தினம் ஒரு Mains வினா

2 நவம்பர் 2026குரூப் 2 Mainsஅலகு V – அரசியலமைப்பு, அரசியல், ஆளுகை (தமிழ்நாடு)பகுதி C15 மதிப்பெண் · 250 சொற்கள்

அரசியலமைப்புப் பிரிவு 262, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு (2007), உச்ச நீதிமன்றத் தீர்ப்பு (2018) ஆகியவற்றின் பின்னணியில் கர்நாடகத்தின் மேகதாது நீர்த்தேக்கத் திட்டம் குறித்த தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை ஆராய்க. காவிரி நீர்ப் பகிர்வுத் தீர்ப்பைச் செயல்படுத்துவதில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்திறனை மதிப்பிடுக.

Examine Tamil Nadu's position on Karnataka's Mekedatu reservoir project in the light of Article 262, the Cauvery Water Disputes Tribunal's final award (2007) and the Supreme Court judgment (2018). Assess the effectiveness of the Cauvery Water Management Authority in implementing the Cauvery water-sharing award.

நேரம் வைத்து எழுதுங்கள்:12:00

➤ படிக்க வேண்டியவை – பாடக் குறிப்பு

முதலில் இதைப் படியுங்கள், பிறகு எழுதுங்கள். இது தகவல் குறிப்பு மட்டுமே – மாதிரி விடை நாளை.

1. அரசியலமைப்பு, சட்டம்

  • அரசியலமைப்புப் பிரிவு 262 – மாநிலங்களுக்கிடையிலான நதி / நதிப்பள்ளத்தாக்கு நீர் தகராறுகளைத் தீர்க்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம்; உச்ச நீதிமன்றம் உட்பட எந்த நீதிமன்றமும் அதிகாரம் செலுத்தக்கூடாது என்றும் சட்டம் வழங்கலாம்.
  • மாநிலங்களுக்கிடையிலான நதிநீர்த் தகராறுகள் சட்டம், 1956: பிரிவு 4 – கோரிக்கை பெற்ற ஓராண்டுக்குள் நடுவர் மன்றம்; பிரிவு 5 – 3 ஆண்டுகளில் அறிக்கை (மேலும் 2 ஆண்டு நீட்டிப்பு); பிரிவு 6(1) – அரசிதழில் வெளியிடப்பட்ட தீர்ப்பு இறுதியானது, கட்டுப்படுத்தக்கூடியது; பிரிவு 6(2) – உச்ச நீதிமன்ற ஆணை / தீர்ப்பாணைக்குச் சமமான வலிமை (2002 திருத்தச் சட்டம் எண் 14); பிரிவு 6A – செயல்படுத்தும் திட்டம் (1980-இல் சேர்ப்பு); பிரிவு 11 – நீதிமன்ற அதிகார விலக்கு.
  • உச்ச நீதிமன்றம் 09.12.2016: பிரிவு 6(2), 11 இருந்தாலும் நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரான பிரிவு 136 மேல்முறையீடு ஏற்கத்தக்கது.
  • நதிநீர்த் தகராறுகள் (திருத்த) மசோதா, 2019 – மக்களவையில் 31.07.2019 நிறைவேற்றம்: பல அமர்வுகளுடன் ஒரே நிரந்தரத் தீர்ப்பாயம்; தகராறு தீர்வுக் குழு (1 ஆண்டு + 6 மாதம்); தீர்ப்பாயம் 2 ஆண்டு (+1); திட்டம் வகுப்பது கட்டாயம்; நதிப்படுகைத் தேசியத் தரவு வங்கி.

2. காவிரி தகராறு – காலவரிசை

  • 1892, 1924 – சென்னை மாகாணம் – மைசூர் சமஸ்தான ஒப்பந்தங்கள்; 1924 ஒப்பந்தத்தின் சில விதிகள் 50 ஆண்டுகளுக்குப் பின் (1974) மறுஆய்வுக்குரியவை – அதன் பின் ஒப்பந்தம் நீடிக்கிறதா என்பதே தகராறின் மையம்.
  • 02.06.1990 – காவிரி நீர்த் தகராறு நடுவர் மன்றம் (உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மே 1990). ஜூன் 1991 – இடைக்கால உத்தரவு: கர்நாடகா 205 TMC விடுவிக்க வேண்டும்.
  • 05.02.2007 – இறுதித் தீர்ப்பு: மொத்தம் 740 TMC; தமிழ்நாடு 419, கர்நாடகா 270, கேரளா 30, புதுச்சேரி 7; 2013-இல் அரசிதழில் வெளியீடு.
  • 16.02.2018 – உச்ச நீதிமன்றம் (தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவ ராய், ஏ.எம். கான்வில்கர்): தமிழ்நாடு 404.25, கர்நாடகா 284.75 (+14.75 = TN நிலத்தடி நீர் 10 + பெங்களூரு குடிநீர் 4.75); கேரளா, புதுச்சேரி மாற்றமில்லை; பிலிகுண்டுலுவில் 177.25 TMC; 15 ஆண்டுகளுக்குப் பொருந்தும்; மாநிலங்களுக்கிடையிலான நதிகள் தேசியச் சொத்து; குடிநீருக்கு முன்னுரிமை.
  • ஜூன் 2018 – பிரிவு 6A-இன் கீழ் "காவிரி நீர் மேலாண்மைத் திட்டம், 2018": காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA), காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC).
  • 25.08.2023 – வறட்சி ஆண்டுப் பிரச்சினையில் "எங்களுக்கு நிபுணத்துவம் இல்லை" என உச்ச நீதிமன்றம் நிபுணர் அமைப்புகளிடம் விட்டது.
  • 13.11.2025 – மேகதாது தொடர்பான தமிழ்நாட்டின் மனுக்கள் "முன்கூட்டியவை" என ஏற்கப்படவில்லை (விவரம் பகுதி 4).

3. CWMA / CWRC

  • CWMA: தலைவர், 8 உறுப்பினர்கள் (2 முழுநேரம், 2 பகுதிநேரம், 4 மாநிலப் பிரதிநிதிகள்), செயலர்; தலைவர் – மூத்த நீர்வளப் பொறியாளர் அல்லது அனுபவமுள்ள IAS அலுவலர் (5 ஆண்டு அல்லது 65 வயது).
  • பணிகள்: தீர்ப்பு நிறைவேற்றம்; அணைகளின் இயக்கம், ஒழுங்குபடுத்திய விடுவிப்பு மேற்பார்வை; பிலிகுண்டுலு அளவீட்டு நிலையத்தில் கர்நாடக விடுவிப்பு கண்காணிப்பு; ஜூன் 1 (நீர் ஆண்டு தொடக்கம்) இருப்புக் கணக்கீடு; நுண்ணீர்ப் பாசனம், பயிர் முறை குறித்து ஆலோசனை.
  • CWRC: ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜசாகர், கபினி, மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பாணாசுரசாகர் – 8 அணைகளின் தினசரித் தரவு; ஜூன்–அக்டோபர் பருவமழைக் காலத்தில் 10 நாளுக்கு ஒருமுறை கூட்டம்.
  • சாதாரண ஆண்டு பிலிகுண்டுலு அட்டவணை (TMC): ஜூன் 9.19, ஜூலை 31.24, ஆகஸ்ட் 45.95, செப்டம்பர் 36.76, அக்டோபர் 20.22, நவம்பர் 13.78, டிசம்பர் 7.35, ஜனவரி 2.76, பிப்ரவரி – மே மாதம் தலா 2.5 = 177.25 (மக்களவை வினா 1901, 14.12.2023). வறட்சி ஆண்டில் பங்குகள் "விகிதாச்சாரப்படி குறைக்கப்படும்".

