குரூப் 2A Mains 2025 வினாத்தாள் – பகுதி 2 (வினா 53–105)
← திரும்பச் செல்ல
குரூப் 2A Mains 2025 வினாத்தாள் – பகுதி 2 (வினா 53–105) – 48 வினாக்கள், பாடம்: குரூப் 2A Mains. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
My Scheme இயங்குதளம் ஏன் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Correct Answer: B [பயனர்கள் தங்களின் மக்கள்தொகை அடிப்படையில் தகுதியான அரசு திட்டங்களை கண்டறிய அனுமதிப்பது]
விளக்கம்:
myScheme (MeitY) தளம் – குடிமகனின் விவரங்களின் அடிப்படையில் அவர் தகுதியுடைய அரசுத் திட்டங்களை ஒரே இடத்தில் தேடிக் கண்டறிய உதவுகிறது.
2.
பொருத்துக :
(a) இணை தடுப்பூசி – 1. இளம்பிள்ளை வாதம்
(b) டாக்ஸாய்டு தடுப்பூசி – 2. ஹெபடைடிஸ்-B
(c) கொல்லப்பட்ட தடுப்பூசி – 3. தட்டம்மை
(d) அட்டென்யூட்டட் தடுப்பூசி – 4. டிப்தீரியா
(a) இணை தடுப்பூசி – 1. இளம்பிள்ளை வாதம்
(b) டாக்ஸாய்டு தடுப்பூசி – 2. ஹெபடைடிஸ்-B
(c) கொல்லப்பட்ட தடுப்பூசி – 3. தட்டம்மை
(d) அட்டென்யூட்டட் தடுப்பூசி – 4. டிப்தீரியா
Correct Answer: B [2 4 1 3]
விளக்கம்:
டிப்தீரியா – டாக்ஸாய்டு, சால்க் போலியோ (IPV) – கொல்லப்பட்ட தடுப்பூசி, தட்டம்மை – உயிருள்ள வலுவிழந்த தடுப்பூசி; இவற்றுக்குப் பொருந்துவது (B) மட்டுமே.
3.
திராட்சை செல் வளர்ப்பில் எது நிறைந்துள்ளது?
Correct Answer: B [அந்தோசயனின்]
விளக்கம்:
திராட்சை (Vitis vinifera) செல் வளர்ப்புகள் அந்தோசயனின் நிறமிகளை உற்பத்தி செய்வதற்கான முக்கிய அமைப்பாகும்.
4.
கூற்று [A] : அமிலமழை என்பது மழைநீர் அதிக அமிலத் தன்மையுடன் பொழிவது.
காரணம் [R] : எரிபொருட்களை எரிப்பதால் வளிமண்டலம் நைட்ரஜன் மற்றும் கந்தகத்தின் ஆக்ஸைடுகளை கொண்டுள்ளது.
காரணம் [R] : எரிபொருட்களை எரிப்பதால் வளிமண்டலம் நைட்ரஜன் மற்றும் கந்தகத்தின் ஆக்ஸைடுகளை கொண்டுள்ளது.
Correct Answer: D [[A] மற்றும் [R] இரண்டுமே சரி [R] என்பது [A]க்கு சரியான விளக்கம்]
விளக்கம்:
எரிபொருள் எரிப்பால் வெளியாகும் SO₂, NOₓ மழைநீரில் கரைந்து கந்தக, நைட்ரிக் அமிலங்களாகி மழையை அமிலத் தன்மையாக்குகின்றன (pH 5.6-க்குக் கீழ்).
5.
பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(i) சிலிகோன் ரப்பர் – உடல் திரவங்களுடன் வினைபுரியாது
(ii) பிளாஸ்டிசைசர் – நெகிழியை உடையச் செய்யும்
(iii) லேமினேட் – பிசின் மற்றும் ஒட்டிகளின் கலவை
(iv) நிரப்பி – இயந்திர பண்புகளை மேம்படுத்த
(i) சிலிகோன் ரப்பர் – உடல் திரவங்களுடன் வினைபுரியாது
(ii) பிளாஸ்டிசைசர் – நெகிழியை உடையச் செய்யும்
(iii) லேமினேட் – பிசின் மற்றும் ஒட்டிகளின் கலவை
(iv) நிரப்பி – இயந்திர பண்புகளை மேம்படுத்த
Correct Answer: B [(ii) மட்டும்]
விளக்கம்:
பிளாஸ்டிசைசர் நெகிழியை மென்மையாகவும் வளையும் தன்மையுடனும் ஆக்குகிறது (எ.கா. PVC-ல் தாலேட்டுகள்); உடையச் செய்வதில்லை. மற்ற மூன்றும் சரி.
6.
2024, அக்டோபர் 4 முதல் 10 வரையிலான ஒரு வாரத்தில் எந்த கருத்துருவின் அடிப்படையில் "உலக விண்வெளி வாரம் 2024" கொண்டாடப்பட்டது?
Correct Answer: A [விண்வெளி மற்றும் காலநிலை மாற்றம்]
விளக்கம்:
உலக விண்வெளி வாரம் 2024 (அக். 4–10) கருப்பொருள்: 'விண்வெளி மற்றும் காலநிலை மாற்றம்'.
7.
பின்வருவனவற்றுள் எவை தவறாகப் பொருத்தப்பட்டுள்ளன?
(1) 2016 – மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்
(2) 1992 – தேசிய அறக்கட்டளை சட்டம்
(3) 2013 – தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்
(4) 1999 – புனர்வாழ்வு மன்றச் சட்டம்
(1) 2016 – மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்
(2) 1992 – தேசிய அறக்கட்டளை சட்டம்
(3) 2013 – தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்
(4) 1999 – புனர்வாழ்வு மன்றச் சட்டம்
Correct Answer: D [(2) மற்றும் (4) தவறானவை]
விளக்கம்:
தேசிய அறக்கட்டளை சட்டம் 1999-லும், இந்திய புனர்வாழ்வு மன்றச் சட்டம் 1992-லும் இயற்றப்பட்டன; (2), (4) ஆண்டுகள் இடம் மாறியுள்ளன. RPwD 2016, NFSA 2013 சரி.
8.
POCSO சட்டம் 2012ன் கீழ், எந்த ஒரு நபரும் ஒரு குற்றத்தை காவல் துறையிடம் புகாரளிக்கத் தவறினால், பின்வருவனவற்றில் எதனால் தண்டிக்கப்படுவார்?
Correct Answer: C [6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்]
விளக்கம்:
POCSO சட்டம் பிரிவு 21(1): குற்றத்தைப் புகாரளிக்கத் தவறினால் 6 மாதம் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.
9.
அட்டவணைப்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (அட்டூழியங்கள் தடுப்பு) சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
Correct Answer: A [1989]
விளக்கம்:
SC/ST (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989-ஆம் ஆண்டு சட்டம் எண் 33; 30.01.1990 முதல் நடைமுறைக்கு வந்தது.
10.
கூற்று [A] : சமூக ஒடுக்குமுறையின் சங்கிலிகளை உடைப்பதில் நவீன கல்விமுறை முக்கிய பங்கு வகிக்கிறது.
காரணம் [R] : தாழ்த்தப்பட்ட மக்களிடையே காணப்படும் கல்வியின்மை அவர்களை தாழ்ந்த தொழில்களை மேற்கொள்ளச் செய்கிறது.
காரணம் [R] : தாழ்த்தப்பட்ட மக்களிடையே காணப்படும் கல்வியின்மை அவர்களை தாழ்ந்த தொழில்களை மேற்கொள்ளச் செய்கிறது.
Correct Answer: B [[A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A] இன் சரியான விளக்கம்]
விளக்கம்:
கல்வி மறுக்கப்பட்டதால் ஒடுக்கப்பட்டோர் தாழ்ந்த பரம்பரைத் தொழில்களில் முடங்கினர்; நவீன கல்வி வேலைவாய்ப்பும் சமூக முன்னேற்றமும் தந்து ஒடுக்குமுறையை உடைத்தது – R, A-ஐ விளக்குகிறது.
11.
கீழ்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது?
(1) PMSSY – Pradhan Mantri Swasthya Suraksha Yojana (Prime Minister Health Protection Programme)
(2) NTEP – National Tobacco Elimination Programme
(3) NVBDCP – National Vector Borne Disease Control Programme
(4) JSSK – Janani Shiksha Suraksha Karyakram (Mother Education Protection Programme)

Correct Answer: C [(1) மற்றும் (3) சரியானவை]
விளக்கம்:
NTEP = தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம்; JSSK = ஜனனி சிசு சுரக்ஷா காரியக்ரம் (தாய்–சேய் இலவச சிகிச்சை); PMSSY, NVBDCP சரி.
12.
'முதல்வரின் காலை உணவு திட்டம்' பற்றிய குறிப்புடன்; பின்வரும் அறிக்கையைக் கவனியுங்கள்.
(1) இந்த திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.
(2) மாநிலத்திலுள்ள அனைத்து தொடக்க பள்ளிகளிலும் இது செயல்படுத்தப்படும்.
(3) இந்த திட்டம் இந்தியாவில் ஒரு முன்னோடி திட்டம் மற்றும் மற்றவர்கள் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாகும்.
கீழே கொடுக்கப்பட்ட குறியீட்டை பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும் :

Correct Answer: C [(1) மற்றும் (3) மட்டும்]
விளக்கம்:
இத்திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது (15-09-2022); பிற மாநிலங்கள் பின்பற்றும் முன்னோடித் திட்டம். ஆனால் இது அரசு (பின்னர் அரசு உதவி பெறும்) தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டுமே; 'அனைத்துத் தொடக்கப் பள்ளிகளுக்கும்' அல்ல. எனவே (2) தவறு.
13.
தமிழ்நாட்டில் முதல்வர் டாஷ்போர்டின் முதன்மைப் பங்கு என்ன?
(i) சுற்றுலாத் துறையின் புள்ளி விவரங்களைத் தருவது
(ii) அரசு துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது
(iii) சுகாதாரச் சேவைகளை நிர்வகிப்பது
(i) சுற்றுலாத் துறையின் புள்ளி விவரங்களைத் தருவது
(ii) அரசு துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது
(iii) சுகாதாரச் சேவைகளை நிர்வகிப்பது
Correct Answer: B [(ii) மட்டும்]
விளக்கம்:
முதல்வர் டாஷ்போர்டு அரசுத் துறைகள், திட்டங்களின் முக்கியச் செயல்திறன் குறியீடுகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் கருவி.
14.
கூற்று [A] : மாவட்டங்களிடையே மக்கள் தொகை மாற்றம் வேறுபடுகிறது.
காரணம் [R] : அதிக பொருளாதார வளர்ச்சி கொண்ட மாவட்டங்கள் அதிக மக்களை ஈர்க்கின்றன.
காரணம் [R] : அதிக பொருளாதார வளர்ச்சி கொண்ட மாவட்டங்கள் அதிக மக்களை ஈர்க்கின்றன.
Correct Answer: D [[A] மற்றும் [R] சரி, மற்றும் [R] என்பது [A]வை சரியாக விளக்குகிறது]
விளக்கம்:
பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாவட்டங்கள் (சென்னை, கோவை, திருப்பூர்) குடிபெயர்வோரை ஈர்ப்பதால் மாவட்டங்களிடையே மக்கள்தொகை மாற்றம் வேறுபடுகிறது.
15.
2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட் திட்டங்களின் அம்சங்களில் பின்வருவனவற்றில் எது உண்மை?
(1) முதலமைச்சரின் தரிசு நில மேம்பாட்டு இயக்கம் நீர்ப்பாசனம் சார்ந்த பயிர்களை இலக்காகக் கொண்டது.
(2) ஒருங்கிணைந்த பண்ணை முறை பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பையும் கொண்டது
(3) நெல் ஜெயராமன் இயக்கம் மூலமாக பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்தல்

Correct Answer: C [(2) மற்றும் (3) மட்டும்]
விளக்கம்:
முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் மழைசார் நிலங்களுக்கானது – (1) தவறு; ஒருங்கிணைந்த பண்ணையம் பயிர் + கால்நடை; நெல் ஜெயராமன் இயக்கம் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கிறது.
16.
தமிழ்நாட்டின் GSDP வளர்ச்சி விகிதம் நிலையான விகிதத்தில் 2022-23ல் 8.13% ஆகவும் 2023-24ல் ________% ஆகவும் இருந்தது.
Correct Answer: B [8.23%]
விளக்கம்:
தமிழக அரசு செய்திக் குறிப்பு (21.10.2024): நிலையான விலையில் GSDP வளர்ச்சி 2022-23ல் 8.13%, 2023-24ல் 8.23%.
17.
2017 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளியின் பெயரைக் குறிப்பிடுக.
Correct Answer: B [ஒக்கி]
விளக்கம்:
ஒக்கி புயல் (29 நவ. – 6 டிச. 2017) கன்னியாகுமரி மாவட்டத்தையும் கேரளக் கடலோரத்தையும் பெரிதும் பாதித்தது; பல மீனவர்கள் உயிரிழந்தனர்.
18.
பிரண்ட்லன்ட் அறிக்கையின் தலைப்பு
Correct Answer: C [நமது பொதுவான எதிர்காலம்]
விளக்கம்:
கிரோ ஹார்லம் பிரண்ட்லன்ட் தலைமையிலான உலக சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் 1987 அறிக்கை 'நமது பொதுவான எதிர்காலம்'; நிலையான வளர்ச்சியை வரையறுத்தது.
19.
நெடுவரிசை-I ஐ நெடுவரிசை-II உடன் பொருத்தி, விடைக் குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :
(a) உயிர் பகுப்பாய்வு உயிரினங்கள் – 1. வெஸ்புலா ஜெர்மானிக்கா
(b) திரட்டி இனங்கள் – 2. பனை மரம்
(c) மைல்கல் இனங்கள் – 3. மரப்பேன்
(d) அயல்நாட்டு இனங்கள் – 4. ட்ரௌட் மீன்
(a) உயிர் பகுப்பாய்வு உயிரினங்கள் – 1. வெஸ்புலா ஜெர்மானிக்கா
(b) திரட்டி இனங்கள் – 2. பனை மரம்
(c) மைல்கல் இனங்கள் – 3. மரப்பேன்
(d) அயல்நாட்டு இனங்கள் – 4. ட்ரௌட் மீன்
Correct Answer: C [4 3 2 1]
விளக்கம்:
ட்ரௌட் மீன் – நச்சுச் சோதனை உயிரி; மரப்பேன் – கன உலோகங்களைத் திரட்டும்; பனை – மைல்கல் (கீஸ்டோன்) இனம்; வெஸ்புலா ஜெர்மானிக்கா (ஜெர்மன் குளவி) – அயல் ஆக்கிரமிப்பு இனம்.
20.
உயிர்க்கோள காப்பிடம் பற்றிய பின்வரும் குறிப்புகளை கருத்தில் கொண்டு எந்த ஒரு உயிர்க்கோள காப்பிடத்திற்கு பொருந்துகிறது என்று தேர்ந்தெடுக்கவும்.
(a) இது ஒரு மிகப்பெரிய அடுத்தடுத்த சதுப்பு நில பரப்பு
(b) வெப்பமண்டல அரை பசுமை மாறா காடு
(c) விவசாய அமைப்புகள், சில்விகல்சர், மீன்வளர்ப்பு, மற்றும் இறால் வளர்ப்பு
(d) உலகளாவிய மிகப்பெரிய மங்கல் உயிரிய பல்வகைமை மற்றும் இதன் முக்கிய பகுதிகள் உலக பாரம்பரிய தளமாக வடிவமைந்துள்ளது.
உயிர்க்கோள காப்பிடம் என்பது :

Correct Answer: D [சுந்தரவன சதுப்புநில உயிர்க்கோள காப்பிடம்]
விளக்கம்:
சுந்தரவனம் உலகின் மிகப்பெரிய தொடர்ச்சியான சதுப்புநிலக் காடு; அதிக அலையாத்தித் தாவர வகைமை; அதன் மையப் பகுதி (சுந்தரவன தேசியப் பூங்கா) யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளம் (1987).
21.
கன்னியாகுமரி மாவட்டம் ________ கிராமத்தில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டது.
Correct Answer: D [முத்தலக்குறிச்சி]
விளக்கம்:
9.06.2022 அன்று பாரத்நெட் (TANFINET) ஆப்டிகல் ஃபைபர் பதிக்கும் பணியை முதல்வர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் முத்தலக்குறிச்சி கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
22.
பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(1) இந்து சமய அறநிலைத்துறை சட்டம் – 1925
(2) மெட்ராஸ் மாநில உதவி பெறும் தொழில்துறை சட்டம் – 1923
(3) அண்ணாமலை பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது – 1929
(4) ஈ.வெ. ராமசாமி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார் – 1930

Correct Answer: A [(2) மற்றும் (4) சரியானவை இல்லை]
விளக்கம்:
சென்னை மாநில தொழில் உதவிச் சட்டம் 1922-இல் நிறைவேறியது; பெரியார் சுயமரியாதை இயக்கத்தை 1925-இல் தொடங்கினார். இந்து சமய அறநிலையச் சட்டம் (1925), அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1929) சரி.
23.
சான்றாண்மை என்னும் மண்டபத்தைத் தாங்கும் தூண்கள் எவை? என்பதைத் தெரிவு செய்க.
(i) அன்பு, நாணம்
(ii) சுணக்கம், பிணக்கம்
(iii) மானம், வானம்
(iv) ஒப்புரவு, உண்மை, கண்ணோட்டம்
(i) அன்பு, நாணம்
(ii) சுணக்கம், பிணக்கம்
(iii) மானம், வானம்
(iv) ஒப்புரவு, உண்மை, கண்ணோட்டம்
Correct Answer: C [(i), (iv) மட்டும் சரி]
விளக்கம்:
திருக்குறள் 983: 'அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண்' – அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள்.
24.
கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்று/கூற்றுகளை தேர்ந்தெடுக்கவும்.
(a) திட்டமிட்ட நகரம், தானியக் கிடங்கு மற்றும் உறை கிணறுகள் அரிக்கமேட்டில் கண்டெடுக்கப்பட்டன
(b) சேரர்கள் காவேரி டெல்டா பகுதியை ஆட்சி செய்தனர். அவர்களின் தலைநகரம் உறையூர் ஆகும்
(c) சோழர்களின் சின்னம் புலி ஆகும். அவர்கள் புலி உருவம் பொறித்த சதுர வடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்கள்
(d) சங்க காலம் வெண்கலக் காலத்தில் இருந்து வேரூன்றத் தொடங்கியது

Correct Answer: C [(a) மற்றும் (c) சரி]
விளக்கம்:
அரிக்கமேட்டில் திட்டமிட்ட குடியிருப்பு, கிடங்கு, உறைக்கிணறுகள் கிடைத்தன; புலிச் சின்னம் கொண்ட சோழர் புலி பொறித்த சதுரச் செம்பு நாணயங்களை வெளியிட்டனர். காவிரி டெல்டா/உறையூர் சோழருடையது; சங்க காலம் இரும்புக் காலத்தில் வேரூன்றியது.
25.
தனித்தமிழ் இயக்கத்தின் விளைவுகள் :
(1) சமஸ்கிருதம் மற்றும் ஆங்கில மொழிகளின் உதவியின்றியே தமிழ்மொழி இயங்கவல்லதென நிறுவுதல்
(2) சங்கத் தமிழர் காத்து வளர்த்த தூய தமிழைக் கட்டிக்காத்தல்
(3) இந்தி மொழி ஆதிக்கத்தை மட்டும் எதிர்த்துச் செயல்படுதல்
(4) இந்தி மொழியை அகற்றி ஆங்கிலத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளுதல்

Correct Answer: A [(1) மற்றும் (2) சரி]
விளக்கம்:
மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கம் (1916) வடமொழி, ஆங்கிலக் கலப்பின்றித் தமிழ் இயங்க வல்லது என நிறுவி, சங்கத் தூய தமிழைக் காத்தது; அது இந்தி எதிர்ப்பு அல்லது ஆங்கில ஏற்பு இயக்கம் அல்ல.
26.
பின்வரும் சொற்றொடர்களில் எது/எவை சரியானவை?
(1) நீதிக்கட்சியின் கூட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்றன.
(2) இந்தியதேசிய காங்கிரசின் கூட்டங்கள், பொது மக்களைக் கவருவதற்காக, தமிழிலும் நடந்தன.
(3) 1927 ஆம் ஆண்டு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Correct Answer: D [(1), (2) மற்றும் (3) சரியானவை]
விளக்கம்:
நீதிக்கட்சிக் கூட்டங்கள் ஆங்கிலத்தில் நடந்தன; மக்களைக் கவர காங்கிரஸ் தமிழையும் பயன்படுத்தியது; டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1927-இல் சட்ட மேலவை துணைத் தலைவரானார்.
27.
சென்னை மகாஜன சபை எப்போது தொடங்கப்பட்டது?
Correct Answer: C [மே 16, 1884]
விளக்கம்:
சென்னை மகாஜன சபை 16 மே 1884 அன்று எம். வீரராகவாச்சாரி, ஜி. சுப்பிரமணிய ஐயர், பி. ஆனந்தசார்லு முதலியோரால் தொடங்கப்பட்டது; முதல் தலைவர் பி. ரங்கையா நாயுடு.
28.
பின்வரும் தமிழறிஞர்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
(1) மாயூரம் வேதநாயகம் பிள்ளை
(2) வேதநாயக சாஸ்திரியார்
(3) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
(4) எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
(1) மாயூரம் வேதநாயகம் பிள்ளை
(2) வேதநாயக சாஸ்திரியார்
(3) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
(4) எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
Correct Answer: C [(2), (1), (4), (3)]
விளக்கம்:
வேதநாயக சாஸ்திரியார் (பி. 1774), மாயூரம் வேதநாயகம் பிள்ளை (பி. 1826), எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை (பி. 1827), ஆபிரகாம் பண்டிதர் (பி. 1859) – வரிசை 2, 1, 4, 3.
29.
பேசின் உடன்படிக்கை (1802) தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
(i) பேசின் உடன்படிக்கை பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் மற்றும் ஆங்கிலேயருக்கு இடையில் கையெழுத்தானது.
(ii) பேஷ்வா 26 லட்சம் ரூபாய் வருமானம் தரும் பிரதேசங்களைக் கம்பெனிக்கு நிரந்தரமாக விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டார்.
(iii) பேஷ்வா சூரத் நகரைக் கம்பெனியிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டார்.

Correct Answer: D [(i), (ii) மற்றும் (iii)]
விளக்கம்:
பேசின் உடன்படிக்கை (31.12.1802): இரண்டாம் பாஜிராவ் துணைப்படைத் திட்டத்தை ஏற்று, ஆண்டுக்கு ரூ.26 லட்சம் வருமானம் தரும் பகுதிகளையும் சூரத் நகரையும் கம்பெனிக்கு விட்டுக்கொடுத்தார்.
30.
கொள்கை மற்றும் திட்டம் தொடர்பாக V.N. காட்கில் குழு உருவாக்கப்பட்ட ஆண்டு
Correct Answer: D [1988]
விளக்கம்:
வி.என். காட்கில் தலைமையிலான கொள்கை மற்றும் திட்டக் குழு 1988-ல் அமைக்கப்பட்டது; பஞ்சாயத்து ராஜ் அமைப்புக்கு அரசியலமைப்பு அந்தஸ்து பரிந்துரைத்தது (64-வது திருத்த மசோதா 1989).
31.
கீழ்க்கண்டவற்றில் சரியான பொருத்தத்தைக் கண்டறிக.
அமைப்புகள் – விதிகள்
(1) பாராளுமன்றம் – 124 முதல் 147
(2) ஒன்றிய நீதித்துறை – 79 முதல் 122
(3) அரசு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடு – 36 முதல் 51
(4) அரசு பணியாளர் தேர்வாணையம் – 315 முதல் 323
அமைப்புகள் – விதிகள்
(1) பாராளுமன்றம் – 124 முதல் 147
(2) ஒன்றிய நீதித்துறை – 79 முதல் 122
(3) அரசு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடு – 36 முதல் 51
(4) அரசு பணியாளர் தேர்வாணையம் – 315 முதல் 323
Correct Answer: D [(3) மற்றும் (4) சரி]
விளக்கம்:
பாராளுமன்றம் – விதிகள் 79–122, ஒன்றிய நீதித்துறை – 124–147 (இடம் மாறியுள்ளன); வழிகாட்டு நெறிமுறைகள் 36–51, பணியாளர் தேர்வாணையங்கள் 315–323 சரி.
32.
தமிழ்நாட்டில், இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக, முதலமைச்சரை, மக்கள் "தாயுமானவர்" என்று அழைக்கின்றனர்.
Correct Answer: A [பள்ளியில் காலை உணவு]
விளக்கம்:
பள்ளிக் குழந்தைகளுக்குத் தாயைப் போலக் காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் (2022) முதல்வர் 'தாயுமானவர்' எனப் போற்றப்பட்டார்.
33.
அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுக்களுள் எவை சரியானவை?
(i) கோயமுத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் இத்திட்டத்தால் பலனடைகின்றன.
(ii) ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளிங்கராயன் அணையிலிருந்து 1.5 டி.எம்.சி உபரி நீரை இத்திட்டத்திற்காக எடுக்க உத்தேசிக்கப்பட்டது.
(iii) இத்திட்டம் 2456.41 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு, மேற்குறிப்பிட்ட மாவட்டங்களின் 28,464 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன நீர் வழங்குகிறது.

Correct Answer: C [(i) மற்றும் (ii) மட்டும்]
விளக்கம்:
இத்திட்டம் (17.08.2024 திறப்பு) காளிங்கராயன் அணைக்கட்டுக் கீழ்ப்புறத்திலிருந்து பவானி உபரிநீர் 1.5 டி.எம்.சி-யை ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட 1,045 குளங்களுக்கு நீரேற்றுகிறது; செலவு ரூ.1,916.41 கோடி, பயன் 24,468 ஏக்கர் – (iii) தவறு.
34.
தமிழ்நாடு அரசால் துவங்கப்பட்டுள்ள 'நீங்கள் நலமா' என்னும் திட்டமானது
Correct Answer: D [இவைகள் அனைத்தும்]
விளக்கம்:
'நீங்கள் நலமா' (06.03.2024) – முதல்வரும் அலுவலர்களும் பயனாளிகளை நேரடியாகத் தொடர்புகொண்டு திட்டங்கள் சென்றடைகின்றனவா எனக் கருத்துக் கேட்கும் மின்-ஆளுகைத் திட்டம்; மக்கள்–அரசு இடைவெளியைக் குறைக்கிறது.
35.
தமிழ்நாடு மின்னணு கழக நிறுவனத்தின் (ELCOT) கீழ்கண்ட கூற்றுகளின் அடிப்படையில் சரியான விடையை தேர்ந்தெடுக்க.
(i) எல்காட் நிறுவனமானது கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாகும்
(ii) இதன் பகுதியளவு, தமிழக அரசுக்கு சொந்தமுடையதாகும்
(iii) தமிழக அரசாங்கத்தின் தகவல் தொழிற்நுட்பம் மற்றும் அது சார்ந்த உள்கட்டமை வளர்ச்சிக்கான சிறப்பு நிறுவனம் ஆகும்
(iv) இந்நிறுவனம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும்

Correct Answer: A [(iii) மற்றும் (iv) மட்டும் சரியானது]
விளக்கம்:
எல்காட் 1977-ல் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் தமிழக அரசின் முழு உரிமையுள்ள நிறுவனமாக உருவாக்கப்பட்டது; மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்கான முதன்மை நிறுவனம்.
36.
iTNT ஹப் ________ அமைந்துள்ளது.
Correct Answer: A [அண்ணா பல்கலைக்கழகம்]
விளக்கம்:
iTNT ஹப் (தமிழ்நாடு புத்தாக்கத் தொழில்நுட்ப வலையமைப்பு) – இந்தியாவின் முதல் ஆழ்-தொழில்நுட்ப புத்தாக்க மையம் – 2023-ல் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கப்பட்டது.
37.
மாவட்ட நிர்வாகத்தின் பரிணாம வளர்ச்சியை அவற்றுடன் தொடர்புடைய ஆண்டோடு சரியாக பொருத்தவும் :
(a) அதிகார பரவலாக்கம் மீதான ராயல் ஆணையம் – 1. 1772
(b) இந்திய சட்டமுறை ஆணையம் – 2. 1885
(c) வங்காள உள்ளூர் சுய ஆட்சி சட்டம் – 3. 1909
(d) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் – 4. 1927
(a) அதிகார பரவலாக்கம் மீதான ராயல் ஆணையம் – 1. 1772
(b) இந்திய சட்டமுறை ஆணையம் – 2. 1885
(c) வங்காள உள்ளூர் சுய ஆட்சி சட்டம் – 3. 1909
(d) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் – 4. 1927
Correct Answer: D [3 4 2 1]
விளக்கம்:
அதிகாரப் பரவலாக்க ராயல் ஆணைய அறிக்கை 1909; இந்தியச் சட்டமுறை (சைமன்) ஆணையம் 1927; வங்காள உள்ளாட்சிச் சட்டம் 1885; வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சியர் பதவியை 1772-ல் உருவாக்கினார்.
38.
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பற்றிய சரியான கூற்றுகளைக் கண்டறிக.
(i) பேரழிவுக்கான எதிர்வினைகளை ஒருங்கிணைத்து, அபாயங்களைக் குறைப்பதற்கு இது பொறுப்பு
(ii) தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகளைக் கண்காணிக்கும் தலைவராகத் தலைமைச் செயலாளர் செயல்படுகிறார்
(iii) மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் போது, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்களை மாநில அமைச்சரவை பின்பற்றுகிறது

Correct Answer: A [(i) மட்டும்]
விளக்கம்:
மாநிலப் பேரிடர் ஆணையம் எதிர்வினையை ஒருங்கிணைத்து அபாயத்தைக் குறைக்கிறது (i) சரி. அதன் தலைவர் முதலமைச்சர், தலைமைச் செயலாளர் அல்ல (ii). மாநிலத் திட்டத்தை அங்கீகரிப்பது ஆணையமே, அமைச்சரவை அல்ல (iii).
39.
பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
(1) ச. ராஜகோபாலாச்சாரி – சட்டமன்ற கீழவை
(2) பா.பி. மண்டல் – சட்டமன்ற மேலவை
(3) மொரார்ஜி தேசாய் – சட்டமன்ற மேலவை
(4) சி.என். அண்ணாதுரை – சட்டமன்ற மேலவை
(1) ச. ராஜகோபாலாச்சாரி – சட்டமன்ற கீழவை
(2) பா.பி. மண்டல் – சட்டமன்ற மேலவை
(3) மொரார்ஜி தேசாய் – சட்டமன்ற மேலவை
(4) சி.என். அண்ணாதுரை – சட்டமன்ற மேலவை
Correct Answer: C [(2) மற்றும் (3) சரியானவை]
விளக்கம்:
சட்டமன்ற மேலவை உறுப்பினராக முதல்வரானவர்கள் பற்றியது: ராஜாஜி (1952) நியமன மேலவை உறுப்பினர் – கீழவை அல்ல, எனவே (1) தவறு; A, B, D நீங்க, (2) பி.பி. மண்டல், (3) மொரார்ஜி தேசாய் சரி.
40.
கீழ்க்காணப்படும் பட்டியல்களைப் பொருத்திச் சரியான விடையைத் தேர்வு செய்க.
மத்திய அமைச்சர் வகை – பணி
(a) அமைச்சர் குழு – 1. இவர் இராஜாங்க அமைச்சரின் கீழ்ப் பணி புரியமாட்டார்
(b) தனி இலாக்காவுடைய மத்திய அமைச்சர் – 2. அனைத்து அமைச்சரவை கூட்டத்திலும் கலந்து கொண்டு பங்கு பெற வேண்டும்
(c) மத்திய அமைச்சர் – 3. இவர் இராஜாங்க அமைச்சர் கீழ்ப் பணி புரிய வேண்டும்
(d) இணை அமைச்சர் – 4. இவருக்குத் தனி இலாகாவுடைய துறைகள் ஒதுக்கப்படமாட்டாது

Correct Answer: A [2 1 4 3]
விளக்கம்:
கேபினட் அமைச்சர் – எல்லா அமைச்சரவைக் கூட்டங்களிலும் பங்கேற்பார்; தனிப் பொறுப்புடைய இணையமைச்சர் – கேபினட் அமைச்சரின் கீழ் இல்லை; இணையமைச்சர் – தனித் துறைப் பொறுப்பு இல்லை; துணை அமைச்சர் – கேபினட் அமைச்சருக்கு உதவியாகப் பணியாற்றுவார்.
41.
கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்
(1) அரசமைப்பு விதி 19 மூலம் உத்திரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் அனைத்தும் நெருக்கடி நிலை காலத்தில் தானாகவே இடைநிறுத்தப்படும்.
(2) அரசமைப்பு விதி 359-கீழ் சில உரிமைகளை இடைநிறுத்த குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
(3) சில உரிமைகள் இந்திய குடிமகனுக்கு மட்டுமே கிடைக்கும்
(4) இராணுவத்தில் பணியாற்றும் நபர்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.

Correct Answer: D [(4) மட்டும்]
விளக்கம்:
விதி 33 – ஆயுதப் படையினரின் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்த/நீக்க (வழங்க அல்ல) நாடாளுமன்றத்துக்கு அதிகாரம்; விதி 358 – விதி 19 தானாக இடைநிறுத்தம்; விதி 359 – குடியரசுத் தலைவர்; விதிகள் 15, 16, 19, 29, 30 குடிமக்களுக்கு மட்டும்.
42.
கூற்று [A] : அசாம் மறுசீரமைப்பு (மேகாலயா) சட்டம் 1969 மூலம் அசாம் மாநிலத்திற்குள் மேகாலயா என்ற தன்னாட்சி துணை மாநிலம் நிறுவப்பட்டது.
காரணம் [R] : மாநில ஆட்சித்துறை மற்றும் சட்டமன்றம் விரும்பினால் கூட்டமைப்பின் அலகுகளின் நிலப்பகுதியை மாற்றலாம் அல்லது மறுபகிர்வு செய்யலாம்.
காரணம் [R] : மாநில ஆட்சித்துறை மற்றும் சட்டமன்றம் விரும்பினால் கூட்டமைப்பின் அலகுகளின் நிலப்பகுதியை மாற்றலாம் அல்லது மறுபகிர்வு செய்யலாம்.
Correct Answer: A [[A] சரி ஆனால் [R] தவறு]
விளக்கம்:
நாடாளுமன்றம் இயற்றிய அசாம் மறுசீரமைப்பு (மேகாலயா) சட்டம் 1969 மேகாலயாவை அசாமுக்குள் தன்னாட்சி மாநிலமாக்கியது (1972-ல் முழு மாநிலம்); விதி 3-ன்படி மாநில எல்லைகளை மாற்ற நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம்.
43.
இந்திய அரசியலமைப்பின் "குறிக்கோள் தீர்மானம்" தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
(1) இந்தத் தீர்மானத்தை எழுதியவர் Dr.B.R. அம்பேத்கர்.
(2) இது ஜனவரி 22, 1947 அன்று அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
(3) இந்தியாவை இறையாண்மையுள்ள, சோசலிச, ஜனநாயகக் குடியரசாக அறிவிப்பதே இத்தீர்மானத்தின் குறிக்கோளாகும்.
(4) இத்தீர்மானம் பின்னர் இந்திய அரசியலமைப்பின் முகவுரையாக வடிவமைக்கப்பட்டது.

Correct Answer: B [(2) மற்றும் (4)]
விளக்கம்:
குறிக்கோள் தீர்மானத்தை ஜவஹர்லால் நேரு முன்மொழிந்தார் (13.12.1946); 22.01.1947-ல் ஏற்கப்பட்டு பின்னர் முகவுரையானது; அதில் 'சுதந்திர இறையாண்மைக் குடியரசு' மட்டுமே – 'சோசலிச' 1976-ல் சேர்க்கப்பட்டது.
44.
மிகச்சரியான மாற்று விடையைத் தேர்வு செய்க.
ஒரு தொழிற்சாலையில் எப்பொழுதும் இருப்பது
ஒரு தொழிற்சாலையில் எப்பொழுதும் இருப்பது
Correct Answer: C [தொழிலாளர்கள்]
விளக்கம்:
தொழிலாளர்கள் இல்லாமல் தொழிற்சாலை இயங்காது; மின்சாரம், புகைபோக்கி, கோப்புகள் எல்லாத் தொழிற்சாலைக்கும் கட்டாயமல்ல.
45.
366 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தின் பக்கங்களை எண்ணுவதில் பயன்படுத்தப்படும் மொத்த இலக்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Correct Answer: B [990]
விளக்கம்:
1–9: 9 இலக்கங்கள்; 10–99: 90×2 = 180; 100–366: 267×3 = 801; மொத்தம் 9+180+801 = 990.
46.
இடப்புறத்திலிருந்து ஒன்பதாவது, வலப்புறத்திலிருந்து பதினைந்தாவது, இவை இரண்டிற்கும் மத்தியில் உள்ளது எது?
δ=βF2*KS75#$PLVS@MUE6↑QG93&TY
δ=βF2*KS75#$PLVS@MUE6↑QG93&TY
Correct Answer: B [$]
விளக்கம்:
'=' உட்பட 29 குறியீடுகள்: இடமிருந்து 9-வது 7 (இடம் 9), வலமிருந்து 15-வது V (இடம் 15); நடு இடம் 12-ல் '$' உள்ளது.
47.
ஒரு நாயானது தெற்கு திசை நோக்கி 50 அடி தூரம் ஓடிய பிறகு இடது புறம் திரும்பி 20 அடி தூரம் ஓடுகிறது மீண்டும் இடது புறம் திரும்பி 7 அடி தூரம் ஓடிய பிறகு, இடது புறம் திரும்பி 6 அடி தூரம் ஓடுகிறது. மீண்டும் வலது புறம் திரும்பி 15 அடி தூரம் ஓடிய பிறகு இறுதியாக வலது புறம் திரும்பி 5 அடி தூரம் ஓடுகிறது. தற்போது அந்த நாய் எந்த திசை நோக்கி இருக்கும்?
Correct Answer: A [கிழக்கு]
விளக்கம்:
திசை: தெற்கு → இடது = கிழக்கு → இடது = வடக்கு → இடது = மேற்கு → வலது = வடக்கு → வலது = கிழக்கு.
48.
A ஆனது B க்கு வடகிழக்கு திசையில் 50 மீ தூரத்திலும் B ஆனது C க்கு வடமேற்கு திசையில் 50 மீ தூரத்திலும் இருப்பின், A க்கு எந்த திசையில் C இருக்கும்?
Correct Answer: C [தெற்கு]
விளக்கம்:
A-லிருந்து B தென்மேற்கில், B-லிருந்து C தென்கிழக்கில் சம தூரம்; கிழக்கு–மேற்கு பகுதிகள் சமனாகி C, A-க்கு நேர் தெற்கில் உள்ளது.
மேலும் வினாடி வினாக்கள்
› Group 2A Mains – Daily Practice 1 (2 November 2026)
› குரூப் 2A Mains – தினசரிப் பயிற்சி 1 (2 நவம்பர் 2026)
› குரூப் 2A Mains 2026 வினாத்தாள் – பகுதி 1 (வினா 1–54)
› Group 2A Mains 2026 Question Paper – Part 1 (Q 1–54)
› குரூப் 2A Mains 2026 வினாத்தாள் – பகுதி 2 (வினா 55–107)
› Group 2A Mains 2026 Question Paper – Part 2 (Q 55–107)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
▶ புதிய வீடியோ · NEW VIDEO
அறிவோம் அரசியலமைப்பு | MAKING OF CONSTITUTION | UPSC Polity தமிழில் | NITHISH KUMAR
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai