வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
மணிமேகலை பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் தவறானது எது?

Correct Answer: A [இது சமண சமயம் சார்ந்த நூலாகும்]

2.  
'மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகை புறத்து கொடுத்த பட்டி மண்டபம்'
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

Correct Answer: B [சிலப்பதிகாரம்]

3.  
'பன்ன அரும் கலை தெரி பட்டிமண்டபம்' என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

Correct Answer: B [கம்பராமாயணம்]

4.  
"பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

Correct Answer: B [மணிமேகலை]

5.  
தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்ற நூலை எழுதியவர் யார்?

Correct Answer: C [கா ராஜன்]

6.  
பொருத்துக:
a) தமிழர் நாகரிகமும் பண்பாடும் — 1) ரத்தினம்
b) தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் — 2) தட்சிணாமூர்த்தி
c) தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் — 3) வித்தியானந்தன்
d) தமிழர் சால்பு — 4) மா ராசமாணிக்கனார்

Correct Answer: C [2 4 1 3]

7.  
தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் எது?

Correct Answer: B [திருக்குறள்]

8.  
திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் யாருடைய உரை சிறந்தது?

Correct Answer: D [பரிமேலழகர்]

9.  
வைரமுத்துவின் எந்த புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது?

Correct Answer: C [கள்ளிக்காட்டு இதிகாசம்]

10.  
கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புதினத்துக்காக எந்த ஆண்டு வைரமுத்து சாகித்ய அகாடமி விருது பெற்றார்?

Correct Answer: D [2003]

11.  
'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி' என்ற வரிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

Correct Answer: A [புறநானூறு]

12.  
ஏன்? எதற்கு? எப்படி? என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?

Correct Answer: D [சுஜாதா]

13.  
கீழ்க்கண்ட எந்த நூலுக்காக பாரதிதாசன் சாகித்திய அகாதமி விருது பெற்றார்?

Correct Answer: C [பிசிராந்தையார்]

14.  
கீழ்க்காணும் நூல்களில் எது நீலாம்பிகை அம்மையாரால் எழுதப்படாதது?

Correct Answer: B [பரமானு புராணம்]

15.  
கீழ்காண்பவர்களில் யார் சங்ககால பெண்பாற் புலவர் அல்ல?

Correct Answer: B [காரைக்கால் அம்மையார்]

16.  
ராவண காவியம் காலத்தின் விளைவு; ஆராய்ச்சியின் அறிகுறி; புரட்சி பொறி; உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் என்று கூறியவர் யார்?

Correct Answer: C [பேரறிஞர் அண்ணா]

17.  
ஒரு பொருளாக மதிக்கப்படாதவரையும் எது மதிக்கும்படி செய்வதாக திருவள்ளுவர் கூறுகிறார்?

Correct Answer: C [பொருள் செல்வம்]

18.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மகாகவி பாரதியார் சிந்துக்கு தந்தை என்று போற்றப்படுகிறார்
2. பாபம் செய்யாதிருமனமே என்ற பாடலை பாம்பாட்டி சித்தர் பாடியுள்ளார்

Correct Answer: A [1 மட்டும் சரி]

19.  
கீழ்க்கண்டவற்றில் எது பச்சைமண்கலத்தில் நீரை சேமித்து வைப்பது போன்று வீணாகிவிடும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்?

Correct Answer: B [தீமையான வழியில் சேமித்து வைத்த செல்வம்]

20.  
2016 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரு சிறு இசை என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?

Correct Answer: D [வண்ணதாசன்]

21.  
பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலை எழுதியவர் யார்?

Correct Answer: C [மா இராசமாணிக்கனார்]

22.  
பொருத்துக:
a) மேற்கு மலையில் இருந்து வந்தவை — 1) பவளம்
b) கீழ்க் கடலில் விளைந்தவை — 2) மணிக்கற்கள்
c) தென் கடலில் இருந்து கிடைத்தவை — 3) சந்தனம்
d) வட மலையில் இருந்து வந்தவை — 4) முத்து

Correct Answer: A [3 1 4 2]

23.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. மதுரைக்காஞ்சியில், காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருளாகும்
2. மதுரைக் காஞ்சி 782 அடிகளைக் கொண்டது
3. இன்னூல் மாங்குடி மருதனார் என்பவரால் இயற்றப்பட்டது

Correct Answer: D [1, 2, 3 சரி]

24.  
விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?

Correct Answer: C [சீவக சிந்தாமணி]

25.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சீவக சிந்தாமணி திருத்தக்க தேவரால் இயற்றப் பட்டது
2. 13 இலம்பகங்களை கொண்டுள்ள சீவகசிந்தாமணி மணநூல் என அழைக்கப்படுகிறது

Correct Answer: C [இரண்டும் சரி]

26.  
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
என்று பெரியாரை பற்றி பாடியவர் யார்?

