குரூப் 2A Mains 2026 வினாத்தாள் – பகுதி 2 (வினா 55–107)
← திரும்பச் செல்ல
குரூப் 2A Mains 2026 வினாத்தாள் – பகுதி 2 (வினா 55–107) – 48 வினாக்கள், பாடம்: குரூப் 2A Mains. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
பின்வரும் அறிக்கைகளை கவனியுங்கள்.
கூற்று [A] : வேலையின்மை என்பது நோய், தனிப்பட்ட குடும்பம் மற்றும் சமூக சீர்குலைவை ஏற்படுத்தும் முக்கிய சமூகப் பிரச்சனையாகும்.
காரணம் [R] : பொருளாதார குறைபாடுகளை எதிர்கொள்பவர்களுக்கு நிதி உதவிக்கான சமூக ஏற்பாடுகள் வேலையில்லாதவர்கள், அனுபவிக்கும் துன்பங்களை குறைக்கிறது.

Correct Answer: A [[A] மற்றும் [R] இரண்டும் உண்மை ஆனால் [R] என்பது [A] க்கான விளக்கமல்ல]
விளக்கம்:
வேலையின்மை நோய், குடும்ப, சமூக சீர்குலைவை ஏற்படுத்தும் (A சரி). நிதி உதவி துன்பத்தைக் குறைக்கும் (R சரி); ஆனால் R தீர்வு மட்டுமே, A-க்கு காரணம் அல்ல.
2.
சரியானதைத் தேர்வு செய்யவும்.
(1) GRAINS பக்கம் – உணவு தானியங்களைப் பெறுதல்
(2) ஜேக் இயக்கம் – பலாப்பழ உற்பத்தியை அதிகரிக்க
(3) மோரிங்கா இயக்கம் – ஆரோக்கிய நலம் பயக்கும் பயிர்களுக்கு ஏற்றுமதி மண்டலங்கள்
(4) உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் – விவசாயிகள் தரவுகளை உருவாக்க

Correct Answer: C [(2) மற்றும் (3) சரி]
விளக்கம்:
பலா இயக்கம் – பலா உற்பத்தி; முருங்கை இயக்கம் – ஏற்றுமதி மண்டலங்கள்: சரி. GRAINS – விவசாயிகள் தரவுத்தள இணையதளம்; உழவர்–அலுவலர் தொடர்புத் திட்டம் – விவசாயி-அலுவலர் சந்திப்பு: தவறான பொருத்தங்கள்.
3.
பின்வரும் திட்டங்களில் எது சரியாகப் பொருந்துகிறது?
(i) கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – 2023
(ii) முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – 2025
(iii) முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – 2021
(i) கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – 2023
(ii) முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – 2025
(iii) முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – 2021
Correct Answer: D [(i) மற்றும் (ii) மட்டும்]
விளக்கம்:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 15-09-2023, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் ஆகஸ்ட் 2025 – சரி. காலை உணவுத் திட்டம் 15-09-2022 இல் தொடங்கியது; 2021 அல்ல.
4.
கீழ்கண்டவற்றில் சரியான பொருத்தங்களை தேர்வு செய்க.
I. வருமான செலவு – அரசு செலவு செய்தது
II. மூலதன வருமானம் – சமூக சேவைகள்
III. வரியில்லா வருமானம் – மாநில அரசுகள் பெற்ற கடனுக்கான வட்டி வருவாய்
IV. மாநில அரசின் வரி வருமானம் – பொருட்களை விற்பனை செய்வது
I. வருமான செலவு – அரசு செலவு செய்தது
II. மூலதன வருமானம் – சமூக சேவைகள்
III. வரியில்லா வருமானம் – மாநில அரசுகள் பெற்ற கடனுக்கான வட்டி வருவாய்
IV. மாநில அரசின் வரி வருமானம் – பொருட்களை விற்பனை செய்வது
Correct Answer: B [I மற்றும் III மட்டும்]
விளக்கம்:
வருவாய்ச் செலவு = அரசு செலவிடும் பணம்; மாநிலங்களிடமிருந்து பெறும் வட்டி = வரியல்லா வருவாய். மூலதன வரவு ≠ சமூகச் சேவைகள்; பொருட்களை விற்பது மாநிலச் சொந்த வரி வருவாய் அல்ல.
