TNPSC Group 2 & 2A Previous Year Question Papers · குரூப் 2, 2A பழைய வினாத்தாள்கள்

TNPSC குரூப் 2, 2A (ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II) முதல்நிலைத் தேர்வின் அதிகாரப்பூர்வ வினாத்தாள்கள் 2013 முதல் 2025 வரை – பொதுத் தமிழ், General English, பொது அறிவு – இறுதி விடைக்குறிப்புகளுடன், மற்றும் முதன்மைத் தேர்வு வினாத்தாள்கள் (குரூப் 2 விரிந்துரை, குரூப் 2A கொள்குறி, தமிழ்த் தகுதித் தேர்வு) – அனைத்தும் TNPSC தளத்திலிருந்து நேரடியாக, இலவசமாக. ஒவ்வொரு இணைப்பையும் திறந்து சரிபார்த்துள்ளோம்.

Official TNPSC Group 2 and 2A (CCSE-II) Prelims question papers from 2013 to 2025 – General Tamil, General English and General Studies – with final answer keys, plus Mains papers (Group 2 descriptive, Group 2A objective, Tamil Eligibility Test), free from tnpsc.gov.in. Every link was opened and checked.

முக்கிய விவரங்கள் · Key details

ஆதாரம் · SourceTNPSC விடைக்குறிப்புப் பக்கம் (Answer Keys) மற்றும் விரிந்துரை வினாத்தாள் பக்கம் (Descriptive Questions) – tnpsc.gov.in
முதல்நிலை வினாத்தாள்கள் · Prelims papers2013, 2015, 2017, 2018, 2022, 2024, 2025; 2014, 2016 – இறுதி விடைக்குறிப்பு மட்டும்
முதன்மை வினாத்தாள்கள் · Mains papersகுரூப் 2 பொது அறிவு (விரிந்துரை) 2019, 2023, 2025, 2026; குரூப் 2A தாள் II (கொள்குறி) 2025, 2026; தமிழ்த் தகுதித் தேர்வு 2023, 2025, 2026
2026 முதல்நிலைத் தேர்வு · Prelims 202601.11.2026 அன்று நடந்தது (அறிவிக்கை 07/2026, 846 காலியிடங்கள்). TNPSC உத்தேச விடைக்குறிப்பு இன்னும் வெளியாகவில்லை (10.11.2026 நிலவரம்)

எங்கள் ஆசிரியர்களின் 2026 விடைக்குறிப்பு: குரூப் 2 / 2A விடைக்குறிப்பு 2026 · எதிர்பார்க்கும் cut-off: குரூப் 2 cut-off · தேர்வு முறை, பாடத்திட்டம்: குரூப் 2, 2A பாடத்திட்டம்.

முதல்நிலைத் தேர்வு வினாத்தாள்கள் · Prelims question papers

வினாத்தாள் இணைப்புகள் TNPSC வெளியிட்ட உத்தேச விடைக்குறிப்புடன் கூடிய வினாத்தொகுப்புகள்; இறுதி விடைக்குறிப்பு விடைகளின் பட்டியல் மட்டும் – மதிப்பெண் கணக்கிட அதையே பயன்படுத்துங்கள். 2024, 2025 வினாத்தாள்கள் முழு வினாத்தொகுப்பு (பொது அறிவு + மொழிப் பகுதி ஒரே PDF-இல்); பழைய ஆண்டுகளில் மொழிப் பகுதி (வினா 1–100), பொது அறிவு (வினா 101–200) தனித்தனி PDF.

