Group 2 / 2A Cut-off

TNPSC குரூப் 2 / 2A Cut-off 2026 – அதிகாரப்பூர்வ முந்தைய cut-off மதிப்பெண்களும் இந்த ஆண்டு எதிர்பார்ப்பும்

குரூப் 2 / 2A முதல்நிலைத் தேர்வில் (01-11-2026) Mains-க்குச் செல்ல எத்தனை மதிப்பெண் தேவை? TNPSC வெளியிட்ட அதிகாரப்பூர்வ பிரிவு வாரியான cut-off மதிப்பெண்கள், 2026 cut-off ஏன் மாறும், உங்கள் மதிப்பெண்ணை எப்படிக் கணக்கிடுவது – அனைத்தும் இந்தப் பக்கத்தில்.

2026 – எங்கள் மதிப்பீடு

01-11-2026 தேர்வு முடிந்ததும், வினாத்தாளையும் எங்கள் விடைக்குறிப்பையும் வைத்து எதிர்பார்க்கும் cut-off வரம்பை இங்கே வெளியிடுவோம். இது மதிப்பீடு மட்டுமே – TNPSC அதிகாரப்பூர்வப் பட்டியலே இறுதியானது.

குறைந்தபட்ச மதிப்பெண்ணும் cut-off-உம்

குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண் அனைத்துப் பிரிவினருக்கும் 300-க்கு 90 (அறிவிக்கை 07/2026). ஆனால் 90 தாண்டினால் மட்டும் போதாது: ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் காலிப்பணியிடங்களைப் போல 10 மடங்கு (1:10) தேர்வர்கள் மட்டுமே Mains-க்கு அனுமதிக்கப்படுவர். அந்தப் பிரிவில் கடைசியாக அனுமதிக்கப்பட்டவரின் மதிப்பெண்ணே அந்தப் பிரிவின் cut-off.

அதிகாரப்பூர்வ cut-off: முதல்நிலை → முதன்மைத் தேர்வு, குரூப் 2/2A 2022 (அறிவிக்கை 03/2022, 300-க்கு)

பிரிவுபொது (G)பெண்கள் (W)PSTM (G)PSTM (W)
GT (OC) 231.00 235.50 219.00 223.50
BC 217.50 223.50 195.00 204.00
BCM 202.00 210.00 160.50 178.50
MBC / DC 216.00 222.00 201.00 207.00
SC 211.00 217.00 193.50 199.50
SCA 207.00 213.00 175.50 193.00
ST 198.00 205.50 179.50 172.50

முதன்மை எழுத்துத் தேர்வுக்குக் கடைசியாக அனுமதிக்கப்பட்டவர்களின் மதிப்பெண்கள் ("அனைத்துப் பதவிகள்" பட்டியல்). G = பொதுச் சுழற்சி (அனைவருக்கும்), W = பெண்களுக்கான ஒதுக்கீடு, PSTM = தமிழ் வழியில் பயின்றோர். 2022 முதல்நிலைத் தேர்வு முறை (மொழி 100 + பொது அறிவு 75 + திறனறிவு 25 = 300 மதிப்பெண்) 2026-இலும் அதேதான்.
ஆதாரம்: TNPSC – "Marks secured by the last selected candidates in Preliminary Examination in each category for admission to Main Written Examination" (03/2022). tnpsc.gov.in (PDF)

2026 cut-off ஏன் வேறுபடும்?

  • காலிப்பணியிடங்கள்: அறிவிக்கை 03/2022-இல் 5,000-க்கும் மேற்பட்ட இடங்கள்; அறிவிக்கை 08/2024-இல் அறிவிக்கையின்போது 2,327 (குரூப் 2 – 507 + குரூப் 2A – 1,820); அறிவிக்கை 07/2026-இல் 846 (குரூப் 2 – 43 + குரூப் 2A – 803, சேர்க்கை அறிவிக்கை 7A உட்பட).
  • 1:10 விகிதப்படி 2026-இல் சுமார் 8,460 பேர் மட்டுமே Mains-க்கு அனுமதிக்கப்படுவர் – 2022-ஐ விட மிகக் குறைவு. இடங்கள் குறைவு என்பதால், அதே கடினத்தன்மை கொண்ட வினாத்தாளுக்கு cut-off பொதுவாக அதிகமாக இருக்கும்.
  • வினாத்தாளின் கடினத்தன்மையும் அதே அளவு முக்கியம்: கடினமான வினாத்தாள் என்றால் அனைவரின் மதிப்பெண்ணும் குறையும்; cut-off-உம் குறையும்.
  • ஒவ்வொரு பிரிவுக்கும், பெண்கள் ஒதுக்கீட்டுக்கும், PSTM-க்கும், சிறப்புப் பிரிவுகளுக்கும் தனித்தனி cut-off – எனவே ஒரே ஒரு cut-off எண் கிடையாது.

உங்கள் மதிப்பெண்ணைக் கணக்கிடுங்கள்

ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண். மதிப்பெண் = சரியான விடைகள் × 1.5. காலியாக விட்ட ஒவ்வொரு வினாவுக்கும் 0.5 மதிப்பெண் கழிக்கப்படும்; [E] நிரப்பிய வினாக்கள் காலியாகக் கருதப்படாது. 01-11-2026 மாலை எங்கள் விடைக்குறிப்பை வைத்து உங்கள் சரியான விடைகளை எண்ணுங்கள். விடைக்குறிப்பு →

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

குரூப் 2/2A முதல்நிலைத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் எவ்வளவு?

அனைத்துப் பிரிவினருக்கும் 300-க்கு 90 (TNPSC அறிவிக்கை 07/2026). ஆனால் Mains-க்கான உண்மையான cut-off பொதுவாக இதைவிட மிக அதிகம்.

2022 குரூப் 2/2A முதல்நிலைத் தேர்வு cut-off என்ன?

அறிவிக்கை 03/2022-க்கான TNPSC அதிகாரப்பூர்வப் பட்டியல்படி (அனைத்துப் பதவிகள், பொதுச் சுழற்சி): GT 231, BC 217.5, MBC/DC 216, SC 211, SCA 207, BCM 202, ST 198 (300-க்கு).

2026 Mains-க்கு எத்தனை பேர் அனுமதிக்கப்படுவர்?

ஒவ்வொரு பிரிவிலும் காலிப்பணியிடங்களைப் போல 10 மடங்கு (1:10). 846 இடங்களுக்கு சுமார் 8,460 பேர்; cut-off மதிப்பெண்ணில் சமநிலையில் உள்ளவர்களும் அனுமதிக்கப்படுவர்.

முதல்நிலைத் தேர்வு மதிப்பெண் இறுதித் தரவரிசைக்குக் கணக்கிடப்படுமா?

இல்லை. முதல்நிலைத் தேர்வு தகுதிகாண் தேர்வு மட்டுமே. இறுதித் தரவரிசை Mains தாள் II மதிப்பெண்ணில்; 2026-இல் நேர்முகத் தேர்வு இல்லை.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
குரூப் 2/2A Mains வகுப்பு
தொடக்கம்: நவம்பர் 2-ஆம் வாரம்
₹24,500 · 10 AM – 1 PM
கோவை · மதுரை · ஆன்லைன்
Mains பயிற்சி 99941 46662