குரூப் 2A Mains 2026 வினாத்தாள் – பகுதி 3 (வினா 108–157)
← திரும்பச் செல்ல
குரூப் 2A Mains 2026 வினாத்தாள் – பகுதி 3 (வினா 108–157) – 49 வினாக்கள், பாடம்: குரூப் 2A Mains. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
இவற்றில் எவை சரியானவை எனத் தெரிவு செய்க.
(i) மதுரை மாங்குளம் பகுதியில் ஐந்து தமிழிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
(ii) தமிழக வடஎல்லை ஆந்திரப் பகுதியில் இருந்து சமணம் தமிழகத்தில் பரவியது.
(iii) தமிழின் மிகத் தொன்மையான எழுத்தமைதி கொண்ட கல்வெட்டுகள் தமிழிக் கல்வெட்டுகள் எனப்படும்.
(iv) மதுரையைச் சுற்றி 24 இடங்களில் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட படுக்கைக் குகைகளைக் காண முடியும்.

Correct Answer: B [(i), (iii) மட்டும் சரி]
விளக்கம்:
தமிழின் மிகத் தொன்மையான எழுத்தில் உள்ள கல்வெட்டுகள் தமிழிக் கல்வெட்டுகள் (iii) சரி. சமணம் கர்நாடகம் வழியாகவே தமிழகம் வந்தது; ஆந்திரம் வழி அல்ல (ii). (i) அனைத்து விடைகளிலும் உள்ளது.
2.
பின்வரும் அறிக்கைகளை கவனியுங்கள் :
கூற்று [A] : அண்ணா அவரது பொருளாதாரக் கொள்கைக்கு விஞ்ஞான சோஷியலிசம் என்று பெயரிட்டார்.
காரணம் [R] : சமத்துவத்தை உண்டாக்கப் பாடுபடுவது சோஷியலிசம் என்று கூறினார்.
கூற்று [A] : அண்ணா அவரது பொருளாதாரக் கொள்கைக்கு விஞ்ஞான சோஷியலிசம் என்று பெயரிட்டார்.
காரணம் [R] : சமத்துவத்தை உண்டாக்கப் பாடுபடுவது சோஷியலிசம் என்று கூறினார்.
Correct Answer: B [[A] மற்றும் [R] இரண்டும் சரி]
விளக்கம்:
அண்ணா தம் பொருளாதாரக் கொள்கையை 'விஞ்ஞான சோஷியலிசம்' என்றார்; சமத்துவத்தை உண்டாக்கப் பாடுபடுவதே சோஷியலிசம் என்றும் விளக்கினார் – இரண்டும் சரி.
3.
சரியானவற்றை பொருத்துக.
(a) சைமன் குழு வருகை – 1. சென்னை
(b) வரிகொடா இயக்கம் – 2. வைக்கம்
(c) ஆலய நுழைவுப் போராட்டம் – 3. பம்பாய்
(d) நீல் சிலை சத்யாகிரகப் போராட்டம் – 4. பர்தோலி
(a) சைமன் குழு வருகை – 1. சென்னை
(b) வரிகொடா இயக்கம் – 2. வைக்கம்
(c) ஆலய நுழைவுப் போராட்டம் – 3. பம்பாய்
(d) நீல் சிலை சத்யாகிரகப் போராட்டம் – 4. பர்தோலி
Correct Answer: A [3 4 2 1]
விளக்கம்:
சைமன் குழு பம்பாயில் இறங்கியது; வரிகொடா இயக்கம் – பர்தோலி; ஆலய நுழைவு – வைக்கம்; நீல் சிலை சத்தியாகிரகம் – சென்னை.
4.
பின்வருவனவற்றுள் பொருந்தா சொற்றொடர் யாது?
(i) திராவிட நாடு என்ற பத்திரிக்கையை துவக்கினார்.
(ii) ஜெர்மன் நாடக மேதை இப்சனோடு சி.என். அண்ணாதுரையை ஒப்பிட்ட கல்கி கிருஷ்ண மூர்த்தி.
(iii) ஈ.வெ. ராமசாமி, அண்ணாதுரைக்கு 'அறிஞர்' என்ற பட்டம் வழங்கினார்.
(iv) 'சிவாஜி கண்ட ராஜ்யம்' என்ற நாடகத்தை சி.என். அண்ணாதுரை எழுதினார்.

