Group 2A Mains PYQ

TNPSC குரூப் 2A Mains 2025 வினாத்தாள் – விடை, விளக்கத்துடன்

Read in English →

TNPSC ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II – குரூப் 2A Mains 2025, தாள் II · 2025 · GST2AM/2025

2025 வினாத்தாளில் பகுதி அ பொது அறிவு (வினா 1–100), பகுதி ஆ திறனறிவு (101–140), பகுதி இ பொதுத் தமிழ் (141–200) இருந்தன. இப்போதைய (2026) தேர்வு முறையில் பொதுத் தமிழ் இல்லை; எனவே இங்கே வினா 1–140 மட்டும்.

⬇ இலவச PDF – வினாக்கள் + விடைகள் (தமிழ் + English)

இந்த வினாத்தாளில் அலகு வாரியான வினாக்கள்

அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்17
அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்21
அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)28
அலகு V – தமிழ்நாட்டுப் புவியியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை14
அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்20
பொது நுண்ணறிவும் காரணவியலும்40

குரூப் 2 / 2A Mains வகுப்பு – 16 நவம்பர் 2026 · கோவை · மதுரை · ஆன்லைன் · 2A-க்கு CBT மாதிரித் தேர்வுகள்
வகுப்பு விவரம்📞 99941 46662

வினாக்கள், விடைகள், விளக்கங்கள்

வினா 1 · அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்
பின்வரும் OSI அடுக்குகளை வரிசைப்படுத்தவும். (1) தரவு இணைப்பு அடுக்கு (2) வன் அடுக்கு (3) கடத்தி அடுக்கு (4) இணைவலை அடுக்கு
  1. (A) (2), (1), (4), (3)
  2. (B) (2), (3), (1), (4)
  3. (C) (4), (3), (2), (1)
  4. (D) (3), (1), (4), (2)
விடை, விளக்கம்

விடை: (A) (2), (1), (4), (3)

OSI மாதிரியில் கீழிருந்து: வன் (Physical, 1) → தரவு இணைப்பு (2) → இணைவலை (Network, 3) → கடத்தி (Transport, 4) அடுக்கு.

வினா 2 · அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்
கூற்று [A] : மனிதர்களில் மரபியல் மைட்டோகாண்ட்ரியல் mtDNA ஒவ்வொருவரும் தங்கள் தாயிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள். காரணம் [R] : mtDNA-யை தாய் சார்ந்த சகோதரர் மற்றும் சகோதரிகளிடமோ அல்லது தாய் மற்றும் மகளிடமோ இருந்தாலும் சடுதி மாற்றம் இல்லாமல் ஒரே மாதிரியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
  1. (A) [A] சரி ஆனால் [R] தவறு
  2. (B) [A] மற்றும் [R] சரி மற்றும் [R], [A]விற்கான சரியான விளக்கம்
  3. (C) [A] தவறு [R] சரி
  4. (D) [A] மற்றும் [R] சரி, ஆனால் [R], [A]விற்கான சரியான விளக்கம் இல்லை
விடை, விளக்கம்

விடை: (D) [A] மற்றும் [R] சரி, ஆனால் [R], [A]விற்கான சரியான விளக்கம் இல்லை

mtDNA தாயிடமிருந்து மட்டுமே வருவதால் தாய்வழி உறவினர்களிடம் அது ஒரே மாதிரி இருக்கும். [R] என்பது [A]-வின் விளைவு ('Therefore'); [A]-விற்கான விளக்கம் அல்ல.

வினா 3 · அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்
IVF முறையில் விந்தணுவும் அண்டமும் இணைவது பின்வருவனவற்றில் எதில் நடைபெறுகிறது?
  1. (A) யோனிக் குழாய்
  2. (B) ஃபலோப்பியன் குழாய்
  3. (C) வளர்ப்பு ஊடகம்
  4. (D) கருப்பை
விடை, விளக்கம்

விடை: (C) வளர்ப்பு ஊடகம்

IVF (உடல் வெளிக் கருவுறுதல்) – விந்தணுவும் அண்டமும் ஆய்வகத்தில் வளர்ப்பு ஊடகத்தில் இணைகின்றன; பின்னர் கருவை கருப்பையில் வைப்பர்.

வினா 4 · அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்
கீழ்க்கண்டவற்றில் சரியான இணையைக் கண்டுபிடிக்கவும். மைக்ரோ பரப்புதல் மற்றும் மர இனங்களை மேம்படுத்தும் முறை (1) குளோனல் பெருக்க முறை – புரோசோபிஸ் சினிரேரியா (2) புரோட்டோ பிளாஸ்ட் வளர்ப்பு மற்றும் மரபணு பொறியியல் முறை – டால்பர்ஜியா சிசு (3) உடலியல் கரு உருவாக்கம் – குப்ரஸஸ் அரிசோனிகா (4) ஜெர்ம்பிளாசம் பாதுகாப்பு – டெக்டோனா கிராண்டிஸ்
  1. (A) (1) மற்றும் (3) சரி
  2. (B) (1) மற்றும் (4) சரி
  3. (C) (2) மற்றும் (3) சரி
  4. (D) (3) மற்றும் (4) சரி
விடை, விளக்கம்

விடை: (B) (1) மற்றும் (4) சரி

புரோசோபிஸ் சினிரேரியாவில் குளோனல் பெருக்கம் நிறுவப்பட்டுள்ளது; தேக்கு (டெக்டோனா கிராண்டிஸ்) ஜெர்ம்பிளாசம் பாதுகாப்பிற்கான எடுத்துக்காட்டு. குப்ரஸஸ் அரிசோனிகாவில் செய்யப்பட்டது மொட்டு உருவாக்கம்; உடலியல் கரு உருவாக்கம் அல்ல.

TNPSC இந்த வினாவை நிபுணர் குழுவின் இறுதி முடிவுக்கு அனுப்பியுள்ளது.
வினா 5 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது? (i) அடல் டிங்கரிங் ஆய்வகம் – உயர்நிலை பள்ளி மாணவர்களிடையே ஆராய்ச்சிக்கான புதுமையான மனநிலையை வளர்க்கிறது (ii) கிரிஷி நீவ் – விவசாயத்தில் தொழில் நுட்பத் தலையீடுகளை ஊக்குவிக்கும் தளம் (iii) பல்னா – பணிபுரியும் பெண்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவி போன்ற ஆதரவுச் சேவைகளை வழங்குகிறது (iv) உன்னதி – வேலை தேடுபவர்களுடன் வேலை வழங்குபவர்களைப் பொருத்த செயற்கை நுண்ணறிவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்பத் தளம்
  1. (A) (iv) மட்டும்
  2. (B) (i) மற்றும் (ii) மட்டும்
  3. (C) (iii) மட்டும்
  4. (D) (i) மற்றும் (iv) மட்டும்
விடை, விளக்கம்

விடை: (C) (iii) மட்டும்

பல்னா (மிஷன் சக்தி) என்பது பணிபுரியும் தாய்மார்களின் குழந்தைகளுக்கான காப்பகத் (Creche) திட்டம்; பணிபுரியும் பெண்களுக்கான தங்குமிடம் 'சகி நிவாஸ்'.

வினா 6 · அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்
பின்வருவனவற்றை பொருத்துக : (a) ஹைட்ரஜன் குண்டு – 1. கட்டுப்பாடற்ற அணுக்கரு பிளவு வினை (b) திறன் உலை – 2. கட்டுப்படுத்தப்பட்ட இணைவு வினை (c) பிளாஸ்மாவின் காந்தவியல் அடக்கல் – 3. கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கரு பிளவு வினை (d) அணுகுண்டு – 4. அணுக்கரு பிளவு - இணைவு வினை
  1. (A) 2 1 4 3
  2. (B) 1 3 4 2
  3. (C) 3 4 1 2
  4. (D) 4 3 2 1
விடை, விளக்கம்

விடை: (D) 4 3 2 1

ஹைட்ரஜன் குண்டு – பிளவு தூண்டலுடன் இணைவு (4); திறன் உலை – கட்டுப்படுத்தப்பட்ட பிளவு (3); காந்த அடக்கல் (டோகாமாக்) – கட்டுப்படுத்தப்பட்ட இணைவு (2); அணுகுண்டு – கட்டுப்பாடற்ற பிளவு (1).

வினா 7 · அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்
பின்வருவனவற்றில் எது/எவை டிப் பேனா நானோ லித்தோகிராபி (DPN) பற்றி சரியானவை? (i) இது ஒரு நேரடி முறை (ii) இது தண்ணீரது மூலக்கூறுகள் பரவுதல் மூலம் வேலை செய்கிறது (iii) இது பல்வேறுபட்ட பொருட்களின் வடிவங்களை வரைகிறது (iv) இது ஒரு அதிவேக ஸ்கேன் செயல்முறை
  1. (A) (i) மட்டும்
  2. (B) (ii) மட்டும்
  3. (C) (i), (ii) மற்றும் (iii) மட்டும்
  4. (D) மேற்கூறிய அனைத்தும்
விடை, விளக்கம்

விடை: (C) (i), (ii) மற்றும் (iii) மட்டும்

DPN – AFM முனையால் நேரடியாக எழுதும் முறை; மை மூலக்கூறுகள் நீர் மெனிஸ்கஸ் வழியாகப் பரவுகின்றன; பல பொருட்களை வரையலாம். இது ஒவ்வொன்றாக வரையும் மெதுவான முறை – (iv) தவறு.

வினா 8 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்ட உலகளாவிய ஒரு நிறுத்த மையங்களின் (OSCs) முதன்மை நோக்கம்
  1. (A) மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்ற திட்டத்தை ஊக்குவிப்பதற்காக
  2. (B) உயர் கல்வி நிறுவனங்களிடையே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை எளிதாக்க
  3. (C) பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு விரிவான உதவிகளை வழங்க
  4. (D) நெருக்கடியின் போது வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு ஆதரவளிக்க
விடை, விளக்கம்

விடை: (C) பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு விரிவான உதவிகளை வழங்க

2024-இல் வெளிநாடுகளில் உள்ள 9 இந்தியத் தூதரகங்களில் ஒரு நிறுத்த மையங்கள் அனுமதிக்கப்பட்டன – சிக்கலில் உள்ள இந்தியப் பெண்களுக்கு ஆலோசனை, சட்ட, மருத்துவ, தங்குமிட உதவி வழங்க.

வினா 9 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
கீழ்க்கண்ட நிகழ்வுகளை காலவரிசைப்படுத்துக. பின்வரும் வறுமை ஒழிப்பு திட்டங்களை காலவரிசைப்படி ஒழுங்குபடுத்தவும் (1) சம்பூர்ண கிராமீன் ரோஸ்கர் யோஜனா (2) ஸ்வர்ணஜெயந்தி கிராம் ஸ்வரோஸ்கர் யோஜனா (3) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (4) வேலைக்கான உணவுத் திட்டம்
  1. (A) (1), (2), (3), (4)
  2. (B) (4), (3), (2), (1)
  3. (C) (2), (4), (3), (1)
  4. (D) (3), (4), (1), (2)
விடை, விளக்கம்

விடை: (B) (4), (3), (2), (1)

வேலைக்கான உணவுத் திட்டம் 1977 → IRDP 1978-79 (நாடு முழுவதும் 1980) → SGSY 1999 → SGRY 2001.

வினா 10 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
கூற்று [A] : பெண்களுக்கான மாற்று வேலை வாய்ப்பு, திறன் பயிற்சி அல்லது கடன் வசதி இல்லாதது அவர்களை வறுமையில் வைத்திருக்கும் மற்றொரு காரணியாகும். காரணம் [R] : வறுமை தொடர்ந்து பெண்ணிய அடையாளமாக மாறி வருகிறது.
  1. (A) [A] உண்மை ஆனால் [R] தவறு
  2. (B) [A] மற்றும் [R] இரண்டும் உண்மை, [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்
  3. (C) [A] தவறு ஆனால் [R] உண்மை
  4. (D) [A] மற்றும் [R] இரண்டும் உண்மை ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கம் அல்ல
விடை, விளக்கம்

விடை: (D) [A] மற்றும் [R] இரண்டும் உண்மை ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கம் அல்ல

இரண்டும் உண்மை (வறுமையின் பெண்மயமாதல்). ஆனால் வேலை, திறன், கடன் வசதி இல்லாமை பெண்களின் வறுமைக்குக் காரணம்; [R] அதற்கு விளக்கம் அல்ல.

வினா 11 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
இந்திய அரசியலமைப்பின் ________ பிரிவு, தொழிற்சாலைகள், சுரங்கங்கள் அல்லது வேறு எந்த ஆபத்தான தொழிலிலும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்கிறது.
  1. (A) 21 A
  2. (B) 24
  3. (C) 17
  4. (D) 39
விடை, விளக்கம்

விடை: (B) 24

பிரிவு 24: 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தொழிற்சாலை, சுரங்கம் அல்லது ஆபத்தான வேலையில் அமர்த்தக் கூடாது.

வினா 12 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
கீழ்க்காணும் திட்டங்களை அந்தந்த வருடத்துடன் பொருத்துக. (a) நீங்கள் நலமா – 1. 2000 (b) மனு நீதி – 2. 2021 (c) குறள் முற்றோதல் – 3. 2024 (d) இல்லம் தேடி கல்வி – 4. 1969
  1. (A) 2 3 4 1
  2. (B) 1 2 3 4
  3. (C) 3 4 1 2
  4. (D) 4 1 2 3
விடை, விளக்கம்

விடை: (C) 3 4 1 2

நீங்கள் நலமா – மார்ச் 2024; மனு நீதித் திட்டம் – 1969; குறள் முற்றோதல் பரிசுத் திட்டம் – 2000; இல்லம் தேடி கல்வி – 2021 (கோவிட் கற்றல் இழப்பு ஈடு).

வினா 13 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் மூலமாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிக்கு வழிகாட்டு அமைக்கப்பட்ட ஒரு தளம்
  1. (A) 'இளைய'
  2. (B) 'இளைய'
  3. (C) 'நான் முதல்வன்'
  4. (D) 'நீயே உனக்கு ராஜா' திட்டம்
விடை, விளக்கம்

விடை: (B) 'இளைய'

'இளைய' (Ilaya) – TNSDC உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு WhatsApp சாட்பாட்; வேலை தேடுவோருக்கு வேலை, திறன் பயிற்சி வழிகாட்டுகிறது.

வினா 14 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
________ மாநிலம் 2022-23 கணக்கெடுப்பின் போது அதிக வேலையின்மை விகிதம் கொண்ட மாநிலம்.
  1. (A) கேரளா
  2. (B) ஹரியானா
  3. (C) பஞ்சாப்
  4. (D) தமிழ்நாடு
விடை, விளக்கம்

விடை: (A) கேரளா

PLFS 2022-23 (வழக்கமான நிலை, 15+): கேரளா சுமார் 7.0% – ஹரியானா, பஞ்சாப் (சுமார் 6.1%), தமிழ்நாடு (சுமார் 4.3%) ஆகியவற்றைவிட அதிகம்.

வினா 15 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
2021-2022 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் உயர் கல்விப் பயில்வோரின் மொத்தப் பதிவு ________ உள்ளது.
  1. (A) 45 சதவிகிதம்
  2. (B) 46 சதவிகிதம்
  3. (C) 47 சதவிகிதம்
  4. (D) 48 சதவிகிதம்
விடை, விளக்கம்

விடை: (C) 47 சதவிகிதம்

AISHE 2021-22: தமிழ்நாட்டின் உயர்கல்வி மொத்தச் சேர்க்கை விகிதம் 47.0% (இந்திய சராசரி 28.4%).

வினா 16 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பிற்கான பின்வரும் கடன் திட்டங்களில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது? (i) கடன் உத்தரவாதத் திட்டம் – நேரடி பண நிதி (ii) மெஸ்ஸானைன் மூலதன உதவி – திருப்பிச் செலுத்தமுடியாத கடன் (iii) சுழல் நிதி ஆதரவு – சலுகை கடன் (iv) நப்கிசான் – தமிழ்நாடு அரசுடன் இணைந்து கடன் திட்டங்களைச் செயல்படுத்துதல்
  1. (A) (i) மற்றும் (iv)
  2. (B) (i) மற்றும் (ii)
  3. (C) (iii) மற்றும் (iv)
  4. (D) (ii) மற்றும் (iii)
விடை, விளக்கம்

விடை: (B) (i) மற்றும் (ii)

கடன் உத்தரவாதத் திட்டம் வங்கிகளுக்கு உத்தரவாதம் தருகிறது – நேரடி பண நிதி அல்ல; மெஸ்ஸானைன் மூலதனம் திருப்பிச் செலுத்த வேண்டிய சலுகைக் கடன். ஆகவே (i), (ii) தவறு.