5.
பின்வரும் அறிக்கைகளை கவனியுங்கள்.
வலியுறுத்தல் [A] : இந்தியாவின் மேற்கு கடற்கரை விட கிழக்கு கடற்கரை புயலால் அதிகம் பாதிக்கப்படுகிறது.
காரணம் [R] : கிழக்கு கடற்கரையில் மட்டும் புயல் உருவாகிறது.
கீழ்வருவனவற்றில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

Correct Answer: C [[A] சரி, ஆனால் [R] தவறு]
விளக்கம்:
கிழக்குக் கடற்கரை அதிகம் பாதிக்கப்படுகிறது (A சரி); ஆனால் அரபிக் கடலிலும் புயல்கள் உருவாகின்றன (டவ்தே 2021, பிபர்ஜாய் 2023) – R தவறு.
6.
நிலையான வளர்ச்சி எந்த மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது?
Correct Answer: B [சமூகம், சுற்றுச்சூழல், பொருளாதாரம்]
விளக்கம்:
நிலையான வளர்ச்சியின் மூன்று தூண்கள்: சமூகம், சுற்றுச்சூழல், பொருளாதாரம்.
7.
தேசிய சுற்றுச்சூழல் நிர்வாகத் தீர்ப்பாயச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
Correct Answer: C [1995]
விளக்கம்:
தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயச் சட்டம் 1995 இல் இயற்றப்பட்டது.
8.
நெடுவரிசை-I ஐ நெடுவரிசை-II உடன் பொருத்தி, விடைக் குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :
(a) கோருண்டம் – 1. கேசோலின்
(b) வெனேடியம் – 2. சிராய்ப்பிகள்
(c) டைட்டானியம் – 3. அலோகங்கள்
(d) ஈயம் – 4. நிறமிகள்
(a) கோருண்டம் – 1. கேசோலின்
(b) வெனேடியம் – 2. சிராய்ப்பிகள்
(c) டைட்டானியம் – 3. அலோகங்கள்
(d) ஈயம் – 4. நிறமிகள்
Correct Answer: B [(a)-2 (b)-3 (c)-4 (d)-1]
விளக்கம்:
கொருண்டம் – சிராய்ப்பிகள்; வெனேடியம் – உலோகக்கலவைகள்; டைட்டானியம் – நிறமிகள் (TiO2); ஈயம் – பெட்ரோல் (டெட்ரா எத்தில் லெட்).
9.
என்னூர் என்னும் முக்கியத் துறைமுகத்திற்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ________ சிறிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Correct Answer: C [காட்டுப்பள்ளி]
விளக்கம்:
திருவள்ளூர் மாவட்டம், காமராஜர் (எண்ணூர்) துறைமுகம் அருகிலுள்ள காட்டுப்பள்ளி சிறு துறைமுகமாக அறிவிக்கப்பட்டது.
10.
கீழ்கண்டவற்றுள் வருட அடிப்படையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலைகளைக் காலவரிசைப்படி ஒழுங்குப்படுத்தவும் :
(1) TANSI – தமிழ்நாட்டின் சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்
(2) TANMAG – தமிழக மேக்னசைட் உற்பத்தி அமைப்பு
(3) TAMIN – தமிழக கனிமப் பொருள் உற்பத்திக் கழகம்
(4) TANCEM – தமிழக சிமெண்ட் உற்பத்திக் கழகம்
(1) TANSI – தமிழ்நாட்டின் சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்
(2) TANMAG – தமிழக மேக்னசைட் உற்பத்தி அமைப்பு
(3) TAMIN – தமிழக கனிமப் பொருள் உற்பத்திக் கழகம்
(4) TANCEM – தமிழக சிமெண்ட் உற்பத்திக் கழகம்
Correct Answer: A [(1), (4), (3), (2)]
விளக்கம்:
TANSI 1965 → TANCEM 1976 → TAMIN 1978 → TANMAG 1979.
