்

Correct Answer: D [அதற்குள்]

Notes:

‘அதுக்குள்’ என்பது பேச்சு வழக்கு; எழுத்து வழக்கில் ‘அதற்குள்’ (அது + அற்று + கு + உள்).

6.  
பேச்சு வழக்கு எழுத்து வழக்கு
அம்மாவிடம் சொல்லு!

Correct Answer: A [அம்மாவிடம் சொல்]

Notes:

‘சொல்லு’ என்பது பேச்சு வழக்கு; எழுத்து வழக்கில் ஏவல் வினை ‘சொல்’ என்றே வரும்.

7.  
பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
அவன் திருமணத்திற்குப் போயி வாரான்

Correct Answer: A [அவன் திருமணத்திற்குப் போய் வருகிறான்]

Notes:

‘போயி’ → ‘போய்’, ‘வாரான்’ → ‘வருகிறான்’ என்பவை எழுத்து வழக்கு வடிவங்கள்.

8.  
பேச்சுவழக்கு எழுத்து வழக்கு.
ஊரிலிருந்து வந்தியா!

Correct Answer: B [ஊரிலிருந்து வந்தாயா?]

Notes:

‘வந்தியா’ என்பது பேச்சு வழக்கு; எழுத்து வழக்கில் முன்னிலை ஒருமை வினா ‘வந்தாயா?’ (வந்தாய் + ஆ).

9.  
பேச்சுவழக்கு – எழுத்து வழக்கு.
எண்ணை

Correct Answer: B [எண்ணை – எண்ணெய்]

Notes:

‘எண்ணை’ என்பது பேச்சு வழக்கு; எழுத்து வழக்கு ‘எண்ணெய்’.

10.  
பேச்சுவழக்கு – எழுத்துவழக்கு கண்டறிதல் :
என்னுடைய பல் உழுந்திடுச்சு.

Correct Answer: C [விழுந்து விட்டது]

Notes:

‘உழுந்திடுச்சு’ என்பது பேச்சு வழக்கு; எழுத்து வழக்கில் ‘விழுந்து விட்டது’.

11.  
பேச்சுவழக்கு – எழுத்துவழக்கு கண்டறிதல்.
எலையிலே சாப்பாடு.

Correct Answer: B [இலையிலே]

Notes:

‘எலை’ என்பது பேச்சு வழக்கு; எழுத்து வழக்கு ‘இலை’.

12.  
பேச்சு வழக்கு எழுத்து வழக்கு
எல்லாரும் வேகமா எங்கே போறாங்க?

Correct Answer: B [எல்லாரும் வேகமாக எங்கு போகிறார்கள்?]

Notes:

‘வேகமா’ → ‘வேகமாக’, ‘போறாங்க’ → ‘போகிறார்கள்’ என்பவை எழுத்து வழக்கு.

13.  
பேச்சு வழக்கு-எழுத்து வழக்கு.
சரியான எழுத்து வழக்கைத் தேர்ந்தெடு.

Correct Answer: A [வரிசையாக நில்]

Notes:

எழுத்து வழக்கில் ஏவல் ஒருமை வினை ‘நில்’.

14.  
பேச்சுவழக்கு – எழுத்து வழக்கு :
‘ஒடம்பு’

Correct Answer: B [ஒடம்பு – உடம்பு]

Notes:

‘ஒடம்பு’ என்பது பேச்சு வழக்கு; எழுத்து வழக்கு ‘உடம்பு’.

15.  
பேச்சுவழக்கு – எழுத்து வழக்கு
காக்கா

Correct Answer: A [காக்கா – காக்கை]

Notes:

‘காக்கா’ என்பது பேச்சு வழக்கு; எழுத்து வழக்கு ‘காக்கை’.

16.  
பேச்சு வழக்கு – எழுத்துவழக்கு – கண்டறிக.
சிறிது ஒக்காந்து போ

Correct Answer: B [உட்கார்ந்து]

Notes:

‘ஒக்காந்து’ என்பது பேச்சு வழக்கு; எழுத்து வழக்கு ‘உட்கார்ந்து’.

17.  
பேச்சு வழக்கு, எழுத்து வழக்குச் சொற்களைப் பொருத்துக.
(a) வெளச்சல் – 1. விலை
(b) புடிவாதம் – 2. விளைச்சல்
(c) வெல – 3. அமாவாசை
(d) அம்மாசி – 4. பிடிவாதம்

Correct Answer: B [2 4 1 3]

Notes:

வெளச்சல் – விளைச்சல், புடிவாதம் – பிடிவாதம், வெல – விலை, அம்மாசி – அமாவாசை.