வினா 17 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
தமிழ்நாடு பொருளாதாரத்தின் இயல்புகளைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை? (i) ஜிஎஸ்டிபி தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு 7-வது உயர்ந்த இடத்தில் உள்ளது (ii) தமிழ்நாடு குறைந்த தொழில்கள் மற்றும் சிறு சேவைத் துறைகளைக் கொண்டுள்ளது (iii) இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை உடையது
  1. (A) (i) மட்டும்
  2. (B) (i) மற்றும் (ii) மட்டும்
  3. (C) (iii) மட்டும்
  4. (D) (ii) மற்றும் (iii) மட்டும்
விடை, விளக்கம்

விடை: (C) (iii) மட்டும்

மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாவது பெரிய மாநிலப் பொருளாதாரம்; தொழில், சேவைத் துறைகள் வலுவானவை – (ii) தவறு. (i)-(iii) சேர்ந்த தெரிவு இல்லாததால் (iii) மட்டும் சரி.

வினா 18 · அலகு V – தமிழ்நாட்டுப் புவியியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை
பின்வரும் காலநிலை மாநாடுகளையும் அது சார்ந்த கருத்தையும் பொருத்துக. (a) கியோட்டோ நெறிமுறை – 1. உலக வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்துதல் (b) ரியோ பூமி உச்சி மாநாடு – 2. ஓசோன் படலத்தை பாதுகாத்தல் (c) பாரிஸ் ஒப்பந்தம் – 3. நிலையான வளர்ச்சிக்கான உலகளாவிய கட்டமைப்பு (d) மாண்ட்ரீல் நெறிமுறை – 4. உமிழ்வை குறைப்பதற்கான அர்ப்பணிப்பு
  1. (A) 2 3 1 4
  2. (B) 4 2 3 1
  3. (C) 4 3 1 2
  4. (D) 2 1 4 3
விடை, விளக்கம்

விடை: (C) 4 3 1 2

கியோட்டோ (1997) – உமிழ்வு குறைப்பு கடப்பாடு; ரியோ (1992) – அஜெண்டா 21, நிலையான வளர்ச்சி; பாரிஸ் (2015) – வெப்ப உயர்வை 2°C-க்குக் கீழ் கட்டுப்படுத்தல்; மாண்ட்ரீல் (1987) – ஓசோன் படலப் பாதுகாப்பு.

வினா 19 · அலகு V – தமிழ்நாட்டுப் புவியியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை
கூற்று [A] : படிம எரிபொருள்களிலிருந்து ஒரு விலக்க மாற்றத்திற்கான வெளிப்படையான அழைப்பினால் உலகளாவிய காலநிலை நடவடிக்கையில், COP28, ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்தது. காரணம் [R] : பாரிஸ் ஒப்பந்தத்தின் முக்கிய அங்கமான குளோபல் ஸ்டாக்டேக், காலநிலை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டிய அவசரத் தேவையை எடுத்துரைத்தது.
  1. (A) [A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மேலும் [R] என்பது [A] இன் சரியான விளக்கமாகும்
  2. (B) [A] மற்றும் [R] இரண்டும் உண்மை, ஆனால் [R] என்பது [A] இன் சரியான விளக்கமல்ல
  3. (C) [A] உண்மை, ஆனால் [R] என்பது தவறானது
  4. (D) [A] என்பது தவறானது, ஆனால் [R] என்பது உண்மை
விடை, விளக்கம்

விடை: (A) [A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மேலும் [R] என்பது [A] இன் சரியான விளக்கமாகும்

COP28-இல் (துபாய், 2023) நிறைவுற்ற முதல் உலகளாவிய மதிப்பீடு (Global Stocktake) உலகம் இலக்கை விட்டு விலகியுள்ளதைக் காட்டியது; அதன் முடிவே 'படிம எரிபொருளிலிருந்து விலகும் மாற்றம்' என அழைப்பு விடுத்தது.

வினா 20 · அலகு V – தமிழ்நாட்டுப் புவியியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை
அகஸ்தியமலை உயிர்க்கோளக் காப்பகத்தில் காணப்படும் அழிந்து வரும் இனங்கள் என்பவை (i) சிங்கவால் குரங்கு, ஸ்லின்டர் லோரிஸ், பெரிய பைட் ஹார்ன்பில் (ii) ருத்திராட்ச மரம், கருப்பு பிளம், காட்டு டஹ்மான், மற்றும் காப் மரம் (iii) மெல்லிய லோரிஸ், சிங்கவால் குரங்கு, கருப்பு பிளம், ருத்ராட்ச மரம், மற்றும் பச்சைக் குழி வைப்பர்
  1. (A) (i) மற்றும் (ii) மட்டும்
  2. (B) (ii) மற்றும் (iii) மட்டும்
  3. (C) (iii) மற்றும் (i) மட்டும்
  4. (D) (i), (ii) மற்றும் (iii)
விடை, விளக்கம்

விடை: (A) (i) மற்றும் (ii) மட்டும்

அகஸ்தியமலை உயிர்க்கோளக் காப்பகத்தின் அழிவாய்ப்பு விலங்குகள்: சிங்கவால் குரங்கு, மெல்லிய லோரிஸ், பெரிய இருவாச்சி; தாவரங்கள்: ருத்ராட்சம், நாவல், காட்டு தாமன், காப் மரம். (iii)-இல் உள்ள பச்சைக் குழிவிரியன் அப்பட்டியலில் இல்லை.

வினா 21 · அலகு V – தமிழ்நாட்டுப் புவியியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை
பின்வரும் அறிக்கைகளைக் கருத்தில் கொள்க. (a) வனங்கள் வெள்ளம் மற்றும் வறட்சியை ஒழுங்குபடுத்துகின்றன (b) ஒவ்வொரு வருடமும், கிட்டத்தட்ட 10% வெப்பமண்டல காடுகள் இழக்கப்படுகின்றன (c) உலகெங்கிலும் உள்ள காடுகளில் கிட்டத்தட்ட 47% வெப்பமண்டல காடுகள் ஆகும் (d) உலகின் 45% காடுகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன சரியான அறிக்கைகள் என்பவை :
  1. (A) (b) மற்றும் (c)
  2. (B) (a), (b) மற்றும் (c)
  3. (C) (a) மற்றும் (c)
  4. (D) (c) மற்றும் (d)
விடை, விளக்கம்

விடை: (C) (a) மற்றும் (c)

காடுகள் நீரோட்டத்தை (வெள்ளம்/வறட்சி) ஒழுங்குபடுத்துகின்றன; உலகக் காடுகளில் சுமார் 45–47% வெப்பமண்டலக் காடுகள். ஆண்டு இழப்பு 1%-க்கும் குறைவு; பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவை சுமார் 18% மட்டுமே.

வினா 22 · அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்
________ செயற்கைகோள் 1, ஜனவரி 2024 அன்று இஸ்ரோ காஸ்மிக் எக்ஸ் கதிர்களை ஆய்வு செய்யும் பொருட்டு அனுப்பப்பட்டது.
  1. (A) ஆஸ்ட்ரோசாட்
  2. (B) ஆதித்யா - 1
  3. (C) சந்திரயான் - 1
  4. (D) எக்ஸ்போசாட்
விடை, விளக்கம்

விடை: (D) எக்ஸ்போசாட்

XPoSat (எக்ஸ்-கதிர் போலரிமீட்டர் செயற்கைக்கோள்) 1 ஜனவரி 2024 அன்று PSLV-C58 மூலம் ஏவப்பட்டது – காஸ்மிக் எக்ஸ்-கதிர் முனைவாக்கம் ஆய்வு.

வினா 23 · அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்
மத்திய உப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
  1. (A) கொச்சின்
  2. (B) சென்னை
  3. (C) பவ்நகர்
  4. (D) நரிமணம்
விடை, விளக்கம்

விடை: (C) பவ்நகர்

CSIR – மத்திய உப்பு மற்றும் கடல் வேதிப்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் (CSMCRI) குஜராத்தின் பவ்நகரில் உள்ளது.

வினா 24 · அலகு V – தமிழ்நாட்டுப் புவியியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை
சுத்தமான காற்றுச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ________.
  1. (A) 1970
  2. (B) 1972
  3. (C) 1969
  4. (D) 1980
விடை, விளக்கம்

விடை: (A) 1970

அமெரிக்காவின் முக்கியமான சுத்தமான காற்றுச் சட்டம் 1970-இல் இயற்றப்பட்டது (தேசிய காற்றுத் தர நிர்ணயங்கள்).

வினா 25 · அலகு V – தமிழ்நாட்டுப் புவியியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை
பின்வரும் பறவைகள் சரணாலயத்தை அதன் மாவட்டத்துடன் பொருத்தவும் : பறவைகள் சரணாலயம் – மாவட்டங்கள் (a) வேட்டன்குடி – 1. சிவகங்கை (b) மயூரா தோட்டம் – 2. அரியலூர் (c) வெள்ளோடு – 3. தூத்துக்குடி (d) கரைவெட்டி – 4. ஈரோடு
  1. (A) 4 3 2 1
  2. (B) 1 2 3 4
  3. (C) 1 3 4 2
  4. (D) 3 2 1 4
விடை, விளக்கம்

விடை: (C) 1 3 4 2

வேட்டங்குடி – சிவகங்கை; வெள்ளோடு – ஈரோடு; கரைவெட்டி – அரியலூர்; எனவே மயூரா தோட்டம் – தூத்துக்குடி. (C) மட்டுமே பொருந்தும்.

வினா 26 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
பின்வரும் காலங்களை முறைப்படி வரிசைப்படுத்துக : (1) வரலாற்றுக்கு முற்பட்ட காலம் (2) சோழர் காலம் (3) சங்க காலம் (4) பல்லவர் காலம்
  1. (A) (1), (4), (3), (2)
  2. (B) (2), (4), (1), (3)
  3. (C) (1), (3), (4), (2)
  4. (D) (2), (3), (4), (1)
விடை, விளக்கம்

விடை: (C) (1), (3), (4), (2)

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் → சங்க காலம் (கி.மு. 3 – கி.பி. 3 நூ.) → பல்லவர் (கி.பி. 6–9 நூ.) → பிற்காலச் சோழர் (கி.பி. 9–13 நூ.).

வினா 27 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
கூற்று [A] : வ.உ.சி.க்கு தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. காரணம் [R] : சூரத் மாநாட்டில் கலந்து கொண்டு திலகரைப் பின்பற்றி தத்துவத்தை ஆதரித்தார்.
  1. (A) [A] சரி, [R] தவறு
  2. (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R], [A]ன் சரியான விளக்கமாகும்
  3. (C) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R], [A]ன் சரியான விளக்கம் அல்ல
  4. (D) [A] தவறு, [R] சரி
விடை, விளக்கம்

விடை: (C) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R], [A]ன் சரியான விளக்கம் அல்ல

1908-இல் வ.உ.சி.க்கு தேசத் துரோகக் குற்றத்திற்காக இரட்டை ஆயுள் (40 ஆண்டு) தண்டனை (பின்னர் குறைப்பு). 1907 சூரத் மாநாட்டில் திலகர் ஆதரவாளராகக் கலந்தார்; ஆனால் வழக்கு திருநெல்வேலி எழுச்சி/கோரல் மில் போராட்ட உரைகளால் – [R] விளக்கம் அல்ல.

வினா 28 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
பெண்களுக்கானப் பள்ளியை ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் நிறுவிய இடம்
  1. (A) பம்பாய்
  2. (B) சூரத்
  3. (C) லாகூர்
  4. (D) கல்கத்தா
விடை, விளக்கம்

விடை: (D) கல்கத்தா

வித்யாசாகர், பெத்யூனுடன் இணைந்து கல்கத்தாவில் பெண்கள் பள்ளி (1849) தொடங்க உதவினார்; வங்காளத்தில் சுமார் 35 பெண்கள் பள்ளிகளைத் திறந்தார்.

வினா 29 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
அறியாமை அகன்று நலம் தோன்றும் எப்போது?
  1. (A) மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்தல்
  2. (B) கடமையை செய்தல்
  3. (C) கர்ம செயல்
  4. (D) மருத்துவ அறிவு
விடை, விளக்கம்

விடை: (A) மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்தல்

திருக்குறள் 352 (மெய்யுணர்தல்): 'இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு' – மயக்கம் நீங்கி மாசற்ற உண்மையை உணர்ந்தவர்க்கு அறியாமை அகன்று இன்பம் உண்டாகும்.

வினா 30 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
சரியான விடையைத் பொருந்தச் செய்க : (a) நீதிக்கட்சி – 1. 1949 (b) தி.மு.க. – 2. 1944 (c) திராவிடர் கழகம் – 3. 1916 (d) சுயமரியாதை இயக்கம் – 4. 1925
  1. (A) 4 1 3 2
  2. (B) 2 4 1 3
  3. (C) 3 1 2 4
  4. (D) 3 1 4 2
விடை, விளக்கம்

விடை: (C) 3 1 2 4

நீதிக்கட்சி (தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்) 1916; சுயமரியாதை இயக்கம் 1925; திராவிடர் கழகம் 1944 (சேலம் மாநாடு); தி.மு.க. 1949 (அண்ணா).

வினா 31 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில அளவிலான கூட்டம் எந்த இடத்தில் நடத்தப்பட்டது?
  1. (A) செங்கல்பட்டு
  2. (B) மதுரை
  3. (C) சென்னை
  4. (D) கோவை
விடை, விளக்கம்

விடை: (A) செங்கல்பட்டு

முதல் மாகாண சுயமரியாதை மாநாடு பிப்ரவரி 1929-இல் செங்கல்பட்டில் நடைபெற்றது (தலைமை: டபிள்யூ.பி.ஏ. சௌந்தரபாண்டியன்).

வினா 32 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
சென்னை மாகாணத்தின் ஆளுநர் எட்வர்ட் கிளைவ் குறித்த சொற்றொடர்களில் எது/எவை தவறானது?
  1. (A) ஆற்காடு நவாபின் அரசைப் பறித்துக் கொண்டார்
  2. (B) பாளையக்கார ஆட்சி முறையை ஒழித்தார்
  3. (C) சென்னையில் தலைமை நீதிமன்றம் இவருடைய ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது
  4. (D) கலெக்டர் ஜாக்சன், தன்னை அவமானப்படுத்திவிட்டதாக வீரபாண்டிய கட்டபொம்மன் எழுதிய கடிதத்திற்கு எட்வர்ட் கிளைவ் ஆர்வம் காட்டவில்லை
விடை, விளக்கம்

விடை: (D) கலெக்டர் ஜாக்சன், தன்னை அவமானப்படுத்திவிட்டதாக வீரபாண்டிய கட்டபொம்மன் எழுதிய கடிதத்திற்கு எட்வர்ட் கிளைவ் ஆர்வம் காட்டவில்லை

எட்வர்ட் கிளைவ் (1798–1803) கர்நாடக அரசைக் கைப்பற்றினார் (1801), பாளையக்கார முறையை ஒழித்தார்; சென்னை உச்ச நீதிமன்றம் 1801-இல் நிறுவப்பட்டது. கட்டபொம்மனின் புகாருக்கு விசாரணைக் குழு அமைத்து ஜாக்சனைப் பதவி நீக்கினார் – ஆகவே (D) தவறு.

வினா 33 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
சரியான பொருத்தத்தை கண்டுபிடி. (1) பங்கிம் சந்திர சாட்டர்ஜி – ஆனந்த மடம் (2) மிண்டோ பிரபு – சென்னை (3) சுதேசி – வ.உ.சி (4) லாலா லஜபதி ராய் – கல்விக்கான தேசிய கழகம்
  1. (A) (1) மற்றும் (3) சரி
  2. (B) (1) மற்றும் (2) சரி
  3. (C) (1) மற்றும் (4) சரி
  4. (D) (4) மற்றும் (3) சரி
விடை, விளக்கம்

விடை: (A) (1) மற்றும் (3) சரி

பங்கிம் சந்திரர் – ஆனந்த மடம்; வ.உ.சி. – சுதேசி கப்பல் நிறுவனம் (1906). மிண்டோ இந்திய வைஸ்ராய் (சென்னை அல்ல); தேசியக் கல்விக் கழகம் (1906) வங்காளத்தில் சதீஷ் முகர்ஜி, அரவிந்தர் முதலியோரால் – லஜபதி ராய் அல்ல.

வினா 34 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
பின்வருவனவற்றைப் பொருத்துக : (a) மெட்ராஸ் மருத்துவப் பள்ளி – 1. 1837 (b) மெட்ராஸ் பிரசிடென்சி கல்லூரி – 2. 1835 (c) மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி – 3. 1842 (d) பச்சையப்பாஸ் கல்லூரி – 4. 1840
  1. (A) 2 1 4 3
  2. (B) 2 4 1 3
  3. (C) 2 4 3 1
  4. (D) 4 3 2 1
விடை, விளக்கம்

விடை: (B) 2 4 1 3

மெட்ராஸ் மருத்துவப் பள்ளி 1835; பிரசிடென்சி கல்லூரி 1840-இல் ஆயத்தப் பள்ளியாகத் தொடங்கியது; கிறிஸ்துவக் கல்லூரி 1837-இல் ஆண்டர்சன் பள்ளியாக; பச்சையப்பா கல்வி நிலையம் 1842.

வினா 35 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
கீழ்கண்டவர்களில் முத்துராமலிங்க சேதுபதிக்கு பதிலாக கிழக்கு இந்திய கம்பெனியால் ராம்நாட்டின் ஜமீன்தாராக நியமிக்கப்பட்டவர் யார்?
  1. (A) மங்கலேஸ்வரி நாச்சியார்
  2. (B) மருது பாண்டியர்
  3. (C) ராஜ உடையப்ப சேதுபதி
  4. (D) இரண்டாம் ரகுநாத சேதுபதி
விடை, விளக்கம்

விடை: (A) மங்கலேஸ்வரி நாச்சியார்

முத்துராமலிங்க சேதுபதியை 1795-இல் பதவி நீக்கிய கம்பெனி, அவரது சகோதரி மங்களேஸ்வரி நாச்சியாரை 1803-இல் ராம்நாடு ஜமீன்தாராக நியமித்தது.

வினா 36 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
பின்வரும் கூற்றையும், காரணத்தையும் படித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும். உறுதியான கூற்று [A] : கர்நாடகாவின் நவாப் அன்வர் உத்தின் பிரெஞ்சுக்காரர்களை எதிர்த்துப் போரிட 1746ல் ஒரு படையை அனுப்பினார். காரணம் [R] : மெட்ராஸ் கைப்பற்றப்பட்ட பிறகு அதை நவாப்பிடம் ஒப்படைப்பேன் என்ற வாக்குறுதியைப் பிரெஞ்சு கவர்னர் நிறைவேற்றத் தவறிவிட்டார். குறியீடு :
  1. (A) [A] சரி ஆனால் [R] தவறு
  2. (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]ன் சரியான விளக்கம்
  3. (C) [A] தவறு ஆனால் [R] சரி
  4. (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கம் அல்ல
விடை, விளக்கம்

விடை: (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]ன் சரியான விளக்கம்

முதல் கர்நாடகப் போரில் பிரெஞ்சுக்காரர் மெட்ராஸைக் கைப்பற்றினர் (1746); அதை நவாபிடம் ஒப்படைப்பதாகக் கூறிய டியூப்ளே மறுத்ததால் அன்வர்-உத்-தீன் படை அனுப்பினார்; அடையாறு (சாந்தோம்) போரில் தோற்றது.

வினா 37 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
அரசியலமைப்புத் திருத்தங்களை அவற்றின் தொடர்புடைய திருத்தச் சட்டங்களுடன் சரியாகப் பொருத்துங்கள். திருத்தம் – பொருளடக்கம் (a) 91ஆவது திருத்தச் சட்டம் – 1. அமைச்சர்கள் குழுவில் பிரதமர் உட்பட மக்களவை உறுப்பினர்களில் 15 விழுக்காடுக்கு மேல் இருக்கக்கூடாது (b) 102ஆவது திருத்தச் சட்டம் – 2. மக்களவையில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் வழங்கப்படும் (c) 105ஆவது திருத்தச் சட்டம் – 3. இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்திற்கு அரசியலமைப்புத் தகுநிலையை வழங்குகிறது (d) 106ஆவது திருத்தச் சட்டம் – 4. சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினரைக் கண்டறிந்து குறிப்பிடும் அதிகாரம் மாநில அரசுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது
  1. (A) 1 4 2 3
  2. (B) 2 1 3 4
  3. (C) 4 1 3 2
  4. (D) 1 3 4 2
விடை, விளக்கம்

விடை: (D) 1 3 4 2

91-வது (2003) – அமைச்சரவை 15% வரம்பு; 102-வது (2018) – NCBC-க்கு அரசியலமைப்புத் தகுநிலை (338B); 105-வது (2021) – SEBC பட்டியலிடும் அதிகாரம் மாநிலங்களுக்கு மீண்டும்; 106-வது (2023) – பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு.

வினா 38 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
உலகத் தமிழ் புலம்பெயர் நாள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை? (i) தமிழக முதலமைச்சர் அவர்கள் ஜனவரி 12-ஐ உலக புலம்பெயர் தமிழர் தினமாக அறிவித்தார். (ii) 'நாம் வெல்வோம்' என்ற கருப்பொருளுடன் புலம்பெயர் தமிழர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. (iii) வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க தமிழ்ப் பரப்புரை கழகம் அமைப்பதற்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  1. (A) (i) மட்டும்
  2. (B) (i) மற்றும் (iii) மட்டும்
  3. (C) (i) மற்றும் (ii) மட்டும்
  4. (D) (ii) மற்றும் (iii) மட்டும்
விடை, விளக்கம்

விடை: (A) (i) மட்டும்

ஜனவரி 12-ஐ அயலகத் தமிழர் தினமாகத் தமிழக முதலமைச்சர் அறிவித்தார் (i) சரி. 2024 மாநாட்டின் கருப்பொருள் 'தமிழ் வெல்லும்'; 'நாம் வெல்வோம்' அல்ல (ii). (iii)-இல் உள்ள ரூ.5 கோடி உறுதிப்படுத்தப்படவில்லை.

வினா 39 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
கீழ்க்கொடுக்கப்பட்டவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்ந்தெடுக்கவும். (1) மஞ்சுஷா கன்வர் – இறகுப் பந்தாட்டம் (2) வினீத்குமார் ஷர்மா – சதுரங்கம் (3) கவிதா செல்வராஜ் – கபடி (4) R. வைஷாலி – ஹாக்கி
  1. (A) (2) மற்றும் (4) சரி
  2. (B) (1) மற்றும் (3) சரி
  3. (C) (3) மற்றும் (4) சரி
  4. (D) (1) மற்றும் (2) சரி
விடை, விளக்கம்

விடை: (B) (1) மற்றும் (3) சரி

தேசிய விளையாட்டு விருதுகள் 2023 – தயான் சந்த் வாழ்நாள் விருது: மஞ்சுஷா கன்வர் (இறகுப் பந்து), வினீத் குமார் ஷர்மா (ஹாக்கி), கவிதா செல்வராஜ் (கபடி). ஆர். வைஷாலி – சதுரங்கம் (அர்ஜுனா 2023).

வினா 40 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
பொருத்துக : திட்டங்கள் – பயனாளிகள் (a) நான் முதல்வன் – 1. பொதுமக்கள் குறைகள் இல்லாமல் தீர்க்கப்படுவது (b) புதுமைப் பெண் – 2. பெண்களுக்கு அதிகாரமளித்தல் (c) விடியல் பயணம் – 3. மாணவிகளுக்கு கல்வி உதவியளித்தல் (d) மக்களுடன் முதல்வர் – 4. திறன் மேம்பாடு
  1. (A) 3 4 1 2
  2. (B) 4 3 2 1
  3. (C) 1 2 3 4
  4. (D) 4 1 2 3
விடை, விளக்கம்

விடை: (B) 4 3 2 1

நான் முதல்வன் – திறன் மேம்பாடு; புதுமைப் பெண் – உயர்கல்வி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000; விடியல் பயணம் – பெண்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்து; மக்களுடன் முதல்வர் – குறைதீர் முகாம்கள்.

வினா 41 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
மாவட்ட ஆட்சியரின் பணிகள் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுக்களில் சரியானவை எவை? (i) அவர் குடிமைப் பாதுகாப்புத் தொடர்பான பணிகளை மேற்கொள்கிறார். (ii) அவர் தன் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற நிர்வாகத்தை மேற்பார்வையிடுகிறார் (iii) அவர் மாவட்ட திட்ட செயலாக்கக் குழுவினைத் தலைமையேற்று வழிநடத்துகிறார்
  1. (A) (i) மற்றும் (ii) மட்டும்
  2. (B) (ii) மட்டும்
  3. (C) (ii) மற்றும் (iii) மட்டும்
  4. (D) (i), (ii) மற்றும் (iii)
விடை, விளக்கம்

விடை: (D) (i), (ii) மற்றும் (iii)

மாவட்ட நிர்வாகத் தலைவரான ஆட்சியர் குடிமைப் பாதுகாப்புப் பணிகள், நகராட்சி நிர்வாக மேற்பார்வை, மாவட்டத் திட்டச் செயலாக்கக் குழுத் தலைமை – மூன்றும் சரி.

வினா 42 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
தனித்து வேறுபடும் ஒன்றைத் தெரிவு செய்க. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தின் (சிப்காட்) நன்மைகள் குறித்து கீழே உள்ள அறிக்கைகளைக் கவனியுங்கள்.
  1. (A) இது நன்கு வடிவமைக்கப்பட்ட தொழில்துறை பூங்காக்களை உருவாக்கி பராமரிக்கிறது
  2. (B) தொழில் நிறுவனங்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு இது உதவுகிறது
  3. (C) இது முதலீட்டாளர்களுக்கு ஒற்றைத் தொடர்புப் புள்ளியாகச் செயல்படுகிறது
  4. (D) இது பல்வேறு கடன்களையும், இலவச மின்சாரத்தையும் வழங்குகிறது
விடை, விளக்கம்

விடை: (D) இது பல்வேறு கடன்களையும், இலவச மின்சாரத்தையும் வழங்குகிறது

சிப்காட் தொழில் பூங்காக்களை உருவாக்கிப் பராமரிக்கிறது, தொழிலுக்கான நிலத்தைக் கையகப்படுத்துகிறது, முதலீட்டாளர்களுக்கு ஒற்றைத் தொடர்புப் புள்ளி; இலவச மின்சாரம் வழங்குவதில்லை.

வினா 43 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
கூற்று [A] : அம்பேத்கரின் அனைத்துப் படைப்புகளையும் மொழிபெயர்க்க ரூ. 5 கோடி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காரணம் [R] : தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மூலம் அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட உள்ளது.
  1. (A) கூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
  2. (B) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R], [A] கூற்றுக்கு சரியான விளக்கம்
  3. (C) கூற்று [A] தவறு, காரணம் [R] சரி
  4. (D) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, ஆனால் காரணம் [R], [A] கூற்றுக்கு சரியான விளக்கமல்ல என்பது சரியானது
விடை, விளக்கம்

விடை: (A) கூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு

அம்பேத்கர் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது (2022). ஆனால் அப்பணி தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையிடம் இல்லை; எனவே [R] தவறு.

வினா 44 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
ஒரு வரியை நீக்கவோ அல்லது நிறுத்திவைக்கவோ நகராட்சிக்கு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவானது
  1. (A) பிரிவு – 110
  2. (B) பிரிவு – 111
  3. (C) பிரிவு – 112
  4. (D) பிரிவு – 113
விடை, விளக்கம்

விடை: (C) பிரிவு – 112

'வரியை நிறுத்திவைக்க அல்லது நீக்க நகராட்சிக்கு உள்ள அதிகாரம்' என்பது பிரிவு 112 (ராஜஸ்தான் நகராட்சிகள் சட்டம், 2009).

தகவல் ஆதாரம் முழுமையாகக் கிடைக்கவில்லை – TNPSC இறுதி விடைக்குறிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.
வினா 45 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
கூற்று [A] : ஒரு செயலாளர் கோப்புகளில் ஆழ்ந்து மற்றும் அது வழக்கமான சுமையாகவும் இருக்க வேண்டும். காரணம் [R] : அரசாங்கத்தின் ஒட்டுமொத்த காட்சிகளையும், எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் அளவிடுவதற்கு அவருக்கு காலம் இருப்பது அவசியம்
  1. (A) [A] சரி ஆனால் [R] தவறு
  2. (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி; மற்றும் [A] க்கு [R] சரியான விளக்கமாகும்
  3. (C) [A] தவறு, [R] சரி
  4. (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [A] க்கு [R] சரியான விளக்கமல்ல என்பது சரி
விடை, விளக்கம்

விடை: (C) [A] தவறு, [R] சரி

செயலாளர் கொள்கை ஆலோசகர்; அவர் கோப்புகளிலும் வழக்கமான பணிகளிலும் மூழ்கக் கூடாது; அரசின் ஒட்டுமொத்தப் பிரச்சினைகளை மதிப்பிட நேரம் வேண்டும். எனவே [A] தவறு, [R] சரி.

வினா 46 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
பின்வரும் குழுக்களை காலவரிசைப்படி வரிசைப்படுத்துக. (1) G.V.K. ராவ் குழு (2) அசோக் மேத்தா குழு (3) பல்வந்த்ராய் மேத்தா குழு (4) L.M. சிங்வி குழு
  1. (A) (2), (3), (1), (4)
  2. (B) (3), (2), (1), (4)
  3. (C) (4), (3), (1), (2)
  4. (D) (1), (4), (2), (3)
விடை, விளக்கம்

விடை: (B) (3), (2), (1), (4)

பல்வந்த்ராய் மேத்தா 1957 → அசோக் மேத்தா 1977 → G.V.K. ராவ் 1985 → L.M. சிங்வி 1986 (பஞ்சாயத்து ராஜ் குழுக்கள்).

வினா 47 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
சரியான விடையைத் தேர்வு செய்க பின்வரும் வாக்கியங்களில் மாநில அமைச்சர்கள் பற்றிய சரியான கூறுகளைத் தேர்வு செய். (i) மாநில அமைச்சர்கள் மாநிலச் சட்ட மன்றத்திற்குக் கூட்டாகப் பொறுப்புடையவர்கள் (ii) மாநில அமைச்சர்களுக்கு ஆளுநர் அவர்கள் இரகசிய காப்பு மற்றும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் (iii) மாநில அமைச்சர்களின் செலவினங்கள் சலுகைகள் மற்றும் பிற படிகளை மத்திய பாராளுமன்றமே தீர்மானிக்கும்
  1. (A) (i) மட்டும் சரி
  2. (B) (i) மற்றும் (ii) சரி
  3. (C) (ii) மற்றும் (iii) சரி
  4. (D) (i) மற்றும் (iii) சரி
விடை, விளக்கம்

விடை: (B) (i) மற்றும் (ii) சரி

சரத்து 164(2): சட்டமன்றத்திற்குக் கூட்டுப் பொறுப்பு; 164(3): ஆளுநர் பதவி, இரகசியக் காப்புப் பிரமாணம்; 164(5): அமைச்சர் ஊதியத்தை மாநிலச் சட்டமன்றம் நிர்ணயிக்கும் – நாடாளுமன்றம் அல்ல.

வினா 48 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
மக்களவையின் அமைப்பு பற்றிய பின்வரும் அறிக்கைகளை படித்து சரியான விளக்கத்தை தேர்ந்தெடுக்கவும்.
  1. (A) இது ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் இருந்து 20 பிரதிநிதிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
  2. (B) இது பிரதமரால் நியமிக்கப்படும் ஆங்கிலோ-இந்தியன் சமூகத்தின் 2 உறுப்பினர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
  3. (C) இது மாநிலங்களில் இருந்து 552 பிரதிநிதிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
  4. (D) இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக அறிவியலில் சிறப்பு புலமை பெற்ற 12 நபர்களை குடியரசுத்தலைவர் பரிந்துரைப்பார்
விடை, விளக்கம்

விடை: (A) இது ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் இருந்து 20 பிரதிநிதிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

சரத்து 81: மக்களவையில் மாநிலங்களிலிருந்து 530-க்கு மிகாமல், ஒன்றியப் பகுதிகளிலிருந்து 20-க்கு மிகாமல். ஆங்கிலோ-இந்தியன் நியமனம் (குடியரசுத் தலைவர்) 2020-இல் நீக்கப்பட்டது; 552 மொத்த உச்சவரம்பு; 12 நியமனம் – மாநிலங்களவை.

வினா 49 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
கீழ்கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I மற்றும் II-ல் உள்ளவற்றை சரியாக பொருத்துக. பட்டியல் I (நீதிப்பேராணை) – பட்டியல் II (நேரடி பொருள்) (a) ஆட்கொணர்வு நீதி பேராணை – 1. எத்தகைய தகுதி உரிமை (b) செயலுறுத்தும் நீதி பேராணை – 2. சான்றளிப்பு (c) நெறிமுறை உறுத்தும் நீதி பேராணை – 3. ஆணையிடுதல் (d) தகுதி முறை வினவும் நீதி பேராணை – 4. ஓர் நபரை ஆஜர்படுத்துதல்
  1. (A) 4 3 2 1
  2. (B) 2 4 1 3
  3. (C) 3 4 1 2
  4. (D) 1 4 3 2
விடை, விளக்கம்

விடை: (A) 4 3 2 1

ஆட்கொணர்வு – 'உடலைக் கொண்டு வா'; செயலுறுத்தும் (மாண்டமஸ்) – 'ஆணையிடுகிறோம்'; நெறிமுறை உறுத்தும் (செர்ஷியோரரி) – 'சான்றளிக்கப்பட'; தகுதி முறை வினவும் (கோ வாரண்டோ) – 'எந்த அதிகாரத்தால்'.

வினா 50 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
பின்வரும் கூற்றுகளில் சரியானவைகள் எவை? (i) எந்த ஒரு யூனியன் பிரதேசத்திற்கான உயர்நீதிமன்றத்தை அமைப்பதற்கான அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றுள்ளது. (ii) அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும், டெல்லிக்கும் தனியே உயர்நீதிமன்றம் இல்லை. (iii) அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் 1987-ஆம் ஆண்டு முழு அளவில் மாநிலங்களாயின.
  1. (A) (ii) மற்றும் (iii) மட்டும்
  2. (B) (ii) மட்டும்
  3. (C) (i) மற்றும் (ii) மட்டும்
  4. (D) (i) மற்றும் (iii) மட்டும்
விடை, விளக்கம்

விடை: (D) (i) மற்றும் (iii) மட்டும்

சரத்து 241 – ஒன்றியப் பகுதிக்கு உயர்நீதிமன்றம் அமைக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம்; அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் 20-02-1987 அன்று மாநிலங்களாயின. டெல்லிக்குத் தனி உயர்நீதிமன்றம் உண்டு (1966) – (ii) தவறு.

வினா 51 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
எந்த வழக்கில் உச்சநீதிமன்றம் "இந்திய அரசியலமைப்பின் முன்னுரை அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பகுதி" என்று தீர்ப்பு வழங்கியது?
  1. (A) சங்கரி பிரசாத் வழக்கு (1951)
  2. (B) எல்.ஐ.சி. வழக்கு (1995)
  3. (C) இந்திரா நேரு காந்தி வழக்கு (1975)
  4. (D) மேனகா காந்தி வழக்கு (1978)
விடை, விளக்கம்

விடை: (B) எல்.ஐ.சி. வழக்கு (1995)

எல்.ஐ.சி. வழக்கில் (1995) முன்னுரை அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பகுதி என உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது (கேசவானந்த பாரதி 1973-க்குப் பின்).

வினா 52 · அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்
பின்வரும் PCR–ன் நிகழ்வுகளைச் சரியான வரிசைப்படி அமைக்கவும். 1. பதனப்படுத்தல் 2. விரிவடைதல் 3. இயல்பு இழத்தல் 4. ஜெல் தயாரித்தல்
  1. (A) 3, 4, 2, 1
  2. (B) 1, 2, 3, 4
  3. (C) 2, 1, 3, 4
  4. (D) 3, 1, 2, 4
விடை, விளக்கம்

விடை: (D) 3, 1, 2, 4

PCR சுழற்சி: இயல்பு இழத்தல் (~94°C) → பதனப்படுத்தல் (ப்ரைமர் இணைதல்) → விரிவடைதல் (Taq பாலிமரேஸ்); பின்னர் ஜெல் மின்னாற்பகுப்பில் சோதிக்கப்படும்.

வினா 53 · அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்
My Scheme இயங்குதளம் ஏன் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது?
  1. (A) அரசு தயாரிப்புகளுக்கு ஆன்லைன் ஷாப்பிங் வழங்குதல்
  2. (B) பயனர்கள் தங்களின் மக்கள்தொகை அடிப்படையில் தகுதியான அரசு திட்டங்களை கண்டறிய அனுமதிப்பது
  3. (C) குடிமக்களுக்கு கல்வி வளங்களை இலவசமாக வழங்குதல்
  4. (D) நாடு முழுவதும் உள்ள அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் மக்களுக்கு உதவுதல்
விடை, விளக்கம்

விடை: (B) பயனர்கள் தங்களின் மக்கள்தொகை அடிப்படையில் தகுதியான அரசு திட்டங்களை கண்டறிய அனுமதிப்பது

myScheme (MeitY) தளம் – குடிமகனின் விவரங்களின் அடிப்படையில் அவர் தகுதியுடைய அரசுத் திட்டங்களை ஒரே இடத்தில் தேடிக் கண்டறிய உதவுகிறது.

வினா 54 · அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்
பொருத்துக : (a) இணை தடுப்பூசி – 1. இளம்பிள்ளை வாதம் (b) டாக்ஸாய்டு தடுப்பூசி – 2. ஹெபடைடிஸ்-B (c) கொல்லப்பட்ட தடுப்பூசி – 3. தட்டம்மை (d) அட்டென்யூட்டட் தடுப்பூசி – 4. டிப்தீரியா
  1. (A) 3 2 4 1
  2. (B) 2 4 1 3
  3. (C) 4 3 2 1
  4. (D) 1 3 4 2
விடை, விளக்கம்

விடை: (B) 2 4 1 3

டிப்தீரியா – டாக்ஸாய்டு, சால்க் போலியோ (IPV) – கொல்லப்பட்ட தடுப்பூசி, தட்டம்மை – உயிருள்ள வலுவிழந்த தடுப்பூசி; இவற்றுக்குப் பொருந்துவது (B) மட்டுமே.

வினா 55 · அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்
பின்வருவனவற்றுள் எந்தத் தாவரம், அதிக CO₂ உறிஞ்சும் திறனுடன், காலநிலை மாற்றத்தோடு போராடும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டது?
  1. (A) அரிசி
  2. (B) சோயா பீன்
  3. (C) பைன் மரம்
  4. (D) சோளம்
விடை, விளக்கம்

விடை: ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பங்கள் சரியானவை: (A), (C)

இரண்டுக்கும் ஆதாரம் உண்டு: அதிக CO₂ உறிஞ்சும் மரபணு மாற்ற அரிசி (OSA1, 2021; EPSPS, 2023) மற்றும் அதிக கரியமில வாயுவைப் பிடிக்கும் Living Carbon நிறுவனத்தின் மரபணு மாற்ற பைன்/பாப்லர் மரங்கள்.

வினா 56 · அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்
திராட்சை செல் வளர்ப்பில் எது நிறைந்துள்ளது?
  1. (A) அந்தோசாந்தின்
  2. (B) அந்தோசயனின்
  3. (C) பைரெத்ரின்
  4. (D) டாக்சால்
விடை, விளக்கம்

விடை: (B) அந்தோசயனின்

திராட்சை (Vitis vinifera) செல் வளர்ப்புகள் அந்தோசயனின் நிறமிகளை உற்பத்தி செய்வதற்கான முக்கிய அமைப்பாகும்.

வினா 57 · அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்
கூற்று [A] : அமிலமழை என்பது மழைநீர் அதிக அமிலத் தன்மையுடன் பொழிவது. காரணம் [R] : எரிபொருட்களை எரிப்பதால் வளிமண்டலம் நைட்ரஜன் மற்றும் கந்தகத்தின் ஆக்ஸைடுகளை கொண்டுள்ளது.
  1. (A) [A] சரி [R] தவறு
  2. (B) [A] தவறு [R] சரி
  3. (C) [A] மற்றும் [R] இரண்டுமே தவறு
  4. (D) [A] மற்றும் [R] இரண்டுமே சரி [R] என்பது [A]க்கு சரியான விளக்கம்
விடை, விளக்கம்

விடை: (D) [A] மற்றும் [R] இரண்டுமே சரி [R] என்பது [A]க்கு சரியான விளக்கம்

எரிபொருள் எரிப்பால் வெளியாகும் SO₂, NOₓ மழைநீரில் கரைந்து கந்தக, நைட்ரிக் அமிலங்களாகி மழையை அமிலத் தன்மையாக்குகின்றன (pH 5.6-க்குக் கீழ்).

வினா 58 · அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்
பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது? (i) சிலிகோன் ரப்பர் – உடல் திரவங்களுடன் வினைபுரியாது (ii) பிளாஸ்டிசைசர் – நெகிழியை உடையச் செய்யும் (iii) லேமினேட் – பிசின் மற்றும் ஒட்டிகளின் கலவை (iv) நிரப்பி – இயந்திர பண்புகளை மேம்படுத்த
  1. (A) (i) மற்றும் (iv) மட்டும்
  2. (B) (ii) மட்டும்
  3. (C) (i) மற்றும் (iii) மட்டும்
  4. (D) (ii) மற்றும் (iv) மட்டும்
விடை, விளக்கம்

விடை: (B) (ii) மட்டும்

பிளாஸ்டிசைசர் நெகிழியை மென்மையாகவும் வளையும் தன்மையுடனும் ஆக்குகிறது (எ.கா. PVC-ல் தாலேட்டுகள்); உடையச் செய்வதில்லை. மற்ற மூன்றும் சரி.

வினா 59 · அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்
2024, அக்டோபர் 4 முதல் 10 வரையிலான ஒரு வாரத்தில் எந்த கருத்துருவின் அடிப்படையில் "உலக விண்வெளி வாரம் 2024" கொண்டாடப்பட்டது?
  1. (A) விண்வெளி மற்றும் காலநிலை மாற்றம்
  2. (B) விண்வெளி மற்றும் ஆற்றல் நிலைத்தன்மை
  3. (C) விண்வெளியில் மகளிர்
  4. (D) நிலா : நட்சத்திரங்களின் வாயில்
விடை, விளக்கம்

விடை: (A) விண்வெளி மற்றும் காலநிலை மாற்றம்

உலக விண்வெளி வாரம் 2024 (அக். 4–10) கருப்பொருள்: 'விண்வெளி மற்றும் காலநிலை மாற்றம்'.

வினா 60 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
பின்வருவனவற்றுள் எவை தவறாகப் பொருத்தப்பட்டுள்ளன? (1) 2016 – மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் (2) 1992 – தேசிய அறக்கட்டளை சட்டம் (3) 2013 – தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (4) 1999 – புனர்வாழ்வு மன்றச் சட்டம்
  1. (A) (1) மற்றும் (3) தவறானவை
  2. (B) (1) மற்றும் (4) தவறானவை
  3. (C) (2) மற்றும் (3) தவறானவை
  4. (D) (2) மற்றும் (4) தவறானவை
விடை, விளக்கம்

விடை: (D) (2) மற்றும் (4) தவறானவை

தேசிய அறக்கட்டளை சட்டம் 1999-லும், இந்திய புனர்வாழ்வு மன்றச் சட்டம் 1992-லும் இயற்றப்பட்டன; (2), (4) ஆண்டுகள் இடம் மாறியுள்ளன. RPwD 2016, NFSA 2013 சரி.

வினா 61 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
POCSO சட்டம் 2012ன் கீழ், எந்த ஒரு நபரும் ஒரு குற்றத்தை காவல் துறையிடம் புகாரளிக்கத் தவறினால், பின்வருவனவற்றில் எதனால் தண்டிக்கப்படுவார்?
  1. (A) 6 மாதங்கள் வரை சிறை தண்டனை
  2. (B) 1 வருடம் சிறை தண்டனை மற்றும் அபராதம்
  3. (C) 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்
  4. (D) 3 மாதங்கள் வரை சிறை தண்டனை
விடை, விளக்கம்

விடை: (C) 6 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்

POCSO சட்டம் பிரிவு 21(1): குற்றத்தைப் புகாரளிக்கத் தவறினால் 6 மாதம் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

வினா 62 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
அட்டவணைப்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (அட்டூழியங்கள் தடுப்பு) சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
  1. (A) 1989
  2. (B) 1987
  3. (C) 1986
  4. (D) 1985
விடை, விளக்கம்

விடை: (A) 1989

SC/ST (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989-ஆம் ஆண்டு சட்டம் எண் 33; 30.01.1990 முதல் நடைமுறைக்கு வந்தது.

வினா 63 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
கூற்று [A] : சமூக ஒடுக்குமுறையின் சங்கிலிகளை உடைப்பதில் நவீன கல்விமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் [R] : தாழ்த்தப்பட்ட மக்களிடையே காணப்படும் கல்வியின்மை அவர்களை தாழ்ந்த தொழில்களை மேற்கொள்ளச் செய்கிறது.
  1. (A) [A] சரி ஆனால் [R] தவறு
  2. (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A] இன் சரியான விளக்கம்
  3. (C) [A] தவறு ஆனால் [R] சரி
  4. (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] என்பது [A]இன் சரியான விளக்கம் அல்ல
விடை, விளக்கம்

விடை: (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A] இன் சரியான விளக்கம்

கல்வி மறுக்கப்பட்டதால் ஒடுக்கப்பட்டோர் தாழ்ந்த பரம்பரைத் தொழில்களில் முடங்கினர்; நவீன கல்வி வேலைவாய்ப்பும் சமூக முன்னேற்றமும் தந்து ஒடுக்குமுறையை உடைத்தது – R, A-ஐ விளக்குகிறது.

வினா 64 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
கீழ்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது? (1) PMSSY – Pradhan Mantri Swasthya Suraksha Yojana (Prime Minister Health Protection Programme) (2) NTEP – National Tobacco Elimination Programme (3) NVBDCP – National Vector Borne Disease Control Programme (4) JSSK – Janani Shiksha Suraksha Karyakram (Mother Education Protection Programme)
  1. (A) (2) மற்றும் (3) சரியானவை
  2. (B) (3) மற்றும் (4) சரியானவை
  3. (C) (1) மற்றும் (3) சரியானவை
  4. (D) (1) மற்றும் (2) சரியானவை
விடை, விளக்கம்

விடை: (C) (1) மற்றும் (3) சரியானவை

NTEP = தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம்; JSSK = ஜனனி சிசு சுரக்ஷா காரியக்ரம் (தாய்–சேய் இலவச சிகிச்சை); PMSSY, NVBDCP சரி.

வினா 65 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
'முதல்வரின் காலை உணவு திட்டம்' பற்றிய குறிப்புடன்; பின்வரும் அறிக்கையைக் கவனியுங்கள். (1) இந்த திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. (2) மாநிலத்திலுள்ள அனைத்து தொடக்க பள்ளிகளிலும் இது செயல்படுத்தப்படும். (3) இந்த திட்டம் இந்தியாவில் ஒரு முன்னோடி திட்டம் மற்றும் மற்றவர்கள் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாகும். கீழே கொடுக்கப்பட்ட குறியீட்டை பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும் :
  1. (A) (1) மற்றும் (2) மட்டும்
  2. (B) (2) மற்றும் (3) மட்டும்
  3. (C) (1) மற்றும் (3) மட்டும்
  4. (D) (1), (2) மற்றும் (3)
விடை, விளக்கம்

விடை: (C) (1) மற்றும் (3) மட்டும்

இத்திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது (15-09-2022); பிற மாநிலங்கள் பின்பற்றும் முன்னோடித் திட்டம். ஆனால் இது அரசு (பின்னர் அரசு உதவி பெறும்) தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டுமே; 'அனைத்துத் தொடக்கப் பள்ளிகளுக்கும்' அல்ல. எனவே (2) தவறு.

வினா 66 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
தமிழ்நாட்டில் முதல்வர் டாஷ்போர்டின் முதன்மைப் பங்கு என்ன? (i) சுற்றுலாத் துறையின் புள்ளி விவரங்களைத் தருவது (ii) அரசு துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது (iii) சுகாதாரச் சேவைகளை நிர்வகிப்பது
  1. (A) (i) மட்டும்
  2. (B) (ii) மட்டும்
  3. (C) (i) மற்றும் (ii) மட்டும்
  4. (D) (ii) மற்றும் (iii) மட்டும்
விடை, விளக்கம்

விடை: (B) (ii) மட்டும்

முதல்வர் டாஷ்போர்டு அரசுத் துறைகள், திட்டங்களின் முக்கியச் செயல்திறன் குறியீடுகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் கருவி.

வினா 67 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
கூற்று [A] : மாவட்டங்களிடையே மக்கள் தொகை மாற்றம் வேறுபடுகிறது. காரணம் [R] : அதிக பொருளாதார வளர்ச்சி கொண்ட மாவட்டங்கள் அதிக மக்களை ஈர்க்கின்றன.
  1. (A) [A] சரி [R] தவறு
  2. (B) [A] மற்றும் [R] சரி, ஆனால் [R] என்பது [A]வை விளக்கவில்லை
  3. (C) [A] மற்றும் [R] இரண்டும் தவறு
  4. (D) [A] மற்றும் [R] சரி, மற்றும் [R] என்பது [A]வை சரியாக விளக்குகிறது
விடை, விளக்கம்

விடை: (D) [A] மற்றும் [R] சரி, மற்றும் [R] என்பது [A]வை சரியாக விளக்குகிறது

பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாவட்டங்கள் (சென்னை, கோவை, திருப்பூர்) குடிபெயர்வோரை ஈர்ப்பதால் மாவட்டங்களிடையே மக்கள்தொகை மாற்றம் வேறுபடுகிறது.

வினா 68 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட் திட்டங்களின் அம்சங்களில் பின்வருவனவற்றில் எது உண்மை? (1) முதலமைச்சரின் தரிசு நில மேம்பாட்டு இயக்கம் நீர்ப்பாசனம் சார்ந்த பயிர்களை இலக்காகக் கொண்டது. (2) ஒருங்கிணைந்த பண்ணை முறை பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பையும் கொண்டது (3) நெல் ஜெயராமன் இயக்கம் மூலமாக பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்தல்
  1. (A) (1) மட்டும்
  2. (B) (1) மற்றும் (2) மட்டும்
  3. (C) (2) மற்றும் (3) மட்டும்
  4. (D) (1) மற்றும் (3) மட்டும்
விடை, விளக்கம்

விடை: (C) (2) மற்றும் (3) மட்டும்

முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் மழைசார் நிலங்களுக்கானது – (1) தவறு; ஒருங்கிணைந்த பண்ணையம் பயிர் + கால்நடை; நெல் ஜெயராமன் இயக்கம் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்கிறது.

வினா 69 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
தமிழ்நாட்டின் GSDP வளர்ச்சி விகிதம் நிலையான விகிதத்தில் 2022-23ல் 8.13% ஆகவும் 2023-24ல் ________% ஆகவும் இருந்தது.
  1. (A) 8.18%
  2. (B) 8.23%
  3. (C) 8.28%
  4. (D) 8.33%
விடை, விளக்கம்

விடை: (B) 8.23%

தமிழக அரசு செய்திக் குறிப்பு (21.10.2024): நிலையான விலையில் GSDP வளர்ச்சி 2022-23ல் 8.13%, 2023-24ல் 8.23%.

வினா 70 · அலகு V – தமிழ்நாட்டுப் புவியியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை
கீழ்வருவனவற்றில் சரியான இணை எது? (1) SDMA – மாநிலப் பேரிடர் மேலாண்மைச் செயல்பாடு (2) SFDRR – பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான செண்டாய் கட்டமைப்பு (3) SDMP – மாநிலப் பேரிடர் மேலாண்மைத் திட்டம் (4) NEOC – தேசிய அவசர நடவடிக்கைக் குழு
  1. (A) (1) மற்றும் (2) சரி
  2. (B) (2) மற்றும் (4) சரி
  3. (C) (3) மற்றும் (4) சரி
  4. (D) (1) மற்றும் (4) சரி
விடை, விளக்கம்

விடை: கொடுக்கப்பட்ட விருப்பங்களில் எதுவும் முழுமையாகச் சரியில்லை (அருகிலுள்ளது: (A))

(2) மட்டுமே சரி: SDMA = மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம், SDMP = மாநிலப் பேரிடர் மேலாண்மைத் திட்டம் (Plan), NEOC = தேசிய அவசரச் செயல்பாட்டு மையம். (2) மட்டும் என்ற விடை இல்லை.

TNPSC இந்த வினாவை நிபுணர் குழுவின் இறுதி முடிவுக்கு அனுப்பியுள்ளது.
வினா 71 · அலகு V – தமிழ்நாட்டுப் புவியியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை
2017 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளியின் பெயரைக் குறிப்பிடுக.
  1. (A) வர்தா
  2. (B) ஒக்கி
  3. (C) நிஷா
  4. (D) மருதா
விடை, விளக்கம்

விடை: (B) ஒக்கி

ஒக்கி புயல் (29 நவ. – 6 டிச. 2017) கன்னியாகுமரி மாவட்டத்தையும் கேரளக் கடலோரத்தையும் பெரிதும் பாதித்தது; பல மீனவர்கள் உயிரிழந்தனர்.

வினா 72 · அலகு V – தமிழ்நாட்டுப் புவியியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை
பிரண்ட்லன்ட் அறிக்கையின் தலைப்பு
  1. (A) பூமியை கவனித்துக் கொள்வது
  2. (B) கவனித்துக் கொள்வது மற்றும் பகிர்வது
  3. (C) நமது பொதுவான எதிர்காலம்
  4. (D) சுற்றுச்சூழல் நட்பு சார்ந்த வளங்கள் நுகர்வு
விடை, விளக்கம்

விடை: (C) நமது பொதுவான எதிர்காலம்

கிரோ ஹார்லம் பிரண்ட்லன்ட் தலைமையிலான உலக சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் 1987 அறிக்கை 'நமது பொதுவான எதிர்காலம்'; நிலையான வளர்ச்சியை வரையறுத்தது.

வினா 73 · அலகு V – தமிழ்நாட்டுப் புவியியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை
நெடுவரிசை-I ஐ நெடுவரிசை-II உடன் பொருத்தி, விடைக் குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் : (a) உயிர் பகுப்பாய்வு உயிரினங்கள் – 1. வெஸ்புலா ஜெர்மானிக்கா (b) திரட்டி இனங்கள் – 2. பனை மரம் (c) மைல்கல் இனங்கள் – 3. மரப்பேன் (d) அயல்நாட்டு இனங்கள் – 4. ட்ரௌட் மீன்
  1. (A) 2 4 1 3
  2. (B) 3 1 4 2
  3. (C) 4 3 2 1
  4. (D) 3 2 4 1
விடை, விளக்கம்

விடை: (C) 4 3 2 1

ட்ரௌட் மீன் – நச்சுச் சோதனை உயிரி; மரப்பேன் – கன உலோகங்களைத் திரட்டும்; பனை – மைல்கல் (கீஸ்டோன்) இனம்; வெஸ்புலா ஜெர்மானிக்கா (ஜெர்மன் குளவி) – அயல் ஆக்கிரமிப்பு இனம்.

வினா 74 · அலகு V – தமிழ்நாட்டுப் புவியியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை
உயிர்க்கோள காப்பிடம் பற்றிய பின்வரும் குறிப்புகளை கருத்தில் கொண்டு எந்த ஒரு உயிர்க்கோள காப்பிடத்திற்கு பொருந்துகிறது என்று தேர்ந்தெடுக்கவும். (a) இது ஒரு மிகப்பெரிய அடுத்தடுத்த சதுப்பு நில பரப்பு (b) வெப்பமண்டல அரை பசுமை மாறா காடு (c) விவசாய அமைப்புகள், சில்விகல்சர், மீன்வளர்ப்பு, மற்றும் இறால் வளர்ப்பு (d) உலகளாவிய மிகப்பெரிய மங்கல் உயிரிய பல்வகைமை மற்றும் இதன் முக்கிய பகுதிகள் உலக பாரம்பரிய தளமாக வடிவமைந்துள்ளது. உயிர்க்கோள காப்பிடம் என்பது :
  1. (A) ஷாங்கோ சதுப்புநில உயிர்க்கோள காப்பிடம்
  2. (B) கேன் ஜியோ சதுப்புநில உயிர்க்கோள காப்பிடம்
  3. (C) மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பிடம்
  4. (D) சுந்தரவன சதுப்புநில உயிர்க்கோள காப்பிடம்
விடை, விளக்கம்

விடை: (D) சுந்தரவன சதுப்புநில உயிர்க்கோள காப்பிடம்

சுந்தரவனம் உலகின் மிகப்பெரிய தொடர்ச்சியான சதுப்புநிலக் காடு; அதிக அலையாத்தித் தாவர வகைமை; அதன் மையப் பகுதி (சுந்தரவன தேசியப் பூங்கா) யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளம் (1987).

வினா 75 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
கன்னியாகுமரி மாவட்டம் ________ கிராமத்தில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டது.
  1. (A) சின்னமுட்டம்
  2. (B) கொடிமுனை
  3. (C) நெய்யூர்
  4. (D) முத்தலக்குறிச்சி
விடை, விளக்கம்

விடை: (D) முத்தலக்குறிச்சி

9.06.2022 அன்று பாரத்நெட் (TANFINET) ஆப்டிகல் ஃபைபர் பதிக்கும் பணியை முதல்வர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் முத்தலக்குறிச்சி கிராமத்தில் தொடங்கி வைத்தார்.

வினா 76 · அலகு V – தமிழ்நாட்டுப் புவியியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை
பின்வருவனவற்றுள் எவை தவறாக இணைக்கப்பட்டுள்ளன? நதிகள் – துணை நதிகள் (1) காவிரி – அமராவதி (2) தாமிரபரணி – பாம்பாறு (3) வைகை – பேச்சியாறு (4) வெள்ளாறு – மஞ்சளாறு
  1. (A) (1) மற்றும் (3)
  2. (B) (1) மற்றும் (2)
  3. (C) (3) மற்றும் (2)
  4. (D) (3) மற்றும் (4)
விடை, விளக்கம்

விடை: (D) (3) மற்றும் (4)

அமராவதி காவிரியின் துணையாறு; பாம்பாறு தாமிரபரணியின் தொடக்கத் துணையாறு; மஞ்சளாறு வைகையின் துணையாறு (வெள்ளாற்றினுடையது அல்ல); பேச்சியாறு வைகையின் துணையாறு அல்ல – (3), (4) தவறு.

வினா 77 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது? (1) இந்து சமய அறநிலைத்துறை சட்டம் – 1925 (2) மெட்ராஸ் மாநில உதவி பெறும் தொழில்துறை சட்டம் – 1923 (3) அண்ணாமலை பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது – 1929 (4) ஈ.வெ. ராமசாமி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார் – 1930
  1. (A) (2) மற்றும் (4) சரியானவை இல்லை
  2. (B) (2) மற்றும் (3) சரியானவை இல்லை
  3. (C) (3) மற்றும் (4) சரியானவை இல்லை
  4. (D) (1) மற்றும் (4) சரியானவை இல்லை
விடை, விளக்கம்

விடை: (A) (2) மற்றும் (4) சரியானவை இல்லை

சென்னை மாநில தொழில் உதவிச் சட்டம் 1922-இல் நிறைவேறியது; பெரியார் சுயமரியாதை இயக்கத்தை 1925-இல் தொடங்கினார். இந்து சமய அறநிலையச் சட்டம் (1925), அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1929) சரி.

வினா 78 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
சான்றாண்மை என்னும் மண்டபத்தைத் தாங்கும் தூண்கள் எவை? என்பதைத் தெரிவு செய்க. (i) அன்பு, நாணம் (ii) சுணக்கம், பிணக்கம் (iii) மானம், வானம் (iv) ஒப்புரவு, உண்மை, கண்ணோட்டம்
  1. (A) (ii), (iv) மட்டும் சரி
  2. (B) (i), (iii), (iv) மட்டும் சரி
  3. (C) (i), (iv) மட்டும் சரி
  4. (D) (iii), (iv) மட்டும் சரி
விடை, விளக்கம்

விடை: (C) (i), (iv) மட்டும் சரி

திருக்குறள் 983: 'அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண்' – அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை ஆகிய ஐந்தும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள்.

வினா 79 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்று/கூற்றுகளை தேர்ந்தெடுக்கவும். (a) திட்டமிட்ட நகரம், தானியக் கிடங்கு மற்றும் உறை கிணறுகள் அரிக்கமேட்டில் கண்டெடுக்கப்பட்டன (b) சேரர்கள் காவேரி டெல்டா பகுதியை ஆட்சி செய்தனர். அவர்களின் தலைநகரம் உறையூர் ஆகும் (c) சோழர்களின் சின்னம் புலி ஆகும். அவர்கள் புலி உருவம் பொறித்த சதுர வடிவிலான செம்பு நாணயங்களை வெளியிட்டார்கள் (d) சங்க காலம் வெண்கலக் காலத்தில் இருந்து வேரூன்றத் தொடங்கியது
  1. (A) (a) மட்டும் சரி
  2. (B) (b) மட்டும் சரி
  3. (C) (a) மற்றும் (c) சரி
  4. (D) (a), (c) மற்றும் (d) சரி
விடை, விளக்கம்

விடை: (C) (a) மற்றும் (c) சரி

அரிக்கமேட்டில் திட்டமிட்ட குடியிருப்பு, கிடங்கு, உறைக்கிணறுகள் கிடைத்தன; புலிச் சின்னம் கொண்ட சோழர் புலி பொறித்த சதுரச் செம்பு நாணயங்களை வெளியிட்டனர். காவிரி டெல்டா/உறையூர் சோழருடையது; சங்க காலம் இரும்புக் காலத்தில் வேரூன்றியது.

வினா 80 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
தனித்தமிழ் இயக்கத்தின் விளைவுகள் : (1) சமஸ்கிருதம் மற்றும் ஆங்கில மொழிகளின் உதவியின்றியே தமிழ்மொழி இயங்கவல்லதென நிறுவுதல் (2) சங்கத் தமிழர் காத்து வளர்த்த தூய தமிழைக் கட்டிக்காத்தல் (3) இந்தி மொழி ஆதிக்கத்தை மட்டும் எதிர்த்துச் செயல்படுதல் (4) இந்தி மொழியை அகற்றி ஆங்கிலத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளுதல்
  1. (A) (1) மற்றும் (2) சரி
  2. (B) (1) மற்றும் (3) சரி
  3. (C) (2) மற்றும் (4) சரி
  4. (D) (2) மற்றும் (3) சரி
விடை, விளக்கம்

விடை: (A) (1) மற்றும் (2) சரி

மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கம் (1916) வடமொழி, ஆங்கிலக் கலப்பின்றித் தமிழ் இயங்க வல்லது என நிறுவி, சங்கத் தூய தமிழைக் காத்தது; அது இந்தி எதிர்ப்பு அல்லது ஆங்கில ஏற்பு இயக்கம் அல்ல.

வினா 81 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
பின்வரும் சொற்றொடர்களில் எது/எவை சரியானவை? (1) நீதிக்கட்சியின் கூட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்றன. (2) இந்தியதேசிய காங்கிரசின் கூட்டங்கள், பொது மக்களைக் கவருவதற்காக, தமிழிலும் நடந்தன. (3) 1927 ஆம் ஆண்டு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  1. (A) (1) மட்டும் சரியானது
  2. (B) (2) மட்டும் சரியானது
  3. (C) (1) மற்றும் (2) சரியானவை
  4. (D) (1), (2) மற்றும் (3) சரியானவை
விடை, விளக்கம்

விடை: (D) (1), (2) மற்றும் (3) சரியானவை

நீதிக்கட்சிக் கூட்டங்கள் ஆங்கிலத்தில் நடந்தன; மக்களைக் கவர காங்கிரஸ் தமிழையும் பயன்படுத்தியது; டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1927-இல் சட்ட மேலவை துணைத் தலைவரானார்.

வினா 82 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
சத்தியாகிரகிகள் உப்புச் சட்டத்திற்கு எதிராக தஞ்சை நோக்கி சென்றபோது பின்வருபவரில் யார் தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்தார்?
  1. (A) க. சந்தானம்
  2. (B) ஏ.ஜே. ராஜன்
  3. (C) ஜி. ராமசந்திரன்
  4. (D) செல்வி துர்காபாய்
விடை, விளக்கம்

விடை: கொடுக்கப்பட்ட விருப்பங்களில் எதுவும் முழுமையாகச் சரியில்லை (அருகிலுள்ளது: (B))

வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தின்போது (ஏப்ரல் 1930) தஞ்சை ஆட்சியர் ஜே.ஏ. தார்ன்; அவர் பெயர் விடைகளில் இல்லை.

வினா 83 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
சென்னை மகாஜன சபை எப்போது தொடங்கப்பட்டது?
  1. (A) மே 17, 1884
  2. (B) மே 26, 1884
  3. (C) மே 16, 1884
  4. (D) மே 6, 1884
விடை, விளக்கம்

விடை: (C) மே 16, 1884

சென்னை மகாஜன சபை 16 மே 1884 அன்று எம். வீரராகவாச்சாரி, ஜி. சுப்பிரமணிய ஐயர், பி. ஆனந்தசார்லு முதலியோரால் தொடங்கப்பட்டது; முதல் தலைவர் பி. ரங்கையா நாயுடு.

வினா 84 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
பின்வரும் தமிழறிஞர்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக. (1) மாயூரம் வேதநாயகம் பிள்ளை (2) வேதநாயக சாஸ்திரியார் (3) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் (4) எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை
  1. (A) (1), (2), (4), (3)
  2. (B) (2), (1), (3), (4)
  3. (C) (2), (1), (4), (3)
  4. (D) (3), (4), (2), (1)
விடை, விளக்கம்

விடை: (C) (2), (1), (4), (3)

வேதநாயக சாஸ்திரியார் (பி. 1774), மாயூரம் வேதநாயகம் பிள்ளை (பி. 1826), எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை (பி. 1827), ஆபிரகாம் பண்டிதர் (பி. 1859) – வரிசை 2, 1, 4, 3.

வினா 85 · அலகு I – தமிழ்நாட்டு நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம்
பேசின் உடன்படிக்கை (1802) தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை? (i) பேசின் உடன்படிக்கை பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் மற்றும் ஆங்கிலேயருக்கு இடையில் கையெழுத்தானது. (ii) பேஷ்வா 26 லட்சம் ரூபாய் வருமானம் தரும் பிரதேசங்களைக் கம்பெனிக்கு நிரந்தரமாக விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டார். (iii) பேஷ்வா சூரத் நகரைக் கம்பெனியிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டார்.
  1. (A) (i) மட்டும்
  2. (B) (i) மற்றும் (iii) மட்டும்
  3. (C) (i) மற்றும் (ii) மட்டும்
  4. (D) (i), (ii) மற்றும் (iii)
விடை, விளக்கம்

விடை: (D) (i), (ii) மற்றும் (iii)

பேசின் உடன்படிக்கை (31.12.1802): இரண்டாம் பாஜிராவ் துணைப்படைத் திட்டத்தை ஏற்று, ஆண்டுக்கு ரூ.26 லட்சம் வருமானம் தரும் பகுதிகளையும் சூரத் நகரையும் கம்பெனிக்கு விட்டுக்கொடுத்தார்.

வினா 86 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
கொள்கை மற்றும் திட்டம் தொடர்பாக V.N. காட்கில் குழு உருவாக்கப்பட்ட ஆண்டு
  1. (A) 1978
  2. (B) 1980
  3. (C) 1982
  4. (D) 1988
விடை, விளக்கம்

விடை: (D) 1988

வி.என். காட்கில் தலைமையிலான கொள்கை மற்றும் திட்டக் குழு 1988-ல் அமைக்கப்பட்டது; பஞ்சாயத்து ராஜ் அமைப்புக்கு அரசியலமைப்பு அந்தஸ்து பரிந்துரைத்தது (64-வது திருத்த மசோதா 1989).

வினா 87 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
கீழ்க்கண்டவற்றில் சரியான பொருத்தத்தைக் கண்டறிக. அமைப்புகள் – விதிகள் (1) பாராளுமன்றம் – 124 முதல் 147 (2) ஒன்றிய நீதித்துறை – 79 முதல் 122 (3) அரசு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடு – 36 முதல் 51 (4) அரசு பணியாளர் தேர்வாணையம் – 315 முதல் 323
  1. (A) (1) மற்றும் (3) சரி
  2. (B) (1) மற்றும் (2) சரி
  3. (C) (2) மற்றும் (3) சரி
  4. (D) (3) மற்றும் (4) சரி
விடை, விளக்கம்

விடை: (D) (3) மற்றும் (4) சரி

பாராளுமன்றம் – விதிகள் 79–122, ஒன்றிய நீதித்துறை – 124–147 (இடம் மாறியுள்ளன); வழிகாட்டு நெறிமுறைகள் 36–51, பணியாளர் தேர்வாணையங்கள் 315–323 சரி.

வினா 88 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
தமிழ்நாட்டில், இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக, முதலமைச்சரை, மக்கள் "தாயுமானவர்" என்று அழைக்கின்றனர்.
  1. (A) பள்ளியில் காலை உணவு
  2. (B) விடியல் பயணத் திட்டம்
  3. (C) நீங்கள் நலமா
  4. (D) மக்களுடன் முதல்வர்
விடை, விளக்கம்

விடை: (A) பள்ளியில் காலை உணவு

பள்ளிக் குழந்தைகளுக்குத் தாயைப் போலக் காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் (2022) முதல்வர் 'தாயுமானவர்' எனப் போற்றப்பட்டார்.

வினா 89 · அலகு V – தமிழ்நாட்டுப் புவியியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை
அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுக்களுள் எவை சரியானவை? (i) கோயமுத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் இத்திட்டத்தால் பலனடைகின்றன. (ii) ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளிங்கராயன் அணையிலிருந்து 1.5 டி.எம்.சி உபரி நீரை இத்திட்டத்திற்காக எடுக்க உத்தேசிக்கப்பட்டது. (iii) இத்திட்டம் 2456.41 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு, மேற்குறிப்பிட்ட மாவட்டங்களின் 28,464 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன நீர் வழங்குகிறது.
  1. (A) (i) மட்டும்
  2. (B) (i) மற்றும் (iii) மட்டும்
  3. (C) (i) மற்றும் (ii) மட்டும்
  4. (D) (ii) மற்றும் (iii) மட்டும்
விடை, விளக்கம்

விடை: (C) (i) மற்றும் (ii) மட்டும்

இத்திட்டம் (17.08.2024 திறப்பு) காளிங்கராயன் அணைக்கட்டுக் கீழ்ப்புறத்திலிருந்து பவானி உபரிநீர் 1.5 டி.எம்.சி-யை ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட 1,045 குளங்களுக்கு நீரேற்றுகிறது; செலவு ரூ.1,916.41 கோடி, பயன் 24,468 ஏக்கர் – (iii) தவறு.

வினா 90 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
தமிழ்நாடு அரசால் துவங்கப்பட்டுள்ள 'நீங்கள் நலமா' என்னும் திட்டமானது
  1. (A) மக்களுக்கும் - அரசாங்கத்திற்கும் இடையேயான இடைவெளியை குறைப்பதற்குமானதாகும்
  2. (B) இத்திட்டமானது மின் ஆளுகை எனும் கருவியால் உருவாக்கப்பட்டதாகும்
  3. (C) இத்திட்டமானது அரசு பொதுநல திட்டங்கள் குறிப்பிட்டவர்களுக்கு சென்று சேர்கிறதா என்று உறுதிப்படுத்துகின்றது
  4. (D) இவைகள் அனைத்தும்
விடை, விளக்கம்

விடை: (D) இவைகள் அனைத்தும்

'நீங்கள் நலமா' (06.03.2024) – முதல்வரும் அலுவலர்களும் பயனாளிகளை நேரடியாகத் தொடர்புகொண்டு திட்டங்கள் சென்றடைகின்றனவா எனக் கருத்துக் கேட்கும் மின்-ஆளுகைத் திட்டம்; மக்கள்–அரசு இடைவெளியைக் குறைக்கிறது.

வினா 91 · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள்
தமிழ்நாடு மின்னணு கழக நிறுவனத்தின் (ELCOT) கீழ்கண்ட கூற்றுகளின் அடிப்படையில் சரியான விடையை தேர்ந்தெடுக்க. (i) எல்காட் நிறுவனமானது கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாகும் (ii) இதன் பகுதியளவு, தமிழக அரசுக்கு சொந்தமுடையதாகும் (iii) தமிழக அரசாங்கத்தின் தகவல் தொழிற்நுட்பம் மற்றும் அது சார்ந்த உள்கட்டமை வளர்ச்சிக்கான சிறப்பு நிறுவனம் ஆகும் (iv) இந்நிறுவனம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும்
  1. (A) (iii) மற்றும் (iv) மட்டும் சரியானது
  2. (B) (ii) மற்றும் (iii) மட்டும் சரியானது
  3. (C) (i) மற்றும் (iv) மட்டும் சரியானது
  4. (D) (i) மற்றும் (ii) மட்டும் சரியானது
விடை, விளக்கம்

விடை: (A) (iii) மற்றும் (iv) மட்டும் சரியானது

எல்காட் 1977-ல் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் தமிழக அரசின் முழு உரிமையுள்ள நிறுவனமாக உருவாக்கப்பட்டது; மாநிலத்தின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்கான முதன்மை நிறுவனம்.

வினா 92 · அலகு III – அறிவியல், தொழில்நுட்பம்
iTNT ஹப் ________ அமைந்துள்ளது.
  1. (A) அண்ணா பல்கலைக்கழகம்
  2. (B) சென்னை பல்கலைக்கழகம்
  3. (C) வேலூர் தொழில்நுட்ப நிறுவனம்
  4. (D) மதுரை பல்கலைக்கழகம்
விடை, விளக்கம்

விடை: (A) அண்ணா பல்கலைக்கழகம்

iTNT ஹப் (தமிழ்நாடு புத்தாக்கத் தொழில்நுட்ப வலையமைப்பு) – இந்தியாவின் முதல் ஆழ்-தொழில்நுட்ப புத்தாக்க மையம் – 2023-ல் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கப்பட்டது.

வினா 93 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
மாவட்ட நிர்வாகத்தின் பரிணாம வளர்ச்சியை அவற்றுடன் தொடர்புடைய ஆண்டோடு சரியாக பொருத்தவும் : (a) அதிகார பரவலாக்கம் மீதான ராயல் ஆணையம் – 1. 1772 (b) இந்திய சட்டமுறை ஆணையம் – 2. 1885 (c) வங்காள உள்ளூர் சுய ஆட்சி சட்டம் – 3. 1909 (d) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் – 4. 1927
  1. (A) 2 4 1 3
  2. (B) 4 2 1 3
  3. (C) 1 4 3 2
  4. (D) 3 4 2 1
விடை, விளக்கம்

விடை: (D) 3 4 2 1

அதிகாரப் பரவலாக்க ராயல் ஆணைய அறிக்கை 1909; இந்தியச் சட்டமுறை (சைமன்) ஆணையம் 1927; வங்காள உள்ளாட்சிச் சட்டம் 1885; வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சியர் பதவியை 1772-ல் உருவாக்கினார்.

வினா 94 · அலகு V – தமிழ்நாட்டுப் புவியியல், சுற்றுச்சூழல், பேரிடர் மேலாண்மை
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பற்றிய சரியான கூற்றுகளைக் கண்டறிக. (i) பேரழிவுக்கான எதிர்வினைகளை ஒருங்கிணைத்து, அபாயங்களைக் குறைப்பதற்கு இது பொறுப்பு (ii) தமிழகத்தில் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகளைக் கண்காணிக்கும் தலைவராகத் தலைமைச் செயலாளர் செயல்படுகிறார் (iii) மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் போது, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்களை மாநில அமைச்சரவை பின்பற்றுகிறது
  1. (A) (i) மட்டும்
  2. (B) (i) மற்றும் (iii) மட்டும்
  3. (C) (i) மற்றும் (ii) மட்டும்
  4. (D) (ii) மற்றும் (iii) மட்டும்
விடை, விளக்கம்

விடை: (A) (i) மட்டும்

மாநிலப் பேரிடர் ஆணையம் எதிர்வினையை ஒருங்கிணைத்து அபாயத்தைக் குறைக்கிறது (i) சரி. அதன் தலைவர் முதலமைச்சர், தலைமைச் செயலாளர் அல்ல (ii). மாநிலத் திட்டத்தை அங்கீகரிப்பது ஆணையமே, அமைச்சரவை அல்ல (iii).

வினா 95 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பு முறையில் சேர்க்கப்படாத அமைப்பு எது?
  1. (A) பஞ்சாயத்து சமிதி
  2. (B) கிராம சபை
  3. (C) கிராமப் பஞ்சாயத்து
  4. (D) ஜில்லா பரிஷத்
விடை, விளக்கம்

விடை: (B) கிராம சபை

73-வது திருத்தப்படி மூன்றடுக்கு: கிராமப் பஞ்சாயத்து, பஞ்சாயத்து ஒன்றியம் (சமிதி), மாவட்ட ஊராட்சி (ஜில்லா பரிஷத்); கிராம சபை வாக்காளர்களின் பொதுக்குழு – அடுக்கு அல்ல.

வினா 96 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது? (1) ச. ராஜகோபாலாச்சாரி – சட்டமன்ற கீழவை (2) பா.பி. மண்டல் – சட்டமன்ற மேலவை (3) மொரார்ஜி தேசாய் – சட்டமன்ற மேலவை (4) சி.என். அண்ணாதுரை – சட்டமன்ற மேலவை
  1. (A) (1) மற்றும் (3) சரியானவை
  2. (B) (1) மற்றும் (2) சரியானவை
  3. (C) (2) மற்றும் (3) சரியானவை
  4. (D) (1) மற்றும் (4) சரியானவை
விடை, விளக்கம்

விடை: (C) (2) மற்றும் (3) சரியானவை

சட்டமன்ற மேலவை உறுப்பினராக முதல்வரானவர்கள் பற்றியது: ராஜாஜி (1952) நியமன மேலவை உறுப்பினர் – கீழவை அல்ல, எனவே (1) தவறு; A, B, D நீங்க, (2) பி.பி. மண்டல், (3) மொரார்ஜி தேசாய் சரி.

வினா 97 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
கீழ்க்காணப்படும் பட்டியல்களைப் பொருத்திச் சரியான விடையைத் தேர்வு செய்க. மத்திய அமைச்சர் வகை – பணி (a) அமைச்சர் குழு – 1. இவர் இராஜாங்க அமைச்சரின் கீழ்ப் பணி புரியமாட்டார் (b) தனி இலாக்காவுடைய மத்திய அமைச்சர் – 2. அனைத்து அமைச்சரவை கூட்டத்திலும் கலந்து கொண்டு பங்கு பெற வேண்டும் (c) மத்திய அமைச்சர் – 3. இவர் இராஜாங்க அமைச்சர் கீழ்ப் பணி புரிய வேண்டும் (d) இணை அமைச்சர் – 4. இவருக்குத் தனி இலாகாவுடைய துறைகள் ஒதுக்கப்படமாட்டாது
  1. (A) 2 1 4 3
  2. (B) 3 4 1 2
  3. (C) 4 3 2 1
  4. (D) 1 2 3 4
விடை, விளக்கம்

விடை: (A) 2 1 4 3

கேபினட் அமைச்சர் – எல்லா அமைச்சரவைக் கூட்டங்களிலும் பங்கேற்பார்; தனிப் பொறுப்புடைய இணையமைச்சர் – கேபினட் அமைச்சரின் கீழ் இல்லை; இணையமைச்சர் – தனித் துறைப் பொறுப்பு இல்லை; துணை அமைச்சர் – கேபினட் அமைச்சருக்கு உதவியாகப் பணியாற்றுவார்.