11.
கீழ்வரும் கூற்றுகளுள் தமிழ்நாட்டில் தொட்டிபாசனத்தின் எந்த கூற்றுத் தவறானது?
(i) தமிழ்நாட்டில் தொட்டி நீர்ப்பாசனம் 589 ஆயிரம் ஹெக்டேர் பரப்பினை கொண்டது.
(ii) இது நாட்டின் மொத்த தொட்டிப்பாசனத்தில் நான்கில் மூன்று பங்கினை கொண்டது.
(iii) தமிழ்நாட்டில் சுமார் 24,000 தொட்டி நீர்ப்பாசனம் உள்ளது.

Correct Answer: C [(ii) மட்டுமே]
விளக்கம்:
(ii) தவறு: இந்தியாவின் ஏரிப்பாசனப் பரப்பில் தமிழகத்தின் பங்கு கால் முதல் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே; முக்கால் பங்கு அல்ல.
12.
வெப்பமண்டல பசுமைமாறா மழைக்காடு உயிர்த்தொகுதி பற்றிய கூற்றுகளில் எவை உண்மையாகும்?
(i) வெப்பமண்டல பசுமைமாறா மழைக்காடு உயிர்த்தொகுதி என்பது மிகப்பெரிய தாவர மற்றும் விலங்கு இனங்களைக் கொண்டுள்ளது.
(ii) சராசரி ஆண்டு மழைப்பொழிவு சுமார் 25 செ.மீ. - 50 செ.மீ. ஆகும்.
(iii) இங்கு அடர்த்தியான மற்றும் உயரமான மரங்கள் உண்டு.

Correct Answer: A [(i) மற்றும் (iii) சரி]
விளக்கம்:
வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகளில் மிக அதிக உயிரினப் பன்மை, அடர்ந்த உயரமான மரங்கள் உண்டு; மழை 200 செ.மீ.க்கு மேல் – 25-50 செ.மீ. அல்ல.
13.
பின்வருவனவற்றில் எது தற்பொழுது தீவுத்திடல் என்றழைக்கப்படுகிறது?
Correct Answer: A [எலம்போர் தீவுத்திடல்]
விளக்கம்:
சென்னை தீவுத்திடல், கூவம் மற்றும் எலம்போர் ஆறுகளுக்கு இடையே உருவான ஆற்றுத் தீவு ஆகும்.
14.
வேளாண் வானிலை ஆலோசனை சேவை பின்வருவனவற்றுள் எதனுடன் தொடர்புடையது?
Correct Answer: D [பயிர்-வானிலை முன்னறிவிப்பு]
விளக்கம்:
வேளாண் வானிலை ஆலோசனை சேவை (IMD) வானிலை முன்னறிவிப்புடன் பயிருக்கேற்ற ஆலோசனை தருகிறது – பயிர்-வானிலை முன்னறிவிப்பு.
15.
பசுமை கடன் திட்டத்தை ஒன்றிய அரசு எப்போது வெளியிட்டது?
Correct Answer: B [அக்டோபர், 2023]
விளக்கம்:
பசுமைக் கடன் திட்டம் (பசுமைக் கடன் விதிகள் 2023) அக்டோபர் 2023 இல் அறிவிக்கப்பட்டது.
16.
தமிழ்நாடு அரசாங்கத்தால் குறைவாக அறியப்பட்ட அழிந்துவரும் உயிரினங்களைப் பாதுகாப்பதில், பின்வரும் எந்த இனத்தின் மீது சமீபத்தில் (2025) கவனம் செலுத்துகிறது?