Correct Answer: C [(iii) மட்டும்]
விளக்கம்:
அண்ணாவுக்கு 'அறிஞர்' பட்டம் வழங்கியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி; ஈ.வெ.ரா அல்லர்.
5.
சென்னையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாட்டினைப் பற்றிய கீழ்க்காண் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.
(i) இது சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது.
(ii) சென்னை மாகாணத்தைச் சேர்ந்த 236 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
(iii) ஆளுநர் கன்னிமாரா, பிரதிநிதிகளுக்கு சிறப்பான விருந்தளித்தார்.
(iv) ராவ்சாகிப் மூக்கணாச்சாரி வரவேற்புக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.
(i) இது சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது.
(ii) சென்னை மாகாணத்தைச் சேர்ந்த 236 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
(iii) ஆளுநர் கன்னிமாரா, பிரதிநிதிகளுக்கு சிறப்பான விருந்தளித்தார்.
(iv) ராவ்சாகிப் மூக்கணாச்சாரி வரவேற்புக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.
Correct Answer: C [(iii) மட்டும்]
விளக்கம்:
1887 சென்னை மாநாடு மக்கீஸ் தோட்டத்தில் நடந்தது; 607 பிரதிநிதிகள் (சென்னை 362); வரவேற்புக் குழுத் தலைவர் சர் டி. மாதவராவ்; ஆளுநர் கன்னிமாரா விருந்தளித்தார்.
6.
தனது எண்ணத்தை நிலைநிறுத்துவது, இதயத்தை வணங்குவது, கையின் வழிபாடு அல்ல, தன்னலம் அற்ற தியாகம், உடைமைகளை துறத்தல் என்பதை தெளிவுபடுத்தியவர் யார்?
Correct Answer: C [ராஜா ராம் மோகன் ராய்]
விளக்கம்:
பிரம்ம சபையை (1828) நிறுவிய ராஜா ராம்மோகன் ராய், கையால் அல்ல இதயத்தால் வழிபாடு, உடைமையை அல்ல தன்னையே அர்ப்பணித்தல் என்பதே தம் நோக்கம் என்றார்.
7.
தமிழகப் பாளையக்காரர்களை ஆங்கிலத் தளபதிகளுடன் சரியாகப் பொருத்துக.
(a) பூலித்தேவன் – 1. மெக்காலே
(b) கட்டபொம்மன் – 2. ஹெரான்
(c) ஊமைத்துரை – 3. ஹாரிஸ்
(d) தீரன் சின்னமலை – 4. பானர்மேன்
(a) பூலித்தேவன் – 1. மெக்காலே
(b) கட்டபொம்மன் – 2. ஹெரான்
(c) ஊமைத்துரை – 3. ஹாரிஸ்
(d) தீரன் சின்னமலை – 4. பானர்மேன்
Correct Answer: B [2 4 1 3]
விளக்கம்:
பூலித்தேவன் – ஹெரான்; கட்டபொம்மன் – பானர்மேன்; ஊமைத்துரை – மெக்காலே; தீரன் சின்னமலை – ஹாரிஸ் (திப்புவுடன் இணைந்து போரிட்டார்).
8.
பின்வரும் கூற்றையும், காரணத்தையும் படித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.
உறுதியான கூற்று [A] : திப்பு ஏப்ரல் 1790-ல் திருவிதாங்கூர் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்தார்.
காரணம் [R] : திருவிதாங்கூர் மன்னர் கொச்சியில் உள்ள டச்சுக்காரர்களிடமிருந்து ஜெய்க்கோட்டை மற்றும் கிராங்கனோரை விலைக்கு வாங்கினார்.

Correct Answer: C [[A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A] ன் சரியான விளக்கம்]
விளக்கம்:
திப்புவின் ஆதிக்கத்திலிருந்த கொச்சிப் பகுதியின் ஜெய்க்கோட்டை, கிராங்கனூரை திருவிதாங்கூர் டச்சுக்காரரிடம் வாங்கியதே திப்புவின் தாக்குதலுக்குக் காரணம் (மூன்றாம் மைசூர்ப் போர்).
9.
பின்வருவனவற்றில் தவறானதைப் பொருத்துக.
(1) டேவிட் கோட்டை – ஆங்கிலேயர்
(2) கெல்ட்ரியா கோட்டை – டேன்ஸ்
(3) தரங்கம்பாடி கோட்டை – டச்சு
(4) லூயி கோட்டை – பிரெஞ்சு
(1) டேவிட் கோட்டை – ஆங்கிலேயர்
(2) கெல்ட்ரியா கோட்டை – டேன்ஸ்
(3) தரங்கம்பாடி கோட்டை – டச்சு
(4) லூயி கோட்டை – பிரெஞ்சு
Correct Answer: B [(2) மற்றும் (3)]
விளக்கம்:
பழவேற்காடு கெல்ட்ரியா கோட்டை டச்சுக்காரருடையது; தரங்கம்பாடி (டேன்ஸ்பர்க்) கோட்டை டேனியருடையது – (2), (3) தவறு.
10.
தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தின் நோக்கம்
Correct Answer: B [பெண் சிசுக் கொலை என்ற தீமையை ஒழிக்க]
விளக்கம்:
1992-ல் தொடங்கிய தொட்டில் குழந்தைத் திட்டம் பெண் சிசுக் கொலையை ஒழிக்கும் நோக்கம் கொண்டது.
11.
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கான மாநில ஆணையர் பதவி உருவாக்கப்பட்ட வருடம்.
Correct Answer: D [1999]
விளக்கம்:
1992-ல் உருவான மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இயக்ககம் 1999-ல் மாநில ஆணையர் அலுவலகமாகத் தரம் உயர்த்தப்பட்டது.
12.
தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (சிப்காட்) நோக்கங்கள் என்ன?
(i) இது நடுத்தர தொழில்களுக்கான நிபந்தனைக் கடன்கள் வழங்கல்.
(ii) இது சிறு தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் வழங்கல்.
(iii) சிறு தொழில்கள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல்.
(i) இது நடுத்தர தொழில்களுக்கான நிபந்தனைக் கடன்கள் வழங்கல்.
(ii) இது சிறு தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் வழங்கல்.
(iii) சிறு தொழில்கள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல்.
Correct Answer: A [(i) மட்டும்]
விளக்கம்:
சிப்காட் நடுத்தர, பெரிய தொழில்களுக்குத் தொழிற்பூங்காக்களும் கடனும் வழங்குகிறது; சிறுதொழில் மூலப்பொருள், நிதி – சிட்கோ/டிட்கோ பணிகள்.
13.
சம்பூர்ணா கிராம தினசரி வேலை வாய்ப்புத் திட்டத்தின் முதன்மை நோக்கமானது?
(1) கூடுதல் ஊதியம் மற்றும் கிராம வேலைவாய்ப்பு.
(2) உணவுப் பாதுகாப்பை வழங்குவது மற்றும் சத்துக்களின் அளவை உயர்த்துவது.
(3) அதிக அளவுக்கு மக்களின் வேலை இன்மையை போக்குதல்.
(4) குழுக்களை உருவாக்குதல், சமூக பொருளாதார மற்றும் சமுதாய உள்கட்டமைப்பு முன்னேற்றங்களை கிராமத்தில் ஏற்படுத்துதல்.

Correct Answer: C [(1) மற்றும் (2) சரி]
விளக்கம்:
SGRY-ன் முதன்மை நோக்கம்: கிராமங்களில் கூடுதல் கூலி வேலைவாய்ப்பு, அதன்மூலம் உணவுப் பாதுகாப்பு, சத்துணவு மேம்பாடு; சொத்து உருவாக்கம் இரண்டாம் நிலை நோக்கம்.
14.
பின்வரும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளைப் படிநிலை வரிசைப்படுத்தவும்.
(1) வட்டாட்சியர்
(2) மாவட்ட வருவாய் அலுவலர்
(3) மாவட்ட ஆட்சியர்
(4) கோட்டாட்சியர்
(1) வட்டாட்சியர்
(2) மாவட்ட வருவாய் அலுவலர்
(3) மாவட்ட ஆட்சியர்
(4) கோட்டாட்சியர்
Correct Answer: D [(3), (2), (4), (1)]
விளக்கம்:
மாவட்ட ஆட்சியர் → மாவட்ட வருவாய் அலுவலர் → கோட்டாட்சியர் → வட்டாட்சியர்.
15.
சரியான இணைகளைத் தேர்ந்தெடுக்க
(1) தமிழ்நாட்டில் பொதுத்துறை உருவாக்கப்பட்டது – 1670
(2) தமிழ்நாட்டில் தலைமை செயலர் பதவி உருவாக்கப்பட்டது – 1800
(3) இராணுவ வாரியம் நிறுவப்பட்டது – 1796
(4) வருவாய் வாரியம் உருவாக்கப்பட்டது – 1838
(1) தமிழ்நாட்டில் பொதுத்துறை உருவாக்கப்பட்டது – 1670
(2) தமிழ்நாட்டில் தலைமை செயலர் பதவி உருவாக்கப்பட்டது – 1800
(3) இராணுவ வாரியம் நிறுவப்பட்டது – 1796
(4) வருவாய் வாரியம் உருவாக்கப்பட்டது – 1838
Correct Answer: A [(1) மற்றும் (2) மட்டும்]
விளக்கம்:
பொதுத்துறை 1670, தலைமைச் செயலர் பதவி 1800 – சரி; சென்னை வருவாய் வாரியம் 1786-ல் உருவானது, 1838 அல்ல.
16.
சரியான இணைகளைத் தெரிவு செய்க.
(1) சாலை போக்குவரத்து நிறுவனம் – போக்குவரத்து துறை
(2) தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவு திட்டம் – சமூக நல மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை
(3) தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் – தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை
(4) பயிற்சி துறை – மனிதவள மேம்பாட்டு துறை

Correct Answer: A [(1) மற்றும் (4) மட்டும் சரி]
விளக்கம்:
சாலைப் போக்குவரத்து நிறுவனம் – போக்குவரத்துத் துறை; பயிற்சித் துறை – மனிதவள மேலாண்மைத் துறை; முதலமைச்சர் ஆய்வுநல்கைத் திட்டம் சமூக நலத் துறையின் கீழ் இல்லை.
17.
தமிழ்நாடு அரசின் 'மக்களுடன் முதல்வர்' (மக்களுடன் முதலமைச்சர்) எனும் திட்டம் ________ உறுதி செய்கிறது.
Correct Answer: D [மக்களின் குறை தீர்ப்பை]
விளக்கம்:
'மக்களுடன் முதல்வர்' (2023) முகாம்கள் மூலம் மக்களின் மனுக்களைப் பெற்று விரைந்து குறை தீர்க்கிறது.
18.
பின்வரும் அறிக்கைகளை கவனியுங்கள் :
கூற்று [A] : அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காரணம் [R] : இது நகர்ப்புறங்களில் வீடற்றவர்களுக்குத் தங்குமிடங்களை உருவாக்கி வசதிகளை மேம்படுத்தக் கூடிய திட்டமாகும்.

Correct Answer: A [கூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு]
விளக்கம்:
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துகிறது; நகர்ப்புற வீடற்றோர் தங்குமிடம் வேறு திட்டம்.
19.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன் படி கிராமப் பஞ்சாயத்துக்களின் சில குறிப்பிட்ட விருப்புரிமைப் பணிகள் தொடர்பான பிரிவு
Correct Answer: A [111]
விளக்கம்:
பிரிவு 110 கட்டாயப் பணிகள்; பிரிவு 111 கிராம ஊராட்சியின் விருப்புரிமைப் பணிகள்.
20.
சரியான இணையை தெரிவு செய்க.
(i) பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றப்பட்டது – 1994
(ii) தேசிய ஊராட்சி தினம் – ஏப்ரல் 24
(iii) உள்ளாட்சி அமைப்பு உருவாக்கிய பிரிவு – விதி 244
(iv) உள்ளாட்சி அமைப்பில் SC/ST க்கு இட ஒதுக்கீடு – 73வது சட்டத்திருத்தம்

Correct Answer: C [(ii) மற்றும் (iv) சரி]
விளக்கம்:
தேசிய ஊராட்சி தினம் ஏப்ரல் 24; 73வது திருத்தம் (விதி 243D) SC/ST இடஒதுக்கீடு – சரி; பஞ்சாயத்து ராஜ் (73வது திருத்தச்) சட்டம் 1992; விதி 244 பழங்குடிப் பகுதிகள் பற்றியது.
21.
ஆளுநரின் அவசரச் சட்டம் இயற்றும் அதிகாரம் எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது?
Correct Answer: C [விதி – 213]
விளக்கம்:
விதி 213 – சட்டமன்றம் கூடாதபோது ஆளுநர் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம்.
22.
மாநில முதலமைச்சரின் நியமனம் குறித்த பின்வரும் எக்கூற்றுகள் சரியானவை?
(i) முதலமைச்சர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
(ii) மாநில சட்டமன்ற உறுப்பினர் இல்லாத ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படலாம்.
(iii) மற்ற அமைச்சர்கள் முதலமைச்சரின் ஆலோசனையின்பேரில் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.

Correct Answer: B [(ii) மற்றும் (iii) சரி]
விளக்கம்:
விதி 164: முதலமைச்சரை ஆளுநர் நியமிக்கிறார்; அவர் ஆலோசனைப்படி பிற அமைச்சர்கள்; உறுப்பினர் அல்லாதவர் 6 மாதம் வரை முதலமைச்சராகலாம்.
23.
கூற்று [A], காரணம் [R] வகை வினா :
கூற்று [A] : இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஆளுநரின் நன்மதிப்பை பெற்றிருக்கும் வரை முதலமைச்சர் பதவியில் தொடரலாம்.
காரணம் [R] : முதலமைச்சர் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்.
கூற்று [A] : இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஆளுநரின் நன்மதிப்பை பெற்றிருக்கும் வரை முதலமைச்சர் பதவியில் தொடரலாம்.
காரணம் [R] : முதலமைச்சர் மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்.
Correct Answer: A [[A] மற்றும் [R] சரி மற்றும் [A] க்கு [R] சரியான விளக்கம்]
விளக்கம்:
உறுப்பு 164(1): முதலமைச்சரை ஆளுநர் நியமிக்கிறார்; அமைச்சர்கள் ஆளுநரின் விருப்பம் உள்ளவரை பதவியில் இருப்பர்; நியமிப்பவரின் விருப்பமே பதவிக்காலத்தைத் தீர்மானிக்கிறது.
24.
இந்தியக் குடியரசு துணைத் தலைவரின் தகுதிகளில் சரியானவற்றை தேர்ந்தெடுக்க.
(i) இந்தியக் குடிமகனாக / குடிமகளாக இருக்க வேண்டும்.
(ii) 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
(iii) மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்வதற்குரிய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
(i) இந்தியக் குடிமகனாக / குடிமகளாக இருக்க வேண்டும்.
(ii) 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
(iii) மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்வதற்குரிய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
Correct Answer: C [(i) மற்றும் (ii) சரி]
விளக்கம்:
விதி 66(3): இந்தியக் குடிமகன், 35 வயது, மாநிலங்களவை (மக்களவை அல்ல) உறுப்பினர் தகுதி.
25.
பண மசோதாவை பற்றிய கீழ்கண்ட கூற்றை கருதவும்.
(i) பண மசோதாவை இரண்டு அவைகளில் ஏதேனும் ஒன்றில் கொண்டுவர முடியும்.
(ii) மாநிலங்கள் அவை பரிந்துரைத்த பண மசோதா மீதான பரிந்துரையை மக்களவை நிராகரிக்க முடியாது
(iii) பண மசோதா என்பது புதிய வரிகளை இயற்றுவது, நீக்குவது, மாற்றுவது ஆகியவற்றைக் கொண்டது
(iv) பண மசோதாவானது தொகுப்பு நிதியில் இருந்து பணம் எடுப்பதுடன் தொடர்புடையதாகும்.

