குரூப் 2A Mains 2025 வினாத்தாள் – பகுதி 3 (வினா 107–140)
← திரும்பச் செல்ல
குரூப் 2A Mains 2025 வினாத்தாள் – பகுதி 3 (வினா 107–140) – 31 வினாக்கள், பாடம்: குரூப் 2A Mains. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
குறியீட்டு மொழியின்படி பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க பின்வரும் தகவலைப் படிக்கவும். Column I இல் உள்ள பெரிய எழுத்தில் உள்ள சொற்கள் Column II இல் சிறிய எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. Column II இல் உள்ள எழுத்துகள் கலைந்து இணைக்கப்பட்டுள்ளது. மொழியை டிகோட் செய்து, கொடுக்கப்பட்ட கேள்விக்கான சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
Column I – Column II
(i) CROWDY – (a) blooppv
(ii) SOUND – (b) jkgotv
(iii) CRUX – (c) ijktv
(iv) CRONY – (d) ikmop
(v) NET – (e) cjmv
(vi) ADDRESS – (f) abi
NEETக்குச் சரியான குறியீட்டைக் கண்டறியவும்.
Column I – Column II
(i) CROWDY – (a) blooppv
(ii) SOUND – (b) jkgotv
(iii) CRUX – (c) ijktv
(iv) CRONY – (d) ikmop
(v) NET – (e) cjmv
(vi) ADDRESS – (f) abi
NEETக்குச் சரியான குறியீட்டைக் கண்டறியவும்.
Correct Answer: D [ibba]
விளக்கம்:
எழுத்து எண்ணிக்கை, பொது எழுத்துகள் மூலம்: NET=abi, CRONY=ijktv, SOUND=ikmop, ADDRESS=blooppv → N=i, E=b, T=a; எனவே NEET = ibba.
2.
கீழ்க்காணும் எண்களில் வேறுபட்ட எண் குழுவை எழுதுக.
Correct Answer: D [37, 14, 19, 7]
விளக்கம்:
மற்ற குழுக்களில் அனைத்தும் பகா எண்கள்; (D)-யில் உள்ள 14 பகா எண் அல்ல.
3.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளில், (81, 77, 69) என்னும் தொகுப்பிற்கு இணையானதைத் தேர்ந்தெடுக்க :
Correct Answer: A [(56, 52, 44)]
விளக்கம்:
81 −4 = 77, 77 −8 = 69; அதுபோல 56 −4 = 52, 52 −8 = 44.
4.
பின்வரும் கேள்வியில், நான்கு மாற்றுகளில் இருந்து உருவத்தைத் தேர்ந்தெடுத்து வரைபடம் (X)–யில் உள்ள வெற்றிடத்தை நிரப்புக.
Correct Answer: D [படம் (D)]
விளக்கம்:
நான்கு பகுதிகளும் சமச்சீரானவை; கீழ்-வலது பகுதி கீழ்-இடது பகுதியின் கண்ணாடி பிம்பம்: மைய மூலையில் (மேல்-இடது) இலை, வலப்புறமும் கீழும் சுருள்கள் – படம் (D).
5.
பின்வரும் வினாவில், இடம் பெற்றுள்ள படம் (X)–ன் சரியான நீர்பிம்பத்தைத் தேர்வு செய்க.
Correct Answer: A [படம் (A)]
விளக்கம்:
நீர்பிம்பத்தில் மேல்–கீழ் மாறும்: தாமரை தலைகீழாகும், கீழே இருந்த பல கதிர்கள் மேலே, இரு சிறு கதிர்கள் கீழே – படம் (A).
6.
கொடுக்கப்பட்ட படத்தின் சரியான கண்ணாடி பிம்பம் காண்க.
Correct Answer: C [படம் (C)]
விளக்கம்:
கொடுத்த படம்: இடப்பகுதி கோடிட்டது, வலப்பகுதி கருப்பு. பக்கக் கண்ணாடியில் இடம்–வலம் மாறும் – இடது கருப்பு, வலது கோடிட்டது – படம் (C).
7.