வினா 98 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும் (1) அரசமைப்பு விதி 19 மூலம் உத்திரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் அனைத்தும் நெருக்கடி நிலை காலத்தில் தானாகவே இடைநிறுத்தப்படும். (2) அரசமைப்பு விதி 359-கீழ் சில உரிமைகளை இடைநிறுத்த குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் உள்ளது. (3) சில உரிமைகள் இந்திய குடிமகனுக்கு மட்டுமே கிடைக்கும் (4) இராணுவத்தில் பணியாற்றும் நபர்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
  1. (A) (1) மட்டும்
  2. (B) (2) மட்டும்
  3. (C) (3) மட்டும்
  4. (D) (4) மட்டும்
விடை, விளக்கம்

விடை: (D) (4) மட்டும்

விதி 33 – ஆயுதப் படையினரின் அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்த/நீக்க (வழங்க அல்ல) நாடாளுமன்றத்துக்கு அதிகாரம்; விதி 358 – விதி 19 தானாக இடைநிறுத்தம்; விதி 359 – குடியரசுத் தலைவர்; விதிகள் 15, 16, 19, 29, 30 குடிமக்களுக்கு மட்டும்.

வினா 99 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
கூற்று [A] : அசாம் மறுசீரமைப்பு (மேகாலயா) சட்டம் 1969 மூலம் அசாம் மாநிலத்திற்குள் மேகாலயா என்ற தன்னாட்சி துணை மாநிலம் நிறுவப்பட்டது. காரணம் [R] : மாநில ஆட்சித்துறை மற்றும் சட்டமன்றம் விரும்பினால் கூட்டமைப்பின் அலகுகளின் நிலப்பகுதியை மாற்றலாம் அல்லது மறுபகிர்வு செய்யலாம்.
  1. (A) [A] சரி ஆனால் [R] தவறு
  2. (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி; மற்றும் [R], [A]க்கான சரியான விளக்கமாகும்
  3. (C) [A] தவறு [R] சரி
  4. (D) [A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [R], [A]க்கான சரியான விளக்கமல்ல என்பது சரி
விடை, விளக்கம்

விடை: (A) [A] சரி ஆனால் [R] தவறு

நாடாளுமன்றம் இயற்றிய அசாம் மறுசீரமைப்பு (மேகாலயா) சட்டம் 1969 மேகாலயாவை அசாமுக்குள் தன்னாட்சி மாநிலமாக்கியது (1972-ல் முழு மாநிலம்); விதி 3-ன்படி மாநில எல்லைகளை மாற்ற நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம்.

வினா 100 · அலகு II – மாநில நிர்வாகம் (தமிழ்நாடு)
இந்திய அரசியலமைப்பின் "குறிக்கோள் தீர்மானம்" தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது? (1) இந்தத் தீர்மானத்தை எழுதியவர் Dr.B.R. அம்பேத்கர். (2) இது ஜனவரி 22, 1947 அன்று அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. (3) இந்தியாவை இறையாண்மையுள்ள, சோசலிச, ஜனநாயகக் குடியரசாக அறிவிப்பதே இத்தீர்மானத்தின் குறிக்கோளாகும். (4) இத்தீர்மானம் பின்னர் இந்திய அரசியலமைப்பின் முகவுரையாக வடிவமைக்கப்பட்டது.
  1. (A) (1) மற்றும் (3)
  2. (B) (2) மற்றும் (4)
  3. (C) (1) மற்றும் (4)
  4. (D) (1) மற்றும் (2)
விடை, விளக்கம்

விடை: (B) (2) மற்றும் (4)

குறிக்கோள் தீர்மானத்தை ஜவஹர்லால் நேரு முன்மொழிந்தார் (13.12.1946); 22.01.1947-ல் ஏற்கப்பட்டு பின்னர் முகவுரையானது; அதில் 'சுதந்திர இறையாண்மைக் குடியரசு' மட்டுமே – 'சோசலிச' 1976-ல் சேர்க்கப்பட்டது.

வினா 101 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
மிகச்சரியான மாற்று விடையைத் தேர்வு செய்க. ஒரு தொழிற்சாலையில் எப்பொழுதும் இருப்பது
  1. (A) மின்சாரம்
  2. (B) புகைபோக்கி
  3. (C) தொழிலாளர்கள்
  4. (D) கோப்புகள்
விடை, விளக்கம்

விடை: (C) தொழிலாளர்கள்

தொழிலாளர்கள் இல்லாமல் தொழிற்சாலை இயங்காது; மின்சாரம், புகைபோக்கி, கோப்புகள் எல்லாத் தொழிற்சாலைக்கும் கட்டாயமல்ல.

வினா 102 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
366 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தின் பக்கங்களை எண்ணுவதில் பயன்படுத்தப்படும் மொத்த இலக்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
  1. (A) 732
  2. (B) 990
  3. (C) 1098
  4. (D) 1305
விடை, விளக்கம்

விடை: (B) 990

1–9: 9 இலக்கங்கள்; 10–99: 90×2 = 180; 100–366: 267×3 = 801; மொத்தம் 9+180+801 = 990.

வினா 103 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
இடப்புறத்திலிருந்து ஒன்பதாவது, வலப்புறத்திலிருந்து பதினைந்தாவது, இவை இரண்டிற்கும் மத்தியில் உள்ளது எது? δ=βF2*KS75#$PLVS@MUE6↑QG93&TY
  1. (A) #
  2. (B) $
  3. (C) P
  4. (D) L
விடை, விளக்கம்

விடை: (B) $

'=' உட்பட 29 குறியீடுகள்: இடமிருந்து 9-வது 7 (இடம் 9), வலமிருந்து 15-வது V (இடம் 15); நடு இடம் 12-ல் '$' உள்ளது.

வினா 104 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
ஒரு நாயானது தெற்கு திசை நோக்கி 50 அடி தூரம் ஓடிய பிறகு இடது புறம் திரும்பி 20 அடி தூரம் ஓடுகிறது மீண்டும் இடது புறம் திரும்பி 7 அடி தூரம் ஓடிய பிறகு, இடது புறம் திரும்பி 6 அடி தூரம் ஓடுகிறது. மீண்டும் வலது புறம் திரும்பி 15 அடி தூரம் ஓடிய பிறகு இறுதியாக வலது புறம் திரும்பி 5 அடி தூரம் ஓடுகிறது. தற்போது அந்த நாய் எந்த திசை நோக்கி இருக்கும்?
  1. (A) கிழக்கு
  2. (B) வடக்கு
  3. (C) தெற்கு
  4. (D) மேற்கு
விடை, விளக்கம்

விடை: (A) கிழக்கு

திசை: தெற்கு → இடது = கிழக்கு → இடது = வடக்கு → இடது = மேற்கு → வலது = வடக்கு → வலது = கிழக்கு.

வினா 105 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
A ஆனது B க்கு வடகிழக்கு திசையில் 50 மீ தூரத்திலும் B ஆனது C க்கு வடமேற்கு திசையில் 50 மீ தூரத்திலும் இருப்பின், A க்கு எந்த திசையில் C இருக்கும்?
  1. (A) வடக்கு
  2. (B) வடமேற்கு
  3. (C) தெற்கு
  4. (D) தென்மேற்கு
விடை, விளக்கம்

விடை: (C) தெற்கு

A-லிருந்து B தென்மேற்கில், B-லிருந்து C தென்கிழக்கில் சம தூரம்; கிழக்கு–மேற்கு பகுதிகள் சமனாகி C, A-க்கு நேர் தெற்கில் உள்ளது.

வினா 106 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
ஏழு நிர்வாகிகள் P, Q, R, S, T, U மற்றும் W குறிப்பிட்ட வரிசையில் அலுவலகத்தை அடைகின்றனர். U, P-க்கு முன் உடனடியாக சென்றடைகிறார், ஆனால் S-யை உடனடியாகப் பின்தொடரவில்லை. R தான் கடைசியாக அலுவலகத்தை அடைகிறார். T என்பவர் P-க்குப் பிறகு பின் தொடர்கிறார் மற்றும் W என்பவர் T-யை பின் தொடர்கின்றார். எனவே, நான்காவதாக அலுவலகத்தை அடைந்தவர் யார்?
  1. (A) W
  2. (B) U
  3. (C) T
  4. (D) P
விடை, விளக்கம்

விடை: ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பங்கள் சரியானவை: (A), (C), (D)

U-P-T-W தொடர், R கடைசி, S-க்குப் பின் உடனே U இல்லை என்ற நிபந்தனைகளுக்கு நான்கு வரிசைகள் பொருந்துகின்றன; நான்காம் இடம் T, P அல்லது W ஆகலாம்.

வினா 107 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
குறியீட்டு மொழியின்படி பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்க பின்வரும் தகவலைப் படிக்கவும். Column I இல் உள்ள பெரிய எழுத்தில் உள்ள சொற்கள் Column II இல் சிறிய எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. Column II இல் உள்ள எழுத்துகள் கலைந்து இணைக்கப்பட்டுள்ளது. மொழியை டிகோட் செய்து, கொடுக்கப்பட்ட கேள்விக்கான சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும். Column I – Column II (i) CROWDY – (a) blooppv (ii) SOUND – (b) jkgotv (iii) CRUX – (c) ijktv (iv) CRONY – (d) ikmop (v) NET – (e) cjmv (vi) ADDRESS – (f) abi NEETக்குச் சரியான குறியீட்டைக் கண்டறியவும்.
  1. (A) abbi
  2. (B) baai
  3. (C) biia
  4. (D) ibba
விடை, விளக்கம்

விடை: (D) ibba

எழுத்து எண்ணிக்கை, பொது எழுத்துகள் மூலம்: NET=abi, CRONY=ijktv, SOUND=ikmop, ADDRESS=blooppv → N=i, E=b, T=a; எனவே NEET = ibba.

வினா 108 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
கீழ்க்காணும் எண்களில் வேறுபட்ட எண் குழுவை எழுதுக.
  1. (A) 71, 7, 3, 17
  2. (B) 67, 71, 3, 5
  3. (C) 41, 5, 3, 47
  4. (D) 37, 14, 19, 7
விடை, விளக்கம்

விடை: (D) 37, 14, 19, 7

மற்ற குழுக்களில் அனைத்தும் பகா எண்கள்; (D)-யில் உள்ள 14 பகா எண் அல்ல.

வினா 109 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளில், (81, 77, 69) என்னும் தொகுப்பிற்கு இணையானதைத் தேர்ந்தெடுக்க :
  1. (A) (56, 52, 44)
  2. (B) (64, 61, 53)
  3. (C) (75, 71, 60)
  4. (D) (92, 88, 79)
விடை, விளக்கம்

விடை: (A) (56, 52, 44)

81 −4 = 77, 77 −8 = 69; அதுபோல 56 −4 = 52, 52 −8 = 44.

வினா 110 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
பின்வரும் கேள்வியில், நான்கு மாற்றுகளில் இருந்து உருவத்தைத் தேர்ந்தெடுத்து வரைபடம் (X)–யில் உள்ள வெற்றிடத்தை நிரப்புக.
  1. (A) படம் (A)
  2. (B) படம் (B)
  3. (C) படம் (C)
  4. (D) படம் (D)
விடை, விளக்கம்

விடை: (D) படம் (D)

நான்கு பகுதிகளும் சமச்சீரானவை; கீழ்-வலது பகுதி கீழ்-இடது பகுதியின் கண்ணாடி பிம்பம்: மைய மூலையில் (மேல்-இடது) இலை, வலப்புறமும் கீழும் சுருள்கள் – படம் (D).

வினா 111 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
பின்வரும் வினாவில், இடம் பெற்றுள்ள படம் (X)–ன் சரியான நீர்பிம்பத்தைத் தேர்வு செய்க.
  1. (A) படம் (A)
  2. (B) படம் (B)
  3. (C) படம் (C)
  4. (D) படம் (D)
விடை, விளக்கம்

விடை: (A) படம் (A)

நீர்பிம்பத்தில் மேல்–கீழ் மாறும்: தாமரை தலைகீழாகும், கீழே இருந்த பல கதிர்கள் மேலே, இரு சிறு கதிர்கள் கீழே – படம் (A).

வினா 112 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
கொடுக்கப்பட்ட படத்தின் சரியான கண்ணாடி பிம்பம் காண்க.
  1. (A) படம் (A)
  2. (B) படம் (B)
  3. (C) படம் (C)
  4. (D) படம் (D)
விடை, விளக்கம்

விடை: (C) படம் (C)

கொடுத்த படம்: இடப்பகுதி கோடிட்டது, வலப்பகுதி கருப்பு. பக்கக் கண்ணாடியில் இடம்–வலம் மாறும் – இடது கருப்பு, வலது கோடிட்டது – படம் (C).

வினா 113 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
கூற்று : புகை பிடிப்பது மனிதனின் பலவீனம் ஆகும். அது ஒருவனின் தன்னம்பிக்கை சோதிக்கும். முடிவு : I. புகை பிடிப்பவர்களுக்கு அவர்கள் விரும்பினாலும் அதை விடுவது மிகவும் கடினம். II. மனிதர்களுக்கு வேறு சில பலவீனங்களும் உண்டு.
  1. (A) முடிவு I சரி
  2. (B) முடிவு II சரி
  3. (C) முடிவு I–ம் அல்ல II–ம் அல்ல
  4. (D) முடிவு I, II சரி
விடை, விளக்கம்

விடை: (D) முடிவு I, II சரி

'மன உறுதியை எல்லை வரை சோதிக்கும்' → விடுவது கடினம் (I); 'பலவீனங்களில் ஒன்று' → வேறு பலவீனங்களும் உண்டு (II).

வினா 114 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
பின்வரும் சொற்களில் 'ENDEAVORS' என்ற சொல்லின் எழுத்துகளிலிருந்து உருவாக்க முடியாத சொல் எது?
  1. (A) VOTE
  2. (B) ROSE
  3. (C) END
  4. (D) DONE
விடை, விளக்கம்

விடை: (A) VOTE

ENDEAVORS-ல் T எழுத்து இல்லை; எனவே VOTE உருவாக்க முடியாது.

வினா 115 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
இந்த கேள்விகள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை : (i) 'A × B' என்பது 'A என்பது B யின் தாய்' (ii) 'A + B' என்பது 'A என்பது B யின் மகன்' B × J + P ல் B என்பது P – உடன் எவ்வாறு தொடர்புடையது?
  1. (A) தாய்
  2. (B) மாமா
  3. (C) மனைவி
  4. (D) மகள்
விடை, விளக்கம்

விடை: (C) மனைவி

B, J-யின் தாய்; J, P-யின் மகன்; எனவே P தந்தை, B அவரது மனைவி.

வினா 116 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
கொடுக்கப்பட்ட அறிக்கைகளின் முடிவுகளுக்கான சரியான விருப்பத்தை கண்டறியவும். அறிக்கைகள் : எல்லா மெழுகுவர்த்திகளும் விளக்குகள் ஆகும் எல்லா விளக்குகளும் மின்விளக்குகள் ஆகும் முடிவுகள் : I. எல்லா மெழுகுவர்த்திகளும் மின்விளக்குகள் ஆகும் II. எல்லா மின்விளக்குகளும் மெழுகுவர்த்திகள் ஆகும்
  1. (A) I மட்டும் தொடரத்தக்கது
  2. (B) II மட்டும் தொடரத்தக்கது
  3. (C) I மற்றும் II தொடரத்தக்கது
  4. (D) I மற்றும் II தொடரத்தக்கதல்ல
விடை, விளக்கம்

விடை: (A) I மட்டும் தொடரத்தக்கது

மெழுகுவர்த்தி ⊂ விளக்கு ⊂ மின்விளக்கு; எனவே I சரி, அதன் தலைகீழான II தொடராது.

வினா 117 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
விடுபட்ட இடத்தை நிரப்புக [வட்டம் 1: மேல் 5, இடம் 3, வலம் 2, கீழ் 4, மையம் 28] [வட்டம் 2: மேல் 8, இடம் 8, வலம் ?, கீழ் 4, மையம் 12]
  1. (A) 3
  2. (B) 9
  3. (C) 1
  4. (D) 2
விடை, விளக்கம்

விடை: கொடுக்கப்பட்ட விருப்பங்களில் எதுவும் முழுமையாகச் சரியில்லை (அருகிலுள்ளது: (D))

வெளி எண்கள் நான்கின் மீது +, −, ×, ÷, அடுக்கு என எவ்வகைச் சேர்க்கையிலும் முதல் வட்டத்திற்கு 28, இரண்டாம் வட்டத்திற்கு 12 தரும் விதி எந்த விடைக்கும் பொருந்தவில்லை.