Correct Answer: A [பாரதிதாசன்]

27.  
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை?
1. முத்தொள்ளாயிரம் ஆசிரியப்பாவால் எழுதப்பட்ட நூலாகும்
2. சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களை கொண்ட நூல்
3. இந்நூலில் 108 பாடல்கள் மட்டுமே புறத்திரட்டு என்னும் நூலில் இருந்து கிடைத்துள்ளன

Correct Answer: C [2 மற்றும் 3]

28.  
சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக திருத்தக்கதேவர் எந்த நூலை இயற்றியுள்ளார்?

Correct Answer: D [நரி விருத்தம்]

29.  
ஹனுமான், நவஇந்தியா ஆகிய இதழ்களில் துணை ஆசிரியர்
இவரின் முதல் சிறுகதை ஸயன்ஸூக்கு பலி
இவர் 1932ல் கலைமகள் பரிசு பெற்றார்
கீழ்காணும் கூற்றுகளுக்கு தொடர்புடைய நபர் யார்?

Correct Answer: D [ந பிச்சமூர்த்தி]

30.  
பொருத்துக:
a) பகை நாட்டு பசுக்கூட்டங்களை கவர்தலும் கவர்ந்தவற்றை மீட்டலும் — 1) உழிஞை
b) மண்ணாசை கொண்டு போர் தொடுத்தலும் மண்ணாசையுடன் வரும் பகைவரோடு எதிர் நின்று போரிடுதலும் — 2) வெட்சி
c) பகை மன்னனின் கோட்டையை முற்றுகை இடுதலும் கோட்டையின் உள்ளிருக்கும் வேந்தன் காத்தலும் — 3) தும்பை
d) தனது வலிமையை நம்பி வந்த மன்னரை எதிர்த்து வலிமையுடன் போரிடுதல் — 4) வஞ்சி

Correct Answer: C [2 4 1 3]

31.  
புறத்திணைகளை 12 என வகைபடுத்தியுள்ள நூல் எது?

Correct Answer: B [புறப்பொருள் வெண்பாமாலை]

32.  
ஒருவர் பெற்ற கல்வி, புகழ், ஈகை போன்ற மேம்பாடுகளை போற்றிப் பாடும் திணை எது?

Correct Answer: C [பாடாண்]

33.  
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் நூல் யாரால் எழுதப்பட்டது?

Correct Answer: C [வல்லிக்கண்ணன்]

34.  
இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்று அவரை பாராட்டியவர் யார்?

Correct Answer: B [வல்லிக்கண்ணன்]

35.  
வண்ணதாசனின் இயற்பெயர் என்ன?

Correct Answer: C [கல்யாணசுந்தரம்]

36.  
பொருத்துக:
நூல்- நூலாசிரியர்
a) சிற்பியின் மகள் — 1) அலெக்சாந்தர் ரஸ்கின்
b) அப்பா சிறுவனாக இருந்த போது — 2) வண்ணதாசன்
c) குற்றம் பார்க்கில் — 3) பூவண்ணன்
d) சில இறகுகள் சில பறவைகள் — 4) சு சமுத்திரம்

Correct Answer: A [3 1 4 2]

37.  
சு சமுத்திரம் தனது எந்த படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார்?

Correct Answer: C [வேரில் பழுத்த பலா]

38.  
கலித்தொகையில் பாலை திணையை பாடியவர் யார்?

Correct Answer: B [பெருங்கடுங்கோ]

39.  
தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளை கவிதையாக்கி கூறும் நூல் எது?

Correct Answer: C [குறுந்தொகை]

40.  
தமிழ் பண்பாடு என்ற இதழ் யாரால் தொடங்கப்பட்டது?

Correct Answer: D [தனிநாயகம் அடிகள்]

41.  
பொருத்துக:
நூல்- நூலாசிரியர்
a) பெரியாரின் சிந்தனைகள் — 1) எஸ்.பி சட்டர்ஜி
b) அஞ்சல் தலைகளின் கதை — 2) அறிஞர் அண்ணா
c) தங்கைக்கு — 3) வே ஆனைமுத்து
d) தம்பிக்கு — 4) மு வரதராசன்

Correct Answer: A [3 1 4 2]

42.  
கீழ்காண்பவர்களில் கடித வடிவில் இலக்கியம் படைத்தவர் அல்லாதவர் யார்?

Correct Answer: B [புலவர் குழந்தை]

43.  
யசோதர காவியம் குறிப்பிடும் யசோதரன் எந்த நாட்டு மன்னன்?

Correct Answer: B [அவந்தி]

44.  
“அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர்” என்ற வரிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

Correct Answer: D [சிறுபாணாற்றுப்படை]

45.  
உலகத்தமிழ் கழகத்தை நிறுவி அதன் தலைவராக பணியாற்றியவர்?

Correct Answer: D [தேவநேயப் பாவாணர்]

46.  
"சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்" என்று கூறியவர் யார்?

Correct Answer: D [க சச்சிதானந்தன்]

47.  
கீழ்க்கண்ட எந்த இதழ்களின் வாயிலாக பெருஞ்சித்திரனார் தமிழுணர்வை பரப்பினார்?
தென் தமிழ்
தமிழ்ச்சிட்டு
தென்மொழி

Correct Answer: C [2, 3 சரி]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0