வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
Correct Answer: C [கூகை குழறும்]
Notes:
கூகையின் ஒலி ‘குழறும்’ என்பது மரபு.
2.
மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக :
Correct Answer: A [எருது எக்காளமிடும்]
Notes:
எருது ‘எக்காளமிடும்’ என்பது ஒலி மரபு.
3.
மரபுப்பிழை இல்லாத தொடர் எது?
Correct Answer: D [காகம் கரையும்]
Notes:
காகம் ‘கரையும்’ என்பது சரியான மரபு.
4.
மரபுப்பிழை இல்லாத தொடர் எது?
Correct Answer: C [கம்பங்கொல்லை]
Notes:
கம்பு பயிரிடப்படும் நிலம் ‘கம்பங்கொல்லை’.
5.
மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
Correct Answer: C [மரத்தில் குயில் கூவிக் கொண்டிருந்தது]
Notes:
குயில் ‘கூவும்’ என்பது ஒலி மரபு.
6.
மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
கோழிக்குட்டிகளைப் பிடிக்கப் பூனைக் குஞ்சுகள் ஓடின.
கோழிக்குட்டிகளைப் பிடிக்கப் பூனைக் குஞ்சுகள் ஓடின.
Correct Answer: A [கோழிக் குஞ்சுகளைப் பிடிக்கப் பூனைக்குட்டிகள் ஓடின]
Notes:
கோழியின் இளமைப் பெயர் ‘குஞ்சு’; பூனையின் இளமைப் பெயர் ‘குட்டி’.
7.
மரபுப் பிழைகளை நீக்கிச் சரியானதைத் தேர்க.
கொடியிலுள்ள மலரை எடுத்து வா
கொடியிலுள்ள மலரை எடுத்து வா
Correct Answer: B [கொய்து]
Notes:
பூவைப் பறிப்பதைக் ‘கொய்தல்’ என்பது வினை மரபு; ‘மலரைக் கொய்து வா’.
8.
ஏற்புடைய ஒலி மரபினைத் தேர்க :
‘ஆடு’
‘ஆடு’
Correct Answer: D [கத்தும்]
Notes:
ஆட்டின் ஒலி ‘கத்தும்’ என்பது மரபு.
9.
சரியான ஒலி மரபைத் தேர்க :
கிளி
கிளி
Correct Answer: C [பேசும்]
Notes:
கிளி ‘பேசும்’ என்பது ஒலி மரபு.
10.
‘குனுகும்’ என்ற ஒலி மரபுச் சொல்லுக்கு உரிய பறவை எது?
Correct Answer: D [புறா]
Notes:
‘குனுகும்’ என்பது புறாவின் ஒலி மரபு.
11.
மரபுப் பிழை நீக்கிச் சரியானதைத் தேர்க
சோறு தின்றான்
சோறு தின்றான்
Correct Answer: A [உண்டான்]
Notes:
சோற்றை ‘உண்டான்’ என்பதே வினை மரபு.
12.
மரபுப் பிழை நீக்கிய சொல்லைத் தேர்வு செய்க
Correct Answer: A [புறா குனுகும்]
Notes:
புறாவின் ஒலி ‘குனுகும்’ என்பது மரபு.
13.
மரபுப் பிழை நீக்கிச் சரியான சொல்லால் எழுதுக.
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை _____
இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை _____
Correct Answer: C [வேய்ந்தனர்]
Notes:
ஓலை, கீற்று முதலியவற்றால் கூரை அமைப்பதைக் ‘கூரை வேய்தல்’ என்பது மரபு.
14.
மரபுப்பிழை நீக்குக
பால் குடித்தான்
பால் குடித்தான்
Correct Answer: A [பருகினான்]
Notes:
பாலைப் ‘பருகினான்’ என்பதே வினை மரபு.
15.
மரபுப் பிழையற்ற காய்களின் இளமைப் பெயர் காண்க.
Correct Answer: B [கத்தரிப்பிஞ்சு]
Notes:
காய்களின் இளமைப் பெயர் ‘பிஞ்சு’ – கத்தரிப்பிஞ்சு, அவரைப்பிஞ்சு.
16.
மரபுப் பிழையற்ற சொல்லைக் கண்டறிக.
‘எருது’
‘எருது’
Correct Answer: D [எக்காளமிடும்]
Notes:
எருதின் ஒலி ‘எக்காளமிடும்’ என்பது மரபு.
17.