(i) சிங்கவால் மக்காக் (குரங்கு) மற்றும் மெட்ராஸ் ஹெட்ஜ்ஹாக் (முள்ளம்பன்றி)
(ii) கரியால் மற்றும் ஹாக்ஸ்பில் கடல் ஆமை
(iii) வரி கழுதைப்புலி ஹைனா மற்றும் திமில்-தலை கொண்ட மஹ்சீர் மீன்
(iv) பிக்மி ஹாக் (குள்ள காட்டு பன்றி) மற்றும் மலபார் சிவெட் (குனுகு பூனை)

Correct Answer: D [(i) மற்றும் (iii) மட்டும்]
விளக்கம்:
2025-இல் தமிழ்நாடு அரசு சிங்கவால் குரங்கு, மெட்ராஸ் முள்ளெலி, வரிக்கழுதைப்புலி, திமில்-தலை மகசீர் மீன் ஆகிய நான்கு இனங்களைக் காக்க ₹1 கோடி ஒதுக்கியது.
17.
கேள்விக்குறி (?) இடப்பட்டுள்ள இடத்தில் விடுபட்டவற்றைக் காண்
EG 35, IK 99, ___?___, QS 323, UW 483
EG 35, IK 99, ___?___, QS 323, UW 483
Correct Answer: C [MO 195]
விளக்கம்:
எழுத்துகளின் வரிசை எண்களின் பெருக்கல்: E×G=5×7=35, I×K=99 ... விடுபட்டது M×O = 13×15 = 195.
18.
விடுபட்ட எழுத்துக்களைக் கண்டறிக
PTVX, AEGI, LPRT, ________ HLNP
PTVX, AEGI, LPRT, ________ HLNP
Correct Answer: A [WACE]
விளக்கம்:
முதல் எழுத்துகள் +11 இடைவெளியில் (P→A→L→W→H); ஒவ்வொரு குழுவிலும் +4, +2, +2 – எனவே WACE.
19.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வகுப்புகளுக்கு இடையே உள்ள தொடர்பை பின்வரும் வரைபடங்களில் எது குறிக்கிறது?
சிவப்பு, நீலம், பச்சை
சிவப்பு, நீலம், பச்சை
Correct Answer: D [மூன்று தனித்தனி வட்டங்கள் (வெட்டாதவை)]
விளக்கம்:
சிவப்பு, நீலம், பச்சை – ஒன்றுக்கொன்று பொதுவற்ற தனி நிறங்கள்; எனவே தனித்தனி மூன்று வட்டங்கள்.
20.
கீழே ஒரு பகடையின் மூன்று வெவ்வேறு நிலைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒரு புள்ளியுடைய முகத்திற்கு எதிரே உள்ள முகத்தில் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கையைக் கண்டறிக
Correct Answer: D [6]
விளக்கம்:
1-க்கு அருகில் 3, 2, 5; 2-க்கு அருகில் 1, 3, 5, 6 – எனவே 2-க்கு எதிரே 4; ஆகவே 1-க்கு எதிரே 6.
21.
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?
Correct Answer: A [P(A) > 1]
விளக்கம்:
நிகழ்தகவு எப்போதும் 0 முதல் 1 வரை மட்டுமே; P(A) > 1 என்பது தவறு.
22.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கவனமாகப் படித்து விடையளிக்க :
ஒரு விற்பனை பிரதிநிதி M, N, P, Q, R, S ஆகிய ஆறு நிறுவனங்களையும் ஒரு நாளைக்கு ஒரு முறை சந்திக்க விரும்புகின்றார். கீழ்காணும் முறையில் தன் பணியைத் திட்டமிடுகிறார்.
(1) N, Rக்கு முன்பு M ஐ சந்தித்து விட வேண்டும்
(2) Q க்கு முன்பு N ஐ சந்தித்து விட வேண்டும்
(3) மூன்றாவதாக P ஐத் தான் சந்திக்க வேண்டும்
விற்பனை பிரதிநிதி R ஐ சந்திப்பதற்கு முன்பும் S ஐ சந்தித்த உடனேயும் Q வை சந்தித்தால், Q வை எப்பொழுது சந்திப்பார்?

