வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
சொற்களின் கூட்டுப் பெயர்கள்
‘வாழை’
‘வாழை’
Correct Answer: C [வாழைத் தோட்டம்]
Notes:
வாழை பயிரிடப்படும் இடம் ‘வாழைத் தோட்டம்’.
2.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கல். (ஒலி மரபு)
ஆடு
ஆடு
Correct Answer: D [கத்தும்]
Notes:
ஆட்டின் ஒலி ‘கத்துதல்’ (ஆடு கத்தும்).
3.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கல். (ஒலி மரபு)
புலி
புலி
Correct Answer: C [உறுமும்]
Notes:
புலியின் ஒலி ‘உறுமுதல்’ (புலி உறுமும்).
4.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்கல். (வினை மரபு)
‘கூடை’ எனும் சொல்லுடன் இணைந்து வரும் வினைமரபு எதுவெனக் கண்டறிக.
‘கூடை’ எனும் சொல்லுடன் இணைந்து வரும் வினைமரபு எதுவெனக் கண்டறிக.
Correct Answer: A [முடைந்தார்]
Notes:
மூங்கில், பனையோலை போன்றவற்றால் கூடை ‘முடைதல்’ என்பது வினைமரபு.
5.
சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குக. (ஒலி மரபு)
அகவும்
அகவும்
Correct Answer: B [மயில் _____]
Notes:
மயிலின் ஒலி ‘அகவுதல்’ (மயில் அகவும்).
6.
தவறான ஒலி மரபுச் சொல்லைத் தேர்வு செய்க.
Correct Answer: C [புறா குழறும்]
Notes:
புறாவின் ஒலி ‘குனுகுதல்’ (புறா குனுகும்); ‘குழறுதல்’ ஆந்தைக்கு உரியது.
7.
தவறான வினைமரபுத் தொடரைத் தேர்க
Correct Answer: D [பால் குடித்தான்]
Notes:
பாலைப் ‘பருகுதல்’ என்பதே மரபு (பால் பருகினான்).
8.
திணை வழுவைத் தேர்வு செய்க.
Correct Answer: A [செழியன் வந்தது]
Notes:
செழியன் உயர்திணை ஆண்பால் பெயர்; ‘வந்தது’ அஃறிணை வினை.
9.
சரியான தொடரைக் கண்டறிந்து எழுதுக.
Correct Answer: B [கொடியிலுள்ள மலரைக் கொய்து வா]
Notes:
பூவைக் ‘கொய்தல்’ என்பது சரியான வினைமரபு.
10.
பின்வரும் சொல்லின் சரியான கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க.
எறும்பு.
எறும்பு.
Correct Answer: D [எறும்புச் சாரை]
Notes:
எறும்புகள் வரிசையாகச் செல்வதை ‘சாரை’ என்பர் (எறும்புச் சாரை).
11.
பின்வருவனவற்றுள் சரியான இணைகளைக் குறிப்பிடுக.
(அ) புல் – புற்கள்
(ஆ) சொல் – சொல்கள்
(இ) பூ – பூக்கள்
(ஈ) மாதம் – மாதக்கள்
(அ) புல் – புற்கள்
(ஆ) சொல் – சொல்கள்
(இ) பூ – பூக்கள்
(ஈ) மாதம் – மாதக்கள்
Correct Answer: C [(அ), (இ)]
Notes:
புல் + கள் = புற்கள், பூ + கள் = பூக்கள் என்பன சரியான பன்மை வடிவங்கள்.
12.
பின்வருவனவற்றைப் பொருத்தி விடை அறிக.
(a) ஆ – 1. குவியல்
(b) ஆடு – 2. கற்றை
(c) ஒளி – 3. மந்தை
(d) கல் – 4. நிரை
(a) ஆ – 1. குவியல்
(b) ஆடு – 2. கற்றை
(c) ஒளி – 3. மந்தை
(d) கல் – 4. நிரை
Correct Answer: B [4 3 2 1]
Notes:
ஆ – நிரை (ஆநிரை), ஆடு – மந்தை, ஒளி – கற்றை (ஒளிக்கற்றை), கல் – குவியல் (கற்குவியல்).
13.
பிழை திருத்தம் செய்க.
Correct Answer: C [மயில் அகவும் குயில் கூவும் ஆந்தை அலறும்]
Notes:
மயில் அகவும், குயில் கூவும், ஆந்தை அலறும் என்பன சரியான ஒலி மரபுகள்.
14.
பிழை திருத்தம் – வழுவுச் சொற்களை நீக்குதல்
வழூஉச் சொல்லற்ற தொடர் எது?
வழூஉச் சொல்லற்ற தொடர் எது?
Correct Answer: C [நீ வந்தாய்]
Notes:
‘நீ’ முன்னிலை ஒருமைப் பெயர்; அதற்கு ‘ஆய்’ விகுதி பெற்ற முன்னிலை ஒருமை வினை (வந்தாய்) வர வேண்டும்.
15.
பிழை நீக்கி எழுதுக.
சிங்கக் குட்டியையும், யானைக் குட்டியையும் பார்த்தேன்.
சிங்கக் குட்டியையும், யானைக் குட்டியையும் பார்த்தேன்.
Correct Answer: A [சிங்கக் குருளையையும், யானைக்கன்றையும் பார்த்தேன்.]
Notes:
சிங்கத்தின் இளமைப் பெயர் ‘குருளை’, யானையின் இளமைப் பெயர் ‘கன்று’.
16.
பிழையற்ற தொடரை அறிக :
Correct Answer: C [மாடலன் நேற்று வந்தான்]
Notes:
மாடலன் (ஆண்பால்) – வந்தான் (ஆண்பால் வினை); ‘நேற்று’ இறந்த காலத்துக்கு ஏற்ப வந்தான் என வந்துள்ளது.
17.
பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக.
குழலி நடனம் ஆடியது
குழலி நடனம் ஆடியது
Correct Answer: A [ஆடினாள்]
Notes:
குழலி உயர்திணைப் பெண்பால் பெயர்; ‘ஆடியது’ அஃறிணை வினை – திணை வழு.
18.
‘புலி’ - என்ற விலங்கினுடைய சரியான இளமைப் பெயரைக் கண்டறிக :
Correct Answer: C [பறழ்]
Notes:
புலியின் இளமைப் பெயர் ‘பறழ்’ (புலிப்பறழ்).
19.
பெயருக்கேற்ற வினையை எழுது.
சோறு _____.
சோறு _____.
Correct Answer: B [உண்]
Notes:
சோற்றை ‘உண்ணுதல்’ என்பதே மரபு (சோறு உண்).
20.
பொருத்தமற்ற தொடரை அறிக
Correct Answer: D [மக்கள் குவியல் குவியலாய்த் திரண்டனர்]
Notes:
‘குவியல்’ என்பது கல், மணல் போன்ற பொருள்களுக்கு உரியது; மக்களுக்குப் பொருந்தாது.
21.
பொருத்தமான மரபுச் சொல்லைத் தேர்ந்தெழுதுக :
ஆட்டு _____ வருகிறது.
ஆட்டு _____ வருகிறது.
Correct Answer: B [மந்தை]
Notes:
ஆடுகளின் கூட்டத்தை ‘மந்தை’ என்பது மரபு; ஆட்டு மந்தை.
22.
பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க
Correct Answer: D [நாய் கத்தும் – மரபு வழு]
Notes:
நாயின் ஒலி ‘குரைக்கும்’ என்பதே மரபு; ‘நாய் கத்தும்’ என்பது மரபு வழு.
23.
பொருத்துக :
(a) காகம் – 1. கூவும்
(b) குதிரை – 2. கரையும்
(c) சிங்கம் – 3. கனைக்கும்
(d) குயில் – 4. முழங்கும்
(a) காகம் – 1. கூவும்
(b) குதிரை – 2. கரையும்
(c) சிங்கம் – 3. கனைக்கும்
(d) குயில் – 4. முழங்கும்
Correct Answer: D [2 3 4 1]
Notes:
காகம் கரையும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், குயில் கூவும் என்பவை ஒலி மரபுகள்.
24.
பொருத்துக :
(a) சிங்கம் – 1. அகவும்
(b) மயில் – 2. கனைக்கும்
(c) புலி – 3. முழங்கும்
(d) குதிரை – 4. உறுமும்
(a) சிங்கம் – 1. அகவும்
(b) மயில் – 2. கனைக்கும்
(c) புலி – 3. முழங்கும்
(d) குதிரை – 4. உறுமும்
Correct Answer: D [3 1 4 2]
Notes:
சிங்கம் முழங்கும், மயில் அகவும், புலி உறுமும், குதிரை கனைக்கும் என்பவை ஒலி மரபுகள்.
25.
பொருத்துக :
(a) முள் – (1) சோலை
(b) பூ – (2) காடு
(c) பனம் – (3) புதர்
(d) தேயிலை – (4) தோட்டம்
(a) முள் – (1) சோலை
(b) பூ – (2) காடு
(c) பனம் – (3) புதர்
(d) தேயிலை – (4) தோட்டம்
Correct Answer: A [3 1 2 4]
Notes:
முட்புதர், பூஞ்சோலை, பனங்காடு, தேயிலைத் தோட்டம் என்பவை தொகுப்புப் பெயர் மரபுகள்.
26.
பொருத்துக :
(a) வண்டு – 1. குனுகும்
(b) புறா – 2. அலப்பும்
(c) பூனை – 3. முரலும்
(d) குரங்கு – 4. சீறும்
(a) வண்டு – 1. குனுகும்
(b) புறா – 2. அலப்பும்
(c) பூனை – 3. முரலும்
(d) குரங்கு – 4. சீறும்
Correct Answer: A [3 1 4 2]
Notes:
வண்டு முரலும், புறா குனுகும், பூனை சீறும், குரங்கு அலப்பும் என்பவை ஒலி மரபுகள்.
27.
பொருத்துக :
(a) வாழை – (1) குரும்பை
(b) வெள்ளரி – (2) பிஞ்சு
(c) பனம் – (3) கச்சல்
(d) மா – (4) வடு
(a) வாழை – (1) குரும்பை
(b) வெள்ளரி – (2) பிஞ்சு
(c) பனம் – (3) கச்சல்
(d) மா – (4) வடு
Correct Answer: B [3 2 1 4]
Notes:
இளங்காய்களுக்கு மரபுப் பெயர்கள் உண்டு: வாழைக் கச்சல், வெள்ளரிப் பிஞ்சு, பனங்குரும்பை, மாவடு.
28.
பொருந்தாத மரபுத் தொடரைக் குறிப்பிடுக
Correct Answer: C [கோழி கூவும்]
Notes:
கோழி ‘கொக்கரிக்கும்’; ‘கூவும்’ என்பது சேவலுக்கும் குயிலுக்கும் உரியது.
29.
பொருந்தாத வினை மரபினை எழுதுக
Correct Answer: A [சுவர் கட்டினான்]
Notes:
சுவரை ‘எழுப்பினான்’ என்பதே வினை மரபு; ‘சுவர் கட்டினான்’ பொருந்தாது.
30.
பொருளறிந்து பொருத்துக.
(a) அரசன் வந்தது – 1. பால் வழு
(b) கபிலன் பேசினாள் – 2. எண் வழு
(c) குயில்கள் கூவியது – 3. இட வழு
(d) கமலா சிரித்தாய் – 4. திணை வழு
(a) அரசன் வந்தது – 1. பால் வழு
(b) கபிலன் பேசினாள் – 2. எண் வழு
(c) குயில்கள் கூவியது – 3. இட வழு
(d) கமலா சிரித்தாய் – 4. திணை வழு
Correct Answer: B [4 1 2 3]
Notes:
அரசன் (உயர்திணை) வந்தது (அஃறிணை வினை) – திணை வழு; கபிலன் (ஆண்பால்) பேசினாள் – பால் வழு; குயில்கள் (பன்மை) கூவியது (ஒருமை) – எண் வழு; கமலா (படர்க்கை) சிரித்தாய்…
31.
மடலி அல்லது வடலி என்பதனைக் குறிக்கும் பொருள் தேர்க.
Correct Answer: B [பனையின் இளநிலை]
Notes:
பனையின் இளநிலை ‘வடலி’ எனப்படும்.
32.
‘மயில்’ என்பதற்கு பொருந்தி வரும் சொல் எதுவெனக் கண்டறிக.
Correct Answer: A [அகவியது]
Notes:
மயிலின் ஒலி ‘அகவல்’; மயில் அகவும்.
33.
சரியான மரபுச் சொல்லை இணைக்க.
கமுகு (பாக்கு) _____.
கமுகு (பாக்கு) _____.
Correct Answer: B [கூந்தல்]
Notes:
கமுகு (பாக்கு மரம்) இலையைக் ‘கூந்தல்’ என்பது மரபு.
34.
மரபுச் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றுள் எது சரியானது?
Correct Answer: B [ஆட்டுப்பட்டி அருகே குயில் கூவியதைக் கேட்ட கழுதை கத்தியது]
Notes:
ஆடுகள் தங்குமிடம் ‘பட்டி’; குயில் ‘கூவும்’; கழுதை ‘கத்தும்’.
35.
மரபுச் சொற்களைப் பொருத்துக :
(a) ஈச்சம் – 1. மடல்
(b) மூங்கில் – 2. ஓலை
(c) வேப்பம் – 3. இலை
(d) தாழை – 4. தழை
(a) ஈச்சம் – 1. மடல்
(b) மூங்கில் – 2. ஓலை
(c) வேப்பம் – 3. இலை
(d) தாழை – 4. தழை
Correct Answer: D [2 3 4 1]
Notes:
ஈச்சம் ஓலை, மூங்கில் இலை, வேப்பந்தழை, தாழை மடல் என்பவை இலை மரபுப் பெயர்கள்.
36.
மரபுச் சொற்களைப் பொருத்துக :
(a) கிளி – 1. கூவும்
(b) மயில் – 2. பேசும்
(c) ஆந்தை – 3. அகவும்
(d) சேவல் – 4. அலறும்
(a) கிளி – 1. கூவும்
(b) மயில் – 2. பேசும்
(c) ஆந்தை – 3. அகவும்
(d) சேவல் – 4. அலறும்
Correct Answer: B [2 3 4 1]
Notes:
கிளி பேசும், மயில் அகவும், ஆந்தை அலறும், சேவல் கூவும் என்பவை ஒலி மரபுகள்.
37.
சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
சேவல் _____.
சேவல் _____.
Correct Answer: A [சேவல் கூவும்]
Notes:
சேவல் ‘கூவும்’; கோழி ‘கொக்கரிக்கும்’; காகம் ‘கரையும்’.
38.
சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
கூடை _____
கூடை _____
Correct Answer: B [முடை]
Notes:
ஓலை, மூங்கில் போன்றவற்றால் கூடை பின்னுவதை ‘முடைதல்’ என்பது வினை மரபு; கூடை முடை.
39.
சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக :
சோறு _____
சோறு _____
Correct Answer: A [உண்]
Notes:
சோற்றை ‘உண்’ என்பதே வினை மரபு.
40.
மரபுச்சொல்லைப் பொருத்தி எழுதுக.
(a) சோறு – 1. தின்
(b) முறுக்கு – 2. குடி
(c) தண்ணீர் – 3. பருகு
(d) பால் – 4. உண்
(a) சோறு – 1. தின்
(b) முறுக்கு – 2. குடி
(c) தண்ணீர் – 3. பருகு
(d) பால் – 4. உண்
Correct Answer: C [4 1 2 3]
Notes:
சோறு உண், முறுக்குத் தின், தண்ணீர் குடி, பால் பருகு என்பவை வினை மரபுகள்.
41.
சரியான மரபுச் சொல்லினைத் தேர்க
சப்பாத்திக் கள்ளி _____
சப்பாத்திக் கள்ளி _____
Correct Answer: D [மடல்]
Notes:
சப்பாத்திக் கள்ளி, தாழை ஆகியவற்றின் இலையை ‘மடல்’ என்பது மரபு.
42.
சரியான மரபுத் தொடர்களைத் தேர்வு செய்க :
1. ஈச்ச ஓலையுடன் தாழை மடலைச் சேர்த்து வைத்தான்
2. ஈச்ச இலையுடன் தாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
3. மூங்கில் இலைகளுடன் வாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
4. மூங்கில் இலைகளுடன் வாழை மடலைச் சேர்த்து வைத்தான்
1. ஈச்ச ஓலையுடன் தாழை மடலைச் சேர்த்து வைத்தான்
2. ஈச்ச இலையுடன் தாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
3. மூங்கில் இலைகளுடன் வாழை இலைகளைச் சேர்த்து வைத்தான்
4. மூங்கில் இலைகளுடன் வாழை மடலைச் சேர்த்து வைத்தான்
Correct Answer: A [1 மற்றும் 3]
Notes:
ஈச்சம் – ஓலை, தாழை – மடல், மூங்கில் – இலை, வாழை – இலை என்பவை மரபுப் பெயர்கள்.
43.
மரபுத் தொடரின் பொருளறிக
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது
Correct Answer: C [பட்டறிவில்லாத படிப்பறிவு]
Notes:
நூலில் வரைந்த சுரைக்காய் சமையலுக்குப் பயன்படாது; அதுபோல அனுபவம் இல்லாத ஏட்டறிவு வாழ்க்கைக்குப் பயன்படாது என்பது இதன் பொருள்.
44.
சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
ஆந்தை _____
ஆந்தை _____
Correct Answer: A [அலறும்]
Notes:
ஆந்தையின் ஒலி ‘அலறும்’ என்பது மரபு.
45.
மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.
Correct Answer: B [இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்]
Notes:
கூரைக்கு ஓலை முதலியவற்றைப் பரப்பி அமைப்பதை ‘வேய்தல்’ என்பது வினை மரபு; ‘கூரை போட்டனர்’ என்பது மரபுப் பிழை.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