Correct Answer: D [(iii) மற்றும் (iv) மட்டும் சரி]
விளக்கம்:
விதி 110: வரி விதிப்பு/நீக்கம், தொகுப்பு நிதியிலிருந்து செலவு – பண மசோதா; அது மக்களவையில் மட்டுமே தொடங்கும்; மாநிலங்களவை பரிந்துரைகளை மக்களவை நிராகரிக்கலாம்.
26.
கீழ்க்கண்ட இணைகளில் சரியானவற்றை தேர்ந்தெடு.
(1) சமத்துவ உரிமை – விதிகள் 14-18
(2) சுதந்திரத்திற்கான உரிமை – விதிகள் 25-28
(3) சுரண்டலுக்கு எதிரான உரிமை – விதிகள் 23-24
(4) கல்வி மற்றும் கலாச்சார உரிமை – விதிகள் 25-26
(1) சமத்துவ உரிமை – விதிகள் 14-18
(2) சுதந்திரத்திற்கான உரிமை – விதிகள் 25-28
(3) சுரண்டலுக்கு எதிரான உரிமை – விதிகள் 23-24
(4) கல்வி மற்றும் கலாச்சார உரிமை – விதிகள் 25-26
Correct Answer: C [(1) மற்றும் (3) சரி]
விளக்கம்:
சமத்துவம் 14–18, சுரண்டலுக்கு எதிரான உரிமை 23–24 சரி; சுதந்திர உரிமை 19–22, கல்வி-கலாச்சார உரிமை 29–30.
27.
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?
(i) பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக B.P. மண்டல் இருந்தார்.
(ii) ஆணையம் தனது அறிக்கையை 1982-ல் சமர்பித்தது.
(iii) அரசுப்பணிகளில் மற்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீட்டை ஆணையம் பரிந்துரை செய்யவில்லை.
(i) பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக B.P. மண்டல் இருந்தார்.
(ii) ஆணையம் தனது அறிக்கையை 1982-ல் சமர்பித்தது.
(iii) அரசுப்பணிகளில் மற்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீட்டை ஆணையம் பரிந்துரை செய்யவில்லை.
Correct Answer: A [(i) மட்டும்]
விளக்கம்:
இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் பி.பி. மண்டல்; அறிக்கை 1980 டிசம்பரில் அளிக்கப்பட்டது; 27% இடஒதுக்கீட்டைப் பரிந்துரைத்தது.
28.
பின்வருவனவற்றைப் பொருத்துக.
புதிய மாநிலங்கள் எந்த மாநிலத்திலிருந்து பிரிந்தது.
(a) ஹரியானா – 1. உத்திரப் பிரதேசம்
(b) உத்தரகாண்ட் – 2. பஞ்சாப்
(c) குஜராத் – 3. மத்தியப் பிரதேசம்
(d) சட்டிஸ்கர் – 4. பம்பாய்
புதிய மாநிலங்கள் எந்த மாநிலத்திலிருந்து பிரிந்தது.
(a) ஹரியானா – 1. உத்திரப் பிரதேசம்
(b) உத்தரகாண்ட் – 2. பஞ்சாப்
(c) குஜராத் – 3. மத்தியப் பிரதேசம்
(d) சட்டிஸ்கர் – 4. பம்பாய்
Correct Answer: A [2 1 4 3]
விளக்கம்:
ஹரியானா – பஞ்சாப் (1966); உத்தரகாண்ட் – உ.பி (2000); குஜராத் – பம்பாய் (1960); சத்தீஸ்கர் – ம.பி (2000).
29.
பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
(1) வம்சாவளியின் அடிப்படையில் குடியுரிமை – 26 ஜனவரி 1950 அல்லது அதற்குப் பிறகு இந்தியாவிற்கு வெளியே பிறந்தவர், ஆனால் டிசம்பர் 10, 1992 க்கு முன்
(2) பதிவு மூலம் குடியுரிமை – ஒரு வெளிநாட்டவர், சட்டவிரோதமாக குடியேறியவர் அல்ல, இந்திய அரசாங்கத்திடம் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தில் இந்திய குடியுரிமை பெறலாம்.
(3) இயற்கையமயமாக்கல் மூலம் குடியுரிமை – எந்த ஒரு புதிய நிலப்பரப்பும் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறினால், அந்த நிலப்பரப்பின் நபரை இந்திய குடிமகனாக இந்திய அரசாங்கம் குறிப்பிடும்.

Correct Answer: B [(1) மட்டும்]
விளக்கம்:
(1) வம்சாவளிக் குடியுரிமை – சரி; (2) இயல்புரிமை (naturalisation) விளக்கம்; (3) நிலப்பகுதி இணைப்பு மூலம் குடியுரிமை – எனவே (1) மட்டும் சரி.
30.
பின்வருவனவற்றுள் இந்திய அரசு சட்டம் 1935-ன்படி, கூட்டாட்சி சட்டமன்றத்தின் ஒரு பகுதியாக இல்லாதது எது?
Correct Answer: D [பொறுப்புள்ள அரசாங்கம்]
விளக்கம்:
கூட்டாட்சி சட்டமன்றம் = அரசர் (கவர்னர் ஜெனரல் மூலம்) + மாநில சபை + கூட்டாட்சி சட்டமன்றம்; பொறுப்பு அரசாங்கம் அதன் உறுப்பு அல்ல.
31.
1976 ஆம் ஆண்டின் 42 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் கீழ் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் உள்ள ________ சொற்றொடர் ________ ஆக மாற்றப்பட்டது.
Correct Answer: C [(A) மற்றும் (B)]
விளக்கம்:
42வது திருத்தம் முகவுரையில் 'தேசத்தின் ஒற்றுமை' என்பதை 'நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு' என மாற்றியது.
32.
பின்வரும் சாதனங்களையும் அதன் பண்புகளையும் சரியாகக் குறிக்கவும்.
(a) உருப்படைத்தாள் திரை வாசிப்பு சாதனம் – 1. கருப்பு, வெள்ளை
(b) மின்-மை வாசிப்பு சாதனம் – 2. அச்சு தோட்டாக்கள் விலை உயர்ந்தவை
(c) டாட் மேட்ரிக்ஸ் அச்சுபொறி சாதனம் – 3. முழு வண்ணங்கள்
(d) இங்க்ஜெட் அச்சு பொறி சாதனம் – 4. தொடர்பு அச்சுப்பொறிகள்