ஆண்டு · Yearதேர்வு நாள் · Dateபொதுத் தமிழ் வழி · General Tamil optionGeneral English optionஇறுதி விடைக்குறிப்பு · Final key
2025
குரூப் 2 & 2A
28.09.2025பொதுத் தமிழ் + பொது அறிவு + திறனறிவு (முழு வினாத்தாள்)General English + GS + Aptitude (full paper)TNPSC பக்கத்தில் இல்லை
2024
குரூப் 2 & 2A
14.09.2024பொது அறிவு + பொதுத் தமிழ் (முழு வினாத்தாள்)GS + General English (full paper)இறுதி விடைக்குறிப்பு (PDF)
2022
குரூப் 2 & 2A
21.05.2022பொதுத் தமிழ் (1–100)
பொது அறிவு (101–200)
General English (1–100)இறுதி விடைக்குறிப்பு (PDF)
2018
குரூப் 2 (நேர்முகத் தேர்வுள்ள பதவிகள்)
11.11.2018பொதுத் தமிழ் (1–100)
பொது அறிவு (101–200)
General English (1–100)இறுதி விடைக்குறிப்பு (PDF)
2017
குரூப் 2A
06.08.2017பொதுத் தமிழ் (1–100)
பொது அறிவு (101–200)
General English (1–100)TNPSC பக்கத்தில் இல்லை
2016
குரூப் 2A
24.01.2016வினாத்தாள் இணைப்பு இல்லை—இறுதி விடைக்குறிப்பு (PDF)
2015
குரூப் 2
26.07.2015பொதுத் தமிழ் (1–100)
பொது அறிவு (101–200)
General English (1–100)இறுதி விடைக்குறிப்பு (PDF)
2014
குரூப் 2A
29.06.2014வினாத்தாள் இணைப்பு இல்லை—இறுதி விடைக்குறிப்பு (PDF)
2013
குரூப் 2
01.12.2013பொதுத் தமிழ் (1–100)
பொது அறிவு (101–200)
General English (1–100)TNPSC பக்கத்தில் இல்லை

2014, 2016 குரூப் 2A தேர்வுகளுக்கு TNPSC பக்கத்தில் உள்ள வினாத்தாள் இணைப்பு வேறொரு ஆவணத்தை அல்லது “PDF not available” பக்கத்தைத் திறக்கிறது; எனவே இறுதி விடைக்குறிப்பு மட்டும். 2013 குரூப் 2 தேர்வுக்கு TNPSC பக்கத்தில் உள்ள இறுதி விடைக்குறிப்பு முதன்மை எழுத்துத் தேர்வுக்கானது (கீழே முதன்மை அட்டவணையில்).

வினாத்தாள் அமைப்பு எப்படி மாறியது? · How the paper changed

  • இங்குள்ள எல்லா முதல்நிலை வினாத்தொகுப்புகளும் 200 வினாக்கள், 300 மதிப்பெண்கள், 3 மணி நேரம் (வினாத்தொகுப்பு அட்டைகளில் உள்ளபடி).
  • 2022: பகுதி அ – பொதுத் தமிழ் / General English (வினா 1–100), பகுதி ஆ – பொது அறிவு (வினா 101–200).
  • 2024: பகுதி அ – பொது அறிவு, பகுதி ஆ – பொதுத் தமிழ் / General English.
  • 2025: பகுதி அ – பொதுத் தமிழ் / General English (பத்தாம் வகுப்புத் தரம்), பகுதி ஆ – பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்), பகுதி இ – திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்புத் தரம்).
  • இப்போதைய முறை (அறிவிக்கை 07/2026): பொது அறிவு 75 + திறனறிவு 25 + பொதுத் தமிழ் அல்லது General English 100 = 200 வினாக்கள், 300 மதிப்பெண்; அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்சம் 90.
முதன்மைத் தேர்வு வினாத்தாள்கள் · Mains question papers

குரூப் 2 முதன்மைத் தேர்வு தாள் II பொது அறிவு விரிந்துரைக்கும் வகை; குரூப் 2A தாள் II கொள்குறி வகை (2025 முதல்); தாள் I தமிழ்த் தகுதித் தேர்வு இரண்டுக்கும் பொதுவானது (தகுதிக்கு மட்டும்). ஒவ்வொரு வினாவுக்கும் எங்கள் ஆசிரியர்களின் விடைக் குறிப்புடன் கூடிய PDF-கள்: குரூப் 2 Mains வினாத்தாள்கள் – விடைக் குறிப்புடன் · குரூப் 2A Mains (கொள்குறி).

ஆண்டு · Yearகுரூப் 2 · Group 2தமிழ்த் தகுதித் தேர்வு · TET (2 & 2A)குரூப் 2A தாள் II · Group 2A Paper II
2026தாள் II – பொது அறிவு
22.02.2026
தாள் I – தமிழ்த் தகுதித் தேர்வு
15.03.2026 (பிற்பகல்)
தாள் II – பொது அறிவு + பொது நுண்ணறிவும் காரணவியலும் (உத்தேச விடைக்குறிப்புடன்)
15.03.2026 (முற்பகல்) – 08.02.2026 தேர்வு ரத்தானதால் மாற்றியமைக்கப்பட்ட தேதி
2025தாள் II – பொது அறிவு
23.02.2025
தாள் I – தமிழ்த் தகுதித் தேர்வு
08.02.2025 (பிற்பகல்)
தாள் II – தமிழ் வழி · English option · இறுதி விடைக்குறிப்பு
08.02.2025 (முற்பகல்)
2023
குரூப் 2 & 2A
தாள் II – பொது அறிவுதாள் I – கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாள்—
2019பொது அறிவு
23.02.2019
——
2014
2013 குரூப் 2 அறிவிக்கை
முதன்மை எழுத்துத் தேர்வு 08, 09.11.2014 – இறுதி விடைக்குறிப்பு——

2023 முதன்மைத் தேர்வு 25.02.2023 அன்று நடந்தது (முற்பகல், பிற்பகல்) – அப்போது குரூப் 2, 2A இரண்டுக்கும் இதே தாள்கள். 2025 குரூப் 2A தாள் II: பொது அறிவு + பொது நுண்ணறிவும் காரணவியலும் + பொதுத் தமிழ் / General English; 2026 தாள் II: பொது அறிவு + பொது நுண்ணறிவும் காரணவியலும். அறிவிக்கை 07/2026-இன்படி அடுத்த குரூப் 2A தாள் II கணினி வழித் தேர்வு (CBT) – பொது அறிவு 150 + பொது நுண்ணறிவும் காரணவியலும் 50 வினாக்கள்.

பழைய வினாத்தாள்களை எப்படிப் பயன்படுத்துவது? · How to practise

பொதுத் தமிழ் 100 வினாக்களே முக்கியம்

General Tamil is half the paper

மொத்த 200 வினாக்களில் 100 பொதுத் தமிழ் / General English. பழைய வினாத்தாள்களின் மொழிப் பகுதியை முதலில் முழுமையாகப் பயிற்சி செய்யுங்கள் – இலக்கணம், இலக்கியம், தமிழறிஞர் பகுதிகளில் வினாக்கள் மீண்டும் வரும் போக்கைக் கவனியுங்கள்.

English

Half the paper (100 of 200) is General Tamil or General English, so finish the language part of every old paper first.

நேரம் வைத்து முழுத் தேர்வாக எழுதுங்கள்

Write one full paper under exam conditions

ஒரு வினாத்தாளை 3 மணி நேரத்தில் எழுதி, இறுதி விடைக்குறிப்புடன் ஒப்பிட்டு மதிப்பெண் கணக்கிடுங்கள்; தவறிய வினாக்களைப் பாடத்திட்ட அலகு வாரியாகக் குறித்துக்கொள்ளுங்கள்.

English

Take one paper in 3 hours, score it with the final key, and list your mistakes unit-wise.

அண்மைய முறைக்கு முன்னுரிமை

Practise the latest pattern first

2024, 2025 வினாத்தாள்கள் இப்போதைய முறைக்கு மிக நெருக்கமானவை; முதலில் அவற்றை எழுதி, பிறகு பழைய ஆண்டுகளின் பொது அறிவுப் பகுதியைப் பயிற்சி செய்யுங்கள்.

English

The 2024 and 2025 papers are closest to the current pattern; do them first, then the older GS sections.

Mains-க்கு இப்போதே தொடங்குங்கள்

Start Mains practice now

குரூப் 2 முதன்மைத் தேர்வு வினாக்களுக்குத் தினமும் ஒரு விடை எழுதுங்கள்; குரூப் 2A-க்கு கொள்குறி தாள் II-ஐ நேரம் வைத்துப் பயிற்சி செய்யுங்கள்.

English

Write one Group 2 Mains answer a day; for Group 2A, take the objective Paper II timed.

பயிற்சி: பொதுத் தமிழ் quiz · TNPSC PYQ quiz · குரூப் 2 மாதிரித் தேர்வு · பொதுத் தமிழ் PYQ நூல் · குரூப் 2 பொதுத் தமிழ் முழு நூல் · தினசரி TNPSC Mains பயிற்சி · குரூப் 2, 2A Mains

மேலும்: TNPSC குரூப் 2 / 2A 2026 · குரூப் 2, 2A பாடத்திட்டம் · தினசரி நடப்பு நிகழ்வுகள் · தேர்வு அட்டவணை

கவனிக்க: வினாக்களும் விடைகளும் TNPSC-க்கு உரிமையானவை; இந்தப் பக்கத்தில் வினாக்கள் நகலெடுக்கப்படவில்லை – ஒவ்வொரு இணைப்பும் TNPSC அதிகாரப்பூர்வத் தளத்தில் (tnpsc.gov.in) உள்ள PDF-ஐத் திறக்கும். · Questions and answers are the property of TNPSC; links open the official TNPSC website.

ஆதாரம்: TNPSC – Answer Keys · TNPSC – Descriptive Questions (10.11.2026 அன்று சரிபார்த்தது). 2026 நிலவரம்: TNPSC அறிவிக்கை 07/2026.

பிற பழைய வினாத்தாள்கள் · Other previous-year papers: குரூப் 1 பழைய வினாத்தாள்கள் · குரூப் 4 பழைய வினாத்தாள்கள் · TNUSRB SI பழைய வினாத்தாள்கள் · TNTET பழைய வினாத்தாள்கள் · குரூப் 1 பாடத்திட்டம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் · FAQ

TNPSC குரூப் 2 பழைய வினாத்தாள்களை எங்கே இலவசமாகப் பெறலாம்? / Where can I get Group 2 previous papers free?

TNPSC தனது தளத்தில் (tnpsc.gov.in) முதல்நிலை வினாத்தாள்களை உத்தேச விடைக்குறிப்புடன் "Answer Keys" பக்கத்திலும், முதன்மைத் தேர்வு வினாத்தாள்களை "Descriptive Questions" பக்கத்திலும் இலவசமாக வெளியிடுகிறது. இந்தப் பக்கத்தின் இணைப்புகள் அவற்றை நேரடியாகத் திறக்கும். All papers here open free from the official TNPSC website.

2026 குரூப் 2 / 2A தேர்வின் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு வந்துவிட்டதா? / Is the official 2026 key out?

01.11.2026 தேர்வின் TNPSC உத்தேச விடைக்குறிப்பு 10.11.2026 வரை வெளியாகவில்லை. எங்கள் ஆசிரியர்களின் 200 வினாக்களுக்கான விடைக்குறிப்பு எங்கள் குரூப் 2 / 2A விடைக்குறிப்பு 2026 பக்கத்தில் உள்ளது. TNPSC had not released its tentative key as of 10.11.2026.

குரூப் 2-க்கும் 2A-க்கும் முதல்நிலைத் தேர்வு ஒன்றுதானா? / Is the Prelims common for Group 2 and 2A?

ஆம். 2022, 2024, 2025, 2026 தேர்வுகளில் குரூப் 2, 2A இரண்டுக்கும் ஒரே முதல்நிலைத் தேர்வு. 2025 முதல் முதன்மைத் தேர்வு தனித்தனி: குரூப் 2-க்கு விரிந்துரைக்கும் பொது அறிவுத் தாள், குரூப் 2A-க்கு கொள்குறி தாள் II. Older papers (2013–2018) were separate Group 2 or Group 2A exams, as labelled in the table.

பொதுத் தமிழ், General English – எந்த வினாத்தாளைப் பயிற்சி செய்வது? / General Tamil or General English?

நீங்கள் தேர்வில் எழுதப்போகும் மொழிப் பகுதியின் வினாத்தாளையே பயிற்சி செய்யுங்கள். இரண்டு வழிகளின் வினாத்தாள்களும் இங்கே தனித்தனியாக உள்ளன. Both options are linked separately; practise the language option you will choose.

குரூப் 2 முதன்மைத் தேர்வு வினாத்தாள்களுக்கு விடை எங்கே? / Where are answers for Mains papers?

TNPSC பக்கத்தில் விரிந்துரை (descriptive) வினாத்தாள்கள் மட்டுமே உள்ளன. எங்கள் ஆசிரியர்களின் விடைக் குறிப்புடன் 2019, 2023, 2025, 2026 குரூப் 2 Mains வினாத்தாள்கள் எங்கள் குரூப் 2 Mains வினாத்தாள் பக்கத்திலும், குரூப் 2A Mains 2025, 2026 விடை-விளக்கம் குரூப் 2A Mains பக்கத்திலும் உள்ளன.

குரூப் 2 / 2A Mains பயிற்சி – 16 நவம்பர் 2026 தொடக்கம்: கோவை, மதுரை, ஆன்லைன்.