வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
உவமைத் தொடர்கள் உணர்த்தும் பொருள்களைப் பொருத்துக
(a) குன்றிலிட்ட விளக்குபோல – 1. கடமை தவறுதல்
(b) வேலியே பயிரை மேய்ந்தது போல – 2. அறியாமை
(c) உடலும் உயிரும் போல – 3. பரவிய புகழ்
(d) கிணற்றுத் தவளை போல – 4. மனமொன்றிய துணை

Correct Answer: B [3 1 4 2]

Notes:

குன்றிலிட்ட விளக்கு போல – பரவிய புகழ்; வேலியே பயிரை மேய்ந்தது போல – கடமை தவறுதல்; உடலும் உயிரும் போல – மனமொன்றிய துணை; கிணற்றுத் தவளை போல – அறியாமை.

2.  
உவமைகளால் விளக்கப் பெறும் பொருள்களுள் – பொருந்தாதது தேர்க

Correct Answer: A [விழலுக்கு இறைத்த நீர்போல – பயனுள்ள செயல்]

Notes:

விழலுக்கு இறைத்த நீர் போல என்பது பயனற்ற செயலைக் குறிக்கும்; ‘பயனுள்ள செயல்’ என்பது பொருந்தாது.

3.  
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக.
எலியும் பூனையும் போல

Correct Answer: C [பகைமை]

Notes:

எலியும் பூனையும் ஒன்றையொன்று கண்டால் பகைமை கொள்ளும் இயல்புடையவை.

4.  
கம்பி நீட்டுதல் எனும் உவமை கூறும் பொருள் எதுவெனக் கண்டறிக

Correct Answer: C [விரைந்து வெளியேறுதல்]

Notes:

கம்பி நீட்டுதல் என்பது ஒருவர் யாருக்கும் தெரியாமல் விரைந்து வெளியேறிவிடுவதைக் குறிக்கும் மரபுத் தொடர்.

5.  
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க.
ஆகாயத் தாமரை

Correct Answer: D [இல்லாத ஒன்று]

Notes:

ஆகாயத்தில் தாமரை பூப்பதில்லை. எனவே ‘ஆகாயத் தாமரை’ என்பது உலகில் இல்லாத ஒன்றைக் குறிக்கும்.

6.  
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.
அவலை நினைத்து உரலை இடித்தல்

Correct Answer: B [எண்ணமும் செயலும் ஒத்துவராமை]

Notes:

அவல் இடிக்க நினைத்தவன் வெறும் உரலை இடிப்பது போல, மனத்தில் எண்ணுவது ஒன்றும் செய்வது வேறொன்றுமாக இருப்பதை இது உணர்த்தும்.

7.  
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு :
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல

Correct Answer: A [எதிர்பாராத நல்வாய்ப்பு]

Notes:

பழம் நழுவிப் பாலில் விழுந்தால் சுவை கூடும்; அதுபோல எதிர்பாராமல் கிடைக்கும் நல்ல வாய்ப்பை இவ்வுவமை குறிக்கும்.

8.  
‘யானை புக்க புலம் போல’
– உவமை கூறும் பொருளைக் கண்டறிக.

Correct Answer: B [வீணாக்குவது]

Notes:

யானை புகுந்த விளைநிலத்தில் அது உண்பதைவிட மிதித்து அழிப்பதே மிகுதி.

9.  
உவமையின் பொருளறிந்து சரியான தொடரை எழுதுக.
உடலும் உயிரும் போல _____

Correct Answer: B [இணைபிரியாமை]

Notes:

உடலும் உயிரும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து இயங்க இயலாது.

10.  
‘நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல’ என்ற உவமைக்கு ஏற்ற பொருள் தருக.

Correct Answer: C [ஒற்றுமையின்மை]

Notes:

மூட்டையிலிருந்து கொட்டிய நெல்லிக்காய்கள் ஒன்றோடொன்று சேராமல் நாலாபுறமும் சிதறி ஓடும்.

11.  
மடைதிறந்த வெள்ளம் போல் – உவமையின் பொருளை எழுதுக.

Correct Answer: B [தடையின்றி மிகுதியாக]

Notes:

மடை திறந்தவுடன் வெள்ளம் தடையின்றி மிகுதியாகப் பாய்ந்தோடும்.

12.  
கொடிகட்டிப் பறத்தல் எனும் உவமை கூறும் பொருளைக் கண்டறிக.

Correct Answer: C [புகழ்பெற்று விளங்குதல்]

Notes:

கொடி உயரத்தில் பறந்து எல்லோர் கண்ணிலும் படுவது போல, ஒருவர் ஒரு துறையில் புகழ்பெற்று விளங்குவதைக் ‘கொடிகட்டிப் பறத்தல்’ குறிக்கும்.

13.  
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு
மழை முகம் காணாப் பயிர் போல

Correct Answer: D [வாடியிருத்தல்]

Notes:

மழையைக் காணாத பயிர் நீரின்றி வாடிப்போகும்.

14.  
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுது
வேலியே பயிரை மேய்ந்தது போல

Correct Answer: C [கடமை தவறுதல்]

Notes:

பயிரைக் காக்க வேண்டிய வேலியே பயிரை மேய்வது போல, காக்க வேண்டியவரே கேடு செய்வதை – அதாவது கடமை தவறுதலை – இவ்வுவமை குறிக்கும்.

15.  
பின்வரும் மரபுத் தொடரைப் பொருளோடு பொருத்துக.
‘கல்லில் நார் உரித்தல்’

Correct Answer: B [இயலாத செயல்]

Notes:

கல்லிலிருந்து நார் உரிக்க இயலாது.

16.  
‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்?

Correct Answer: A [வெளிப்படைத் தன்மை]

Notes:

உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனி எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்.

17.  
‘காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல’ என்ற உவமைக்குப் பொருத்தமான பொருள் யாது?

Correct Answer: C [தற்செயல் நிகழ்வு]

Notes:

காக்கை மரத்தில் அமர்ந்த நேரத்தில் தற்செயலாகப் பனம்பழம் விழுந்தது; காக்கை அதற்குக் காரணம் அல்ல.

18.  
‘தாமரை இலை நீர் போல’ – உவமை கூறும் பொருள் யாதெனக் கண்டறிக.

Correct Answer: B [பட்டும் படாமலும் இருத்தல்]

Notes:

தாமரை இலையில் நீர் இருந்தாலும் அதில் ஒட்டுவதில்லை.

19.  
பேரறிவாளன் திரு போல எனும் உவமை கூறும் பொருள் எதுவெனக் கண்டறிக.

Correct Answer: A [பலருக்குப் பயன்படும்]

Notes:

‘ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு’ – திருக்குறள்.

20.  
சரியான இணையைக் கண்டறிக :

Correct Answer: A [இலவு காத்த கிளிபோல – ஏமாற்றம்]

Notes:

இலவம் பஞ்சுக் காய் பழுக்கும் எனக் காத்திருந்த கிளி, அது வெடித்துப் பஞ்சாகப் பறந்ததால் ஏமாந்தது.

21.  
அவசரக் குடுக்கை என்ற உவமையின் பொருளை எழுதுக.

Correct Answer: C [எண்ணிச் செயல்படாமை]

Notes:

‘அவசரக் குடுக்கை’ என்பது எதையும் ஆராயாமல் அவசரப்பட்டுச் செய்பவரைக் குறிக்கும்.

22.  
‘பசுமரத்து ஆணி போல’ என்ற உவமைக்குப் பொருத்தமான பொருள் யாது?

Correct Answer: D [எளிதில் மனத்தில் பதிதல்]

Notes:

பசுமையான (இளைய) மரத்தில் ஆணி எளிதில் இறங்கி உறுதியாகப் பதியும்.

23.  
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
‘விழலுக்கு இறைத்த நீர் போல’ – உவமை கூறும் பொருள் தெளிக.

Correct Answer: A [பயனற்ற செயல்]

Notes:

விழல் என்பது பயனற்ற ஒருவகைப் புல்.

24.  
“கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?” - இப்பழமொழி உணர்த்தும் பொருளைத் தேர்க.

Correct Answer: B [பாவச் செயலுக்குப் பரிகாரம் இல்லை]

Notes:

காக்கை கங்கையில் மூழ்கினாலும் அன்னமாக மாறாது.

25.  
‘கிணற்றுத் தவளை போல’ – உவமை கூறும் பொருள் தெளிக.

Correct Answer: C [உலக அறிவின்மை]

Notes:

கிணற்றுக்குள் வாழும் தவளை அக்கிணற்றையே உலகம் என நினைக்கும்.

26.  
துஞ்சுபுலி இடறிய சிதடன் போல......
உவமை கூறும் பொருள் எதுவெனக் கண்டறிக.

Correct Answer: C [அறியாமை]

Notes:

சிதடன் என்பதற்குக் குருடன் என்று பொருள்.

27.  
‘சுடச்சுடரும் பொன்போல்’ எனும் உவமை கூறும் பொருளைக் கண்டறிக.

Correct Answer: D [ஞானம் வளரும்]

Notes:

‘சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு’ – திருக்குறள் (தவம்).

28.  
பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
“உப்பிட்டவரை உள்ளளவும் நினை” -
பழமொழி கூறும் பொருள் தெளிக.

Correct Answer: B [நன்றி மறவாமை]

Notes:

தனக்கு உணவளித்து உதவியவரை வாழ்நாள் முழுவதும் நினைக்க வேண்டும் என்பது இப்பழமொழியின் பொருள்.

29.  
“அத்தி பூத்தது போல” – உவமை கூறும் பொருள் தெளிக.

Correct Answer: B [மிக அரிதாக]

Notes:

அத்தி மரத்தின் பூ வெளியே கண்ணுக்குத் தெரிவதில்லை.

30.  
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக.
‘எடுப்பார் கைப்பிள்ளை’

Correct Answer: B [யார் எதைச் சொன்னாலும் கேட்பது]

Notes:

எடுப்பவர் யாராயினும் கைப்பிள்ளை அவரிடம் செல்லும்.

31.  
‘கானல் நீர்’ எனும் உவமை தரும் பொருள் எதுவெனக் கண்டறிக

Correct Answer: B [இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது]

Notes:

வெயில் நேரத்தில் தொலைவில் நீர் இருப்பது போலத் தோன்றும்; அருகில் சென்றால் இருக்காது.

32.  
உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
‘கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல’ – உவமை கூறும் பொருள் தெளிக.

Correct Answer: B [எதிர்பாரா நிகழ்வு]

Notes:

நீருக்காகக் கிணறு வெட்டியபோது பூதம் கிளம்பியது போல, ஒரு செயலைச் செய்யும்போது எதிர்பாராத சிக்கல் தோன்றுவதை இவ்வுவமை குறிக்கும்.

33.  
இரட்டைக்கிளவி போல் .... உவமை கூறும் பொருள் யாதெனக் கண்டறிக.

Correct Answer: D [ஒற்றுமை]

Notes:

இரட்டைக்கிளவி பிரித்தால் பொருள் தராது; இரு சொற்களும் இணைந்தே வரும் (எ.கா.

34.  
பொருத்துக.
(a) ஊமை கண்ட கனவு போல – 1. நட்பு
(b) உடுக்கை இழந்தவன் கை போல – 2. கொடை
(c) வரையா மரபின் மாரி போல – 3. அடக்கம்
(d) ஒருமையுள் ஆமை போல – 4. தவிப்பு

Correct Answer: C [4 1 2 3]

Notes:

ஊமை கண்ட கனவு – சொல்ல இயலாத தவிப்பு.

35.  
உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக.
விழலுக்கு இறைத்த நீர் போல

Correct Answer: B [பயனற்ற செயல்]

Notes:

விழல் என்பது பயன்தராத ஒருவகைப் புல்.

36.  
“முதலைக் கண்ணீர்” – இம்மரபுத்தொடர் உணர்த்தும் பொருள் தெளிக.

Correct Answer: B [பொய்யழுகை]

Notes:

முதலை இரையை உண்ணும்போது கண்ணீர் வடிப்பதாகக் கூறப்படுவதால், ‘முதலைக் கண்ணீர்’ என்பது உள்ளத்தில் வருத்தம் இல்லாமல் வெளியே காட்டும் பொய்யழுகையைக் குறிக்கும்.

37.  
கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல – உவமை கூறும் பொருள் தெளிக.

Correct Answer: A [எதிர்பாரா நிகழ்வு]

Notes:

கிணறு வெட்டும்போது நீரை எதிர்பார்ப்போம்; பூதம் கிளம்பினால் அது எதிர்பாராதது.

38.  
“வள்ளுவர் பெரும்புகழை உடையவர்” – என்ற தொடர் எவ்வகைப் பொருளில் வரும்?

Correct Answer: A [உடைமை]

Notes:

‘பெரும்புகழை உடையவர்’ – இதில் ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு உடைமைப் பொருளில் வந்துள்ளது.

39.  
‘நிலவும் வானும் போல’ - இவ்வுவமை கூறும் பொருள் விளக்கம் :

Correct Answer: D [ஒற்றுமை]

Notes:

நிலவும் வானும் எப்போதும் இணைந்தே காணப்படுவதால், ‘நிலவும் வானும் போல’ என்ற உவமை ஒற்றுமையைக் குறிக்கும்.

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0