Correct Answer: D [ஐந்தாவதாக]
விளக்கம்:
P 3-ஆவது; S-Q-R தொடர்ச்சியாக வர 4,5,6 இடங்கள் மட்டுமே; M-1, N-2. எனவே Q 5-ஆவது.
23.
ஒரு பையனைக் காட்டி, வீணா, 'அவன் என் பாட்டியின் ஒரே குழந்தையின் ஒரே மகன்' எனக் கூறினாள். அந்த பையன் வீணாவுக்கு என்ன உறவு?
Correct Answer: B [சகோதரன்]
விளக்கம்:
பாட்டியின் ஒரே குழந்தை = வீணாவின் பெற்றோர்; அவரது ஒரே மகன் = வீணாவின் சகோதரன்.
24.
நிரல் I – நிரல் II
VIOLET – a b c p q r
CLEAR – t u s q p
VOWEL – p c q d r
சாதாரண மொழியில் மாற்றி 'WRITE' என்ற சொல்லின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
VIOLET – a b c p q r
CLEAR – t u s q p
VOWEL – p c q d r
சாதாரண மொழியில் மாற்றி 'WRITE' என்ற சொல்லின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
Correct Answer: A [d s a b p]
விளக்கம்:
பொது எழுத்துகளை ஒப்பிட: W = d, E = p/q, I,T = a/b, R = t/u/s இல் ஒன்று – WRITE-க்கு 'd s a b p' மட்டுமே பொருந்தும்.
25.
மேட்ரிக்ஸின் I நெடுவரிசைகள் மற்றும் வரிசைகள் 0 முதல் 4 வரையிலும் மேட்ரிக்ஸின் II 5 முதல் 9 வரையிலும் எண்ணப்படுகின்றன. இந்த மேட்ரிக்ஸில் இருந்து ஒரு வார்த்தை முதலில் அதன் வரிசையையும் பின்னர் நெடுவரிசை எண்ணையும் குறிக்கலாம் எனில், ROAD என்ற வார்த்தையின் சரியான தொகுப்பைக் கண்டறியவும்.
மேட்ரிக்ஸ் I (வரிசை/நெடுவரிசை 0–4):
0 1 2 3 4
0: F O M S R
1: S R F O M
2: O M S R F
3: R F O M S
4: M S R F O
மேட்ரிக்ஸ் II (வரிசை/நெடுவரிசை 5–9):
5 6 7 8 9
5: A T D I P
6: I P A T D
7: T D I P A
8: P A T D I
9: D I P A T
மேட்ரிக்ஸ் I (வரிசை/நெடுவரிசை 0–4):
0 1 2 3 4
0: F O M S R
1: S R F O M
2: O M S R F
3: R F O M S
4: M S R F O
மேட்ரிக்ஸ் II (வரிசை/நெடுவரிசை 5–9):
5 6 7 8 9
5: A T D I P
6: I P A T D
7: T D I P A
8: P A T D I
9: D I P A T
Correct Answer: C [11, 13, 67, 69]
விளக்கம்:
R=11, O=13, A=67, D=69. மற்ற விடைகளில் தவறான எழுத்து (58=I, 99=T, 78=P).
26.
கீழ்காணும் எண்களில் வேறுபட்ட இணையைத் தேர்ந்தெடுக்க.
Correct Answer: C [14, 134]
விளக்கம்:
187=17×11, 165=15×11, 132=12×11; ஆனால் 14×11=154, 134 அல்ல.
27.
பின்வரும் எண்கள் தொகுதியில் வேறுபட்ட எண்ணைத் தேர்ந்தெடுக்க.
Correct Answer: A [225]
விளக்கம்:
125=5³, 64=4³, 216=6³ – கனங்கள்; 225=15² கனம் அல்ல.
28.
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க.
Correct Answer: A [ஓடோமீட்டர் : மின்னோட்டம்]
விளக்கம்:
ஒவ்வொரு கருவியும் அதன் அளவை அளக்கும்; ஓடோமீட்டர் தூரத்தை அளக்கும், மின்னோட்டத்தை அல்ல.