Correct Answer: B [3 1 4 2]
விளக்கம்:
தட்டைத் திரை – முழு வண்ணம்; மின்-மை – கருப்பு வெள்ளை; டாட் மேட்ரிக்ஸ் – தொடர்பு (impact) அச்சுப்பொறி; இங்க்ஜெட் – மை தோட்டா விலை அதிகம்.
33.
மின்னஞ்சல் தலைப்புப் புலங்களை செய்தி போக்குவரத்துடன் சரியாகப் பொருத்தவும்.
(a) To : – 1. மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிய நபர்
(b) Cc : – 2. குருட்டு கார்பன் நகல்களுக்கான மின்னஞ்சல் முகவரி
(c) Bcc : – 3. இரண்டாம் நிலை பெறுநரின் மின்னஞ்சல் முகவரி
(d) From : – 4. முதன்மை பெறுநரின் மின்னஞ்சல் முகவரி

Correct Answer: B [4 3 2 1]
விளக்கம்:
To – முதன்மைப் பெறுநர்; Cc – இரண்டாம் நிலைப் பெறுநர்; Bcc – மறைநகல்; From – செய்தியை உருவாக்கியவர்.
34.
சிறிய துணைக்கோள் டி.என்.ஏ
Correct Answer: D [டிஎன்ஏ வின் ஒரு பகுதியில் உள்ள 10-60 bp உள்ள நீளமான அடிப்படை வரிசைகள்]
விளக்கம்:
சிறு துணைக்கோள் டிஎன்ஏ (VNTR) – 10–60 bp நீள அலகுகள் தொடர்ந்து மீளும் பகுதிகள்; டிஎன்ஏ விரல்ரேகைக்கு உதவும்.
35.
ஆண்டிபயோடிக் சம்பந்தமாகக் கீழ்வருவனவற்றுள் எந்தக் கூற்று உண்மையானது?
(i) அதிக அளவு நுண்ணுயிரினங்களுக்கு எதிராகச் செயல்புரிகிறது.
(ii) பூஞ்சைகளின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
(iii) குறைந்தளவு தடுக்கக்கூடிய அடர்த்தியே நுண்ணுயிரிகளுக்கு எதிராக அதிகமாகச் செயல்புரிகிறது.
(i) அதிக அளவு நுண்ணுயிரினங்களுக்கு எதிராகச் செயல்புரிகிறது.
(ii) பூஞ்சைகளின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
(iii) குறைந்தளவு தடுக்கக்கூடிய அடர்த்தியே நுண்ணுயிரிகளுக்கு எதிராக அதிகமாகச் செயல்புரிகிறது.
Correct Answer: B [(i) மற்றும் (iii) மட்டும்]
விளக்கம்:
நுண்ணுயிர்க்கொல்லிகள் பல நுண்ணுயிரிகளுக்கு எதிராகக் குறைந்தபட்சத் தடுப்புச் செறிவில் செயல்படுகின்றன; பூஞ்சை வளர்ச்சியை அதிகரிப்பதில்லை.
36.
கால்நடைகளில் போவின் ரைனோட்ராக்கிடிஸ் (IBR) தொற்று நோயை ஏற்படுத்துபவை ________.
Correct Answer: B [வைரஸ்]
விளக்கம்:
IBR நோய் போவின் ஹெர்பிஸ் வைரஸ்-1 ஆல் ஏற்படுகிறது.
37.
நொதி அசையாதலின் சரியான படிநிலைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
(1) இணை பாலிமரைசேஷன் மற்றும் என்கேப்சுலேஷன்
(2) பொறி
(3) அடிமூலக்கூறுடன் ஒட்டிக்கொள்ளுதல்
(4) கோவலன்ட் பிணைப்பு
(1) இணை பாலிமரைசேஷன் மற்றும் என்கேப்சுலேஷன்
(2) பொறி
(3) அடிமூலக்கூறுடன் ஒட்டிக்கொள்ளுதல்
(4) கோவலன்ட் பிணைப்பு
Correct Answer: A [(3), (4), (2), (1)]
விளக்கம்:
நொதி அசையாக்க முறைகள் வரிசை: ஒட்டிக்கொள்ளுதல் (adsorption), சகப்பிணைப்பு, பொறித்தல் (entrapment), இணைபாலிமராக்கம்/உறையிடல்.
38.
பின்வரும் அறிக்கைகளை கவனியுங்கள் :
கூற்று [A] : பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் பூச்சிகளைக் கொல்லக்கூடிய நச்சுத்தன்மை வாய்ந்த புரதப் படிகங்களை உருவாக்குகின்றன. ஆனால், அவை பேசில்லஸைக் கொல்வதில்லை.
காரணம் [R] : பொதுவாக பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் உருவாக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த புரதப் படிகங்கள், செல்லினுள் உட்புகாதவரை வெளியில் செயலற்ற புரோடாக்ஸின்களாக உள்ளன.

