வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
உச்சநீதிமன்றம் முதன் முதலாக எந்த வழக்கில் அரசியலமைப்பு சட்டத்தின் மூன்றாவது பகுதியை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு உண்டு என்று தீர்ப்பளித்தது?

Correct Answer: A [சங்கிரி பிரசாத் வழக்கு]

2.  
கீழ்க்கண்ட எந்த வழக்கில் அரசியல் அமைப்பின் மூன்றாவது பகுதியை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது?

Correct Answer: C [கோலக்நாத் வழக்கு]

3.  
1971-ஆம் ஆண்டு எந்த சட்டத் திருத்தத்தின் வாயிலாக அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் சில அடிப்படை உரிமைகளை நீக்கம் செய்யும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது?

Correct Answer: C [24]

4.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. கேசவானந்த பாரதி வழக்கில் உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்றாமல் அடிப்படை உரிமைகளில் நாடாளுமன்றம் மாற்றம் செய்யலாம் என்று தீர்ப்பளித்தது
2. இந்த வழக்கில் அடிப்படை உரிமைகளும் வழிகாட்டு விதிகளும் சம முக்கியத்துவம் உடையவை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது

Correct Answer: A [1 மட்டும் சரி]

5.  
இந்திய குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய அடிப்படைஉரிமைகளில் தவறானது எது?

Correct Answer: C [பிரிவு 21]

6.  
இந்தியர்களுக்கு அடிப்படை உரிமைகள் வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர் யார்?

Correct Answer: C [பால கங்காதர திலகர்]

7.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சட்டத்தின் ஆட்சி என்னும் கோட்பாடு ஏ. வி. டைசியால் வழங்கப்பட்டது
2. சட்டம் அனைவருக்கும் சம பாதுகாப்பு அளிக்கும் என்பது இங்கிலாந்தின் கோட்பாடு ஆகும்

Correct Answer: A [1 மட்டும் சரி]

8.  
'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற கோட்பாடு எந்த நாட்டில் தோன்றியது?

Correct Answer: A [இங்கிலாந்து]

9.  
'அரசு, பாரத ரத்னா மற்றும் பத்ம விருதுகள் உள்ளிட்டவைகளை வழங்குவது தவறில்லை' என்று உச்ச நீதிமன்றம் எந்த வழக்கில் தீர்ப்பளித்தது?

Correct Answer: C [பாலாஜி ராகவன் வழக்கு]

10.  
அரசு என்பதன் பொருள் விளக்கம் எந்த சட்டப் பிரிவில் கூறப்பட்டுள்ளது?

Correct Answer: C [பிரிவு 12]

11.  
பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் இயற்றக்கூடிய சட்டம் அடிப்படை உரிமைகளுக்கு முரணாக இருந்தால் அது செல்லுபடியாகாது என்று எந்த சட்டப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது?

Correct Answer: A [பிரிவு 13]

12.  
பாராளுமன்றம் எதன் மூலம் அடிப்படை உரிமைகளை குறைக்க முடியும்?

Correct Answer: C [அரசியலமைப்பு திருத்தச் சட்டம்]

13.  
இந்திய அரசியலமைப்பின் 19வது பிரிவு எத்தனை அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது?

Correct Answer: B [6]

14.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பிரிவு 32 உச்சநீதிமன்றத்தை அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராகவும் உத்தரவாதமாகவும் ஆக்குகிறது.
2. பிரிவு 236 உயர்நீதிமன்றத்தை அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராகவும் உத்தரவாதமாகவும் ஆக்குகிறது.

Correct Answer: A [1 மட்டும் சரி]

15.  
பின்வருவனவற்றில் எது/எவை தவறானவை?
1. அடிப்படை உரிமைகள் பாகுபாடு இல்லாமல் அனைத்து குடிமக்களுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.
2. இந்திய அரசியலமைப்பு முதலில் 7 அடிப்படை உரிமைகளை வழங்கியது .
3. அடிப்படை உரிமைகளின் நோக்கம் அரசியல் மக்களாட்சியை வளர்ப்பது.

Correct Answer: D [எதுவுமில்லை]

16.  
யாருடைய ஆட்சியின் போது அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து சொத்துரிமை நீக்கப்பட்டது?

Correct Answer: A [மொரார்ஜி தேசாய் அரசு]

17.  
பின்வருவனவற்றில் சரியானதை தேர்வு செய்க.

Correct Answer: C [கலாச்சார மற்றும் கல்வி உரிமைகள் (29–30)]

18.  
தவறாக பொருந்தியதைத் தேர்ந்தெடுக்கவும்.

Correct Answer: A [ஆவணக்கேட்பு பேராணை - மனுதாரர் சட்ட உதவியுடன் தனது பணியினை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.]

19.  
பிரிவு 34 பற்றி பின்வருவனவற்றில் எது தவறானது?

Correct Answer: D [இந்த வகையில் இயற்றப்படும் சட்டங்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி தீர்வுகாண முடியும்.]

20.  
தேசிய அவசரநிலையின் போது ----------- கீழ் தரப்பட்டுள்ள உரிமைகள் பிரிவு 358 படி பாராளுமன்றத்தில் தடை செய்ய படுகிறது

Correct Answer: B [பிரிவு 19]

21.  
எந்த வழக்கில் அரசியலமைப்பை அதன் அடிப்படை கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்காமல் திருத்துவதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது?

Correct Answer: D [கேசவானந்த பாரதி வழக்கு]

22.  
கீழ் நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களின் நடைமுறைகளை பின்வரும் எது ஆராய்கிறது?

Correct Answer: A [ஆவண கேட்பு நீதிப்பேராணை]

23.  
தனியுரிமைக்கான உரிமை ஒரு அடிப்படை உரிமை என்பது எந்த சரத்து?

Correct Answer: C [சரத்து 21]

24.  
தேசிய விருதுகள் எப்போது கொண்டுவரப்பட்டது?

Correct Answer: B [1954]

25.  
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு எந்த சரத்தின் கீழ் வருகிறது?

Correct Answer: D [சரத்து 16]

26.  
சங்கங்கள் அமைக்க உரிமை யாருக்கு உள்ளது?

Correct Answer: D [a & b]

27.  
கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க
1. தொழிற்சாலைகளில் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல் – 1. சட்டப்பிரிவு 27
2. எந்த ஒரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கு எதிரான சுதந்திரம்- 2. சட்டப் பிரிவு 24
3. மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கான உரிமை- 3. சட்டப்பிரிவு 28

Correct Answer: A [2 1 3]

28.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சமய வளர்ச்சிக்காக வரி விதிப்பது சட்டப்பிரிவு 26-ன்படி தடை செய்யப்பட்டுள்ளது
2. ஒரு குறிப்பிட்ட மதத்தின் வளர்ச்சிக்காக வரி செலுத்துமாறு எந்த ஒரு நபரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று சட்டப் பிரிவு 27 குறிப்பிடுகிறது

Correct Answer: B [2 மட்டும் சரி]

29.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சட்டப்பிரிவு 29, மொழியைப் பாதுகாக்கும் பொருட்டு போராட்டங்கள் நடத்த உரிமை அளிக்கிறது
2. இந்த சட்டப்பிரிவு கல்வி நிறுவனங்களில் சேர்க்கையின் போது மதம், ஜாதி, இனம், மொழி அடிப்படையில் அனுமதி மறுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறது

Correct Answer: C [இரண்டும் சரி]

30.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. ஆட்கொணர்வு நீதிப்பேராணை ஒருவர் சட்டவிரோதமாக கடத்தப்படும் போது அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்தல் ஆகும்
2. இந்த பேராணை அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனி நபருக்கு எதிராகவும் வழங்கப்படும்

Correct Answer: C [இரண்டும் சரி]

31.  
செயல் உறுத்தும் நீதிப் பேராணை தொடர்பான கீழ்காணும் கூற்றுகளில் எது தவறானது?

Correct Answer: D [இது தனிநபர், குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்கள் ஆகியோருக்கு எதிராகவும் வழங்கப்படும்]

32.  
“அரசு நெறிமுறை கோட்பாடுகள்” இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன?

Correct Answer: B [பகுதி IV]

33.  
அரசு நெறிமுறை கோட்பாடுகள் எதிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன?

Correct Answer: B [அயர்லாந்து அரசியலமைப்பு.]

34.  
அரசு நெறிமுறை கோட்பாடுகள் தொடர்பாக பின்வருவனவற்றில் எது உண்மையல்ல?

Correct Answer: A [இவை சட்ட ஒப்புதலைப் பெற்றவை.]

35.  
அரசு நெறிமுறை கோட்பாடுகள் தொடர்பாக பின்வருவனவற்றில் எது உண்மையல்ல?

Correct Answer: B [அரசு நெறிமுறை கோட்பாட்டின் 43வது பிரிவு தாராளவாத-அறிவுசார் கொள்கையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.]

36.  
அரசு நெறிமுறை கோட்பாடுகள் எதற்காக “அரசை” வழிநடத்துகின்றன?
1. மக்கள் நலன் மேம்பாட்டிற்காக ஒரு சமூக ஒழுங்கைப் பாதுகாக்க.
2. நீதித்துறையை நிர்வாகத்திலிருந்து பிரிக்க.
3. பொது சுகாதாரத்தை மேம்படுத்த.

Correct Answer: A [1, 2 மற்றும் 3.]

37.  
அரசியலமைப்பில் உள்ள மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகள் எந்த நீதிமன்றத்தாலும் நடைமுறைப்படுத்தப்பட முடியாதவை என்றாலும், அவை?

Correct Answer: A [அரசு ஆட்சியின் அடிப்படை.]

38.  
கூற்று (A):அரசு நெறிமுறை கோட்பாடுகள் எந்த நீதிமன்றத்தாலும் செயல்படுத்தப்பட முடியாதவை.
காரணம் (R):அரசின் (நாட்டின்) நிர்வாகத்தில் அரசு நெறிமுறை கோட்பாடுகள் அடிப்படையானவை.

Correct Answer: B [கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல]

39.  
"சட்ட சேவைகள் அதிகார சட்டம்" எந்த ஆண்டு பாராளுமன்றத்தின் சட்டத்தின் மூலம் 39A வின் விதிகளை அமல்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது?

Correct Answer: A [1987.]

40.  
பின்வரும் சட்டப்பிரிவுகளில் எது சுற்றுச்சூழலின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு மற்றும் காடுகள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாப்பது பற்றி கூறுகிறது?

Correct Answer: B [பிரிவு 48A.]

41.  
DPSPயின் பிரிவு 47 - "ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது அரசின் கடமை" என வகைப்படுத்தப்பட்டுள்ளது எந்த கொள்கை?

Correct Answer: C [சமதர்ம மற்றும் காந்திய கொள்கை.]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 3 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 2 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – அரசியல் அறிவியல் – தொகுப்பு 1 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 5 › TNPSC மாதிரித் தேர்வு – அரசியல் அறிவியல் – தொகுப்பு 4
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0