சென்னை போன்ற கடலோர நகரங்களில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் நகர வெள்ளத்துக்கான காரணங்களை ஆராய்ந்து, அதைக் கையாள்வதில் தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பங்கை மதிப்பிடுக.
Examine the causes of urban flooding in coastal cities like Chennai during the northeast monsoon and assess the role of the Tamil Nadu State Disaster Management Authority in managing it.
➤ படிக்க வேண்டியவை – பாடக் குறிப்பு
முதலில் இதைப் படியுங்கள், பிறகு எழுதுங்கள். இது தகவல் குறிப்பு மட்டுமே – மாதிரி விடை நாளை.
1. வடகிழக்குப் பருவமழையும் சென்னையும்
- அக்டோபர்–டிசம்பர்; தமிழ்நாட்டின் ஆண்டு மழையில் கிட்டத்தட்ட பாதி இந்தப் பருவத்தில்.
- வங்கக் கடல் காற்றழுத்தத் தாழ்வுகள், புயல்களால் குறுகிய நேரத்தில் அதிகனமழை.
- பெரும் நிகழ்வுகள்: 2015 வெள்ளம் (சென்னை, கடலூர், நாகப்பட்டினம்), 2023 மிக்ஜாம் புயல்.
2. காரணங்கள் – குறிப்புகள்
- இயற்கை: தாழ்வான, சமதளமான கடலோர நிலம்; கடல் அலை உயர்வால் வடிகால் தாமதம்.
- மனிதச் செயல்: ஏரிகள், சதுப்பு நிலங்கள் (பள்ளிக்கரணை), ஆற்றுப் படுகைகள் ஆக்கிரமிப்பு; இயற்கை வடிகால் தடைபடுதல்; போதிய மழைநீர் வடிகால் இல்லாமை.
- காலநிலை மாற்றம்: குறைந்த நாட்களில் அதீத மழை.
3. தமிழ்நாடு அரசின் கட்டமைப்பு (மாநிலப் பேரிடர் மேலாண்மைத் திட்டம் 2023-இலிருந்து)
- தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA) – பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-இன் கீழ்; முதலமைச்சர் தலைவர்.
- மாநில அவசரகால இயக்க மையம் (SEOC), சென்னை – 24 மணி நேரமும் இயங்குகிறது; IMD, INCOIS, CWC எச்சரிக்கைகளைப் பரப்புகிறது; கட்டணமில்லா எண் 1070.
- TNSMART – வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை ஆணையரகம் உருவாக்கிய இணைய / கைபேசி முடிவு ஆதரவு அமைப்பு (வெள்ள அபாய அறிவிப்புகள்).
- சென்னை பெருநகரில் 3,916 பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன (மிக அதிகம் 317, அதிகம் 799).
- சென்னை நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு; சென்னை பெருநகரப் பகுதிக்கான விரிவான வெள்ளக் கட்டுப்பாட்டுப் பெருந்திட்டம் தயாரிப்பில்.
4. விடையை உயர்த்தும் கருத்துகள்
- "பஞ்சு நகரம்" (sponge city) – மழையை உள்வாங்கிச் சேமிக்கும் நகர வடிவமைப்பு.
- "தாக்க அடிப்படையிலான கணிப்பு" – என்ன நடக்கும் என்று சொல்லும் எச்சரிக்கை.
- நிவாரணத்திலிருந்து தணிப்புக்கு (relief → mitigation) மாற்றம்.
Reference note in English
Key facts
- Northeast monsoon (Oct–Dec) gives Tamil Nadu nearly half its annual rain; 2015 floods, Cyclone Michaung 2023.
- Causes: flat low-lying coast, encroached lakes/marshes (Pallikaranai) and floodplains, poor drainage, climate change.
- TN State Disaster Management Plan 2023: TNSDMA (DM Act 2005, chaired by the CM); SEOC Chennai, toll-free 1070; TNSMART decision-support system; 3,916 vulnerable areas in Greater Chennai (317 very high); Chennai real-time flood forecasting system; Chennai flood-control master plan under preparation.
- Value-add terms: sponge city, impact-based forecasting, relief → mitigation.
அதிகாரப்பூர்வ ஆதாரங்கள்:
- தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மைத் திட்டம் 2023 (TNSDMA – அதிகாரப்பூர்வ PDF)
- தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மைக் கொள்கை 2023 (TNSDMA – அதிகாரப்பூர்வ PDF)
இந்தப் பாடத்தை முழுமையாகப் படிக்க – எங்கள் புத்தகம்:
எப்படி அணுகுவது? (குறிப்புகள்)
- வினாவில் இரண்டு பகுதிகள்: (1) காரணங்கள், (2) ஆணையத்தின் பங்கு – இரண்டுக்கும் சம இடம் தாருங்கள்.
- காரணங்களை இயற்கை / மனிதச் செயல் என்று பிரித்து எழுதுங்கள்.
- ஒரு உண்மை நிகழ்வை (2015 அல்லது 2023) எடுத்துக்காட்டாகச் சேர்த்து, ஒரு எளிய flowchart வரையுங்கள்.
- "மதிப்பிடுக" என்பதால் சாதனைகளோடு குறைகளையும் சொல்லுங்கள்.
In English: Two parts – causes and role, give both equal space · natural vs human causes · one real example + a flowchart · "assess" = strengths and gaps
TNPSC Mains-இல் முன்பு கேட்டவை
அதிகாரப்பூர்வ வினாத்தாள் வாசகம் – இதே தலைப்பு மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது.
உங்கள் விடையை அனுப்புங்கள்
காகிதத்தில் எழுதி, தெளிவான படம் எடுத்து WhatsApp-இல் அனுப்புங்கள் (பெயர், ஊர் குறிப்பிடுங்கள்). சிறந்த விடைகள் உங்கள் அனுமதியுடன் இங்கே வெளியிடப்படும்.
WhatsApp-இல் அனுப்பு (99941 46662) மதிப்பீட்டு அளவுகோல்உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
குரூப் 2 Mains பயிற்சி
புதிய பாடத்திட்டப்படி வகுப்புகள், test series, விடை திருத்தம் – கோவை, மதுரை, ஆன்லைன்.
விவரம் 99941 46662