Correct Answer: C [கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி, மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கு சரியான விளக்கமாகும்]
விளக்கம்:
Bt நச்சு செயலற்ற புரோடாக்ஸினாக இருந்து பூச்சியின் காரக் குடலில் மட்டுமே செயல்படும்; எனவே பாக்டீரியா பாதிக்கப்படுவதில்லை.
39.
பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(i) செல்லுலோஸ் நைட்ரேட் – 35 மிமீ மோஷன் பிக்சர் படம்
(ii) பாலிவினைல் பைரோலிடோன் – சாயங்களுக்கான சேர்க்கை
(iii) பாலிஸ்டைரீன் – இரத்த பிளாஸ்மாவிற்கு மாற்று
(iv) பாலிமெத்தில் மெதக்ரிலேட் – எக்ஸ்ரே சுருள்
(i) செல்லுலோஸ் நைட்ரேட் – 35 மிமீ மோஷன் பிக்சர் படம்
(ii) பாலிவினைல் பைரோலிடோன் – சாயங்களுக்கான சேர்க்கை
(iii) பாலிஸ்டைரீன் – இரத்த பிளாஸ்மாவிற்கு மாற்று
(iv) பாலிமெத்தில் மெதக்ரிலேட் – எக்ஸ்ரே சுருள்
Correct Answer: C [(iii) மற்றும் (iv) மட்டும்]
விளக்கம்:
செல்லுலோஸ் நைட்ரேட் – சினிமா படச்சுருள், PVP – சாயச் சேர்க்கை (பிளாஸ்மா மாற்றும் கூட); பாலிஸ்டைரீன் பிளாஸ்மா மாற்று அல்ல, PMMA எக்ஸ்ரே சுருள் அல்ல.
40.
தமிழகத்தை சேர்ந்த பின்வரும் விஞ்ஞானிகளை அவர்களின் தொடர்புடைய துறைகளுடன் பொருத்துக.
(a) சர் சந்திர சேகர வெங்கடராமன் – 1. ரைபோசோம்களின் செயல்பாடு
(b) வெங்கி ராமகிருஷ்ணன் – 2. ஒளிச்சிதறல்
(c) மயில்சாமி அண்ணாதுரை – 3. இந்தியாவில் பசுமைப் புரட்சி
(d) M.S. சுவாமிநாதன் – 4. சந்திராயன் – I
(a) சர் சந்திர சேகர வெங்கடராமன் – 1. ரைபோசோம்களின் செயல்பாடு
(b) வெங்கி ராமகிருஷ்ணன் – 2. ஒளிச்சிதறல்
(c) மயில்சாமி அண்ணாதுரை – 3. இந்தியாவில் பசுமைப் புரட்சி
(d) M.S. சுவாமிநாதன் – 4. சந்திராயன் – I
Correct Answer: A [2 1 4 3]
விளக்கம்:
சி.வி. ராமன் – ஒளிச்சிதறல்; வெங்கி ராமகிருஷ்ணன் – ரைபோசோம்; மயில்சாமி அண்ணாதுரை – சந்திரயான்-1; எம்.எஸ். சுவாமிநாதன் – பசுமைப் புரட்சி.
41.
பின்வரும் அறிக்கைகளை கவனியுங்கள் :
கூற்று [A] : நிக்கல் - உலோக ஹைட்ரைடு மின்கலனில் ஏற்படும் அரிப்பு வினை நேர் மற்றும் எதிர்மின் வாய்க்கிடையேயான சமநிலையை மாற்றுவதன் மூலம் நீர் இழப்பை அதிகரிக்கச் செய்கிறது.
காரணம் [R] : அரிப்பு வினை எதிர்மின் வாயிலில் உள்ள செயல்படுபொருளை குறைத்து சமநிலைத்திறனை நேர்மின் வாய்க்கு மாற்றுகிறது. மேலும் ஹைட்ரஜன் உட்கவர்தலுக்கான பொருளையும் குறைக்கிறது.

Correct Answer: B [[A] மற்றும் [R] ஆகிய இரண்டும் சரி மற்றும் [R], [A] க்கான சரியான விளக்கம்]
விளக்கம்:
உலோக ஹைட்ரைடு கலவை அரிப்பு செயல்படு பொருளையும் மின்பகுளி நீரையும் குறைத்து, எதிர்மின்முனை இருப்பைச் சுருக்குவதால் வாயு வெளியேறி நீர் இழப்பு அதிகரிக்கிறது.
42.
ககன்யான் திட்டத்திற்கான முன்னோடி சோதனையில் பின்வருவனவற்றுள் அமையப்பெறாத ஒன்று என்பது.
Correct Answer: D [உருவகப்படுத்தப்பட்ட நிலவில் தரையிறங்கும் சோதனை]
விளக்கம்:
ககன்யான் புவி தாழ்வட்டப் பயணம்; PAT, IADT, TV-D சோதனை ஊர்திகள் அதன் முன்னோடிச் சோதனைகள்; நிலவில் தரையிறங்கும் சோதனை இல்லை.
43.
வரதட்சணைத் தடைச்சட்டம் 1961, வரதட்சணையின் தீமைகளைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது என்று இந்தியாவில் எந்தக் குழு அறிக்கை அளித்தது?
Correct Answer: C [பெண்களின் நிலை குறித்த குழு (1974)]
விளக்கம்:
இந்தியப் பெண்களின் நிலை குறித்த குழு (1974) தனது 'Towards Equality' அறிக்கையில், வரதட்சணைத் தடைச்சட்டம் 1961 வரதட்சணையைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது எனக் குறிப்பிட்டது.
44.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 253 இன் கீழ் இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்ட சட்டம் எது?
Correct Answer: B [மாற்றுத்திறனாளிகள் சட்டம் 1995]
விளக்கம்:
சர்வதேச ஒப்பந்தங்களைச் செயல்படுத்த சட்டம் இயற்ற பிரிவு 253 வழிவகுக்கிறது; ஆசிய-பசிபிக் மாற்றுத்திறனாளிகள் முழுப் பங்கேற்பு பிரகடனத்தைச் செயல்படுத்த 1995 சட்டம் இதன் கீழ் இயற்றப்பட்டது.
45.
சரியானவற்றைப் பொருத்துக.
(a) இரத்த சோகை இல்லாத இந்தியா – 1. 2021
(b) பிரதம மந்திரியின் பாதுகாப்பான தாய்மை திட்டம் – 2. 2017
(c) மனநல பாதுகாப்பு சட்டம் – 3. 2018
(d) கர்ப்பத்தை முடிவுறுத்தல் (திருத்த) சட்டம் – 4. 2016
(a) இரத்த சோகை இல்லாத இந்தியா – 1. 2021
(b) பிரதம மந்திரியின் பாதுகாப்பான தாய்மை திட்டம் – 2. 2017
(c) மனநல பாதுகாப்பு சட்டம் – 3. 2018
(d) கர்ப்பத்தை முடிவுறுத்தல் (திருத்த) சட்டம் – 4. 2016
Correct Answer: C [(a) 3 (b) 4 (c) 2 (d) 1]
விளக்கம்:
இரத்த சோகை இல்லாத இந்தியா 2018, PMSMA 2016, மனநல பாதுகாப்பு சட்டம் 2017, MTP திருத்தச் சட்டம் 2021 → 3, 4, 2, 1.
46.
குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் எது?
Correct Answer: B [ராஷ்ட்ரிய கிஷோர் ஸ்வஸ்திய காரியக்ரம்]
விளக்கம்:
ராஷ்ட்ரிய கிஷோர் ஸ்வஸ்திய காரியக்ரம் 7 ஜனவரி 2014-இல் தொடங்கப்பட்டது (10–19 வயதினர்). RBSK 2013, JSSK 2011, JSY 2005.
47.
சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்யவும்
(1) தேசிய எழுத்தறிவு இயக்கம் – 1989 இல் தொடங்கப்பட்டது
(2) எர்ணாகுளம் எழுத்தறிவுப் பிரச்சாரத்தின் வெற்றிகள் – 1990
(3) புதிதாக எழுத்தறிவு பெற்றவர்களுக்கான தொடர் கல்வி – 1995 இல் அங்கீகரிக்கப்பட்டது
(4) தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் – 1976

Correct Answer: B [(2) மற்றும் (3) சரியானவை]
விளக்கம்:
தேசிய எழுத்தறிவு இயக்கம் 1988-லும் NAEP 1978-லும் தொடங்கப்பட்டன; எர்ணாகுளம் 1990-ல் முழு எழுத்தறிவு மாவட்டமானது; தொடர் கல்வித் திட்டம் 1995-ல் அங்கீகரிக்கப்பட்டது.
48.
பின்வரும் நிறுவனங்களில் எந்த நிறுவனத்தின் மூலம் நுகர்வோர் நம்பிக்கைக் கணக்கெடுப்பு வெளியிடப்படுகிறது?
Correct Answer: C [இந்திய ரிசர்வ் வங்கி]
விளக்கம்:
நுகர்வோர் நம்பிக்கைக் கணக்கெடுப்பை இந்திய ரிசர்வ் வங்கி நடத்தி, இருமாத நிதிக் கொள்கையுடன் வெளியிடுகிறது.
49.
டி-எரிங் நினைவு வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Correct Answer: B [அருணாசலபிரதேசம்]
விளக்கம்:
டி-எரிங் நினைவு வனவிலங்கு சரணாலயம் அருணாசலப் பிரதேசத்தின் கிழக்கு சியாங் மாவட்டம், பாசிகாட் அருகே உள்ளது.
மேலும் வினாடி வினாக்கள்
› Group 2A Mains – Daily Practice 1 (2 November 2026)
› குரூப் 2A Mains – தினசரிப் பயிற்சி 1 (2 நவம்பர் 2026)
› குரூப் 2A Mains 2026 வினாத்தாள் – பகுதி 1 (வினா 1–54)
› Group 2A Mains 2026 Question Paper – Part 1 (Q 1–54)
› குரூப் 2A Mains 2026 வினாத்தாள் – பகுதி 2 (வினா 55–107)
› Group 2A Mains 2026 Question Paper – Part 2 (Q 55–107)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
▶ புதிய வீடியோ · NEW VIDEO
அறிவோம் அரசியலமைப்பு | MAKING OF CONSTITUTION | UPSC Polity தமிழில் | NITHISH KUMAR
TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai