வினாடி வினா
← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
112 மீ நீளமுள்ள ஒரு சுவரை 20 ஆட்கள் 6 நாட்களில் கட்டி முடித்தால், இதே மாதிரியான 25 ஆட்கள் 3 நாட்களில் எவ்வளவு நீளச் சுவரை கட்டி முடிப்பர்?
Correct Answer: A [70 மீ]
2.
6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள், நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்?
Correct Answer: A [20 நாட்கள்]
3.
2400 ச.மீ நிலத்தை 12 வேலையாட்கள் 10 நாட்களில் உழுது முடிப்பர். 5400 ச.மீ நிலத்தை 18 நாட்களில் உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை?
Correct Answer: B [15]
4.
A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
Correct Answer: D [12 நாட்கள்]
5.
A ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். B அதே வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பார். A, B இருவரும் சேர்ந்து அவ்வேலையை 3 நாட்கள் செய்தனர். பின் A சென்று விட்டார். மீதி வேலையை B எத்தனை நாட்களில் முடிப்பார்.
Correct Answer: A [12 நாட்கள்]
6.
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள ஆட்கள் ஒரு வேலையை முடிக்க 40 நாட்கள் ஆகிறது. 45 பேர்கள் அதிகமாக இருந்தால் அதனை முடிக்க 25 நாட்கள் ஆகும். முன்னர் அமர்த்திய ஆட்கள் எண்ணிக்கை
Correct Answer: D [75]
7.
12 தச்சர்கள் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து சில மரவேலைகளை 18 நாட்களில் செய்து முடிக்கின்றனர். இதே வேலையை 15 தச்சர்கள் நாளொன்றுக்கு 6 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
Correct Answer: A [24]
8.
384 ஐ எந்த எண்ணால் வகுத்தால் அவ்வெண் முழு வர்க்கம் ஆகும்?
Correct Answer: A [6]
9.
200 உடன் எந்த எண்ணைப் பெருக்கினால் அவ்வெண் முழு வர்க்கம் ஆகும்?
Correct Answer: A [2]
10.
5929 ன் வர்க்க மூலம்.
Correct Answer: B [77]
11.
3250 என்ற எண்ணிலிருந்து எந்தச் சிறிய எண்ணைக் கழிக்க முழு வர்க்கம் ஆகும்?
Correct Answer: A [1]
12.
108 ஐ எந்த சிறிய எண்ணால் பெருக்க முழுக் கனமாகும்?
Correct Answer: A [2]
13.
100 என்ற எண்ணின் கனத்தில் உள்ள பூச்சியங்களின் எண்ணிக்கை.
Correct Answer: D [6]
14.
கீழ்க்கண்ட எண்களில் முழு கனம் அற்ற எண் எது?
Correct Answer: D [100]
15.
2⁻⁴ ன் பெருக்கல் தலைகீழி.
Correct Answer: C [2⁴]
16.
( - 2)⁻² = ?
Correct Answer: B [¼]
17.
2ˣ = 16 எனில் 2ˣ⁺² ன் மதிப்பு
Correct Answer: A [64]
18.
P⁰ = ?
Correct Answer: B [1]
19.
103³ × 0 க்கு சமமானது.
Correct Answer: C [0]
20.
0.13 P² = 13 எனில் Pயின் மதிப்பு யாது?
Correct Answer: C [10]
21.
0.027 ன் கனமூலம் காண்.
Correct Answer: A [0.3]
22.
(1.03)² × 700 = ?
Correct Answer: B [742.63]
23.
அசைவற்ற நீரில் படகின் வேகம் 2 கி.மீ/மணி; மேல்நோக்கிச் செல்லும் போது வேகம் 1 கி.மீ/மணி எனில் ஆற்றின் வேகம் என்ன?
Correct Answer: C [1 கி.மீ/மணி]
24.
ஒரு படகு கீழ்நோக்கிச் செல்லும் போது அதன் வேகம் 15 கி.மீ/மணி. ஆற்றின் வேகம் 1.5 கி.மீ/மணி எனில் படகு மேல்நோக்கிச் செல்லும் போது அதன் வேகம் என்ன?
Correct Answer: C [12 கி.மீ/மணி]
25.
ஒரு படகு மேல்நோக்கிச் செல்லும் போது 40 கி.மீ. தூரத்தை 8 மணி நேரத்திலும், கீழ்நோக்கிச் செல்லும் போது 36 கி.மீ. தூரத்தை 6 மணி நேரத்திலும் செல்கிறது எனில், அசைவற்ற நீரில் படகின் வேகம் என்ன?
Correct Answer: C [5.5 கி.மீ/மணி]
26.
ஒருவன் 16 கி.மீ. தூரத்தை மேல்நோக்கியும் 28 கி.மீ. தூரத்தை கீழ்நோக்கியும் செல்கிறான். ஒவ்வொன்றுக்கும் 5 மணி நேரம் ஆகிறது எனில் ஆற்றுநீரின் வேகம் என்ன?
Correct Answer: B [1.2 கி.மீ/மணி]
27.
ஒரு குழாய் ஒரு தொட்டியை நிரப்ப 3 மணி நேரமும், மற்றொரு குழாய் அதைக் காலி செய்ய 4 மணி நேரமும் எடுத்துக் கொள்ளும் எனில், இரண்டும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டால் தொட்டி நிரம்ப ஆகும் நேரம் எவ்வளவு?
Correct Answer: D [12 மணி]
28.
ஒரு தொட்டி 8 மணிநேரத்தில் நிரம்பும். அடிப்பகுதி கசிவினால் தொட்டி நிரம்ப இரண்டு மணிநேரம் அதிகமாகும். தொட்டி முழுவதும் நிரம்பியிருக்கும் பொழுது கசிவின் மூலம் எவ்வளவு நேரத்தில் தொட்டி காலியாகும்?
Correct Answer: D [40 மணி]
29.
குழாய்கள் A மற்றும் B முறையே ஒரு தொட்டியை நிரப்ப எடுத்துக்கொள்ளும் நேரம் 20, 30 மணி நேரம் ஆகும். இரண்டும் சேர்ந்து எவ்வளவு நேரத்தில் நிரப்பும்?
Correct Answer: B [12 மணி]
30.
A மற்றும் B குழாய்கள் முறையே ஒரு தொட்டியை நிரப்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 12நிமிடம் & 15நிமிடங்கள். இரு குழாய்களும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டு, 3 நிமிடத்திற்கு பிறகு A குழாயை மட்டும் அடைத்தால் B குழாய் அத்தொட்டியை நிரப்ப எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு?
Correct Answer: D [8 min. 15 sec.]
31.
A, B, C மூன்று குழாய்களும் தொட்டியை நிரப்ப எடுத்துக்கொள்ளும் நேரம் முறையே 5,10 மற்றும் 30 நிமிடங்கள் எனில் மூன்றும் ஒரே நேரத்தில் திறந்துவிடப்பட்டால் தொட்டி நிரம்ப ஆகும் காலம் எவ்வளவு?
Correct Answer: C [3 நிமிடம்]
32.
A மற்றும் B குழாய் ஒரு தொட்டியை நிரப்ப எடுத்துக் கொள்ளும் காலம் முறையே 36 நிமிடம் மற்றும் 45 நிமிடங்கள். C என்ற குழாய் 30 நிமிடங்களில் தொட்டியைக் காலி செய்யும். முதலில் A மற்றும் B திறக்கப்படுகிறது. பின்பு 7 நிமிடங்கள் கழித்து C குழாய் திறக்கப்படுகிறது எனில் எவ்வளவு நேரத்தில் தொட்டி நிரம்பும்?
Correct Answer: A [46 நிமிடம்]
33.
கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவாக இருக்க முடியும்?
Correct Answer: D [²/₃]
34.
இயலா நிகழ்ச்சியின் நிகழ்தகவு
Correct Answer: B [0]
35.
P(E’) =
Correct Answer: A [1 – P(E)]
36.
ஒரு குறிப்பிட்ட நாளில் மழை வருவதற்கான நிகழ்தகவு 0.76. அக்குறிப்பிட்ட நாளில் மழை வராமல் இருப்பதற்கான நிகழ்தகவு யாது?
Correct Answer: B [0.24]
37.
ஒரு பையில் 5 சிவப்பு மற்றும் சில நீல நிறப் பந்துகள் உள்ளன. அப்பையிலிருந்து ஒரு நீல நிறப் பந்தை எடுப்பதற்கான நிகழ்தகவு, ஒரு சிவப்பு நிறப் பந்தை எடுப்பதற்கான நிகழ்தகவின் மூன்று மடங்கு எனில், அப்பையிலுள்ள நீல நிறப் பந்துகளின் எண்ணிக்கையைக் காண்க.
Correct Answer: C [15]
38.
ஒரு உற்பத்தியாளர் உற்பத்தி செய்த செல்லிடப்பேசிகளிலிருந்து (Cellphone) 1000 செல்லிடப்பேசிகளை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுத்து சோதித்துப் பார்த்ததில் 25 செல்லிடப்பேசிகள் குறைபாடுடையன என்று கண்டுபிடிக்கப்பட்டது எனில், சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் ஒரு செல்லிடப்பேசி குறைபாடுடையதாக இருக்க நிகழ்தகவு என்ன?
Correct Answer: A [¹/₄₀]
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 6
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 5
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – திறனறிவு – தொகுப்பு 1
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