18.  
பேச்சு வழக்கு – எழுத்து வழக்கு
சரியானதைக் கண்டறிக :

Correct Answer: A [அவன் தலையணையில் படுத்தான்]

Notes:

‘தலகாணி’, ‘தலவாணி’ ஆகியவை பேச்சு வழக்கு; எழுத்து வழக்கு ‘தலையணை’ (தலை + அணை).

19.  
பேச்சு வழக்கு – எழுத்து வழக்கு கண்டறிக.
சரியானதைக் கண்டறிக :

Correct Answer: D [வெளக்கு – விளக்கு]

Notes:

‘வெளக்கு’ என்பது பேச்சு வழக்கு; எழுத்து வழக்கு ‘விளக்கு’.

20.  
பேச்சு வழக்கு எழுத்து வழக்கு
நீத்துப்பாகம் குடிக்க வா

Correct Answer: D [மேல்கஞ்சி குடிக்க வா]

Notes:

‘நீத்துப்பாகம்’ என்பது வட்டார வழக்குச் சொல்; இதன் பொருள் ‘மேல்கஞ்சி’ (சோறு வடிக்கும்போது மேலே தெளிந்து நிற்கும் கஞ்சி).

21.  
பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு.
பின்வருவனவற்றுள் எழுத்து வழக்கில் அமையாத சொல்லைக் கண்டறிக.

Correct Answer: C [குந்திக்க]

Notes:

‘குந்திக்க’ என்பது ‘உட்கார்ந்துகொள்’ என்பதன் பேச்சு வழக்கு வடிவம்.

22.  
பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு :
பின்வருவனவற்றுள் பேச்சுவழக்கில் அமைந்த தொடரைக் கண்டறிக

Correct Answer: C [அம்மா பசிக்கிது]

Notes:

‘பசிக்கிது’ என்பது பேச்சு வழக்கு.

23.  
பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
பின்வருவனவற்றுள் பேச்சுவழக்கில் அமைந்த சொல்லைக் கண்டறிக.

Correct Answer: B [செஞ்சான்]

Notes:

‘செஞ்சான்’ என்பது பேச்சு வழக்கு; எழுத்து வழக்கு ‘செய்தான்’.

24.  
பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு
பின்வருவனவற்றுள் பேச்சு வழக்கு அல்லாத தொடரைக் கண்டறிக

Correct Answer: C [முருகா, வந்துவிட்டாயா?]

Notes:

‘வந்துவிட்டாயா?’ என்பது எழுத்து வழக்கு.

25.  
பேச்சு வழக்கு எழுத்து வழக்கு
‘மலர்விழி சுவற்றில் எழுதுறாள்’.

Correct Answer: B [மலர்விழி சுவரில் எழுதுகிறாள்]

Notes:

‘சுவர்’ என்பதே சரியான சொல்; ஏழாம் வேற்றுமை உருபு சேர்ந்து ‘சுவரில்’ என வரும்.

26.  
பேச்சுவழக்கு – எழுத்துவழக்கு :
மாம்பழம் சாப்ட்டியா?

Correct Answer: A [மாம்பழம் சாப்பிட்டாயா?]

Notes:

‘சாப்ட்டியா’ என்பது பேச்சு வழக்கு; எழுத்து வழக்கில் ‘சாப்பிட்டாயா?’ (சாப்பிட்டாய் + ஆ).

27.  
சரியான பேச்சு வழக்குத் தொடரைக் காண்க.

Correct Answer: B [இதா எழுப்பறேன்]

Notes:

‘இதா எழுப்பறேன்’ என்பது பேச்சு வழக்கு.

28.  
பேச்சு வழக்குச் சொற்களற்ற பழமொழியைத் தேர்க.

Correct Answer: D [அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்]

Notes:

‘அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம்’ என்பதில் பேச்சு வழக்குச் சொல் இல்லை.

29.  
பேச்சு வழக்குச் சொற்களை நீக்கிச் சரியான தொடரைத் தேர்க.

Correct Answer: C [உழைக்கின்ற மாடுதான் ஊருக்குள்ளே விலை போகும்]

Notes:

‘ஊருக்குள்ள’ → ‘ஊருக்குள்ளே’, ‘வெல’ / ‘வெலை’ → ‘விலை’ என மாற்றிய தொடர் முழுவதும் எழுத்து வழக்கில் அமைந்துள்ளது.

30.  
பேச்சு வழக்குச் சொல்லுக்கு இணையான எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிந்து எழுதுக.
இன்னைக்குக் காத்தாலே காப்பி குடித்தேன்.

Correct Answer: B [இன்றைக்குக் காலையில் குளம்பிநீர் குடித்தேன்]

Notes:

‘இன்னைக்கு’ → ‘இன்றைக்கு’, ‘காத்தாலே’ → ‘காலையில்’, ‘காப்பி’ → ‘குளம்பிநீர்’.