29.
________ என்பது ஓட்டப்பந்தயம் அதேபோல் மெதுவாக என்பது ________
Correct Answer: B [விரைவு : உலா]
விளக்கம்:
ஓட்டப்பந்தயம் – விரைவு; உலா – மெதுவாக.
30.
'கிலோகிராம்' உடன் தொடர்புடையது 'நிறை' எனில் 'நியூட்டன்' உடன் தொடர்புடையது ________
Correct Answer: D [விசை]
விளக்கம்:
கிலோகிராம் – நிறையின் SI அலகு; நியூட்டன் – விசையின் SI அலகு.
31.
கீழ்க்காணும் இணைக்கு சொல்லைக் காண்க.
கூழ் : காகிதம் : : சணல் : ?
கூழ் : காகிதம் : : சணல் : ?
Correct Answer: C [கயிறு]
விளக்கம்:
கூழிலிருந்து காகிதம்; சணல் நாரிலிருந்து கயிறு.
32.
ஒரு கண்ணாடி, MN கோட்டில் அமைந்தால் அதன் பிம்பம் என்ன?
Correct Answer: B [படம் (B)]
விளக்கம்:
செங்குத்துக் கண்ணாடியில் இடம்–வலம் மட்டும் மாறும்: மேல்-வலது அம்புகள் மேல்-இடதாகவும், இறகு அம்பு மேல்-வலதிலிருந்து கீழ்-இடதாகவும் – படம் B.
33.
பின்வரும் அறிக்கைகளை கவனியுங்கள் :
கூற்று : குடிகாரர்களின் மன உறுதியை விளிம்பு வரை சோதிக்கும் மனித பலவீனங்களில் ஒன்று தான் குடிப்பழக்கம் என்பது.
முடிவுகள் I : குடிகாரர்கள், குடிப்பழக்கத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும், அது மிகவும் கடினமான ஒன்று ஆகும்.
II : மனிதர்களுக்கு இதுபோல வேறு பலவீனங்களும் உள்ளன.

Correct Answer: C [I மற்றும் II இரண்டும் தொடரத்தக்கது]
விளக்கம்:
'மன உறுதியை விளிம்பு வரை சோதிக்கும்' – விடுவது கடினம் (I); 'பலவீனங்களில் ஒன்று' – வேறு பலவீனங்களும் உண்டு (II).
34.
4 நபர்களின் மொத்த வயது 86 வருடம். 4 வருடங்களுக்கு முன் அவர்களுடைய சராசரி வயது எவ்வளவு?
Correct Answer: D [17.5 வருடம்]
விளக்கம்:
தற்போதைய சராசரி 86 ÷ 4 = 21.5; 4 ஆண்டுகளுக்கு முன் 21.5 − 4 = 17.5 ஆண்டுகள்.
35.
L என்பது ×, M என்பது +, N என்பது –, மேலும் P என்பது ÷ குறிக்கும் என்றால் 15 L 10 M 33 P 11 N 8 என்பதின் மதிப்பைக் கண்டுபிடி.
Correct Answer: C [145]
விளக்கம்:
15 × 10 + 33 ÷ 11 − 8 = 150 + 3 − 8 = 145.
36.
பின்வரும் அறிக்கைகளை கவனியுங்கள் :
கூற்று : ஒரு நிறுவனத்தின் முதலாளிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே முழுமையான ஒத்துழைப்பு இல்லையென்றால், அந்த நிறுவனம் நீண்ட காலத்திற்கு லாபகரமானதாக இருக்க முடியாது.
தொடர் நடவடிக்கை I : அந்த நிறுவனத்தை மூட வேண்டும்.
II : தொழிலாளர்களை, முதலாளியோடு ஒத்துப்போகச் சொல்ல வேண்டும்.
III : முதலாளியைத் தொழிலாளர்களோடு ஒத்துப்போகச் சொல்ல வேண்டும்.

Correct Answer: B [II மற்றும் III மட்டும் தொடரத்தக்கது]
விளக்கம்:
இருதரப்பு ஒத்துழைப்பே தேவை – II, III தொடரும்; நிறுவனத்தை மூடுவது (I) தீவிரமான, பொருத்தமற்ற முடிவு.
37.
மேலே கொடுக்கப்பட்டவற்றுள் விடுபட்ட இடத்தில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
படம் 1: மேல் 4, இடம் 15, நடு 26, வலம் 3, கீழ் 10
படம் 2: மேல் 6, இடம் 10, நடு 8, வலம் 4, கீழ் 8
படம் 3: மேல் 7, இடம் 12, நடு ?, வலம் 3, கீழ் 5
படம் 1: மேல் 4, இடம் 15, நடு 26, வலம் 3, கீழ் 10
படம் 2: மேல் 6, இடம் 10, நடு 8, வலம் 4, கீழ் 8
படம் 3: மேல் 7, இடம் 12, நடு ?, வலம் 3, கீழ் 5
Correct Answer: B [65]
விளக்கம்:
நடு எண் = (இடம் − கீழ்)² + (மேல் − வலம்)²: (15−10)²+(4−3)²=26; (10−8)²+(6−4)²=8; எனவே (12−5)²+(7−3)² = 49+16 = 65.
38.
5 மெய்யெழுத்துகள் மற்றும் 5 உயிரெழுத்துகளில் இருந்து 2 மெய்யெழுத்துகள் மற்றும் 3 உயிரெழுத்துகள் உள்ள எழுத்துச் சரங்கள் எத்தனை உருவாக்கலாம்?
Correct Answer: C [12000]
விளக்கம்:
தேர்வு: 5C2 × 5C3 = 10 × 10 = 100; 5 எழுத்துகளை வரிசைப்படுத்த 5! = 120; மொத்தம் 12,000.
39.
100C98 – 100C0ன் மதிப்பு என்ன?
Correct Answer: D [4949]
விளக்கம்:
100C98 = 100C2 = 4950; 100C0 = 1; 4950 − 1 = 4949.
40.
கொடுக்கப்பட்ட எண் ஜோடி 30 : 42 க்கு உள்ள தொடர்பைப் போன்ற எண் ஜோடியினைத் தேர்வு செய்க.
Correct Answer: A [12 : 20]
விளக்கம்:
30 : 42 = 5×6 : 6×7; அதேபோல் 12 : 20 = 3×4 : 4×5.
41.
ஒரு மரம் எப்போதும் பின்வருவனவற்றில் எதைக் கொண்டு இருக்கும்?
Correct Answer: D [வேர்கள்]
விளக்கம்:
இலை, பழம், கிளை இல்லாத நிலை இருக்கலாம்; ஆனால் வேர் எப்போதும் இருக்கும்.
42.
ராஜ்ய சபாவின் முக்கிய செயல்பாடானது சட்டங்களை நிறைவேற்றுவது ஆகும்.
Correct Answer: A [எப்பொழுதும் இல்லை]
விளக்கம்:
மாநிலங்களவை சட்டம் இயற்றும் அவை; சட்டத்தைச் செயல்படுத்துவது நிர்வாகத் துறை – எனவே 'எப்பொழுதும் இல்லை'.
43.
திருக்குறளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?
Correct Answer: A [ஏரியல்]
விளக்கம்:
ஏரியல் (E.S. Ariel) 1848-ல் திருக்குறளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார்; கிரால் ஜெர்மன், இலத்தீன் மொழிகளில் மொழிபெயர்த்தார்.
44.
அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது : கூறியவர் யார்?
Correct Answer: A [அன்னிபெசன்ட்]
விளக்கம்:
தன்னாட்சி இயக்கத் தலைவர் அன்னிபெசன்ட் அம்மையார் இவ்வாறு கூறினார்.
45.
பின்வரும் நிகழ்வுகளை அவற்றின் காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும்.
(1) ஸ்ரீரங்கப்பட்டினம் ஒப்பந்தம்
(2) மங்களூர் ஒப்பந்தம்
(3) சல்பாய் ஒப்பந்தம்
(4) பசீன் ஒப்பந்தம்
(1) ஸ்ரீரங்கப்பட்டினம் ஒப்பந்தம்
(2) மங்களூர் ஒப்பந்தம்
(3) சல்பாய் ஒப்பந்தம்
(4) பசீன் ஒப்பந்தம்
Correct Answer: C [(3), (2), (1), (4)]
விளக்கம்:
சல்பாய் 1782 → மங்களூர் 1784 → ஸ்ரீரங்கப்பட்டினம் 1792 → பசீன் 1802.
46.
கலித்தொகையில் இடம்பெற்றுள்ள சிறப்புகளைத் தேர்வு செய்க.
(i) மடலேறுதல் பேசப்பட்டுள்ளது.
(ii) உவமைகள் இடம்பெறவில்லை.
(iii) இழிந்தோர் காதல் இடம்பெற்றுள்ளது.
(i) மடலேறுதல் பேசப்பட்டுள்ளது.
(ii) உவமைகள் இடம்பெறவில்லை.
(iii) இழிந்தோர் காதல் இடம்பெற்றுள்ளது.
Correct Answer: B [(i), (iii) மட்டும்]
விளக்கம்:
கலித்தொகையில் மடலேறுதலும் இழிந்தோர் காதலும் (கைக்கிளை, பெருந்திணை) இடம்பெறுகின்றன; உவமைகள் மிகுதியாக உள்ளன – (ii) தவறு.
47.
மிகவும் புகழ்பெற்ற 'இந்திர விழா' ________ நகரத்தில் கொண்டாடப்பட்ட செய்தியை 'மணிமேகலை' என்ற நூலில் 'சீத்தலை சாத்தனார்' குறிப்பிடுகிறார்.
Correct Answer: A [புகார்]
விளக்கம்:
மணிமேகலையின் விழாவறை காதை புகாரில் (காவிரிப்பூம்பட்டினம்) இந்திர விழா கொண்டாடப்பட்டதைக் கூறுகிறது.
48.
தொன்மத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளுள் எவை உண்மையானவை?
(i) ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தனியான தொன்மங்கள் இருக்கின்றன.
(ii) ஓரிடத்தில் இருந்து மனித இனம் பிரிந்து வேறிடத்தில் சென்று வாழ்வதைத் தொன்மங்கள் உணர்த்துகின்றன.
(iii) கிரேக்கத் தொன்மங்களும் இந்தியத் தொன்மங்களும் ஒத்தத் தன்மையுடையவை அல்ல

Correct Answer: C [(i) மற்றும் (ii) மட்டும்]
விளக்கம்:
ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்த தொன்மங்கள் உண்டு; ஒத்த தொன்மங்கள் மனிதர் இடம்பெயர்வைக் காட்டுகின்றன. கிரேக்க–இந்தியத் தொன்மங்களுக்கு இடையே ஒப்புமைகள் உண்டு; எனவே (iii) தவறு.
மேலும் வினாடி வினாக்கள்
› Group 2A Mains – Daily Practice 1 (2 November 2026)
› குரூப் 2A Mains – தினசரிப் பயிற்சி 1 (2 நவம்பர் 2026)
› குரூப் 2A Mains 2026 வினாத்தாள் – பகுதி 1 (வினா 1–54)
› Group 2A Mains 2026 Question Paper – Part 1 (Q 1–54)
› Group 2A Mains 2026 Question Paper – Part 2 (Q 55–107)
› குரூப் 2A Mains 2026 வினாத்தாள் – பகுதி 3 (வினா 108–157)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
▶ புதிய வீடியோ · NEW VIDEO
அறிவோம் அரசியலமைப்பு | MAKING OF CONSTITUTION | UPSC Polity தமிழில் | NITHISH KUMAR
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai