வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
மரபுத் தொடரின் பொருளைக் கண்டறிக.
கொடி கட்டிப் பறத்தல்
கொடி கட்டிப் பறத்தல்
Correct Answer: B [புகழ்பெற்று விளங்குதல்]
Notes:
‘கொடி கட்டிப் பறத்தல்’ என்னும் மரபுத்தொடர், ஒருவர் தம் துறையில் புகழ்பெற்றுச் சிறந்து விளங்குவதைக் குறிக்கும்.
2.
‘இடி விழுந்த மரம் போல’ – இவ்வுவமை கூறும் பொருள் விளக்கம்.
Correct Answer: A [துன்பம்]
Notes:
இடி விழுந்த மரம் நிலைகுலைந்து அழிவது போல, பெருந்துன்பத்தால் ஒருவர் நிலைகுலைவதை இவ்வுவமை குறிக்கும்.
3.
உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
‘தாமரை இலை நீர்போல’
‘தாமரை இலை நீர்போல’
Correct Answer: B [பற்றுதல் இன்றி]
Notes:
தாமரை இலையில் நீர் ஒட்டாமல் இருப்பது போல, உலகில் வாழ்ந்தாலும் எதன்மீதும் பற்று இல்லாமல் வாழ்வதை இவ்வுவமை குறிக்கும்.
4.
உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக.
கல்லில் நார் உரித்தல்
கல்லில் நார் உரித்தல்
Correct Answer: C [இயலாத செயல்]
Notes:
கல்லிலிருந்து நார் உரிக்க முடியாது; எனவே ‘கல்லில் நார் உரித்தல்’ என்பது இயலாத செயலைக் குறிக்கும்.
5.
தவறான உவமை இணையைத் தேர்ந்தெடுக்க
Correct Answer: C [கீரியும் பாம்பும் போல – ஒற்றுமை]
Notes:
கீரியும் பாம்பும் ஒன்றையொன்று எப்போதும் பகைக்கும்.
6.
உவமைக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற்போல
நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற்போல
Correct Answer: C [ஒற்றுமையின்மை]
Notes:
மூட்டையிலிருந்து கொட்டிய நெல்லிக்காய்கள் ஒன்றுசேராமல் பல திசைகளிலும் சிதறி ஓடும்.
7.
உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக :
‘மழைமுகம் காணாப் பயிர் போல’
‘மழைமுகம் காணாப் பயிர் போல’
Correct Answer: A [ஏக்கம்]
Notes:
மழையை எதிர்பார்த்து வாடி நிற்கும் பயிர் போல, ஒன்றை நீண்ட நாள் காணாமல் ஏங்கும் நிலையை இவ்வுவமை குறிக்கும்.
8.
“உயிரும் உடலும் போல” உவமை கூறும் பொருள் தெளிக.
Correct Answer: A [ஒற்றுமை]
Notes:
உயிரும் உடலும் பிரிக்க முடியாதபடி இணைந்திருப்பதால், ‘உயிரும் உடலும் போல’ என்ற உவமை ஒற்றுமையைக் குறிக்கும்.
9.
உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்க.
கண்ணை இமை காப்பது போல
கண்ணை இமை காப்பது போல
Correct Answer: C [பாதுகாப்பு]
Notes:
இமை கண்ணைத் தூசி முதலியவற்றிலிருந்து எப்போதும் காப்பது போல, ஒருவரை அக்கறையோடு காப்பதை இவ்வுவமை குறிக்கும்.
10.
மரபுத் தொடரின் பொருளை அறிக.
பச்சைப்பொய்
பச்சைப்பொய்
Correct Answer: D [முற்றிலும் பொய்]
Notes:
‘பச்சைப்பொய்’ என்னும் மரபுத்தொடர், சிறிதும் உண்மை கலவாத முழுமையான பொய்யைக் குறிக்கும்.
11.
திருவள்ளுவரின் புகழை _____ உலகமே அறிந்துள்ளது.
Correct Answer: B [உள்ளங்கை நெல்லிக்கனி போல]
Notes:
உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனி அனைவருக்கும் தெளிவாகத் தெரிவது போல, வள்ளுவர் புகழ் வெளிப்படையாக உலகம் அறிந்தது.
12.
“குன்றேறி யானைப்போர் கண்டற்றால்” – உவமை கூறும் பொருள் தெளிக.
Correct Answer: B [பாதுகாப்பு]
Notes:
‘குன்றேறி யானைப்போர் கண்டற்றால்’ (குறள் 758) – மலைமேல் நின்று யானைப்போரைக் காண்பவருக்கு இடர் இல்லை.
13.
‘அத்தி பூத்தாற்போல’ - உவமை கூறும் பொருள் தெளிக
Correct Answer: B [அரிதாக]
Notes:
அத்தி மரத்தின் பூ வெளியே தெரிவது அரிது.
14.
‘கடலில் கரைத்த பெருங்காயம்’ – இவ்வுவமை கூறும் பொருள் விளக்கம்
Correct Answer: D [பயனின்மை]
Notes:
கடல் நீரில் கரைத்த சிறிதளவு பெருங்காயம் எந்த மணத்தையும் தராது.
15.
‘இலவு காத்த கிளி போல’ என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்?
Correct Answer: A [ஏமாற்றம்]
Notes:
இலவங்காய் பழமாகும் என்று காத்திருந்த கிளி, காய் வெடித்துப் பஞ்சு பறந்ததால் ஏமாந்தது.
16.
‘அவசரக்குடுக்கை’ – சொல்லின் பொருள் தருக.
Correct Answer: C [எண்ணிச் செயல்படாமை]
Notes:
‘அவசரக்குடுக்கை’ என்பது எதையும் ஆராயாமல், எண்ணிப் பாராமல் அவசரப்பட்டுச் செயல்படுபவரைக் குறிக்கும்.
17.
பின்வரும் மரபுத்தொடரின் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
எடுப்பார் கைப்பிள்ளை
எடுப்பார் கைப்பிள்ளை
Correct Answer: C [யார் எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவர்]
Notes:
‘எடுப்பார் கைப்பிள்ளை’ – யார் எடுத்தாலும் அவர் கையில் இருக்கும் குழந்தை போல, யார் எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவரைக் குறிக்கும் மரபுத்தொடர்.
18.
பழமொழியின் சிறப்பு _____ சொல்வது
Correct Answer: B [சுருங்கச்]
Notes:
குறைந்த சொற்களில் நிறைந்த பொருளைச் சுருக்கமாகக் கூறுவதே பழமொழியின் சிறப்பு.
19.
பழமொழியில் விடுபட்ட சொற்களை நிறைவு செய்க.
தண்ணீர் _____ ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
தண்ணீர் _____ ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
Correct Answer: D [வெந்நீர்]
Notes:
‘தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்’ – சூடாகிய நீரும் நெருப்பை அணைக்கும் தன்மையை இழப்பதில்லை.
20.
“Crying child will get milk” – இதற்கு இணையான தமிழ்ப் பழமொழியை எழுதுக.
Correct Answer: B [அழுத பிள்ளை பால் குடிக்கும்]
Notes:
‘Crying child will get milk’ என்பதற்கு இணையான தமிழ்ப் பழமொழி ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’.
21.
கீழ்க்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக.
Correct Answer: C [நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.]
Notes:
சரியான வடிவம்: ‘நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.’ நாம் எண்ணுவது ஒன்றாக இருக்க, நடப்பது வேறாக அமையும் என்பது பொருள்.
22.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”
– இப்பழமொழி அமைந்த சரியான தொடரைத் தேர்ந்தெடு.
– இப்பழமொழி அமைந்த சரியான தொடரைத் தேர்ந்தெடு.
Correct Answer: A [நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து நோயற்ற வாழ்வு வாழ்வோம்]
Notes:
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்னும் பழமொழி முழுமையாகவும் பொருள் சிதையாமலும் அமைந்த தொடர் A மட்டுமே.
23.
‘கூடா நட்பு கேடாய் முடியும்’ – இப்பழமொழியால் நாம் அறிவனவற்றைத் தேர்க
கூற்று 1 : தீயவரோடு கொண்ட நட்பு துன்பத்தில் முடியும்
கூற்று 2 : நட்பு நமக்குக் கேடயம் போல் பாதுகாப்பு தரும்.
கூற்று 1 : தீயவரோடு கொண்ட நட்பு துன்பத்தில் முடியும்
கூற்று 2 : நட்பு நமக்குக் கேடயம் போல் பாதுகாப்பு தரும்.
Correct Answer: A [கூற்று 1 சரி]
Notes:
‘கூடா நட்பு கேடாய் முடியும்’ – தீயவரோடு கொண்ட நட்பு துன்பத்தில் முடியும் என்பதே பொருள்.
24.
ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப் பழமொழியில் சரியானதைக் கண்டறிக
Art is long but life is short
Art is long but life is short
Correct Answer: B [கல்வி கரையில, கற்பவர் நாள் சில]
Notes:
‘Art is long but life is short’ என்பதற்கு இணையானது ‘கல்வி கரையில, கற்பவர் நாள் சில’.
25.
“மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்” – இப்பழமொழியின் பொருள்
Correct Answer: D [தொடர்ந்து முயன்றால் தடைகளைத் தாண்டலாம்]
Notes:
மெல்லப் பாயும் நீர் தொடர்ந்து பாய்வதால் கல்லையும் தேய்த்துவிடும்.
26.
பழமொழியை நிறைவு செய்க.
குடல் கூழுக்கு அழுவுதாம் _____
குடல் கூழுக்கு அழுவுதாம் _____
Correct Answer: B [கொண்டை பூவுக்கு அழுவுதாம்]
Notes:
‘குடல் கூழுக்கு அழுவுதாம், கொண்டை பூவுக்கு அழுவுதாம்’ – அடிப்படைத் தேவையே நிறைவேறாதபோது ஆடம்பரத்தை நாடுவதைக் குறிக்கும்.
27.
ஆகுபெயர் பயன்படுத்தப்படாத பழமொழியைத் தேர்வு செய்க.
Correct Answer: D [நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை]
Notes:
‘நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை’ என்பதில் ஆகுபெயர் இல்லை.
28.
பழமொழியினை நிறைவு செய்க.
மரத்தை இலை காக்கும்
மரத்தை இலை காக்கும்
Correct Answer: C [மானத்தைப் பணம் காக்கும்]
Notes:
‘மரத்தை இலை காக்கும்; மானத்தைப் பணம் காக்கும்’ – இலைகள் மரத்தைக் காப்பது போல், பொருள் ஒருவரின் மானத்தைக் காக்கும் என்பது பொருள்.
29.
பட்டியல் I – ல் உள்ள ஆங்கிலப் பழமொழிக்குப் பொருத்தமான பட்டியல் II – ல் பழமொழியோடு பொருத்திக் குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்க.
(a) First deserve, then desire – 1. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(b) Tit for tat – 2. செய்யும் தொழிலே தெய்வம்
(c) Work is worship – 3. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
(d) Little strokes fell great oaks – 4. பழிக்குப் பழி
(a) First deserve, then desire – 1. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(b) Tit for tat – 2. செய்யும் தொழிலே தெய்வம்
(c) Work is worship – 3. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
(d) Little strokes fell great oaks – 4. பழிக்குப் பழி
Correct Answer: B [3 4 2 1]
Notes:
First deserve, then desire – முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?
30.
‘குந்தித் தின்றால் குன்றும் கரையும்’ என்னும் பழமொழி உணர்த்தும் பொருளை எழுது.
Correct Answer: B [உழைக்காதவன் செல்வம் அழியும்]
Notes:
உழைக்காமல் உட்கார்ந்தே உண்டால், குன்றளவு செல்வமும் கரைந்துவிடும் என்பது பொருள்.
31.
ஏழை – பணக்காரன் வேறுபாடு அறிய உதவும் பழமொழி எது?
Correct Answer: A [இருப்பவனுக்குப் புளியேப்பம், இல்லாதவனுக்குப் பசியேப்பம்]
Notes:
‘இருப்பவனுக்குப் புளியேப்பம், இல்லாதவனுக்குப் பசியேப்பம்’ – செல்வர் மிகுதியாக உண்டு புளியேப்பம் விட, ஏழை உணவின்றிப் பசியேப்பம் விடுவதை ஒப்பிட்டு வேறுபாட்டைக் காட்டுகிறது.
32.
சரியான சொல்லை இட்டு நிரப்பிப் பழமொழியை நிறைவு செய்க.
கந்தை _____ கசக்கிக் கட்டு; கூழ் _____ குளித்துக் குடி.
கந்தை _____ கசக்கிக் கட்டு; கூழ் _____ குளித்துக் குடி.
Correct Answer: A [கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி]
Notes:
‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி’ – ஏழ்மையிலும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பொருள்.
33.
பொருத்தமான பழமொழியைக் கண்டறிக.
கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா
கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா
Correct Answer: C [ஆற்றுணா வேண்டுவது இல்]
Notes:
‘ஆற்றுணா வேண்டுவது இல்’ (பழமொழி நானூறு) – கற்றவர் எங்குச் சென்றாலும் சிறப்புப் பெறுவதால் வழிக்கு உணவு (ஆற்றுணா = கட்டுச்சோறு) தேவையில்லை.
34.
“Charity begins at home” – இதற்கு இணையான தமிழ்ப் பழமொழி
Correct Answer: C [தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்]
Notes:
‘Charity begins at home’ என்பதற்கு இணை ‘தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்’.
35.
“நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியில் ‘இரண்டு’ எதனைக் குறிக்கின்றது?
Correct Answer: B [திருக்குறள்]
Notes:
‘நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி’ – நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது இரண்டடிக் குறட்பாக்களால் ஆன திருக்குறளையும் குறிக்கும் (ஆகுபெயர்).
36.
பொருத்தமான பழமொழியைக் கண்டறி.
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்
Correct Answer: C [பாம்பு அறியும் பாம்பின் கால்]
Notes:
‘பாம்பு அறியும் பாம்பின் கால்’ – பாம்பின் காலைப் பாம்பே அறியும்; அதுபோல் கற்றவர் பெருமையைக் கற்றவரே அறிந்து விரும்புவர்.
37.
“புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
புலம் மிக்கவர்க்கே புலனாம்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Correct Answer: D [பழமொழி நானூறு]
Notes:
‘புலம் மிக்கவரைப் புலமை தெரிதல் புலம் மிக்கவர்க்கே புலனாம்’ என்பது பழமொழி நானூறு பாடல்; இது ‘பாம்பு அறியும் பாம்பின் கால்’ என்று முடிகிறது.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
