TNPSC குரூப் 2A Mains (CBT) – 60 நாள் Online Test Batch
உங்களுக்கென ஒரு 60 நாள் அட்டவணை. இணையதளமே தினமும் தேர்வைத் திறக்கும், மதிப்பிடும், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம் காட்டும் – யாரையும் தொடர்பு கொள்ள வேண்டியதில்லை.
- தினமும் ஒரு அலகுத் தேர்வு – 50 வினா, 45 நிமிடம் (திறனறிவு நாள்: 30 வினா, 45 நிமிடம்)
- ஒவ்வொரு 7-ஆம் நாளும் உண்மைத் தேர்வு முறையில் முழு மாதிரித் தேர்வு – 200 வினா, 3 மணி, 300 மதிப்பெண் (8 தேர்வுகள்)
- Mains தரம்: பொது அறிவு 150 + காரணவியல் 50 முறையில்; நம் குரூப் 2/2A Mains நூல்களின் (M01–M07, M09) பட்டப்படிப்புத் தரக் கடின வினாக்கள் மட்டும் – முதல்நிலை (Prelims) வினாக்கள் இல்லை
- Submit செய்தவுடன் மதிப்பெண், ஒவ்வொரு வினாவுக்கும் 2 வரி விளக்கம், அன்றைய தரவரிசை
- அலகு வாரியான துல்லிய வரைபடம், பலவீன அலகுக்கு இலவசக் குறிப்புகள் / நூல் இணைப்பு
- TNPSC கணினித் தேர்வு (CBT) முறைத் திரை – ஒவ்வொரு வினாவுக்கும் ஐந்து விருப்பங்கள், Save & Next, Mark for Review, Clear Response, Question Palette, Time Left (அறிவிக்கை 07/2026 வழிமுறைகள் 1.7)
- 60 நாளில் ஒரே வினா இருமுறை வராது · சரிபார்த்த வினாக்கள் மட்டும்
- Batch முடிவில் சான்றிதழ் (PDF) – Completion %, சராசரி மதிப்பெண்ணுடன்
எப்படி இயங்குகிறது?
தேர்வு முறை – TNPSC அறிவிக்கை 07/2026 – முதன்மைத் தேர்வு Paper II (கணினி வழி) படி
ஒவ்வொரு முழு மாதிரித் தேர்வும் உண்மைத் தேர்வு போலவே: 200 வினா, 3 மணி நேரம், 300 மதிப்பெண், ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண், தவறுக்குக் கழிவு இல்லை, குறைந்தபட்சம் 90.
| பகுதி | அலகு | வினாக்கள் |
|---|---|---|
| பகுதி அ – பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்) | அலகு I – தமிழ்நாட்டின் நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம், பண்பாடு, மரபு | 30 |
| அலகு II – தமிழ்நாட்டைச் சார்ந்த மாநில நிர்வாகம் | 45 | |
| அலகு III – வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம் | 20 | |
| அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள் | 30 | |
| அலகு V – தமிழ்நாட்டின் புவியியல், சுற்றுச்சூழல், பல்லுயிர், பேரிடர் மேலாண்மை | 25 | |
| பகுதி ஆ – பொது நுண்ணறிவு மற்றும் காரணவியல் | பொது நுண்ணறிவு, காரணவியல் (M09) | 50 |
| மொத்தம் | 200 |
ஆதாரம்: TNPSC அறிவிக்கை 07/2026 – முதன்மைத் தேர்வு Paper II (கணினி வழி) – வினா எண்ணிக்கை TNPSC குறிப்பிட்டபடி உத்தேசமானது. முழுப் பாடத்திட்டம்: TNPSC குரூப் 2A Mains 2026 தேர்வுப் பக்கம்.