கூற்று : புகை பிடிப்பது மனிதனின் பலவீனம் ஆகும். அது ஒருவனின் தன்னம்பிக்கை சோதிக்கும்.
முடிவு :
I. புகை பிடிப்பவர்களுக்கு அவர்கள் விரும்பினாலும் அதை விடுவது மிகவும் கடினம்.
II. மனிதர்களுக்கு வேறு சில பலவீனங்களும் உண்டு.
முடிவு :
I. புகை பிடிப்பவர்களுக்கு அவர்கள் விரும்பினாலும் அதை விடுவது மிகவும் கடினம்.
II. மனிதர்களுக்கு வேறு சில பலவீனங்களும் உண்டு.
Correct Answer: D [முடிவு I, II சரி]
விளக்கம்:
'மன உறுதியை எல்லை வரை சோதிக்கும்' → விடுவது கடினம் (I); 'பலவீனங்களில் ஒன்று' → வேறு பலவீனங்களும் உண்டு (II).
8.
பின்வரும் சொற்களில் 'ENDEAVORS' என்ற சொல்லின் எழுத்துகளிலிருந்து உருவாக்க முடியாத சொல் எது?
Correct Answer: A [VOTE]
விளக்கம்:
ENDEAVORS-ல் T எழுத்து இல்லை; எனவே VOTE உருவாக்க முடியாது.
9.
இந்த கேள்விகள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை :
(i) 'A × B' என்பது 'A என்பது B யின் தாய்'
(ii) 'A + B' என்பது 'A என்பது B யின் மகன்'
B × J + P ல் B என்பது P – உடன் எவ்வாறு தொடர்புடையது?
(i) 'A × B' என்பது 'A என்பது B யின் தாய்'
(ii) 'A + B' என்பது 'A என்பது B யின் மகன்'
B × J + P ல் B என்பது P – உடன் எவ்வாறு தொடர்புடையது?
Correct Answer: C [மனைவி]
விளக்கம்:
B, J-யின் தாய்; J, P-யின் மகன்; எனவே P தந்தை, B அவரது மனைவி.
10.
கொடுக்கப்பட்ட அறிக்கைகளின் முடிவுகளுக்கான சரியான விருப்பத்தை கண்டறியவும்.
அறிக்கைகள் : எல்லா மெழுகுவர்த்திகளும் விளக்குகள் ஆகும்
எல்லா விளக்குகளும் மின்விளக்குகள் ஆகும்
முடிவுகள் :
I. எல்லா மெழுகுவர்த்திகளும் மின்விளக்குகள் ஆகும்
II. எல்லா மின்விளக்குகளும் மெழுகுவர்த்திகள் ஆகும்
அறிக்கைகள் : எல்லா மெழுகுவர்த்திகளும் விளக்குகள் ஆகும்
எல்லா விளக்குகளும் மின்விளக்குகள் ஆகும்
முடிவுகள் :
I. எல்லா மெழுகுவர்த்திகளும் மின்விளக்குகள் ஆகும்
II. எல்லா மின்விளக்குகளும் மெழுகுவர்த்திகள் ஆகும்
Correct Answer: A [I மட்டும் தொடரத்தக்கது]
விளக்கம்:
மெழுகுவர்த்தி ⊂ விளக்கு ⊂ மின்விளக்கு; எனவே I சரி, அதன் தலைகீழான II தொடராது.
11.
5 ஆண்கள், 6 பெண்களிலிருந்து 3 ஆண்கள், 5 பெண்கள் கொண்ட ஒரு குழுவை எத்தனை வழிகளில் தேர்ந்தெடுக்கலாம்?
Correct Answer: C [60]
விளக்கம்:
5C3 × 6C5 = 10 × 6 = 60.
12.
ஒரு பெட்டியில் 2 வெள்ளை நிற பந்துகளும், 3 கருப்பு நிற பந்துகளும் 4 சிகப்பு நிற பந்துகளும் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு கருப்பு பந்து கொண்ட 3 பந்துகளை எடுக்க வேண்டுமெனில் எத்தனை வகைகளில் அவற்றை எடுக்கலாம்?
Correct Answer: C [64]
விளக்கம்:
மொத்தம் 9C3 = 84; கருப்பு இல்லாமல் 6C3 = 20; குறைந்தது ஒரு கருப்பு = 84 − 20 = 64.
13.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒன்றோடொன்று சம்பந்தப்பட்ட (i), (ii) படங்களில் பொருத்தமற்ற படத்தைக் கண்டுபிடி.
Correct Answer: B [2]
விளக்கம்:
1, 3, 4 இணைகளில் (ii) என்பது (i)-ஐ கடிகாரத் திசையில் 90° சுழற்றியது; 2-ல் வீடு எதிர்க்கடிகாரத் திசையில் சுழன்றுள்ளது (கூரை இடப்புறம்).
14.
ஒரு பனிக்கட்டி தண்ணீரில் மிதக்கிறது.
Correct Answer: D [எப்போதும்]
விளக்கம்:
பனிக்கட்டியின் அடர்த்தி (சுமார் 0.92 கி/செ.மீ³) நீரைவிடக் குறைவு; எனவே எப்போதும் மிதக்கும்.
15.
ஒரு வகுப்பில் உள்ளவர்களில் 2/5 பங்கு மாணவிகள். மீதி உள்ளவர்கள் மாணவர்கள். அவர்களில் 1/5 பங்கு மாணவிகளும் 1/4 பங்கு மாணவர்களும் பள்ளிக்கு வரவில்லை எனில் எவ்வளவு பங்கு மாணவர்கள் (Boys and Girls) பள்ளிக்கு வந்துள்ளனர்?
Correct Answer: B [77/100]
விளக்கம்:
வந்த மாணவிகள் = 2/5 × 4/5 = 32/100; வந்த மாணவர்கள் = 3/5 × 3/4 = 45/100; மொத்தம் 77/100.
16.
சரியான மாற்றை தேர்வு செய்க.
a b __ __ b a a __ __ a b __
a b __ __ b a a __ __ a b __
Correct Answer: B [aabaa]
விளக்கம்:
aabaa நிரப்பினால் abaabaabaaba – 'aba' நான்கு முறை வருகிறது.
17.
கீழே உள்ள வரைபடத்தைப் படித்து பார்த்து, இதில் வேலையில்லாத ஆனால் படிக்காத இளைஞர்களைக் குறிக்கும் பகுதியைக் கண்டறியவும்.
[வென் படம்: இளைஞர்கள், படித்தவர்கள், வேலையுடையோர்]
[வென் படம்: இளைஞர்கள், படித்தவர்கள், வேலையுடையோர்]
Correct Answer: A [2 மட்டும்]
விளக்கம்:
பகுதி 2 இளைஞர்கள் வட்டத்தில் மட்டும் உள்ளது – படித்தவர்கள், வேலையுடையோர் இரண்டிலும் இல்லை.
18.
1 முதல் 6 வரை எண்ணிடப்பட்டுள்ள ஒரு பகடையைக் கருத்தில் கொண்டு விடையளி.
எண் 2, 3 க்கு எதிரிலும், 4 மற்றும் 6 க்கு அருகிலும் இருப்பின் கீழ்க்கண்ட கூற்றுகளுள் எது சரி?
எண் 2, 3 க்கு எதிரிலும், 4 மற்றும் 6 க்கு அருகிலும் இருப்பின் கீழ்க்கண்ட கூற்றுகளுள் எது சரி?
Correct Answer: D [1, 2 க்கும் 3 க்கும் அருகில் இருக்கும்]
விளக்கம்:
2-ம் 3-ம் எதிரெதிர் என்பதால் மீதி 1, 4, 5, 6 ஆகிய எல்லா முகங்களும் 2, 3 இரண்டுக்கும் அருகில்; எனவே 1 உறுதியாக 2, 3-க்கு அருகில்.
19.
A என்பவர் Bயின் சகோதரி, C என்பவர் Bயின் தாய், D என்பவர் Cயின் தந்தை மற்றும் E என்பவர் Dஇன் தாய். பிறகு A என்பவர் D உடன் எவ்வாறு தொடர்புடையவர்?
Correct Answer: A [பேத்தி]
விளக்கம்:
A, C-யின் மகள்; D, C-யின் தந்தை; எனவே A, D-க்கு பேத்தி.
20.
ஒரு பெண்ணைக் காட்டி, ராஜ் "அவள் என் மனைவியின் சகோதரியின் மகள்" எனக் கூறினார். ராஜ் என்பவரின் மனைவி அப்பெண்ணுக்கு என்ன உறவு?
Correct Answer: A [சித்தி]
விளக்கம்:
அப்பெண் ராஜின் மனைவியின் சகோதரியின் மகள்; எனவே ராஜின் மனைவி அவளுக்குத் தாயின் சகோதரி – சித்தி.
21.
ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் '481' என்றால் 'வானம் நீலம்', '246' என்றால் 'கடல் ஆழமானது' மற்றும் '698' என்றால் 'கடல் நீலமான தோற்றம்' என்று குறிக்கப்பட்டால், 'தோற்றத்திற்கான' அதன் குறியீட்டு மொழி என்ன?
Correct Answer: D [9]
விளக்கம்:
கடல் = 6 (246, 698-ல் பொது), நீலம் = 8 (481, 698-ல் பொது); எனவே தோற்றம் = 9.
22.
ஆவியாதல் : மேகம் : மழை
இந்த இணைக்கு பொருத்தமான இணையைத் தேர்ந்தெடுக்க :
இந்த இணைக்கு பொருத்தமான இணையைத் தேர்ந்தெடுக்க :
Correct Answer: B [விபத்து : காயம் : வலி]
விளக்கம்:
காரண–காரியத் தொடர்: ஆவியாதல் → மேகம் → மழை; அதுபோல விபத்து → காயம் → வலி.
23.
மிகச்சரியான மாற்று விடையைத் தேர்வு செய்க.
வீரத்துடன் செயல்படுபவரிடம் கீழ்க்காண்பவற்றுள் எது காணப்படும்?
வீரத்துடன் செயல்படுபவரிடம் கீழ்க்காண்பவற்றுள் எது காணப்படும்?
Correct Answer: A [தைரியம்]
விளக்கம்:
தைரியம் இல்லாமல் வீரம் இல்லை; அனுபவம், சக்தி, அறிவு கட்டாயமல்ல.
24.
கொடுக்கப்பட்டுள்ள (X) படத்தில் எந்த உருவம் மறைந்துள்ளது?
Correct Answer: C [படம் (C)]
விளக்கம்:
(X) உருவம் (C)-யில் மறைந்துள்ளது: நடுவிலுள்ள குறுக்குக் கோடுகளும் சதுரத்தின் ஒவ்வொரு பக்கத்தின் பாதியும் சேர்ந்தால் (X) கிடைக்கிறது.
25.
கீழே கொடுக்கப்பட்ட தொடரைக் கவனமாக படித்து வினாவிற்கு விடையளிக்க.
RD15E%K3J19P8#A2B$KM6W@N4©T*7FH
மேற்குறிப்பிட்ட தொடரில் குறியீடுக்கு முன்னரும் அடுத்ததாக எண்ணும் இருக்குமாறு எத்தனை மெய்யெழுத்துக்கள் உள்ளன?
RD15E%K3J19P8#A2B$KM6W@N4©T*7FH
மேற்குறிப்பிட்ட தொடரில் குறியீடுக்கு முன்னரும் அடுத்ததாக எண்ணும் இருக்குமாறு எத்தனை மெய்யெழுத்துக்கள் உள்ளன?
Correct Answer: B [இரண்டு]
விளக்கம்:
குறியீடு–மெய்யெழுத்து–எண் அமைப்பு இருமுறை: % K 3, @ N 4.
26.
இந்தக் கேள்வி பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது :
A # B என்பது A வகுத்தல் B
A * B என்பது A பெருக்கல் B
ராம் என்பவரின் வருமானம் (A) ரவியின் வருமானத்தில் (B) 80%.
சரியான தேர்வை கண்டறிக :
A # B என்பது A வகுத்தல் B
A * B என்பது A பெருக்கல் B
ராம் என்பவரின் வருமானம் (A) ரவியின் வருமானத்தில் (B) 80%.
சரியான தேர்வை கண்டறிக :
Correct Answer: C [A = (80 # 100) * B]
விளக்கம்:
A = B-யின் 80% = (80 ÷ 100) × B = (80 # 100) * B.
27.
விடுபட்ட இடத்தில் சரியான படத்தினையிட்டு நிரப்புக
[L வடிவம் (2 கோடுகள்), முக்கோணம் (3), சதுரம் (4), ?]
[L வடிவம் (2 கோடுகள்), முக்கோணம் (3), சதுரம் (4), ?]
Correct Answer: B [ஐங்கோணம்]
விளக்கம்:
பக்கங்கள் ஒவ்வொன்றாக அதிகரிக்கின்றன: 2, 3, 4 → அடுத்தது 5 பக்க ஐங்கோணம்.
28.
கூற்று : அணு சக்தியால் நாட்டின் பாதுகாப்பை உருவாக்க முடியாது.
நடவடிக்கையின் போக்கு
I : நமது அணுசக்தியை மேலும் அதிகரிப்பதை நிறுத்த வேண்டும்.
II : அணு சக்தியை அழிக்க வேண்டும்
III : தூதரக உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்
நடவடிக்கையின் போக்கு
I : நமது அணுசக்தியை மேலும் அதிகரிப்பதை நிறுத்த வேண்டும்.
II : அணு சக்தியை அழிக்க வேண்டும்
III : தூதரக உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்
Correct Answer: C [நடவடிக்கை III மட்டும் சரி]
விளக்கம்:
அணுசக்தி மட்டும் பாதுகாப்பு தராது என்பதற்காக அதை நிறுத்தவோ அழிக்கவோ வேண்டியதில்லை; தூதரக உறவை மேம்படுத்துவதே (III) சரியான நடவடிக்கை.
29.
விடுபட்ட இடத்தை நிரப்புக
[36, 216 → 6; 25, 125 → 5; ?, 64 → 4]
[36, 216 → 6; 25, 125 → 5; ?, 64 → 4]
Correct Answer: D [16]
விளக்கம்:
இடது = கீழ் எண்ணின் வர்க்கம், வலது = கனம்: 6² = 36, 6³ = 216; எனவே 4² = 16.
30.
ஜனவரி 1, 2007 திங்கட்கிழமை எனில் ஜனவரி 1, 2008 என்ன கிழமையாக இருக்கும்?
Correct Answer: B [செவ்வாய்க்கிழமை]
விளக்கம்:
2007 சாதாரண ஆண்டு (365 நாள் = 52 வாரம் + 1 மீதி நாள்); திங்கள் + 1 = செவ்வாய்.
31.
2020 ஜனவரி 1 ஆம் தேதி வியாழக்கிழமை எனில் 2021 ஜனவரி முதல் நாள் என்ன கிழமை?
Correct Answer: D [சனி]
விளக்கம்:
2020 லீப் ஆண்டு (366 நாள் = 52 வாரம் + 2 மீதி நாள்); வியாழன் + 2 = சனி.
மேலும் வினாடி வினாக்கள்
› Group 2A Mains – Daily Practice 1 (2 November 2026)
› குரூப் 2A Mains – தினசரிப் பயிற்சி 1 (2 நவம்பர் 2026)
› குரூப் 2A Mains 2026 வினாத்தாள் – பகுதி 1 (வினா 1–54)
› Group 2A Mains 2026 Question Paper – Part 1 (Q 1–54)
› குரூப் 2A Mains 2026 வினாத்தாள் – பகுதி 2 (வினா 55–107)
› Group 2A Mains 2026 Question Paper – Part 2 (Q 55–107)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
▶ புதிய வீடியோ · NEW VIDEO
அறிவோம் அரசியலமைப்பு | MAKING OF CONSTITUTION | UPSC Polity தமிழில் | NITHISH KUMAR
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
