நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – தேசியம்: அரசியல், ஆளுகை,… (23 வினா)

← திரும்பச் செல்ல

நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – தேசியம்: அரசியல், ஆளுகை,… (23 வினா) – 23 வினாக்கள், பாடம்: நடப்பு நிகழ்வுகள். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  

1 ஜூன் 2026 அன்று உச்ச நீதிமன்றத்துக்கு எத்தனை நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்?

Correct Answer: D [5]

விளக்கம்:

நான்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் + ஒரு மூத்த வழக்கறிஞர் = 5.

2.  

ஜூன் 2026-இல் Bar-இலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்?

Correct Answer: C [வெங்கிட சுப்பிரமணி மோகனா]

விளக்கம்:

மற்ற மூவரும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள்; மோகனா மூத்த வழக்கறிஞர்.

3.  

நீதிபதி அருண் பள்ளி உச்ச நீதிமன்றத்துக்கு உயர்த்தப்படும் முன் எந்த உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி?

Correct Answer: A [ஜம்மு–காஷ்மீர் & லடாக்]

விளக்கம்:

ஷீல் நாகு – பஞ்சாப் & ஹரியானா; ஸ்ரீ சந்திரசேகர் – மும்பை; சஞ்சீவ் சச்தேவா – மத்தியப் பிரதேசம்.

4.  

உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட, உயர் நீதிமன்ற வழக்கறிஞராகக் குறைந்தது எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும்?

Correct Answer: A [10 ஆண்டுகள்]

விளக்கம்:

விதி 124(3): உயர் நீதிமன்ற நீதிபதியாக 5 ஆண்டுகள் அல்லது வழக்கறிஞராக 10 ஆண்டுகள் அல்லது புகழ்பெற்ற சட்ட வல்லுநர்.

5.  

தில்லி–NCR பழைய லாரி, பேருந்து மாற்றுத் திட்டத்தின் ஒதுக்கீடு?

Correct Answer: D [₹9,585 கோடி]

விளக்கம்:

₹9,585 கோடி (03.06.2026). ₹8,300.79 கோடி – ஒடிசா நெடுஞ்சாலை; ₹10,000 கோடி – ATF ஆதரவு.

6.  

NCR வாகன மாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்த ஆதரவு பெறும் அமைப்பு?

Correct Answer: B [NCR திட்ட வாரியம் (NCRPB)]

விளக்கம்:

திட்டத்தின் பெயரே “NCRPB-க்கு ஆதரவுத் திட்டம்”. NCRPB – 1985 சட்டம்.

7.  

NCR வாகன மாற்றுத் திட்டத்தின்படி கட்டாயமாக அழிக்கப்பட வேண்டிய (scrap) வாகனங்கள்?

Correct Answer: B [BS-III அல்லது அதற்கு முந்தையவை]

விளக்கம்:

BS-III அல்லது முந்தையவை பதிவு பெற்ற மையங்களில் அழிக்கப்பட வேண்டும்; BS-IV வாகனங்களை அழிக்கலாம் அல்லது NCR-க்கு வெளியே விற்கலாம்.

8.  

ஜூன் 2026-இல் பெங்களூருவில் வளாகம் அமைக்க ஒப்புதல் பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகம்?

Correct Answer: A [நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் (UNSW)]

விளக்கம்:

பிரிஸ்டல், யார்க் – மும்பை; UNSW – பெங்களூரு; சவுத்தாம்ப்டன் முன்னரே ஒப்புதல் பெற்றது.

9.  

பிரிஸ்டல், யார்க், UNSW பல்கலைக்கழகங்களுக்கு 9 ஜூன் 2026 அன்று ஒப்புதல் கடிதங்களை வழங்கிய ஒன்றிய அமைச்சகம்?

Correct Answer: A [கல்வி அமைச்சகம்]

விளக்கம்:

தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் சர்வதேசமயமாக்கல் நோக்கத்தின்படி கல்வி அமைச்சகம் மூன்று ஒப்புதல் கடிதங்களை 9 ஜூன் 2026 அன்று வழங்கியது.

10.  

“செனேஜோரி” இயக்கம் எந்தப் பொருளுடன் தொடர்புடையது?

Correct Answer: B [அசாம் முகா பட்டு]

விளக்கம்:

MDoNER – அசாம் அரசு இணைந்து முகா பட்டு மதிப்புச் சங்கிலிக்காகத் தொடங்கியது (02.06.2026).

11.  

செனேஜோரி இயக்கத்தைத் தொடங்கிய ஒன்றிய அமைச்சகம்?

Correct Answer: B [வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம்]

விளக்கம்:

MDoNER தலைமையில்; மத்தியப் பட்டு வாரியம், ஜவுளி அமைச்சகம் கூட்டாளிகள்.

12.  

உலக முகா பட்டு உற்பத்தியில் அசாமின் பங்கு (PIB)?

Correct Answer: A [90%]

விளக்கம்:

அசாம் உலக முகா பட்டில் 90% உற்பத்தி செய்கிறது; சுமார் 2.6 லட்சம் குடும்பங்கள் சார்ந்துள்ளன.

13.  

சர்வதேச யோகா தினம் 2026-இன் கருப்பொருள்?

Correct Answer: C [Yoga for Healthy Ageing]

விளக்கம்:

2026 – Yoga for Healthy Ageing; 2025 – Yoga for One Earth One Health; 2024 – Yoga for Self and Society; 2022 – Yoga for Humanity.

14.  

12-வது சர்வதேச யோகா தின முதன்மை நிகழ்வு நடைபெற்ற இடம்?

Correct Answer: C [ரெட் ரோடு, கொல்கத்தா]

விளக்கம்:

2026 – கொல்கத்தா ரெட் ரோடு; 2025 – விசாகப்பட்டினம்; 2024 – ஸ்ரீநகர்.

15.  

சர்வதேச யோகா தினத்தை அறிவித்த ஐநா பொதுச் சபைத் தீர்மானம்?

Correct Answer: A [69/131 (2014)]

விளக்கம்:

11 டிசம்பர் 2014 – தீர்மானம் 69/131; முதல் யோகா தினம் 21 ஜூன் 2015. 70/1 – நிலையான வளர்ச்சி இலக்குகள்.

16.  

10 ஜூன் 2026 அன்று நரேந்திர மோடி எத்தனை நாள்கள் தொடர்ந்து பணியாற்றி, நேருவின் சாதனையை முறியடித்தார்?

Correct Answer: B [4,399]

விளக்கம்:

நேரு 1952–1964 காலத்தில் தொடர்ந்து 4,398 நாள்கள் பணியாற்றினார்.

17.  

மோடி முறியடித்த “தொடர்ந்து பதவியில் இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்” சாதனை யாருடையது?

Correct Answer: D [ஜவஹர்லால் நேரு]

விளக்கம்:

அமைச்சரவை 10.06.2026 அன்று பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றியது.

18.  

பிறப்பு முதல் 36 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு வீடு/சமூக அடிப்படையிலான பராமரிப்பு வழங்க 2026-இல் தொடங்கப்பட்ட திட்டம் எது?

Correct Answer: A [சமக்ர சிசு பால ஸ்வாஸ்த்ய காரியக்ரம் (SSBSK)]

விளக்கம்:

SSBSK – பிறப்பு முதல் 36 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு; SUMAN 2030 – தாய்–சேய் நல உத்தி.

19.  

SUMAN வழிகாட்டி 2030, SSBSK ஆகியவை எந்த மாநாட்டில் தொடங்கப்பட்டன?

Correct Answer: B [மத்திய சுகாதார & குடும்ப நலக் குழுவின் 16-வது மாநாடு]

விளக்கம்:

29.06.2026 அன்று ஜே.பி. நட்டா தொடங்கினார்.

20.  

9 ஜூன் 2026 அன்று இருமுனை இணைப்பு எட்டப்பட்ட சோஜிலா சுரங்கப்பாதை எந்தத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது?

Correct Answer: B [NH-1]

விளக்கம்:

NH-1-இல் பால்டால்–மினாமார்க் இடையே; சுமார் 14 கி.மீ.

21.  

சோஜிலா சுரங்கப்பாதை எந்த இரு பகுதிகளுக்கு இடையே அனைத்துப் பருவ இணைப்பு வழங்கும்?

Correct Answer: A [ஜம்மு & காஷ்மீர் – லடாக்]

விளக்கம்:

ஜம்மு & காஷ்மீர் – லடாக் இடையே அனைத்துப் பருவ இணைப்பு.

22.  

பிரதமரின் பாதுகாப்பான தாய்மை இயக்கத்தின் (PMSMA) கீழ் ஒவ்வொரு மாதமும் எந்தத் தேதியில் இலவசப் பேறுகாலப் பரிசோதனை நடைபெறுகிறது?

Correct Answer: B [9-ஆம் தேதி]

விளக்கம்:

PMSMA (தொடக்கம் 9 ஜூன் 2016) – ஒவ்வொரு மாதமும் 9-ஆம் தேதி இலவசப் பேறுகாலப் பரிசோதனை.

23.  

ஜூன் 2026-இல் தெரிவிக்கப்பட்டபடி எட்டப்பட்ட “லட்சாதிபதி சகோதரிகள்” எண்ணிக்கை?

Correct Answer: C [3 கோடி]

விளக்கம்:

3 கோடி லட்சாதிபதி சகோதரிகள் – ஆண்டுக்குக் குறைந்தது ₹1 லட்சம் ஈட்டும் சுயஉதவிக் குழு மகளிர்.

➤ முழு நூல் – 385 செய்திகள், 1,195 வினாக்கள், 39 Mains கட்டுரைகள்: நடப்பு நிகழ்வுகள் மே–அக்டோபர் 2026 (₹249): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-current-affairs-may-october-2026-tamil

மேலும் வினாடி வினாக்கள்
› நடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 2026 – மறைவுகள் (3 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2026 – மறைவுகள் (5 வினா) › நடப்பு நிகழ்வுகள் ஜூன் 2026 – மறைவுகள் (2 வினா) › நடப்பு நிகழ்வுகள் மே 2026 – மறைவுகள் (1 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0