மாதிரி அட்டவணை (தமிழ் வழி)
60 நாட்களும் அலகுகளின் வினா எண்ணிக்கை விகிதத்தில் பிரிக்கப்படுகின்றன; ஒரே பாடம் அடுத்தடுத்த நாட்களில் வராது. முதல் 14 நாட்கள்:
| நாள் | தேர்வு | வினா | நேரம் |
|---|---|---|---|
| 1 | பொது நுண்ணறிவு, காரணவியல் (M09) | 30 | 45 நிமிடம் |
| 2 | அலகு I – தமிழ்நாட்டின் நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம், பண்பாடு, மரபு | 40 | 40 நிமிடம் |
| 3 | அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள் | 40 | 40 நிமிடம் |
| 4 | அலகு II – தமிழ்நாட்டைச் சார்ந்த மாநில நிர்வாகம் | 40 | 40 நிமிடம் |
| 5 | அலகு III – வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம் | 40 | 40 நிமிடம் |
| 6 | அலகு V – தமிழ்நாட்டின் புவியியல், சுற்றுச்சூழல், பல்லுயிர், பேரிடர் மேலாண்மை | 40 | 40 நிமிடம் |
| 7 | ★ முழு மாதிரித் தேர்வு (வாரம் 1) | 200 | 3 மணி |
| 8 | பொது நுண்ணறிவு, காரணவியல் (M09) | 30 | 45 நிமிடம் |
| 9 | அலகு I – தமிழ்நாட்டின் நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம், பண்பாடு, மரபு | 40 | 40 நிமிடம் |
| 10 | அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள் | 40 | 40 நிமிடம் |
| 11 | பொது நுண்ணறிவு, காரணவியல் (M09) | 30 | 45 நிமிடம் |
| 12 | அலகு III – வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம் | 40 | 40 நிமிடம் |
| 13 | அலகு II – தமிழ்நாட்டைச் சார்ந்த மாநில நிர்வாகம் | 40 | 40 நிமிடம் |
| 14 | ★ முழு மாதிரித் தேர்வு (வாரம் 2) | 200 | 3 மணி |
60 நாளில் மொத்தம்: பொது நுண்ணறிவு, காரணவியல் (M09) – 13 நாள் · அலகு I – தமிழ்நாட்டின் நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம், பண்பாடு, மரபு – 10 நாள் · அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள் – 9 நாள் · அலகு II – தமிழ்நாட்டைச் சார்ந்த மாநில நிர்வாகம் – 7 நாள் · அலகு III – வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம் – 7 நாள் · அலகு V – தமிழ்நாட்டின் புவியியல், சுற்றுச்சூழல், பல்லுயிர், பேரிடர் மேலாண்மை – 6 நாள் · முழு மாதிரித் தேர்வு – 8 நாள்
இலவச மாதிரித் தேர்வு – 25 வினா
பணம் கட்டும் முன் எங்கள் தரத்தை நீங்களே பாருங்கள்: உண்மைத் தேர்வின் பாடப்பிரிவு விகிதத்தில், எங்கள் ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்து ஆதாரத்துடன் சரிபார்த்த 25 வினாக்கள் – Login தேவையில்லை. விடையைத் தொட்டால் சரியா என்றும் 2 வரி விளக்கமும் உடனே தெரியும். இறுதியில் உங்கள் மதிப்பெண்.
தவறிய வினாக்களின் விளக்கங்களை மீண்டும் படியுங்கள். 60 நாளில் இதே தரத்தில் உங்கள் தனி அட்டவணைப்படி தினசரித் தேர்வு, தரவரிசை, சான்றிதழ்.
முழு Batch-இல் சேருங்கள் – ₹999இந்த Batch உங்களுக்கு ஏன்?
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
Online Test Batch என்றால் என்ன?
இது 60 நாள் வரையிலான Online தேர்வுப் பயிற்சி (குரூப் 4: தேர்வு நாள் 10.01.2027-க்கு முந்தைய நாளில் முடியும்; இன்று சேர்ந்தால் 48 நாள்). வாங்கியவுடன் உங்களுக்கென ஒரு தனி அட்டவணை (Timetable) உருவாகும். ஒவ்வொரு நாளும் இணையதளமே அன்றைய தேர்வைத் திறக்கும்: அலகுத் தேர்வு (50 வினா, 45 நிமிடம்; திறனறிவு நாளில் 30 வினா, 45 நிமிடம்), ஒவ்வொரு 7-ஆம் நாளும் உண்மைத் தேர்வு முறையில் 200 வினா, 3 மணி நேர முழு மாதிரித் தேர்வு. எழுதி முடித்தவுடன் மதிப்பெண், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம், தரவரிசை உடனே தெரியும்.