31.  
பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று
‘அங்க நல்லா கவனிப்பாங்க’

Correct Answer: C [அங்கே நன்றாகக் கவனிப்பார்கள்]

Notes:

‘அங்க’ → ‘அங்கே’, ‘நல்லா’ → ‘நன்றாக’, ‘கவனிப்பாங்க’ → ‘கவனிப்பார்கள்’.

32.  
பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று.
இதைக் குடுத்துடுங்க

Correct Answer: B [இதைக் கொடுத்து விடுங்கள்]

Notes:

‘குடுத்துடுங்க’ → ‘கொடுத்து விடுங்கள்’.

33.  
பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று :
“எனக்குக் கூட ஒங்கள மாரி ஆடணுமுன்னு ஆசை”

Correct Answer: C [எனக்குக் கூட உங்களைப் போல் ஆடவேண்டுமென்று ஆசை.]

Notes:

‘ஒங்கள’ → ‘உங்களை’, ‘மாரி’ → ‘போல்’, ‘ஆடணுமுன்னு’ → ‘ஆடவேண்டுமென்று’ என முழுமையாக மாற்றப்பட்ட தொடர் இதுவே.

34.  
பின்வருவனவற்றுள் எழுத்து வழக்கில் அமைந்த தொடரைத் தேர்க.

Correct Answer: C [“தம்பி நீ எங்கே நிற்கின்றாய்?”]

Notes:

‘எங்க’ → ‘எங்கே’, ‘நிக்கிறே’ → ‘நிற்கின்றாய்’.

35.  
பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று
வந்துடறேன்

Correct Answer: B [வந்து விடுகிறேன்]

Notes:

‘வந்துடறேன்’ → ‘வந்து விடுகிறேன்’.

36.  
பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று.
‘வவுத்து வலி’

Correct Answer: C [வயிற்று வலி]

Notes:

‘வவுத்து’ என்பது பேச்சு வழக்கு; எழுத்து வழக்கு ‘வயிற்று’.

37.  
பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று.
வீரப்பன் ஒரு கடுதாசி குடுத்தான்.

Correct Answer: D [வீரப்பன் ஒரு கடிதம் கொடுத்தான்]

Notes:

‘கடுதாசி’ → ‘கடிதம்’, ‘குடுத்தான்’ → ‘கொடுத்தான்’.

38.  
பொருத்துக.
(a) கீது – 1. இலை
(b) எல – 2. சாப்பிட்டான்
(c) ஒலகம் – 3. இருக்கிறது
(d) சாப்ட்டான் – 4. உலகம்

Correct Answer: A [3 1 4 2]

Notes:

கீது – இருக்கிறது, எல – இலை, ஒலகம் – உலகம், சாப்ட்டான் – சாப்பிட்டான்.

39.  
“சொல்றேன்” என்பதன் எழுத்து வழக்கு

Correct Answer: D [சொல்கின்றேன்]

Notes:

‘சொல்றேன்’ என்பது நிகழ்காலப் பேச்சு வழக்கு; எழுத்து வழக்கில் ‘சொல்கின்றேன்’ (சொல் + கின்று + ஏன்).

40.  
வழுவற்ற சொல்லைக் காண்க

Correct Answer: B [ஒட்டடை]

Notes:

‘ஒட்டடை’ என்பதே சரியான சொல். ‘அரிவாமணை’ → ‘அரிவாள்மணை’, ‘தாவாரம்’ → ‘தாழ்வாரம்’, ‘அடமழை’ → ‘அடைமழை’ என்பவையே சரியான வடிவங்கள்.

41.  
வழூஉச் சொல்லற்ற தொடர் எது?

Correct Answer: D [சுப்பையாவின் புன்செய் சாலையோரத்தில் இருந்தது]

Notes:

‘புஞ்சை’ என்பது பேச்சு வழக்கு; சரியான சொல் ‘புன்செய்’ – மழையை நம்பிப் பயிரிடும் நிலம்.

42.  
வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் _____ என வழங்குகிறோம்.

Correct Answer: D [வாசல்]

Notes:

‘வாயில்’ என்னும் எழுத்து வழக்குச் சொல் பேச்சு வழக்கில் ‘வாசல்’ என வழங்குகிறது.

43.  
வெரசா வந்துருவேன் - என்பதற்கான சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக

Correct Answer: C [விரைவில் வந்துவிடுவேன்]

Notes:

‘வெரசா’ → ‘விரைவில்’ / ‘விரைவாக’, ‘வந்துருவேன்’ → ‘வந்துவிடுவேன்’.

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0