வினா 118 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
5 ஆண்கள், 6 பெண்களிலிருந்து 3 ஆண்கள், 5 பெண்கள் கொண்ட ஒரு குழுவை எத்தனை வழிகளில் தேர்ந்தெடுக்கலாம்?
  1. (A) 15
  2. (B) 30
  3. (C) 60
  4. (D) 19
விடை, விளக்கம்

விடை: (C) 60

5C3 × 6C5 = 10 × 6 = 60.

வினா 119 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
ஒரு பெட்டியில் 2 வெள்ளை நிற பந்துகளும், 3 கருப்பு நிற பந்துகளும் 4 சிகப்பு நிற பந்துகளும் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு கருப்பு பந்து கொண்ட 3 பந்துகளை எடுக்க வேண்டுமெனில் எத்தனை வகைகளில் அவற்றை எடுக்கலாம்?
  1. (A) 32
  2. (B) 48
  3. (C) 64
  4. (D) 96
விடை, விளக்கம்

விடை: (C) 64

மொத்தம் 9C3 = 84; கருப்பு இல்லாமல் 6C3 = 20; குறைந்தது ஒரு கருப்பு = 84 − 20 = 64.

வினா 120 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒன்றோடொன்று சம்பந்தப்பட்ட (i), (ii) படங்களில் பொருத்தமற்ற படத்தைக் கண்டுபிடி.
  1. (A) 1
  2. (B) 2
  3. (C) 3
  4. (D) 4
விடை, விளக்கம்

விடை: (B) 2

1, 3, 4 இணைகளில் (ii) என்பது (i)-ஐ கடிகாரத் திசையில் 90° சுழற்றியது; 2-ல் வீடு எதிர்க்கடிகாரத் திசையில் சுழன்றுள்ளது (கூரை இடப்புறம்).

வினா 121 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
ஒரு பனிக்கட்டி தண்ணீரில் மிதக்கிறது.
  1. (A) அடிக்கடி
  2. (B) சில நேரங்களில்
  3. (C) ஒருபோதும் கிடையாது
  4. (D) எப்போதும்
விடை, விளக்கம்

விடை: (D) எப்போதும்

பனிக்கட்டியின் அடர்த்தி (சுமார் 0.92 கி/செ.மீ³) நீரைவிடக் குறைவு; எனவே எப்போதும் மிதக்கும்.

வினா 122 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
ஒரு வகுப்பில் உள்ளவர்களில் 2/5 பங்கு மாணவிகள். மீதி உள்ளவர்கள் மாணவர்கள். அவர்களில் 1/5 பங்கு மாணவிகளும் 1/4 பங்கு மாணவர்களும் பள்ளிக்கு வரவில்லை எனில் எவ்வளவு பங்கு மாணவர்கள் (Boys and Girls) பள்ளிக்கு வந்துள்ளனர்?
  1. (A) 17/25
  2. (B) 77/100
  3. (C) 62/100
  4. (D) 50/100
விடை, விளக்கம்

விடை: (B) 77/100

வந்த மாணவிகள் = 2/5 × 4/5 = 32/100; வந்த மாணவர்கள் = 3/5 × 3/4 = 45/100; மொத்தம் 77/100.

வினா 123 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
சரியான மாற்றை தேர்வு செய்க. a b __ __ b a a __ __ a b __
  1. (A) aaaaa
  2. (B) aabaa
  3. (C) aabab
  4. (D) baabb
விடை, விளக்கம்

விடை: (B) aabaa

aabaa நிரப்பினால் abaabaabaaba – 'aba' நான்கு முறை வருகிறது.

வினா 124 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
கீழே உள்ள வரைபடத்தைப் படித்து பார்த்து, இதில் வேலையில்லாத ஆனால் படிக்காத இளைஞர்களைக் குறிக்கும் பகுதியைக் கண்டறியவும். [வென் படம்: இளைஞர்கள், படித்தவர்கள், வேலையுடையோர்]
  1. (A) 2 மட்டும்
  2. (B) 6, 7
  3. (C) 2, 5, 8
  4. (D) 5, 8
விடை, விளக்கம்

விடை: (A) 2 மட்டும்

பகுதி 2 இளைஞர்கள் வட்டத்தில் மட்டும் உள்ளது – படித்தவர்கள், வேலையுடையோர் இரண்டிலும் இல்லை.

வினா 125 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
1 முதல் 6 வரை எண்ணிடப்பட்டுள்ள ஒரு பகடையைக் கருத்தில் கொண்டு விடையளி. எண் 2, 3 க்கு எதிரிலும், 4 மற்றும் 6 க்கு அருகிலும் இருப்பின் கீழ்க்கண்ட கூற்றுகளுள் எது சரி?
  1. (A) 1, 5 க்கு எதிரில் இருக்கும்
  2. (B) 4, 6 க்கு எதிரில் இருக்கும்
  3. (C) 4, 2 க்கும் 6 க்கும் அருகில் இருக்கும்
  4. (D) 1, 2 க்கும் 3 க்கும் அருகில் இருக்கும்
விடை, விளக்கம்

விடை: (D) 1, 2 க்கும் 3 க்கும் அருகில் இருக்கும்

2-ம் 3-ம் எதிரெதிர் என்பதால் மீதி 1, 4, 5, 6 ஆகிய எல்லா முகங்களும் 2, 3 இரண்டுக்கும் அருகில்; எனவே 1 உறுதியாக 2, 3-க்கு அருகில்.

வினா 126 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
A என்பவர் Bயின் சகோதரி, C என்பவர் Bயின் தாய், D என்பவர் Cயின் தந்தை மற்றும் E என்பவர் Dஇன் தாய். பிறகு A என்பவர் D உடன் எவ்வாறு தொடர்புடையவர்?
  1. (A) பேத்தி
  2. (B) மகள்
  3. (C) அத்தை
  4. (D) தந்தை
விடை, விளக்கம்

விடை: (A) பேத்தி

A, C-யின் மகள்; D, C-யின் தந்தை; எனவே A, D-க்கு பேத்தி.

வினா 127 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
ஒரு பெண்ணைக் காட்டி, ராஜ் "அவள் என் மனைவியின் சகோதரியின் மகள்" எனக் கூறினார். ராஜ் என்பவரின் மனைவி அப்பெண்ணுக்கு என்ன உறவு?
  1. (A) சித்தி
  2. (B) மகள்
  3. (C) சகோதரி
  4. (D) தாய்
விடை, விளக்கம்

விடை: (A) சித்தி

அப்பெண் ராஜின் மனைவியின் சகோதரியின் மகள்; எனவே ராஜின் மனைவி அவளுக்குத் தாயின் சகோதரி – சித்தி.

வினா 128 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் '481' என்றால் 'வானம் நீலம்', '246' என்றால் 'கடல் ஆழமானது' மற்றும் '698' என்றால் 'கடல் நீலமான தோற்றம்' என்று குறிக்கப்பட்டால், 'தோற்றத்திற்கான' அதன் குறியீட்டு மொழி என்ன?
  1. (A) 4
  2. (B) 6
  3. (C) 8
  4. (D) 9
விடை, விளக்கம்

விடை: (D) 9

கடல் = 6 (246, 698-ல் பொது), நீலம் = 8 (481, 698-ல் பொது); எனவே தோற்றம் = 9.

வினா 129 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
வேறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடுக்க :
  1. (A) AEHL
  2. (B) BFJN
  3. (C) HLPT
  4. (D) MQVZ
விடை, விளக்கம்

விடை: ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பங்கள் சரியானவை: (A), (D)

BFJN, HLPT இரண்டும் +4, +4, +4. AEHL (+4, +3, +4), MQVZ (+4, +5, +4) இரண்டும் விதியை மீறுகின்றன; எனவே வேறுபட்டவை இரண்டு. (AEHL-இல் மட்டும் உயிரெழுத்துகள் உள்ளன.)

TNPSC இந்த வினாவை நிபுணர் குழுவின் இறுதி முடிவுக்கு அனுப்பியுள்ளது.
வினா 130 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
ஆவியாதல் : மேகம் : மழை இந்த இணைக்கு பொருத்தமான இணையைத் தேர்ந்தெடுக்க :
  1. (A) தும்மல் : இருமல் : சளி
  2. (B) விபத்து : காயம் : வலி
  3. (C) தோல் பதனிடுதல் : தோல் : பணப்பை
  4. (D) மொட்டு : மலர் : நறுமணம்
விடை, விளக்கம்

விடை: (B) விபத்து : காயம் : வலி

காரண–காரியத் தொடர்: ஆவியாதல் → மேகம் → மழை; அதுபோல விபத்து → காயம் → வலி.

வினா 131 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
மிகச்சரியான மாற்று விடையைத் தேர்வு செய்க. வீரத்துடன் செயல்படுபவரிடம் கீழ்க்காண்பவற்றுள் எது காணப்படும்?
  1. (A) தைரியம்
  2. (B) அனுபவங்கள்
  3. (C) சக்தி
  4. (D) அறிவு
விடை, விளக்கம்

விடை: (A) தைரியம்

தைரியம் இல்லாமல் வீரம் இல்லை; அனுபவம், சக்தி, அறிவு கட்டாயமல்ல.

வினா 132 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
கொடுக்கப்பட்டுள்ள (X) படத்தில் எந்த உருவம் மறைந்துள்ளது?
  1. (A) படம் (A)
  2. (B) படம் (B)
  3. (C) படம் (C)
  4. (D) படம் (D)
விடை, விளக்கம்

விடை: (C) படம் (C)

(X) உருவம் (C)-யில் மறைந்துள்ளது: நடுவிலுள்ள குறுக்குக் கோடுகளும் சதுரத்தின் ஒவ்வொரு பக்கத்தின் பாதியும் சேர்ந்தால் (X) கிடைக்கிறது.

வினா 133 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
கீழே கொடுக்கப்பட்ட தொடரைக் கவனமாக படித்து வினாவிற்கு விடையளிக்க. RD15E%K3J19P8#A2B$KM6W@N4©T*7FH மேற்குறிப்பிட்ட தொடரில் குறியீடுக்கு முன்னரும் அடுத்ததாக எண்ணும் இருக்குமாறு எத்தனை மெய்யெழுத்துக்கள் உள்ளன?
  1. (A) ஒன்று
  2. (B) இரண்டு
  3. (C) மூன்று
  4. (D) நான்கு
விடை, விளக்கம்

விடை: (B) இரண்டு

குறியீடு–மெய்யெழுத்து–எண் அமைப்பு இருமுறை: % K 3, @ N 4.

வினா 134 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
கூற்று : நாங்கள் சில முறையான, சரியான பாடம் கற்பிக்கும் ஆற்றல்களை, உலகில் உள்ள பெரிய நிறுவனங்களில் இருந்து படித்துக் கற்பிக்கிறோம் – M.N. Institute Professor. முடிவு : I. M.N. நிறுவனம் உலகில் உள்ள ஒரு சிறந்த நிறுவனம். II. உலகில் உள்ள சிறந்த நிறுவனங்கள் கடைபிடிக்கும் நல்லவை; நல்லவைகளாகவும், பயன் உள்ளவையாகவும் இருக்கும்.
  1. (A) முடிவு I மட்டும் சரி
  2. (B) முடிவு II மட்டும் சரி
  3. (C) முடிவு I அல்லது II சரி
  4. (D) முடிவு I மற்றும் II சரி
விடை, விளக்கம்

விடை: கொடுக்கப்பட்ட விருப்பங்களில் எதுவும் முழுமையாகச் சரியில்லை (அருகிலுள்ளது: (B))

இரு முடிவுகளும் பின்பற்றவில்லை. சில சிறந்த முறைகளைப் பின்பற்றுவதால் M.N. முன்னணி நிறுவனம் ஆகாது (I). 'எதுவாயினும் நிச்சயம் நல்லது' (II) என்பது மிகைப் பொதுமைப்படுத்தல். 'இரண்டும் இல்லை' என்ற விடை தரப்படவில்லை.

வினா 135 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
இந்தக் கேள்வி பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது : A # B என்பது A வகுத்தல் B A * B என்பது A பெருக்கல் B ராம் என்பவரின் வருமானம் (A) ரவியின் வருமானத்தில் (B) 80%. சரியான தேர்வை கண்டறிக :
  1. (A) A = (100 # 80) * B
  2. (B) A = 80 # 100 # B
  3. (C) A = (80 # 100) * B
  4. (D) A = 80 * 100 * B
விடை, விளக்கம்

விடை: (C) A = (80 # 100) * B

A = B-யின் 80% = (80 ÷ 100) × B = (80 # 100) * B.

வினா 136 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
விடுபட்ட இடத்தில் சரியான படத்தினையிட்டு நிரப்புக [L வடிவம் (2 கோடுகள்), முக்கோணம் (3), சதுரம் (4), ?]
  1. (A) வட்டம்
  2. (B) ஐங்கோணம்
  3. (C) செவ்வகம்
  4. (D) அறுகோணம்
விடை, விளக்கம்

விடை: (B) ஐங்கோணம்

பக்கங்கள் ஒவ்வொன்றாக அதிகரிக்கின்றன: 2, 3, 4 → அடுத்தது 5 பக்க ஐங்கோணம்.

வினா 137 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
கூற்று : அணு சக்தியால் நாட்டின் பாதுகாப்பை உருவாக்க முடியாது. நடவடிக்கையின் போக்கு I : நமது அணுசக்தியை மேலும் அதிகரிப்பதை நிறுத்த வேண்டும். II : அணு சக்தியை அழிக்க வேண்டும் III : தூதரக உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்
  1. (A) நடவடிக்கை I மட்டும் சரி
  2. (B) நடவடிக்கை II மட்டும் சரி
  3. (C) நடவடிக்கை III மட்டும் சரி
  4. (D) நடவடிக்கை I மற்றும் II சரி
விடை, விளக்கம்

விடை: (C) நடவடிக்கை III மட்டும் சரி

அணுசக்தி மட்டும் பாதுகாப்பு தராது என்பதற்காக அதை நிறுத்தவோ அழிக்கவோ வேண்டியதில்லை; தூதரக உறவை மேம்படுத்துவதே (III) சரியான நடவடிக்கை.

வினா 138 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
விடுபட்ட இடத்தை நிரப்புக [36, 216 → 6; 25, 125 → 5; ?, 64 → 4]
  1. (A) 4
  2. (B) 9
  3. (C) 49
  4. (D) 16
விடை, விளக்கம்

விடை: (D) 16

இடது = கீழ் எண்ணின் வர்க்கம், வலது = கனம்: 6² = 36, 6³ = 216; எனவே 4² = 16.

வினா 139 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
ஜனவரி 1, 2007 திங்கட்கிழமை எனில் ஜனவரி 1, 2008 என்ன கிழமையாக இருக்கும்?
  1. (A) திங்கட்கிழமை
  2. (B) செவ்வாய்க்கிழமை
  3. (C) புதன்கிழமை
  4. (D) ஞாயிற்றுக்கிழமை
விடை, விளக்கம்

விடை: (B) செவ்வாய்க்கிழமை

2007 சாதாரண ஆண்டு (365 நாள் = 52 வாரம் + 1 மீதி நாள்); திங்கள் + 1 = செவ்வாய்.

வினா 140 · பொது நுண்ணறிவும் காரணவியலும்
2020 ஜனவரி 1 ஆம் தேதி வியாழக்கிழமை எனில் 2021 ஜனவரி முதல் நாள் என்ன கிழமை?
  1. (A) திங்கள்
  2. (B) புதன்
  3. (C) வெள்ளி
  4. (D) சனி
விடை, விளக்கம்

விடை: (D) சனி

2020 லீப் ஆண்டு (366 நாள் = 52 வாரம் + 2 மீதி நாள்); வியாழன் + 2 = சனி.

வினாக்கள் TNPSC அதிகாரப்பூர்வ வினாத்தாளிலிருந்து. விடைகளும் விளக்கங்களும் Shanmugam IAS Academy ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு இரு முறை சரிபார்க்கப்பட்டவை; TNPSC நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிய வினாக்கள் தனியாகக் குறிக்கப்பட்டுள்ளன.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)