எந்தத் தேர்வுகளுக்கு இந்த Batch உள்ளது?
TNPSC குரூப் 4 (அறிவிக்கை 11/2026), TNPSC குரூப் 2A முதன்மைத் தேர்வு (Mains – Paper II கணினி வழித் தேர்வு, அறிவிக்கை 07/2026). ஒவ்வொன்றும் அந்தத் தேர்வின் பாடத்திட்டம், தேர்வு முறைப்படி தனியாக அமைக்கப்பட்டுள்ளது. குரூப் 2 முதன்மைத் தேர்வு விரிந்துரை (descriptive) முறை என்பதால் அதற்குத் தனி Batch.
குரூப் 2A Mains Batch-இல் என்ன இருக்கும்?
உண்மைத் தேர்வு முறைப்படி (Paper II – பொது அறிவு 150 + பொது நுண்ணறிவு & காரணவியல் 50 = 200 வினா, 300 மதிப்பெண், 3 மணி) ஒவ்வொரு 7-ஆம் நாளும் முழுத் தேர்வு; மற்ற நாட்களில் அலகுத் தேர்வு. வினாக்கள் நம் குரூப் 2/2A Mains நூல்களின் (M01–M07 பொது அறிவு, M09 காரணவியல்) பட்டப்படிப்புத் தரக் கடின வினாக்கள் – முதல்நிலை (Prelims) வினாக்கள் இல்லை. ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம், தரவரிசை, சான்றிதழ். கட்டணம் ₹999. அலகுகள்: பொது நுண்ணறிவு, காரணவியல் (M09) 13 நாள், அலகு I – தமிழ்நாட்டின் நவீன வரலாறு, தமிழ்ச் சமூகம், பண்பாடு, மரபு 10 நாள், அலகு IV – தமிழ்நாட்டுப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள் 9 நாள், அலகு II – தமிழ்நாட்டைச் சார்ந்த மாநில நிர்வாகம் 7 நாள், அலகு III – வளர்ச்சியில் அறிவியல், தொழில்நுட்பம் 7 நாள், அலகு V – தமிழ்நாட்டின் புவியியல், சுற்றுச்சூழல், பல்லுயிர், பேரிடர் மேலாண்மை 6 நாள், முழு மாதிரித் தேர்வு 8 நாள்.
அட்டவணையில் எந்தெந்தப் பாடங்கள், எத்தனை நாள் வரும்?
TNPSC வினாத்தாளில் ஒவ்வொரு அலகுக்கும் உள்ள வினா எண்ணிக்கையின் விகிதத்தில் நாட்கள் பிரிக்கப்படுகின்றன. குரூப் 4 (தமிழ் வழி): பொதுத் தமிழ் 26 நாள், திறனறிவு மற்றும் மனத்திறன் 7 நாள், அலகு V – இந்தியப் பொருளாதாரம், தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் 5 நாள், அலகு VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு, சமூக–அரசியல் இயக்கங்கள் 5 நாள், முழு மாதிரித் தேர்வு 8 நாள், அலகு IV – இந்திய ஆட்சியியல் 4 நாள், அலகு III – இந்திய வரலாறு, பண்பாடு, இந்திய தேசிய இயக்கம் 3 நாள், அலகு I – பொது அறிவியல் 1 நாள், அலகு II – இந்தியாவின் புவியியல் 1 நாள். குரூப் 2/2A (தமிழ் வழி): பொதுத் தமிழ் 26 நாள், திறனறிவு மற்றும் மனத்திறன் 7 நாள், அலகு V – இந்தியப் பொருளாதாரம், தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் 5 நாள், அலகு VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு, சமூக–அரசியல் இயக்கங்கள் 5 நாள், முழு மாதிரித் தேர்வு 8 நாள், அலகு IV – இந்திய ஆட்சியியல் 4 நாள், அலகு III – இந்திய வரலாறு, பண்பாடு, இந்திய தேசிய இயக்கம் 3 நாள், அலகு I – பொது அறிவியல் 1 நாள், அலகு II – இந்தியாவின் புவியியல் 1 நாள். ஒரே பாடம் அடுத்தடுத்த நாட்களில் வராமல் பரவலாக அமைக்கப்படும்.
பணம் கட்டும் முன் வினாக்களின் தரத்தைப் பார்க்கலாமா?
ஆம். குரூப் 4, குரூப் 2/2A ஒவ்வொரு பக்கத்திலும் இலவச மாதிரித் தேர்வு உள்ளது – உண்மைத் தேர்வின் பாடப்பிரிவு விகிதத்தில், ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்து ஆதாரத்துடன் சரிபார்த்த 25 வினாக்கள். Login தேவையில்லை; விடையைத் தொட்டவுடன் சரியா என்றும் 2 வரி விளக்கமும், இறுதியில் உங்கள் மதிப்பெண்ணும் தெரியும். இந்த 25 வினாக்கள் கட்டண Batch தேர்வுகளில் மீண்டும் வராது.
கட்டணம் எவ்வளவு?
குரூப் 4 Batch ₹499, குரூப் 2A Mains Batch ₹999 (குரூப் 4: தேர்வு நாள் வரை – இன்று சேர்ந்தால் 48 நாள்; 2A Mains: 60 நாள்). விலையில் அனைத்து வரிகளும் அடங்கும். கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை.
எப்படி வாங்குவது?
1) தேர்வின் பக்கத்தில் தேர்வு மொழியைத் (தமிழ் / English) தேர்வு செய்யவும். 2) கணக்கு இல்லையெனில் பெயர், கைபேசி எண், Password இட்டு "Create Account & Continue" அழுத்தவும் (ஏற்கெனவே கணக்கு இருந்தால் Student Login செய்யவும்). 3) "இப்போதே வாங்கு" அழுத்தி UPI / Card / Net Banking மூலம் Razorpay-இல் பணம் செலுத்தவும். 4) பணம் செலுத்தியவுடன் "என் அட்டவணை" பக்கம் தானாகத் திறக்கும்.
Coupon (தள்ளுபடிக் குறியீடு) இருந்தால் எங்கே இடுவது?
Login செய்த பின் வாங்கும் பெட்டியில் "Coupon Code" என்ற இடத்தில் இட்டு "Apply" அழுத்தவும். செலுத்த வேண்டிய தொகை உடனே மாறும்.
பணம் பிடிக்கப்பட்டது, ஆனால் Batch திறக்கவில்லை. என்ன செய்வது?
Login செய்து "என் அட்டவணை" பக்கத்தில் உள்ள "கட்டணத்தை மீண்டும் சரிபார் (Re-check Payment)" பொத்தானை அழுத்தவும். இணையதளம் Razorpay-இடம் நேரடியாகச் சரிபார்த்து, பணம் வந்திருந்தால் உடனே Batch-ஐத் திறக்கும். இதே சரிபார்ப்பு ஒவ்வொரு 30 நிமிடமும் தானாகவும் நடக்கிறது.
பணம் திரும்பக் கிடைக்குமா (Refund)? Batch எத்தனை நாள் செல்லும் (Validity)?
பணம் பிடிக்கப்பட்டும் Batch திறக்கவில்லை என்றால் "கட்டணத்தை மீண்டும் சரிபார்" பொத்தானை அழுத்துங்கள் – இணையதளம் Razorpay-இடம் சரிபார்த்து Batch-ஐத் திறக்கும். தேர்வுகள் தொடக்க நாளிலிருந்து 60 நாள் திறந்திருக்கும்; Batch முடிந்த பின்னும் உங்கள் மதிப்பெண்கள், விளக்கங்கள், சான்றிதழ் உங்கள் கணக்கில் இருக்கும். Refund, Cancellation பற்றிய விதிமுறைகள் எங்கள் Refund policy பக்கத்தில்: https://www.shanmugamiasacademy.in/refund-policy
ஒன்றுக்கு மேற்பட்ட Batch-களை (குரூப் 4, குரூப் 2A Mains) வாங்கலாமா? மீண்டும் வாங்கலாமா?
ஆம். ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாங்கலாம்; ஒவ்வொன்றுக்கும் தனி அட்டவணை. ஒரு Batch முடிந்த பின் மீண்டும் வாங்கினால் புதிய 60 நாள் தொடங்கும் – முன்பு உங்களுக்கு வந்த வினாக்கள் மீண்டும் வராது.
