தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-இன் கீழ் கிராம சபையின் பங்கை விளக்குக.
Explain the role of the Grama Sabha under the Tamil Nadu Panchayats Act, 1994.
➤ படிக்க வேண்டியவை – பாடக் குறிப்பு
முதலில் இதைப் படியுங்கள், பிறகு எழுதுங்கள். இது தகவல் குறிப்பு மட்டுமே – மாதிரி விடை நாளை.
1. அரசியலமைப்பு அடிப்படை
- 73-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 1992 – ஊராட்சிகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து (பகுதி IX, சட்டப்பிரிவுகள் 243 – 243O).
- சட்டப்பிரிவு 243A: கிராம அளவில் கிராம சபை மாநிலச் சட்டம் வழங்கும் அதிகாரங்களையும் பணிகளையும் செயல்படுத்தலாம்.
2. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 – பிரிவு 3 (கிராம சபை)
- உறுப்பினர்கள்: அந்தக் கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும்.
- கூட்டம்: சட்டப்படி ஆண்டுக்குக் குறைந்தது இருமுறை; இரண்டு கூட்டங்களுக்கு இடையே ஆறு மாதம் ஆகக்கூடாது. அரசாணைகள் மூலம் குறிப்பிட்ட நாட்களில் நடத்தப்படுகிறது (தற்போது ஆண்டுக்கு 6 முறை).
- கூட்டுபவர்: ஊராட்சித் தலைவர்; தலைவர் தவறினால் ஆய்வாளர் (Inspector).
- பணிகள்: கிராமத் திட்டத்துக்கு ஒப்புதல், ஆண்டு வரவு-செலவுக்கு ஒப்புதல், முந்தைய ஆண்டுக் கணக்குத் தணிக்கை அறிக்கைக்கு ஒப்புதல், ஒப்படைக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற ஆய்வு.
- கிராம சபையின் பரிந்துரைகளை ஊராட்சி உரிய முறையில் கருத்தில் கொள்ள வேண்டும் (பிரிவு 3(4)).
3. விடையில் சேர்க்கக்கூடிய கூடுதல் கருத்துகள்
- சமூகத் தணிக்கை (social audit) – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள்.
- பெண்கள், பட்டியல் சமூகத்தினர் பங்கேற்பு – உள்ளடக்கிய ஜனநாயகம்.
- சவால்கள்: குறைந்த வருகை, முன்கூட்டிய அறிவிப்பின்மை, முடிவுகள் பின்பற்றப்படாமை.
4. நினைவில் வைக்க
திருக்குறள் 544 – "குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு".
Reference note in English
Key facts
- 73rd Amendment, 1992 – Part IX, Articles 243–243O; Article 243A on the Gram Sabha.
- Tamil Nadu Panchayats Act, 1994, Section 3: members = all voters of the village panchayat; meets at least twice a year (gap below six months); convened by the President; approves the village plan, budget and audit report, reviews schemes; panchayat must consider its recommendations.
- Add: social audit of MGNREGS, inclusion of women and SC/ST, challenges such as low attendance.
அதிகாரப்பூர்வ ஆதாரங்கள்:
- தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 – அதிகாரப்பூர்வ உரை (ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை)
- சட்டப் பிரிவு 3 – கிராம சபை (அதிகாரப்பூர்வ உரை)
இந்தப் பாடத்தை முழுமையாகப் படிக்க – எங்கள் புத்தகம்:
எப்படி அணுகுவது? (குறிப்புகள்)
- அரசியலமைப்பு அடிப்படையுடன் (73-வது திருத்தம், சட்டப்பிரிவு 243A) தொடங்குங்கள்.
- பணிகளை 4–5 புள்ளிகளாக எழுதுங்கள் – திட்டம், பயனாளி தேர்வு, சமூகத் தணிக்கை.
- தமிழ்நாட்டுக்கே உரிய ஒரு தகவல் (கூட்டம் நடைபெறும் நாட்கள்) சேர்த்தால் மதிப்பெண் கூடும்.
In English: Start with Art. 243A / 73rd Amendment · functions in 4–5 points · add a Tamil Nadu-specific fact
TNPSC Mains-இல் முன்பு கேட்டவை
அதிகாரப்பூர்வ வினாத்தாள் வாசகம் – இதே தலைப்பு மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது.
உங்கள் விடையை அனுப்புங்கள்
காகிதத்தில் எழுதி, தெளிவான படம் எடுத்து WhatsApp-இல் அனுப்புங்கள் (பெயர், ஊர் குறிப்பிடுங்கள்). சிறந்த விடைகள் உங்கள் அனுமதியுடன் இங்கே வெளியிடப்படும்.
WhatsApp-இல் அனுப்பு (99941 46662) மதிப்பீட்டு அளவுகோல்மாதிரி விடை வடிவம் – Shanmugam IAS Academy
முன்னுரை
73-வது அரசியலமைப்புத் திருத்தம் (1992) சட்டப்பிரிவு 243A மூலம் கிராம சபைக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் தந்தது. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-இன்படி ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் கிராம சபை உறுப்பினர்கள் – இது நேரடி ஜனநாயகத்தின் அடித்தளம்.
பணிகள்
- ஊராட்சியின் ஆண்டு வளர்ச்சித் திட்டம், வரவு-செலவைப் பரிசீலித்தல்.
- அரசுத் திட்டங்களுக்குப் பயனாளிகளைத் தேர்வு செய்தல் / ஒப்புதல் அளித்தல்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளின் சமூகத் தணிக்கை (social audit).
- ஊராட்சியின் கணக்குகள், பணிகளின் முன்னேற்றம் குறித்து விளக்கம் கேட்டல் – பொறுப்புடைமை.
தமிழ்நாட்டுச் சிறப்பு
ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாட்களுடன், 2022 முதல் மார்ச் 22 (உலக நீர் நாள்), நவம்பர் 1 (உள்ளாட்சி நாள்) ஆகிய நாட்களிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
முடிவுரை
"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு" (குறள் 544) – மக்களை அணைத்து ஆளும் ஆட்சியே நிலைக்கும்; கிராம சபை அந்த மக்கள் பங்கேற்பின் கருவி.
சுமார் 100 சொற்கள் · வரைபடம் தேவையில்லை · முக்கியச் சொற்களுக்கு அடிக்கோடு இடுங்கள்.
Model answer framework in English
Introduction
The 73rd Amendment (1992) gave constitutional status to the Grama Sabha through Article 243A. Under the Tamil Nadu Panchayats Act, 1994, every voter of the village panchayat is its member – the base of direct democracy.
Functions
- Considers the panchayat's annual plan and budget.
- Selects / approves beneficiaries of government schemes.
- Social audit of MGNREGS works.
- Seeks accounts and progress reports – accountability.
Tamil Nadu fact
Besides 26 January, 1 May, 15 August and 2 October, meetings are also held on 22 March (World Water Day) and 1 November (Local Bodies Day) since 2022.
Conclusion
Quote Kural 544 on people-centred rule; the Grama Sabha is the tool of people's participation.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
குரூப் 2 Mains பயிற்சி
புதிய பாடத்திட்டப்படி வகுப்புகள், test series, விடை திருத்தம் – கோவை, மதுரை, ஆன்லைன்.
விவரம் 99941 46662
