TNPSC குரூப் 2 / 2A இலவச Grand Mock Test 2026 – 200 வினாக்கள், விடைக்குறிப்புடன்
01-11-2026 அன்று நடைபெறும் TNPSC குரூப் 2 / 2A முதல்நிலைத் தேர்வுக்கான முழு நீள மாதிரித் தேர்வு. Shanmugam IAS Academy ஆசிரியர்கள் தயாரித்தது. 200 வினாக்களும் புதியவை; TNPSC அறிவிக்கை 07/2026-இன் அதிகாரப்பூர்வ தேர்வு முறையிலும் பாடத்திட்டத்திலும் அமைந்தவை. OMR தாளுடன் தாளில் எழுதலாம், அல்லது ஆன்லைனில் எழுதலாம்.
பரிந்துரைக்கப்படும் நேரம்: 28-10-2026 புதன்கிழமை, காலை 9.30 – 12.30 (உண்மையான தேர்வின் அதே நேரம்)
வழி 1 – தாளில் எழுதுங்கள் (பரிந்துரை)
வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்து அச்சிடுங்கள் (கடைசிப் பக்கத்தில் பயிற்சி OMR தாள் உள்ளது). இடைவேளை இல்லாமல் 3 மணி நேரம் எழுதி, கருப்பு மை பால்பாயிண்ட் பேனாவால் OMR-ஐ நிரப்புங்கள்.
வினாத்தாள் + OMR பதிவிறக்கம் (PDF)வழி 2 – ஆன்லைனில் எழுதுங்கள்
அதே 200 வினாக்கள் எங்கள் இணையதளத்தில் நான்கு பகுதிகளாக உள்ளன (பகுதி அ பொது அறிவு, பகுதி ஆ திறனறிவு, பகுதி இ பொதுத் தமிழ் இரண்டு பகுதிகள்). ஒவ்வொரு வினாவுக்கும் பின் விடையும் ஒரு வரி விளக்கமும் வரும்.
ஆன்லைன் Mock Test திறக்கவிளக்கத்துடன் விடைக்குறிப்பு
விடைக்குறிப்பு PDF 28-10-2026 மதியம் 1.00 மணிக்கு (பரிந்துரை நேரம் முடிந்ததும்) இங்கே வெளியிடப்படும். (ஆன்லைனில் ஒவ்வொரு வினாவுக்கும் பின் விடை தெரியும்.)
இந்த மாதிரித் தேர்வின் அமைப்பு (அறிவிக்கை 07/2026 படி)
| பகுதி | பாடம் | வினா எண் | வினாக்கள் |
|---|---|---|---|
| அ | பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்) – அலகு I முதல் VI வரை | 1 – 75 | 75 |
| ஆ | திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (SSLC தரம்) | 76 – 100 | 25 |
| இ | பொதுத் தமிழ் அல்லது General English (SSLC தரம்) | 101 – 200 | 100 |
பகுதி அ அதிகாரப்பூர்வ அலகு எண்ணிக்கைப்படி: அறிவியல் 5, இந்தியப் புவியியல் 5, இந்திய வரலாறு, பண்பாடு & தேசிய இயக்கம் 10, இந்திய ஆட்சியியல் 15, இந்தியப் பொருளாதாரம் & தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் 20, தமிழ்நாடு வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், சமூக அரசியல் இயக்கங்கள் 20.
உங்கள் மதிப்பெண்ணைக் கணக்கிடுவது எப்படி?
ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண் (200 × 1.5 = 300). மதிப்பெண் = சரியான விடைகள் × 1.5. உண்மையான தேர்வில் காலியாக விடப்பட்ட ஒவ்வொரு வினாவுக்கும் 0.5 மதிப்பெண் கழிக்கப்படும் – விடை தெரியாவிட்டால் [E] நிரப்புங்கள்.
Mock எழுதிய பின் – கடைசி மூன்று நாள்களை நன்கு பயன்படுத்துங்கள்
- தவறிய ஒவ்வொரு வினாவையும் அலகு வாரியாகக் குறியுங்கள். 29, 30 அக்டோபர் அன்று மிகவும் பலவீனமான இரண்டு அலகுகளை மட்டும் திருப்புங்கள்.
- தவறிய ஒவ்வொரு வினாவின் ஒரு வரி விளக்கத்தையும் படியுங்கள் – பெரும்பாலான தவறுகள் மீண்டும் வரும்.
- இப்போது புதிய பாடங்களைத் தொடங்க வேண்டாம். குறிப்புகள், சூத்திரங்கள், பாடத்திட்டத்திலுள்ள திருக்குறள் அதிகாரங்களைத் திருப்புங்கள்.
- 31-10 அன்று Hall Ticket, தேர்வு மையத்தைச் சரிபாருங்கள். தேர்வுக்கு 1 மணி நேரம் முன் மையத்தை அடையுங்கள்; தேர்வுக்கு 30 நிமிடம் முன் வாயில்கள் மூடப்படும்.
அலகு வாரியான இலவசப் பயிற்சி
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த மாதிரித் தேர்வு இலவசமா?
ஆம். வினாத்தாள் PDF, ஆன்லைன் தேர்வு, விடைக்குறிப்பு அனைத்தும் முழுவதும் இலவசம்.
இவை முந்தைய TNPSC வினாத்தாள் வினாக்களா?
இல்லை. 200 வினாக்களும் எங்கள் ஆசிரியர்கள் 2026 அதிகாரப்பூர்வ தேர்வு முறை, பாடத்திட்டப்படி புதிதாக எழுதியவை; ஒவ்வொரு வினாவும் தனியாகச் சரிபார்க்கப்பட்டது.
ஆங்கில வழி மாணவர்கள் எழுதலாமா?
ஆம். பகுதி அ, ஆ ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் உள்ளன; பகுதி இ-வில் முழு General English பகுதியும் (வினா 101–200) உள்ளது.
விடைக்குறிப்பு எப்போது கிடைக்கும்?
PDF-ஆக 28-10-2026 மதியம் 1.00 மணிக்கு. ஆன்லைன் தேர்வில் ஒவ்வொரு வினாவுக்கும் பின் விடையும் ஒரு வரி விளக்கமும் தெரியும்.
Mains-க்குப் பயிற்சி உண்டா?
ஆம். குரூப் 2/2A Mains வகுப்பு நவம்பர் 2026 இரண்டாம் வாரம் கோவை, மதுரை, ஆன்லைனில் தொடங்குகிறது.
Shanmugam IAS Academy · அழைக்க: 99941 46662 / 73059 47122

