நடப்பு நிகழ்வுகள் மே 2026 – தேசியம்: அரசியல், ஆளுகை,… (30 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் மே 2026 – தேசியம்: அரசியல், ஆளுகை,… (30 வினா) – 30 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வர் யார்?

Correct Answer: A [சுவேந்து அதிகாரி]

விளக்கம்:

09.05.2026, பிரிகேட் பரேட் மைதானம்; பிறர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

2.  

மேற்கு வங்க முதல்வருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த ஆளுநர்?

Correct Answer: D [ஆர்.என். ரவி]

விளக்கம்:

ஆர்.என். ரவி முன்பு தமிழ்நாடு ஆளுநராக இருந்தவர்.

3.  

2026 அசாம் தேர்தலில் NDA வென்ற இடங்கள் (மொத்தம் 126)?

Correct Answer: A [102]

விளக்கம்:

பாஜக 82, அசாம் கண பரிஷத் 10, BPF 10 = 102.

4.  

2026 கேரளத் தேர்தலில் UDF வென்ற இடங்கள் (மொத்தம் 140)?

Correct Answer: B [102]

விளக்கம்:

UDF 102 (காங்கிரஸ் 63, IUML 22); LDF 35. சில ஊடகங்களின் 97 தவறு.

5.  

கேரள முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்ற நாள்?

Correct Answer: B [18 மே 2026]

விளக்கம்:

18.05.2026, ஆளுநர் ஆர்லேகர்; 21 பேர் அமைச்சரவை.

6.  

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி மே 2026-இல் எத்தனையாவது முறையாகப் பதவியேற்றார்?

Correct Answer: D [5-வது]

விளக்கம்:

13.05.2026; துணைநிலை ஆளுநர் கே. கைலாசநாதன்.

7.  

சட்டமன்றம் கொண்ட ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் முதல்வரை நியமிப்பவர்?

Correct Answer: A [குடியரசுத் தலைவர்]

விளக்கம்:

ஒன்றியப் பகுதிகள் அரசுச் சட்டம், 1963; குடியரசுத் தலைவர் 10 மே அன்று நியமித்தார்.

8.  

மே 2026 அவசரச் சட்டத்துக்குப் பின் உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை (தலைமை நீதிபதி உட்பட)?

Correct Answer: A [38]

விளக்கம்:

தலைமை நீதிபதி நீங்கலாக 37; உட்பட 38 (முன்பு 34).

9.  

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்தும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

Correct Answer: C [நாடாளுமன்றம் (சட்டத்தின் மூலம்)]

விளக்கம்:

விதி 124(1); நாடாளுமன்றம் கூடாதபோது விதி 123-இன்படி அவசரச் சட்டம்.

10.  

இரு உணவு விநியோகத் திட்டங்களை இணைத்து உருவாக்கப்பட்ட புதிய திட்டம்?

Correct Answer: C [SARTHAK PDS]

விளக்கம்:

ஒன்றியப் பங்கு ₹25,530 கோடி; 31.03.2031 வரை.

11.  

மே 2026-இல் 11 ஆண்டுகளை நிறைவு செய்த திட்டங்களில் இல்லாதது எது?

Correct Answer: D [PM-KISAN]

விளக்கம்:

PMSBY, PMJJBY, APY – 9 மே 2015 தொடக்கம். PM-KISAN 2019.

12.  

“அமிர்தபர்வம்-2026” எந்தக் கோயிலின் மறுசீரமைப்பு 75 ஆண்டுகளைக் குறித்தது?

Correct Answer: D [சோம்நாத்]

விளக்கம்:

11.05.2026 கும்பாபிஷேகத்துடன் நிறைவு; சோம்நாத் – குஜராத்.

13.  

அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த ஆளுநர்?

Correct Answer: A [லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா]

விளக்கம்:

12.05.2026, கானாபாரா கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானம்.

14.  

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்டம் எது?

Correct Answer: A [வீட்டுப்பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பு]

விளக்கம்:

கட்டம் 1 – HLO; கட்டம் 2 – மக்கள்தொகை எண்ணிக்கை.

15.  

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-இல் முதன்முறையாக அறிமுகமான வசதி எது?

Correct Answer: D [இணைய வழிச் சுய கணக்கெடுப்பு]

விளக்கம்:

se.census.gov.in வழி சுய கணக்கெடுப்பு; 01.05 வரை ~82 லட்சம் குடும்பங்கள்.

16.  

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அரசியலமைப்பின் எந்தப் பட்டியலில் உள்ளது?

Correct Answer: D [ஒன்றியப் பட்டியல்]

விளக்கம்:

ஒன்றியப் பட்டியல், பதிவு 69; சட்டம் – மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டம், 1948.

17.  

NFHS-6-இன் முதன்மை (nodal) நிறுவனம் எது?