தேர்வு மொழியை (தமிழ் / English) எப்போது, எப்படித் தேர்வு செய்வது? மாற்றலாமா?
வாங்கும்போதே தேர்வு செய்யலாம்; தேர்வு செய்யாவிட்டால் "என் அட்டவணை" பக்கம் முதலில் அதைக் கேட்கும். முதல் தேர்வைத் தொடங்கும் வரை அங்கேயே மாற்றலாம்; ஒரு தேர்வைத் தொடங்கிய பின் மாற்ற இயலாது (தரவரிசை ஒரே மொழி மாணவர்களுக்குள் கணக்கிடப்படுவதால்).
குரூப் 4 English medium தேர்ந்தெடுத்தால் பொதுத் தமிழ் வருமா?
ஆம். TNPSC விதிப்படி குரூப் 4 பகுதி அ (தமிழ்த் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு, 100 வினா) தமிழில் மட்டுமே (அறிவிக்கையில் குறிப்பிட்ட சில மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு மட்டும் விதிவிலக்கு). அதனால் English medium-இலும் அந்தப் பகுதி தமிழில் வரும்; பொது அறிவு, திறனறிவு English-இல் வரும்.
குரூப் 2A Mains English medium-இல் என்ன மாறும்?
பொது அறிவு, காரணவியல் இரண்டும் English-இல் வரும் (நம் Mains நூல்களின் English பதிப்பு வினாக்கள்). English வினா வங்கி முழுமையாகத் தயாரான பின்னரே English medium விற்பனைக்குத் திறக்கும் – அதுவரை தமிழ் வழி மட்டும்.
என் அட்டவணை எப்போது தொடங்கும்?
காலை 10 மணிக்கு முன் வாங்கினால் அன்றே நாள் 1; 10 மணிக்குப் பின் வாங்கினால் மறுநாள் நாள் 1. தொடக்க, முடிவுத் தேதிகள் "என் அட்டவணை" பக்கத்தின் மேலே தெரியும்.
ஒவ்வொரு நாளின் தேர்வும் எப்போது திறக்கும்?
அன்றைய தேதி தொடங்கியவுடன் (நள்ளிரவு 12 மணி, இந்திய நேரம்) திறக்கும். அன்றே இரவு 11.59-க்குள் எழுதினால் "நேரத்தில்" (On time) எனக் கணக்கிடப்படும். நாளைய தேர்வை இன்றே எழுத இயலாது.
ஒரு நாள் தேர்வை எழுத மறந்துவிட்டால் என்ன ஆகும்?
கவலை வேண்டாம். அந்தத் தேர்வு Batch முடியும் நாள் வரை திறந்தே இருக்கும். எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்; அது "தாமதம்" (Late) எனக் குறிக்கப்படும், மதிப்பெண்ணும் தரவரிசையும் வழக்கம்போல் கிடைக்கும். Batch முடிந்த பின் எழுதாத தேர்வுகள் மூடப்படும்.
அட்டவணையில் உள்ள வண்ணங்கள் எதைக் குறிக்கின்றன?
பச்சை = நேரத்தில் எழுதியது; மஞ்சள் = தாமதமாக எழுதியது; சிவப்பு = விடுபட்டது (இன்னும் எழுதலாம்); மெரூன் கட்டம் = இன்று; சாம்பல் = வரவிருக்கும் நாள் அல்லது மூடப்பட்டது. ★ குறி உள்ள நாள் முழு மாதிரித் தேர்வு.
வினாத்தாளையும் OMR-ஐயும் PDF ஆகப் பதிவிறக்கி Offline-ஆக எழுதலாமா?
ஆம். ஒவ்வொரு நாள் பக்கத்திலும் "வினாத்தாள் + OMR பதிவிறக்கு (Offline)" உள்ளது – உங்கள் பெயருடன் வினாத்தாள் PDF, TNPSC முறை OMR விடைத்தாள் PDF கிடைக்கும். தாளில் எழுதிய பின் "OMR விடைகளைப் பதிவு செய்" பக்கத்தில் விடைகளைப் பதிந்தால் உடனே மதிப்பெண், ஒவ்வொரு வினாவுக்கும் விளக்கம், "விடைகள் + விளக்கம் PDF" கிடைக்கும். வினாக்களை முன்பே பார்த்ததால் Offline தேர்வு தரவரிசையில் சேராது; முன்னேற்றம், சான்றிதழில் சேரும்.
