தினம் ஒரு Mains வினா

27 அக்டோபர் 2026குரூப் 2 Mainsஅலகு IV – வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம்பகுதி A10 மதிப்பெண் · 100 சொற்கள்

குலசேகரன்பட்டினம் சிறிய செயற்கைக்கோள் ஏவுதள வளாகம் இந்திய விண்வெளித் திட்டத்துக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தது? விளக்குக.

How is the SSLV Launch Complex at Kulasekarapattinam significant for India's space programme and for the development of Tamil Nadu? Explain.

நேரம் வைத்து எழுதுங்கள்:07:00

➤ படிக்க வேண்டியவை – பாடக் குறிப்பு

முதலில் இதைப் படியுங்கள், பிறகு எழுதுங்கள். இது தகவல் குறிப்பு மட்டுமே – மாதிரி விடை நாளை.

1. அடிப்படைத் தகவல்கள்

  • இடம்: குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம் – இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் (முதலாவது: ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையம்).
  • அடிக்கல்: 28 பிப்ரவரி 2024 – பிரதமர் நரேந்திர மோடி (தூத்துக்குடியிலிருந்து).
  • ஏவுதள அடிக்கல்: 27 ஆகஸ்ட் 2025 – இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன்; 2026 இறுதிக்குள் நிறைவு செய்யும் இலக்கு (இஸ்ரோ).
  • நோக்கம்: சிறிய செயற்கைக்கோள் ஏவுகலம் (SSLV), அரசு சாரா (தனியார்) நிறுவனங்களின் ஏவுகலங்கள்.

2. ஏன் குலசேகரன்பட்டினம்?

  • துருவ / சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கு ஏவுகலங்கள் தெற்கு நோக்கிச் செல்ல வேண்டும்.
  • ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நேராகத் தெற்கே சென்றால் இலங்கையின் மேல் பறக்க நேரிடும்; அதனால் வளைந்து செல்லும் பாதை – எரிபொருள், சுமை இழப்பு.
  • குலசேகரன்பட்டினத்திலிருந்து நேரடியாகத் தெற்கே இந்தியப் பெருங்கடலின் மேல் ஏவலாம் – சிறிய ஏவுகலங்களுக்கு மிகவும் பயன்.

3. தமிழ்நாடு விண்வெளித் தொழில் கொள்கை 2025

  • 2025 ஏப்ரலில் மாநில அமைச்சரவை ஒப்புதல்.
  • ஐந்து ஆண்டுகளில் ₹10,000 கோடி முதலீடு, 10,000 வேலைவாய்ப்பு இலக்கு.
  • "விண்வெளி மண்டலங்கள்" (Space Bays) – சிறப்புச் சலுகைத் தொகுப்பு; காப்புரிமைச் செலவில் 50% மானியம்.

4. விடையை உயர்த்தும் கருத்துகள்

  • இந்திய விண்வெளிக் கொள்கை 2023 – தனியார் பங்கேற்பு; IN-SPACe ஒப்புதல் அமைப்பு.
  • 2029-க்குள் இந்தியாவில் நான்கு ஏவுதளங்கள் செயல்பாட்டில் இருக்கும் – இஸ்ரோ தலைவர் (24 அக்டோபர் 2026).
  • "இரட்டைப் பயன்" – தேசியத் திறன் + மாநில வளர்ச்சி.

தொடர்புடைய நடப்பு நிகழ்வு: 2029-க்குள் 4 ஏவுதளங்கள் (26 அக்டோபர் 2026)

Reference note in English

Key facts

  • Kulasekarapattinam, Thoothukudi district – ISRO's second spaceport (first: Sriharikota, SDSC-SHAR).
  • Foundation stone: 28 February 2024, PM Narendra Modi; launch-pad foundation: 27 August 2025, ISRO Chairman V. Narayanan; completion targeted by end-2026 (ISRO).
  • For SSLV and non-governmental (private) launch vehicles.
  • Why here: polar/SSO launches go south; from Sriharikota they must curve around Sri Lanka (fuel and payload loss); from here they fly straight south over the Indian Ocean.
  • TN Space Industrial Policy 2025 (cabinet, April 2025): ₹10,000 crore investment, 10,000 jobs in five years; Space Bays; 50% patent-cost subsidy.
  • Indian Space Policy 2023 – private participation, IN-SPACe. ISRO Chairman (24 Oct 2026): four launch pads in India by 2029.
பாடக் குறிப்பு PDF பதிவிறக்கம்

அதிகாரப்பூர்வ ஆதாரங்கள்:

இந்தப் பாடத்தை முழுமையாகப் படிக்க – எங்கள் புத்தகம்:

எப்படி அணுகுவது? (குறிப்புகள்)

  • இருபகுதி வினா: (1) இந்திய விண்வெளித் திட்டம், (2) தமிழ்நாட்டு வளர்ச்சி – இரண்டுக்கும் 2–3 புள்ளிகள்.
  • புவியியல் காரணத்தை (தெற்கு நோக்கி நேரடியாக ஏவுதல்) ஒரு வரியில் தெளிவாகச் சொல்லுங்கள் – இதுதான் மதிப்பெண் தரும் முக்கியக் கருத்து.
  • தமிழ்நாடு விண்வெளித் தொழில் கொள்கை 2025-ஐக் குறிப்பிட்டால் மாநிலக் கோணம் வலுப்படும்.
  • இந்தியா வரைபடத்தில் ஸ்ரீஹரிகோட்டா, குலசேகரன்பட்டினம், இலங்கை – மூன்றையும் குறித்து ஒரு சிறிய வரைபடம் வரையலாம்.

In English: Two parts – space programme and Tamil Nadu, 2–3 points each · state the geographic reason (direct southward launch) clearly · mention the TN Space Industrial Policy 2025 · a small sketch map: Sriharikota, Kulasekarapattinam, Sri Lanka

TNPSC Mains-இல் முன்பு கேட்டவை

அதிகாரப்பூர்வ வினாத்தாள் வாசகம் – இதே தலைப்பு மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது.

குரூப் 1 Mains 2025 · தாள் III15 மதிப்பெண்
இந்திய விண்வெளிக் கொள்கை 2023-ன் அடிப்படையில் இந்திய விண்வெளித் துறையின் நோக்கத்தை விளக்கவும்.
Explain the vision of the Indian Space Department based on the Indian Space Policy 2023.

உங்கள் விடையை அனுப்புங்கள்

காகிதத்தில் எழுதி, தெளிவான படம் எடுத்து WhatsApp-இல் அனுப்புங்கள் (பெயர், ஊர் குறிப்பிடுங்கள்). சிறந்த விடைகள் உங்கள் அனுமதியுடன் இங்கே வெளியிடப்படும்.

மதிப்பீட்டு அளவுகோல்
மாதிரி விடை வடிவம் நாளை வெளியிடப்படும். முதலில் நீங்களே எழுதுங்கள் – பிறகு ஒப்பிடுங்கள்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)

குரூப் 2 Mains பயிற்சி

புதிய பாடத்திட்டப்படி வகுப்புகள், test series, விடை திருத்தம் – கோவை, மதுரை, ஆன்லைன்.

விவரம் 99941 46662