Correct Answer: C [IIPS, மும்பை]

விளக்கம்:

பன்னாட்டு மக்கள்தொகை அறிவியல் நிறுவனம், மும்பை; கணக்கெடுப்பு 2023-24.

18.  

NFHS-6 படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வளர்ச்சிக் குன்றல் (stunting) எவ்வளவு?

Correct Answer: C [29.3%]

விளக்கம்:

NFHS-5-இல் 35.5% இருந்தது; 31.8% – எடைக் குறைவு; 5.2% – கடும் மெலிவு.

19.  

NFHS-6 படி இந்தியாவின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) என்ன?

Correct Answer: A [2.0]

விளக்கம்:

TFR 2.0 – மாற்றீட்டு நிலை 2.1-க்குக் கீழ்.

20.  

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான விசாரணைக் குழு எந்தச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது?

Correct Answer: B [நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968]

விளக்கம்:

அறிக்கை 18.05.2026 அன்று மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

21.  

நீதிபதிகள் விசாரணைக் குழுவின் தலைமை அலுவலர் யார்?

Correct Answer: B [நீதிபதி அரவிந்த் குமார்]

விளக்கம்:

உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார்; உறுப்பினர்கள் – பம்பாய் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, மூத்த வழக்கறிஞர்.

22.  

உயர் நீதிமன்ற நீதிபதியை நீக்கும் நடைமுறையைக் குறிப்பிடும் விதி எது?

Correct Answer: A [விதி 217(1)(b)]

விளக்கம்:

உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு விதி 124(4); அதே நடைமுறை 217(1)(b) வழியாக உயர் நீதிமன்ற நீதிபதிக்கும்.

23.  

நாட்டின் முதல் செயல்படும் PM MITRA பூங்கா எங்கு திறக்கப்பட்டது?

Correct Answer: C [வாரங்கல், தெலங்கானா]

விளக்கம்:

10.05.2026; காகதீய மெகா ஜவுளிப் பூங்கா; 1,327 ஏக்கர்.

24.  

PM MITRA திட்டத்தின் “5F” தொலைநோக்கில் இல்லாதது எது?

Correct Answer: A [Finance]

விளக்கம்:

5F = Farm, Fibre, Factory, Fashion, Foreign.

25.  

இந்தியாவின் முதல் MLFF தடையற்ற சுங்க முறை எந்தச் சுங்கச்சாவடியில் தொடங்கப்பட்டது?

Correct Answer: A [சோர்யாசி (NH-48, குஜராத்)]

விளக்கம்:

சூரத்–பரூச் பகுதி; ANPR, FASTag பயன்பாடு.

26.  

PMGSY-IV எங்கு தொடங்கப்பட்டது?

Correct Answer: A [பைருந்தா, மத்தியப் பிரதேசம்]

விளக்கம்:

சேஹோர் மாவட்டம், PMGSY வெள்ளி விழா (தொடக்கம் 25.12.2000).

27.  

வாக்காளர் பட்டியலை எப்போது வேண்டுமானாலும் சிறப்புத் திருத்தம் செய்ய அனுமதிப்பதாக உச்ச நீதிமன்றம் (மே 2026) குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-ன் பிரிவு எது?

Correct Answer: B [விதி 21(3)]

விளக்கம்:

விதி 21(3) – பதிவு செய்த காரணங்களுக்காகச் சிறப்புத் திருத்தம். விதி 16 – பதிவுக்குத் தகுதியின்மை; 62, 123 ஆகியவை 1951 சட்டப் பிரிவுகள்.

28.  

27.05.2026 அன்று SIR-ஐ உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை வகித்தவர்:

Correct Answer: D [தலைமை நீதிபதி சூர்ய காந்த்]

விளக்கம்:

அமர்வு: தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜோய்மால்யா பாக்ச்சி.

29.  

2026 மே மாதம், தாய்மொழியில் கல்வி பெறும் குழந்தையின் உரிமையை உச்ச நீதிமன்றம் முதன்மையாக எந்தப் பிரிவுடன் இணைத்தது?

Correct Answer: A [விதி 19(1)(a)]

விளக்கம்:

பதம் மேத்தா வழக்கு (12.05.2026): பேச்சு, கருத்துச் சுதந்திரம் – விதி 19(1)(a); விதி 21A உடன் சேர்த்து.

30.  

பதம் மேத்தா தீர்ப்பில் (2026) பள்ளிப் பாடமாக அறிமுகப்படுத்த உத்தரவிடப்பட்ட மொழி எது?

Correct Answer: C [ராஜஸ்தானி]

விளக்கம்:

ராஜஸ்தானியை அரசு, தனியார் பள்ளிகளில் படிப்படியாக அறிமுகப்படுத்த உத்தரவு; எட்டாவது அட்டவணையில் இல்லாதது காரணமாகாது.

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0