மரபுப்பிழையற்ற தொடரைக் கண்டுபிடி
Correct Answer: B [காட்டில் புலி உறுமும் சிங்கம் முழங்கும்]
Notes:
புலி உறுமும், சிங்கம் முழங்கும் என்பன சரியான ஒலி மரபுகள்.
18.
மரபுப் பிழையற்ற தொடரைக் காண்க.
Correct Answer: C [கோழி கொக்கரிக்க நரி ஊளையிட்டது]
Notes:
கோழி கொக்கரிக்கும், நரி ஊளையிடும் என்பன ஒலி மரபுகள்.
19.
மரபுப் பிழையற்ற தொடரைக் காண்க.
Correct Answer: D [தென்னங்கீற்றும் வேப்பந்தழையும் கொண்டு வந்தான்]
Notes:
தென்னையின் இலை ஓலை / கீற்று எனவும், வேம்பின் இலை தழை எனவும் வழங்கப்படும்.
20.
மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக.
Correct Answer: C [நரி ஊளையிடும்]
Notes:
நரி ‘ஊளையிடும்’ என்பது ஒலி மரபு.
21.
மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக
Correct Answer: B [பசு – கதறும்]
Notes:
பசு ‘கதறும்’ என்பது ஒலி மரபு. சிங்கம் முழங்கும், நாய் குரைக்கும், குரங்கு அலப்பும், புறா குனுகும் என்பதே மரபு; எனவே பிற இணைகள் பிழை.
22.
மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக
Correct Answer: A [தென்னந்தோப்பு]
Notes:
தென்னை, மா முதலிய மரங்கள் நிறைந்த இடத்தைத் ‘தோப்பு’ என்பது மரபு – தென்னந்தோப்பு, மாந்தோப்பு; பனைக்குப் ‘பனங்காடு’.
23.
மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக
Correct Answer: A [பனை வடலி]
Notes:
பனையின் இளமைப் பெயர் ‘வடலி’. தென்னையின் இளமை ‘தென்னம்பிள்ளை’, வாழையின் இளமை ‘வாழைக்கன்று’ என்பதே மரபு; எனவே பிற வடிவங்கள் பிழை.
24.
மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக.
Correct Answer: D [கூவும் குயில்]
Notes:
குயிலின் ஒலி ‘கூவும்’ என்பது மரபு.
25.
மரபுப் பிழையற்றதை எடுத்து எழுது :
Correct Answer: A [மயில் அகவும்]
Notes:
மயிலின் ஒலி ‘அகவும்’ என்பது மரபு.
26.
மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக.
சேவல் கொக்கரிக்கும், கோழி கூவும்
சேவல் கொக்கரிக்கும், கோழி கூவும்
Correct Answer: A [கூவும், கொக்கரிக்கும்]
Notes:
சேவல் ‘கூவும்’, கோழி ‘கொக்கரிக்கும்’ என்பதே ஒலி மரபு.
27.
மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக.
புலி
புலி
Correct Answer: C [பறழ்]
Notes:
புலியின் இளமைப் பெயர் ‘பறழ்’ (புலிப்பறழ்).
28.
மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.
Correct Answer: C [சிங்கக்குருளை]
Notes:
சிங்கத்தின் இளமைப் பெயர் ‘குருளை’ (சிங்கக்குருளை).
29.
மரபுப் பிழையற்ற சொல்லைத் தெரிவு செய்க.
கப்பல் கட்டும் கலைஞர்கள் _____ என்று அழைக்கப்பட்டனர்.
கப்பல் கட்டும் கலைஞர்கள் _____ என்று அழைக்கப்பட்டனர்.
Correct Answer: D [கம்மியர்]
Notes:
மரக்கலம் (கப்பல்) கட்டும் கலைஞர்கள் ‘கம்மியர்’ என அழைக்கப்பட்டனர்.
30.
மரபுப் பிழையற்ற வாக்கியம் எது?
Correct Answer: D [குயில் கூவியது; மயில் அகவியது]
Notes:
குயில் கூவும், மயில் அகவும் என்பன ஒலி மரபுகள்.
31.
மரபுப் பிழையுள்ள தொடரைச் சுட்டுக.
Correct Answer: D [கீரிக்குட்டி வரப்பில் ஓடுகிறது]
Notes:
கீரியின் இளமைப் பெயர் ‘பிள்ளை’ (கீரிப்பிள்ளை); ‘கீரிக்குட்டி’ மரபுப் பிழை.
32.
மரபுப் பிழையைக் கண்டறிந்து பொருத்துக :
(a) காகம் – 1. கூவும்
(b) குதிரை – 2. கரையும்
(c) நரி – 3. கனைக்கும்
(d) குயில் – 4. ஊளையிடும்
(a) காகம் – 1. கூவும்
(b) குதிரை – 2. கரையும்
(c) நரி – 3. கனைக்கும்
(d) குயில் – 4. ஊளையிடும்
Correct Answer: A [2 3 4 1]
Notes:
காகம் கரையும், குதிரை கனைக்கும், நரி ஊளையிடும், குயில் கூவும் என்பன ஒலி மரபுகள்.
33.
மரபுப் பிழையை நீக்குக
நேற்றுத் தென்றல் காற்று அடித்தது
நேற்றுத் தென்றல் காற்று அடித்தது
Correct Answer: C [வீசியது]
Notes:
காற்று ‘வீசும்’ என்பது வினை மரபு – தென்றல் வீசியது.
34.
‘யானை’ – ஒலி மரபினைச் சுட்டுக.
Correct Answer: C [பிளிறும்]
Notes:
யானையின் ஒலி ‘பிளிறும்’ என்பது மரபு.
35.
சொல்லின் கூட்டுப்பெயரைக் கண்டுபிடித்து எழுதுக
ஆடு
ஆடு
Correct Answer: B [ஆட்டு மந்தை]
Notes:
ஆடுகளின் கூட்டம் ‘ஆட்டு மந்தை’ எனப்படும்.
36.
சொல்லுக்கேற்ற கூட்டப் பெயர் காண்.
‘பசு’
‘பசு’
Correct Answer: B [ஆநிரை]
Notes:
பசுக்களின் கூட்டம் ‘ஆநிரை’ (ஆ = பசு, நிரை = கூட்டம்).
37.
சொல்லுக்கேற்ற கூட்டப் பெயர் காண் : பழம்
Correct Answer: D [பழக்குலை]
Notes:
பழங்களின் தொகுதி ‘பழக்குலை’ எனப்படும்.
38.
'வண்டு' என்பதுடன் பொருந்தி வரும் ஒலிமரபுச் சொல்லைக் கண்டறிக.
Correct Answer: D [முரலும்]
Notes:
வண்டின் ஒலி ‘முரலும்’ என்பது தமிழ் இலக்கிய மரபு.
39.
வழுவற்ற தொடர் எழுதுக :
Correct Answer: D [கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்]
Notes:
மண்ணால் பானை செய்வதை ‘வனைதல்’ என்பது வினை மரபு.
40.
வழுவற்ற தொடர் எது?
Correct Answer: B [கொடியிலுள்ள மலரைக் கொய்து வா]
Notes:
கொடியிலுள்ள மலரைப் பறிப்பதைக் ‘கொய்தல்’ என்பது மரபு.
41.
வழுவற்ற தொடரைக் கண்டறி.
Correct Answer: A [செழியன் வந்தான்]
Notes:
‘செழியன்’ உயர்திணை ஆண்பால் பெயர்; எனவே ஆண்பால் வினைமுற்று ‘வந்தான்’ பொருந்தும்.
42.
வழுவற்ற தொடரைத் தேர்வு செய்க
Correct Answer: C [வயலில் ஆட்டுக்குட்டி மேய்கிறது]
Notes:
ஆட்டின் இளமைப் பெயர் ‘குட்டி’; ‘மேய்கிறது’ எனப் பொருந்துகிறது.
43.
வழுவுச் சொற்களை நீக்கி எழுதுக.
I. குலசேகர ஆழ்வார் ‘வித்துவக்கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.
II. பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார்.
ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே
I. குலசேகர ஆழ்வார் ‘வித்துவக்கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.
II. பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார்.
ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே
Correct Answer: C [பால் வழுவமைதி, திணை வழுவமைதி]
Notes:
ஆண் தெய்வத்தை ‘அம்மா’ என்று பெண்பாலால் அழைத்தது பால் வழுவமைதி.
44.
சரியான வினைமரபைத் தேர்க.
வளவன் பழம் சாப்பிட்டான்
வளவன் பழம் சாப்பிட்டான்
Correct Answer: B [தின்றான்]
Notes:
பழத்தைத் ‘தின்றான்’ என்பதே வினை மரபு.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
