வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
“இலவு காத்த கிளி போல”

Correct Answer: D [ஏமாற்றம்]

Notes:

இலவம் பஞ்சுக் காய் பழுக்கும் என்று காத்திருந்த கிளி, காய் வெடித்துப் பஞ்சு பறந்ததால் ஏமாந்தது.

2.  
“கீரியும் பாம்பும் போல” – உவமை கூறும் பொருள் தெளிக

Correct Answer: C [பகைமை]

Notes:

கீரியும் பாம்பும் ஒன்றையொன்று கண்டால் சண்டையிடும் இயல்புடையவை.

3.  
உவமையால் விளக்கப் பெறும் பொருளைத் தேர்க
“அத்தி பூத்தாற் போல”

Correct Answer: B [அருமை]

Notes:

அத்திமரத்தின் பூ வெளியே எளிதில் காணப்படுவதில்லை.

4.  
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.
‘நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல’

Correct Answer: D [ஒற்றுமையின்மை]

Notes:

மூட்டையிலிருந்து கொட்டிய நெல்லிக்காய்கள் ஒன்றுசேராமல் திசைக்கு ஒன்றாகச் சிதறி ஓடும்.

5.  
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
‘பசு மரத்து ஆணி போல’

Correct Answer: D [எளிதில் மனத்தில் பதியும்]

Notes:

பசுமையான மரத்தில் ஆணி எளிதாக இறங்கி உறுதியாகப் பதியும்.

6.  
“மழைமுகம் காணாப் பயிர்போல” – உவமைத் தொடர் விளக்கும் பொருளைத் தேர்ந்தெழுது.

Correct Answer: A [வருந்துதல்]

Notes:

மழையைக் காணாத பயிர் வாடிப்போகும்.

7.  
‘விழலுக்கு இறைத்த நீர் போல’ இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?

Correct Answer: B [பயனற்ற செயல்]

Notes:

விழல் என்பது பயன்தராத ஒருவகைப் புல்.

8.  
சரியான ‘மரபுத்தொடர்’ பொருள்
‘ஆகாயத்தாமரை’

Correct Answer: D [இல்லாத ஒன்று]

Notes:

ஆகாயத்தில் தாமரை பூப்பதில்லை. எனவே ‘ஆகாயத்தாமரை’ என்ற மரபுத்தொடர் இல்லாத ஒன்றைக் குறிக்கிறது.

9.  
உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்வு செய்க.
“மடை திறந்த வெள்ளம் போல்”

Correct Answer: C [தடையின்றி மிகுதியாய்]

Notes:

மதகு (மடை) திறந்ததும் வெள்ளம் தடையின்றிப் பெருகிப் பாயும்.

10.  
உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’

Correct Answer: A [வெளிப்படைத் தன்மை]

Notes:

உள்ளங்கையில் வைத்த நெல்லிக்கனி எல்லாருக்கும் தெளிவாகத் தெரியும்.

11.  
‘சிலை மேல் எழுத்து போல’ இவ்வுவமை விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.

Correct Answer: C [நிலைத்து நிற்கும்]

Notes:

கல்லில் (சிலையில்) செதுக்கிய எழுத்து எளிதில் அழியாமல் நீண்ட காலம் இருக்கும்.

12.  
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு :
வளவன் ‘கிணற்றுத் தவளை’ போல வாழ்ந்தான்.

Correct Answer: C [வளவன் குறுகிய அறிவுடையவனாக வாழ்ந்தான்]

Notes:

கிணற்றுக்குள்ளே வாழும் தவளை அக்கிணற்றையே உலகம் என நினைக்கும்.

13.  
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு :
பாரியின் பறம்பு மலையின் புகழ் ‘குன்றின் மேலிட்ட விளக்கு போல’ பரவியது.

Correct Answer: C [பறம்பு மலையின் புகழ் ஓங்கியது]

Notes:

குன்றின் மேல் வைத்த விளக்கின் ஒளி நெடுந்தொலைவு தெரியும்.

14.  
வஞ்சகன் முதலைக் கண்ணீர் வடித்தான்.
இந்த உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள் யாது?

Correct Answer: C [பொய்யழுகை, பொய்யான நட்பு, தீமை தரக்கூடிய கண்ணீர்]

Notes:

முதலை இரையை விழுங்கும்போது கண்ணீர் வடிப்பது போலத் தோன்றும்; அது உண்மையான அழுகை அன்று.