Online-இல் எழுதிய தேர்வின் வினாத்தாள், விடைகளை PDF ஆக வைத்துக்கொள்ளலாமா?
ஆம். ஒவ்வொரு முடிவுப் பக்கத்திலும் "வினாத்தாள் PDF", "விடைகள் + விளக்கம் PDF" பொத்தான்கள் உள்ளன – மீண்டும் படிக்க அச்சிட்டு வைத்துக்கொள்ளலாம். விடைகள் நீங்கள் சமர்ப்பித்த பின்னரே கிடைக்கும்.
தேர்வை எப்படி எழுதுவது?
"என் அட்டவணை" → இன்றைய தேர்வு → "Start Test" அழுத்தவும். விடையைத் தொட்டவுடன் சேமிக்கப்படும். "Save & Next" அடுத்த வினாவுக்குச் செல்லும்; சந்தேகமான வினாவை "Mark for Review" செய்து பின்னர் திரும்பலாம். வினா எண் பட்டியலில் (Question Palette) எந்த வினாவுக்கும் நேரடியாகச் செல்லலாம். முடித்ததும் "Submit Test" அழுத்தவும்.
இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டால் அல்லது கைபேசி அணைந்துவிட்டால்?
நீங்கள் தொட்ட ஒவ்வொரு விடையும் உடனே சேமிக்கப்படுகிறது. நேரம் இணையதளத்தின் கடிகாரப்படி ஓடும். இணையம் திரும்பியதும் அதே தேர்வைத் திறந்தால், விட்ட இடத்திலிருந்து மீதமுள்ள நேரத்தில் தொடரலாம். நேரம் முடிந்திருந்தால் சேமித்த விடைகள் தானாகச் சமர்ப்பிக்கப்பட்டு மதிப்பெண் வரும்.
நேரம் முடிந்துவிட்டால் என்ன ஆகும்?
Timer 0 ஆனதும் உங்கள் விடைகள் தானாகச் சமர்ப்பிக்கப்படும் (Auto-submit). கடைசி 5 நிமிடத்தில் Timer மஞ்சளாகவும், கடைசி 1 நிமிடத்தில் சிவப்பாகவும் மாறி எச்சரிக்கும்.
ஒரே தேர்வை மீண்டும் எழுதலாமா?
இல்லை – உண்மைத் தேர்வு போலவே ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு முறை மட்டுமே. ஆனால் விடைகளையும் விளக்கங்களையும் எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.
மதிப்பெண் எப்படிக் கணக்கிடப்படுகிறது?
TNPSC முறைப்படி: சரியான விடைக்கு 1.5 மதிப்பெண்; தவறான விடைக்குக் கழிவு இல்லை (0); (E) "விடை தெரியவில்லை" தேர்வு செய்தால் 0; எதையும் தேர்வு செய்யாமல் விட்டால் −0.5 – இது உண்மைத் தேர்வின் விதி (TNPSC அறிவிக்கை 11/2026, OMR வழிமுறைகள் 1.10.2.2). அதனால் தெரியாத வினாவுக்கு E-ஐ நிரப்பிப் பழகுங்கள். குரூப் 2A Mains கணினி வழித் தேர்வில் இந்தக் கழிவு இல்லை.
(E) "விடை தெரியவில்லை" என்ற ஐந்தாவது தேர்வு ஏன்?
TNPSC OMR விடைத்தாளில் ஒவ்வொரு வினாவுக்கும் (E) "விடை தெரியவில்லை · Answer not known" என்ற ஐந்தாவது வட்டம் உள்ளது; ஒவ்வொரு வினாவுக்கும் ஏதேனும் ஒரு வட்டத்தை நிரப்ப வேண்டும் என்பது TNPSC வழிமுறை. தெரியாத வினாவைக் காலியாக விடாமல் E-ஐத் தேர்வு செய்யும் பழக்கத்தை இங்கேயே பெறுங்கள்.
முழு மாதிரித் தேர்வு உண்மைத் தேர்வைப் போலவே இருக்குமா?
ஆம். 200 வினா, 3 மணி நேரம், 300 மதிப்பெண், அதே பகுதிகள், அதே அலகு வாரி வினா எண்ணிக்கை (அலகு I – 5, II – 5, III – 10, IV – 15, V – 20, VI – 20, திறனறிவு 25, மொழிப் பகுதி 100). 60 நாளில் 8 முழு மாதிரித் தேர்வுகள். குரூப் 4-இல் பகுதி அ-வில் 60 மதிப்பெண் பெற்றால் மட்டுமே மற்ற பகுதிகள் மதிப்பிடப்படும் என்ற TNPSC விதியையும், குறைந்தபட்சம் 90/300 என்பதையும் முடிவுப் பக்கம் காட்டும்.
விடைகளும் விளக்கமும் எப்போது தெரியும்?
Submit செய்தவுடன். ஒவ்வொரு வினாவுக்கும் உங்கள் விடை, சரியான விடை, 2 வரி விளக்கம், அந்த வினா உள்ள இலவச வினாடி வினா மற்றும் தொடர்புடைய இலவசக் குறிப்புகள் / நம் நூல் இணைப்பு தெரியும். "தவறியவை மட்டும்" என்று வடிகட்டிப் படிக்கலாம்.
தரவரிசை (Rank) எப்படிக் கணக்கிடப்படுகிறது?
அதே தேர்வு, அதே தேர்வு மொழி Batch மாணவர்கள் அதே நாள் எண்ணின் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுடன் ஒப்பிடப்படும். அதிக மதிப்பெண் முதலில்; சம மதிப்பெண் என்றால் குறைந்த நேரம் எடுத்தவர் முதலில். புதிய மாணவர்கள் எழுத எழுத தரவரிசை மாறும். மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது "முதல் X%" என்ற சதவீத நிலையும் காட்டப்படும்.
எல்லோருக்கும் ஒரே வினாக்களா?
இல்லை. ஒவ்வொருவருக்கும் அதே அலகு, அதே எண்ணிக்கை, அதே தரத்தில் தனித்தனி வினாக்கள் – அதனால் ஒருவர் விடையைப் பகிர்ந்தாலும் மற்றவருக்குப் பயன்படாது. 60 நாளில் உங்களுக்கு ஒரே வினா இரண்டு முறை வராது.
வினாக்கள் எங்கிருந்து வருகின்றன? தரம் எப்படி உறுதி செய்யப்படுகிறது?
எங்கள் ஆசிரியர்கள் சரிபார்த்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வினா வங்கியிலிருந்து. சரிபார்த்த 2 வரி விளக்கம் உள்ள வினாக்கள் மட்டும்; ஐயமுள்ளவை, மிக எளியவை, படம் தேவைப்படுபவை, திரும்ப வருபவை முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. TNPSC முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ), மாதிரித் தேர்வு வினாக்கள் முதலில் தேர்வு செய்யப்படுகின்றன; குரூப் 2/2A-க்கு பட்டப்படிப்புத் தர வினாக்கள், குரூப் 4-க்கு SSLC தர வினாக்கள் முன்னுரிமை பெறும்.
ஒரு வினாவில் பிழை இருப்பதாகத் தோன்றினால்?
முடிவுப் பக்கத்தில் அந்த வினாவின் கீழ் "இந்த வினாவைச் சரிபார்க்கச் சொல்" அழுத்தவும் – அது எங்கள் ஆசிரியர்களின் சரிபார்ப்புப் பட்டியலுக்குச் செல்லும். மேலும் பெரும்பாலான மாணவர்கள் தவறவிடும் வினாக்கள் தானாக நிறுத்தி வைக்கப்படுகின்றன; வினா வங்கியிலிருந்து நீக்கப்பட்ட வினா உங்கள் மதிப்பெண்ணிலிருந்து தானாக விலக்கப்பட்டு மதிப்பெண் மீண்டும் கணக்கிடப்படும்.
என் பலவீனமான அலகுகளை எப்படி அறிவது?
"என் அட்டவணை" பக்கத்தில் அலகு வாரியான துல்லியம் (Accuracy) வரைபடம் உள்ளது. 60%-க்குக் குறைவான அலகுகள் "கவனம் தேவை" எனக் காட்டப்பட்டு, அந்த அலகின் இலவச வினாடி வினா, குறிப்புகள், நம் நூல் இணைப்புகள் தரப்படும்.
தொடர் நாட்கள் (Streak) என்றால் என்ன?
தொடர்ந்து எத்தனை நாட்கள் அன்றைய தேர்வை அன்றே எழுதினீர்கள் என்பது. ஒரு நாள் விட்டால் மீண்டும் 0-இலிருந்து தொடங்கும்.
சான்றிதழ் எப்போது, எப்படிக் கிடைக்கும்?
Batch முடிந்தவுடன் (அல்லது அனைத்துத் தேர்வுகளையும் எழுதி முடித்தவுடன்) "என் அட்டவணை" பக்கத்தில் சான்றிதழ் தோன்றும். அதில் எழுதிய தேர்வுகளின் சதவீதம் (Completion %), சராசரி மதிப்பெண் %, சரிபார்ப்புக் குறியீடு இருக்கும். PDF ஆகப் பதிவிறக்கலாம் அல்லது அச்சிடலாம். 80% அல்லது அதற்கு மேல் தேர்வுகள் எழுதினால் "நிறைவுச் சான்றிதழ்", குறைவாக இருந்தால் "பங்கேற்புச் சான்றிதழ்".
நினைவூட்டல் செய்திகள் வருமா?
ஆம், தானாக: காலையில் "இன்றைய தேர்வு தயார்", மாலையில் இன்னும் எழுதவில்லையெனில் நினைவூட்டல், ஒவ்வொரு வாரமும் உங்கள் முன்னேற்ற அறிக்கை, Batch முடிந்ததும் சான்றிதழ் இணைப்பு – உங்கள் கைபேசி எண்ணுக்கு WhatsApp / மின்னஞ்சல் மூலம் (அகாடமியில் இயக்கப்பட்டிருக்கும்போது).
கைபேசியில் எழுதலாமா? எந்த Browser சிறந்தது?
கைபேசி, கணினி, Tablet – எதிலும் எழுதலாம். Chrome, Edge, Safari, Firefox-இன் புதிய பதிப்பு நல்லது. தேர்வுக்கு முன் கைபேசியில் போதுமான Charge, நிலையான இணையம் இருப்பதை உறுதி செய்யவும்; தேர்வின்போது வேறு Tab-களை மூடுவது நல்லது.
ஒரே கணக்கை இரண்டு கருவிகளில் பயன்படுத்தலாமா?
ஒரு கணக்கு ஒரு நேரத்தில் ஒரு கருவியில் மட்டும் இயங்கும். புதிய கருவியில் Login செய்தால் பழைய கருவியில் "இந்தக் கணக்கு வேறு கருவியில் திறக்கப்பட்டுள்ளது" எனக் காட்டும்; அங்கே உள்ள பொத்தானை அழுத்தி மீண்டும் அந்தக் கருவிக்கு மாற்றலாம்.
Password மறந்துவிட்டால்?
Student Login பக்கத்தில் உள்ள "Password மறந்துவிட்டீர்களா? (Forgot Password)" இணைப்பை அழுத்தவும் (https://www.shanmugamiasacademy.in/student-forgot). உங்கள் கைபேசி எண்ணுக்கு வரும் WhatsApp OTP மூலம் நீங்களே புதிய Password அமைக்கலாம்.
படங்களுடன் முழு வழிகாட்டி: Online Test Batch உதவி · மற்ற Batch: TNPSC குரூப் 4 – Online Test Batch (தேர்வு நாள் வரை) · இலவசம்: ஞாயிறு இலவச மாதிரித் தேர்வு · TNPSC வினாடி வினா · நம் நூல்கள்
Indian Polity in Tamil | 100 அரசியலமைப்பு வினா விடை | TNPSC Group 4 Preparation 2026
📚 TNPSC குரூப் 2 / 2A Mains – மாதிரி விடைகளுடன் நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
M04-E · Science & Technology – TNPSC Group 2/2A Mains (English)
₹249
M06-E · Geography & Environment – TNPSC Group 2/2A Mains (English)
₹249
M07-த · இந்தியப் பொருளாதாரம் – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)
₹249
M10-த · குரூப் 2/2A Mains முந்தைய வினா & மாதிரி விடை (தமிழ்)
₹249TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