4. மேகதாது திட்டம்

  • இடம்: காவிரி – அர்க்காவதி சங்கமம் அருகே, கனகபுரா வட்டம், பெங்களூரு தெற்கு மாவட்டம், கர்நாடகா – தமிழ்நாடு எல்லை அருகே.
  • அளவு: 67.16 TMC சேமிப்பு; பெங்களூருக்கு 4.75 TMC குடிநீர்; 400 MW நீர்மின்சாரம்; சுமார் 5,000 ஹெக்டேர் மூழ்கும் – பெரும்பாலும் வனப்பகுதி.
  • 2018 – மத்திய நீர் ஆணையம் (CWC) DPR தயாரிக்க அனுமதி; அதை எதிர்த்து TN சட்டமன்றம் 06.12.2018 சிறப்பு அமர்வில் ஒருமனதுத் தீர்மானம்.
  • முந்தைய DPR தொழில்நுட்பக் காரணங்களால் திருப்பி அனுப்பப்பட்டது; 2026-இல் திருத்திய DPR ஒன்றிய அரசிடம் சமர்ப்பிப்பு.
  • 13.11.2025 உச்ச நீதிமன்றம் (தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன், என்.வி. அஞ்சாரியா): CWC ஆணை DPR தயாரிப்பை மட்டுமே அனுமதிக்கிறது; DPR பரிசீலனைக்கு CWMA, CWRC முன் ஒப்புதல் முன்நிபந்தனை; DPR ஏற்கப்பட்டால் TN சட்டப்படி எதிர்க்கலாம்; நீதிமன்ற உத்தரவுப்படி நீர் விடுவிக்கத் தவறினால் கர்நாடகா அவமதிப்பு நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும்.
  • 31.10.2026 (மண்டியா) – கர்நாடக முதலமைச்சர்: வனத்துறைக்கு வழங்க 2,500 ஏக்கர் மாற்று நிலம் (வனநிலம் உட்பட) அடையாளம்; விவசாயிகளின் நிலம் சுமார் 500 ஏக்கர் மட்டுமே; விவரங்கள் வன அனுமதி இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

5. தமிழ்நாட்டின் நிலைப்பாடு (அதிகாரப்பூர்வம்)

  • முதலமைச்சர் கடிதம் எண் 940/CMO/2021 (04.07.2021): 4.75 TMC குடிநீருக்கு 67.16 TMC தேக்கம் நியாயமில்லை; கபினி துணைப்படுகை, KRS-க்குக் கீழான நீர்ப்பிடிப்பு, சிம்ஷா, அர்க்காவதி, சுவர்ணவதி – இவற்றின் "கட்டுப்படுத்தப்படாத" நீர் கர்நாடகம் வழங்க வேண்டிய ஆண்டு அளவின் பகுதி; மேகதாது அதைத் தேக்கித் திருப்பும்.
  • சட்டமன்ற ஒருமனதான தீர்மானங்கள்: 06.12.2018 (CWC அனுமதியைத் திரும்பப்பெறக் கோரி; அதற்கு முன் இருமுறை தீர்மானம்); 21.03.2022 (ஒன்றிய அரசு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது; CWMA DPR-ஐப் பரிசீலிக்கக்கூடாது).
  • உச்ச நீதிமன்றத்தில் TN வாதம் (2025): நீர்த்தேக்கம் பிலிகுண்டுலு அளவீட்டு நிலையத்துக்கு மேலே அமைவதால் கீழ்நோக்கிய விடுவிப்பு குறையும்.

6. டெல்டா, மேட்டூர்

  • மேட்டூர் அணை (ஸ்டான்லி நீர்த்தேக்கம்) – 1934-இல் நிறைவு; முழு நீர்மட்டம் 120 அடி.
  • குறுவைக்கு வழக்கமான திறப்பு நாள் ஜூன் 12; பின்னர் சம்பா. 2026-இல் காவிரிப் படுகையில் போதிய மழையின்மையால் 01.09.2026 அன்றுதான் திறப்பு (≈81 நாள் தாமதம்).
  • ஜூன்–செப்டம்பர் பிலிகுண்டுலு அட்டவணை 123.14 TMC = ஆண்டு அளவின் சுமார் 69% – குறுவைக் காலத்தில் ஒவ்வொரு TMC-யும் முக்கியம்.

7. விடையை உயர்த்தும் சொற்கள்

  • கீழ்ப்பாசன உரிமை (lower-riparian rights), சமநீதிப் பகிர்வு (equitable apportionment), படுகை அளவிலான மேலாண்மை (basin-level management), வறட்சிப் பகிர்வுச் சூத்திரம் (distress-sharing formula), கூட்டுறவுக் கூட்டாட்சி (cooperative federalism).
Reference note in English

Key facts

  • Article 262: Parliament may by law provide for adjudication of inter-State river water disputes and may bar the jurisdiction of the Supreme Court and other courts.
  • ISRWD Act, 1956: s.4 tribunal within one year of a request; s.5 report in 3 years (+2); s.6(1) gazetted decision final and binding; s.6(2) same force as an order or decree of the Supreme Court (Act 14 of 2002); s.6A implementation scheme (inserted 1980); s.11 bar of jurisdiction. SC 09.12.2016: Article 136 appeals against an award are maintainable.
  • ISRWD (Amendment) Bill, 2019 – passed Lok Sabha 31.07.2019: a single standing tribunal with benches; Disputes Resolution Committee (1 year + 6 months); tribunal 2 years (+1); scheme mandatory; national river-basin data bank.
  • Timeline: 1892 and 1924 Madras–Mysore agreements (some clauses of the 1924 agreement open to review after 50 years, i.e. 1974 – whether it survived is the core of the dispute); Cauvery Water Disputes Tribunal notified 02.06.1990; interim order June 1991 – 205 TMC; final award 05.02.2007 – 740 TMC: TN 419, Karnataka 270, Kerala 30, Puducherry 7; notified 2013.
  • SC 16.02.2018 (Dipak Misra CJ, Amitava Roy, A.M. Khanwilkar JJ): TN 404.25, Karnataka 284.75 (+14.75 = 10 for TN groundwater + 4.75 Bengaluru drinking water); Kerala and Puducherry unchanged; 177.25 TMC at Biligundlu; valid for 15 years; inter-State rivers are national assets; drinking water gets priority.
  • Cauvery Water Management Scheme, 2018 (s.6A, June 2018): CWMA (chair, 8 members – 2 full-time, 2 part-time, 4 State representatives – and a secretary) and CWRC (daily data of 8 reservoirs incl. Mettur; meets every 10 days in the June–October monsoon period). Normal-year Biligundlu schedule (TMC): June 9.19, July 31.24, Aug 45.95, Sep 36.76, Oct 20.22, Nov 13.78, Dec 7.35, Jan 2.76, Feb–May 2.5 each = 177.25 (Lok Sabha USQ 1901, 14.12.2023); shares "proportionately reduced" in a distress year.
  • Mekedatu: near the Cauvery–Arkavathi confluence, Kanakapura taluk, Bengaluru South district; 67.16 TMC; 4.75 TMC for Bengaluru; 400 MW; about 5,000 ha submerged, mostly forest. CWC permitted DPR preparation in 2018; earlier DPR returned; revised DPR submitted to the Centre in 2026.
  • SC 13.11.2025 (CJI B.R. Gavai, K. Vinod Chandran, N.V. Anjaria JJ): TN's pleas "premature"; CWC only permitted DPR preparation; prior approval of the CWMA and CWRC is a prerequisite; TN may challenge an approved DPR; Karnataka risks contempt if it fails to release water. Earlier, 25.08.2023: SC left distress-year issues to the expert bodies.
  • 31.10.2026 (Mandya): Karnataka CM – 2,500 acres of alternative land (incl. forest) identified for the Forest Department; only about 500 acres of farmers' land; details to be uploaded to the forest-clearance portal.
  • TN position: CM letter 940/CMO/2021 (04.07.2021) – 67.16 TMC not justified for 4.75 TMC; the reservoir would impound "uncontrolled" flows (Kabini sub-basin, catchment below KRS, Simsha, Arkavathy, Suvarnavathy) that form part of Karnataka's delivery. Unanimous Assembly resolutions 06.12.2018 (special session) and 21.03.2022.
  • Mettur (Stanley Reservoir): completed 1934; FRL 120 ft; customary 12 June opening for kuruvai, then samba; opened only on 01.09.2026 (≈81 days late) after poor rain in the basin. June–September schedule 123.14 TMC ≈ 69% of the annual release.
  • Value-add terms: lower-riparian rights, equitable apportionment, basin-level management, distress-sharing formula, cooperative federalism.
பாடக் குறிப்பு PDF பதிவிறக்கம்

அதிகாரப்பூர்வ ஆதாரங்கள்:

இந்தப் பாடத்தை முழுமையாகப் படிக்க – எங்கள் புத்தகம்:

எப்படி அணுகுவது? (குறிப்புகள்)

  • இரு செயல்வினைகள் – "ஆராய்க" (தமிழ்நாட்டின் நிலைப்பாடு), "மதிப்பிடுக" (CWMA). முன்னுரை, சட்டக் கட்டமைப்பு, TN வாதங்கள், CWMA பலம் + குறைகள், முன்னோக்கிய வழி – ஒவ்வொன்றுக்கும் தனித் தலைப்பு.
  • Unit V கோணம்: அரசியலமைப்புப் பிரிவு 262, 1956 சட்டத்தின் எந்தப் பிரிவுகள் தீர்ப்புக்கு வலிமை தருகின்றன, செயலாக்கத் திட்டம் எந்தப் பிரிவின் கீழ் என்பதை இரண்டு வரிகளில் சொல்லுங்கள்.
  • காலவரிசையை (ஒப்பந்தங்கள் → நடுவர் மன்றம் → இறுதித் தீர்ப்பு → உச்ச நீதிமன்றம் → CWMA) flowchart-ஆகவும், 2007 – 2018 ஒதுக்கீட்டு மாற்றத்தை அட்டவணையாகவும் காட்டுங்கள்.
  • தமிழ்நாட்டுக் கோணம்: சேமிப்பு அளவு vs குடிநீர்த் தேவை, KRS / கபினிக்குக் கீழான "கட்டுப்படுத்தப்படாத" நீர், குறுவைக் கால விடுவிப்பு, மேட்டூர் திறப்பு. கர்நாடக வாதத்தை ஒரு வரியில் சொல்லி மறுக்கவும்.

In English: Two directive verbs – "examine" (TN's position) and "assess" (the CWMA); headings for the introduction, legal framework, TN's grounds, CWMA strengths + gaps and the way forward · Unit V angle: Article 262, the Sections of the 1956 Act that give an award its force and provide for an implementation scheme – two lines are enough · show the timeline (agreements → tribunal → final award → Supreme Court → CWMA) as a flowchart and the 2007 vs 2018 allocation change as a table · Tamil Nadu angle: storage size vs drinking-water need, the "uncontrolled" flows below KRS / Kabini, kuruvai-season releases, the Mettur opening; state and rebut Karnataka's case in one line

உங்கள் விடையை அனுப்புங்கள்

காகிதத்தில் எழுதி, தெளிவான படம் எடுத்து WhatsApp-இல் அனுப்புங்கள் (பெயர், ஊர் குறிப்பிடுங்கள்). சிறந்த விடைகள் உங்கள் அனுமதியுடன் இங்கே வெளியிடப்படும்.

மதிப்பீட்டு அளவுகோல்
மாதிரி விடை வடிவம் நாளை வெளியிடப்படும். முதலில் நீங்களே எழுதுங்கள் – பிறகு ஒப்பிடுங்கள்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)

குரூப் 2 Mains பயிற்சி

புதிய பாடத்திட்டப்படி வகுப்புகள், test series, விடை திருத்தம் – கோவை, மதுரை, ஆன்லைன்.

விவரம் 99941 46662