15.  
கீழ்க்கண்ட உவமைக்குப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க
“உடலும் உயிரும் போல”

Correct Answer: D [ஒற்றுமை]

Notes:

உடலும் உயிரும் பிரிக்க முடியாதபடி இணைந்திருப்பவை.

16.  
தீயொழுக்கம் கானல்நீர் போன்றது
பொருத்தமான பொருள் யாது?

Correct Answer: B [இருப்பது போல் தோன்றும் ஆனால் இராதது]

Notes:

கானல்நீர் என்பது வெயிலில் தொலைவில் நீர் இருப்பது போலத் தோன்றும் மாயத்தோற்றம்.

17.  
வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்குப் பொருள் தருக.

Correct Answer: C [மூங்கில் போன்ற தோள்]

Notes:

வேய் = மூங்கில்; புரை = உவம உருபு (போல).

18.  
தாயொப்பப் பேசும் மகள் என்ற உவமைத் தொடருக்குப் பொருள் தருக.

Correct Answer: C [தாயைப் போன்று பேசுதல்]

Notes:

‘ஒப்ப’ என்பது ‘போல’ என்னும் பொருள் தரும் உவம உருபு.

19.  
“பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல” இவ்வுவமைக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Correct Answer: B [நினைத்த ஒன்று, பிடித்த செயல் ஒன்று எதிர்பாராமல் நடப்பது]

Notes:

பழம் தானாக நழுவி இனிய பாலில் விழுந்தால் இரட்டிப்பு இனிமை.

20.  
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு – இக்குறளில் உள்ள உவமைக்குப் பொருள் தருக.

Correct Answer: D [ஊருணி நீர் நிறைதல் போல]

Notes:

‘ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறிவாளன் திரு’ (குறள் 215).

21.  
உவமை விளக்கும் பொருளைக் கண்டறிந்து பொருத்துக :
(a) அத்தி பூத்தது போல – 1. ஒற்றுமை
(b) உயிரும் உடம்பும் போல – 2. பயனில்லை
(c) ஆற்றில் கரைத்த புளி – 3. வேதனை
(d) இடிவிழுந்த மரம் போல – 4. அரிய செயல்

Correct Answer: C [4 1 2 3]

Notes:

அத்தி பூத்தது போல – அரிய செயல்; உயிரும் உடம்பும் போல – ஒற்றுமை; ஆற்றில் கரைத்த புளி போல – பயனில்லை; இடிவிழுந்த மரம் போல – வேதனை.

22.  
பொருத்துக :
தொடர் – பொருள்
(a) ஆகாயத்தாமரை – 1. மிகுதியாகப் பேசுதல்
(b) ஆயிரங்காலத்துப் பயிர் – 2. பொய்யழுகை
(c) முதலைக் கண்ணீர் – 3. நீண்ட காலத்திற்குரியது
(d) கொட்டியளத்தல் – 4. இல்லாத ஒன்று

Correct Answer: A [4 3 2 1]

Notes:

ஆகாயத்தாமரை – இல்லாத ஒன்று; ஆயிரங்காலத்துப் பயிர் – நீண்ட காலத்திற்குரியது; முதலைக் கண்ணீர் – பொய்யழுகை; கொட்டியளத்தல் – மிகுதியாகப் பேசுதல்.

23.  
பூவோடு சேர்ந்த நார் போல – உவமை உணர்த்தும் பொருள்

Correct Answer: C [உயர்வு]

Notes:

மணமுள்ள பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெற்று மதிக்கப்படும்.

24.  
தாமரையிலைத் தண்ணீர் போல – உவமை உணர்த்தும் பொருள்

Correct Answer: C [பற்றின்மை]

Notes:

தாமரை இலையில் நீர் இருந்தாலும் அதில் ஒட்டுவதில்லை.

25.  
‘கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல’ - என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது?

Correct Answer: D [துன்பம்]

Notes:

அருமையாக வளர்த்த கிளியைப் பகையான பூனையிடமே ஒப்படைத்தால் அது அழியும்.

26.  
‘கடலில் கரைத்த பெருங்காயம் போல’ இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்

Correct Answer: C [வீணாதல்]

Notes:

பரந்த கடலில் சிறிதளவு பெருங்காயத்தைக் கரைத்தால் அதன் மணமோ பயனோ தெரியாது.

27.  
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க!
“நாய்க்கால் சிறுவிரல் போல் நன்கணியராயினும்”

Correct Answer: B [உதவமாட்டார்]

Notes:

‘நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார்…’ (நாலடியார்).

28.  
கீழ்க்காணும் பொருள் உணர்த்தும் உவமை யாது?
“பற்றுக்கோடற்ற”

Correct Answer: C [அடியற்ற மரம்]

Notes:

வேர் (அடி) அற்ற மரம் நிலத்தில் பற்றிக்கொள்ள ஆதாரம் இன்றி வீழும்.

29.  
உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
“கொக்கொக்க கூம்பும் பருவத்து”

Correct Answer: A [காத்திருத்தல்]

Notes:

‘கொக்கொக்க கூம்பும் பருவத்து’ (குறள் 490) – இரை வரும்வரை அசையாமல் காத்திருக்கும் கொக்கைப் போல, தக்க காலம் வரும்வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் என்பது பொருள்.

30.  
சரியான உவமையைத் தேர்ந்தெடுக்க : வேகம்

Correct Answer: B [காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் மேய்ந்தாற்போல]

Notes:

நீண்ட நாள் பசியோடு காய்ந்த மாடு, கம்பங்கொல்லையைக் கண்டதும் விரைந்து பாய்ந்து மேயும்.

31.  
உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக :
“கனியிருக்கக் காய் விரும்பியது போல”

Correct Answer: A [அறியாமை]

Notes:

‘இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று’ (குறள் 100).

32.  
“கான மயிலாட அது கண்டு
ஆடும் வான்கோழி போல” என்ற உவமைக்கு ஏற்ற தொடர் எது?

Correct Answer: B [நான் கடின உழைப்பினை மேற்கொண்டாலும் மணியினைப் போல உயர முடியவில்லை]

Notes:

‘கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ – ஔவையாரின் மூதுரை.

33.  
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :
ஊமை கண்ட கனவு போல

Correct Answer: B [தவிப்பு கூற இயலாமை]

Notes:

வாய்பேச இயலாதவர் தாம் கண்ட கனவை உணர்ந்திருந்தாலும் பிறருக்குச் சொல்ல முடியாது.

34.  
‘அன்னநடை கற்கப்போய்த் தன்னடையும்
இழந்தாற் போல’ — உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :

Correct Answer: B [இழப்பு]

Notes:

அன்னப்பறவையின் நடையைக் கற்கச் சென்றவர் அதைக் கற்காததோடு தம் இயல்பான நடையையும் இழந்தார்.

35.  
‘பகலவனைக் கண்ட பனி போல’ — உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க :

Correct Answer: C [துன்பம் நீக்குதல்]

Notes:

கதிரவனைக் கண்டதும் பனி விரைவில் மறைந்துவிடும்.

36.  
உவமையால் விளக்கப்பெறும் பொருள் – சரியான இணையைத் தேர்ந்தெடு

Correct Answer: B [மடைதிறந்த வெள்ளம் போல் – தடையின்றி மிகுதியாக]

Notes:

மடை திறந்த வெள்ளம் போல் – தடையின்றி மிகுதியாக என்பது சரியான இணை.

37.  
பின்வரும் மரபுத் தொடரை இணையான பொருளோடு பொருத்துக
‘கண்ணைமூடிக் கொண்டு’

Correct Answer: D [ஆராய்ந்து பாராமல்]

Notes:

‘கண்ணை மூடிக்கொண்டு’ என்ற மரபுத்தொடர் எதையும் ஆராய்ந்து பாராமல், சிந்திக்காமல் செயல்படுவதைக் குறிக்கிறது.

38.  
“குன்றேறி யானைப்போர் கண்டற்றால்”
என்னும் திருக்குறள் கூறும் உவமைப் பொருள்

Correct Answer: D [தன்கையில் பொருள் கொண்டு ஒரு செயலைச் செய்வது]

Notes:

‘குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை’ (குறள் 758).

39.  
‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல’
- உவமை கூறும் பொருளைக் கண்டறிக.

Correct Answer: C [பொறுத்துக் கொள்ளுதல்]

Notes:

‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை’ (குறள் 151).

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0