இந்திய தேசிய இயக்கம் PYQ – ஜவஹர்லால் நேரு
இந்திய தேசிய இயக்கம் PYQ – ஜவஹர்லால் நேரு – 17 வினாக்கள், பாடம்: இந்திய தேசிய இயக்கம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [ஜவஹர்லால் நேரு]
விளக்கம்:
சமயச்சார்பின்மையை (Secularism) இந்திய அரசின் அடிப்படைக் கொள்கையாக மக்கள் மனத்தில் பதித்தவர் ஜவஹர்லால் நேரு . அரசு எந்த மதத்தையும் சாராமல் அனைத்து மதங்களையும் சமமாக மதித்து, சம வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு.
Correct Answer: A [(A), (R) இரண்டும் சரி; (R), (A)-வுக்குச் சரியான விளக்கம்]
விளக்கம்:
நேருவின் ஆட்சிக்காலத்தில் அணுசக்தி ஆணையம் (1948, ஹோமி ஜெ. பாபா) , இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழு – INCOSPAR (1962, விக்ரம் சாராபாய்) , ஐ.ஐ.டி. கரக்பூர் (1951) போன்றவை தொடங்கப்பட்டன.
Correct Answer: A [1961]
விளக்கம்:
மொழி, மதம், பிராந்தியம் சார்ந்த பிளவுகளை எதிர்கொள்ள, பிரதமர் நேரு 1961-இல் புதுடெல்லியில் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டைக் கூட்டினார். இம்மாநாட்டின் முடிவாகத் தேசிய ஒருமைப்பாட்டுக் குழு (National Integration Council) அமைக்கப்பட்டது.
Correct Answer: B [ஜவஹர்லால் நேரு]
விளக்கம்:
இச்சொற்களைக் கூறியவர் ஜவஹர்லால் நேரு . 24 ஜனவரி 1948 அன்று அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் ஆற்றிய உரையில், இந்தியா முன்பு போலவே பல மதங்களையும் சமமாக மதிக்கும், ஆனால் ஒரே தேசியக் கண்ணோட்டம் கொண்ட நாடாக இருக்கும் என்றார்.
Correct Answer: B [நேஷனல் ஹெரால்டு]
விளக்கம்:
நேஷனல் ஹெரால்டு நாளிதழை ஜவஹர்லால் நேரு 1938-இல் லக்னோவில் தொடங்கினார். காமன்வீல் , நியூ இந்தியா இதழ்கள் அன்னிபெசன்ட் நடத்தியவை; யங் இந்தியா காந்தியடிகள் நடத்திய இதழ்.
Correct Answer: B [ஜவஹர்லால் நேரு]
விளக்கம்:
"Long years ago we made a tryst with destiny..." என்று தொடங்கும் புகழ்பெற்ற "விதியுடன் ஒரு சந்திப்பு" (Tryst with Destiny) உரையை ஜவஹர்லால் நேரு 14 – 15 ஆகஸ்ட் 1947 நள்ளிரவில் அரசியல் நிர்ணய சபையில் ஆற்றினார்.
Correct Answer: D [கௌல்]
விளக்கம்:
நேருவின் முன்னோர் காஷ்மீர் பண்டிதர்கள் ; அவர்களது குடும்பப் பெயர் கௌல் (Kaul) . மூதாதையர் ராஜ் கௌல் டெல்லிக்கு வந்து ஒரு கால்வாயின் (நஹர்) அருகே குடியேறியதால், குடும்பம் "கௌல் – நேரு" என அழைக்கப்பட்டு, பின்னர் "நேரு" என்ற பெயரே நிலைத்தது (நேருவின் சுயசரிதை).
Correct Answer: C [ஜவஹர்லால் நேரு]
விளக்கம்:
காந்தியடிகள் ஜவஹர்லால் நேருவை "பயமில்லாத, குற்றச்சாட்டு இல்லாத போர்வீரர்; தேசம் அவர் கைகளில் பாதுகாப்பாக உள்ளது" எனப் புகழ்ந்தார். 1942-இல் காந்தியடிகள் நேருவைத் தமது அரசியல் வாரிசாக அறிவித்தார்.
Correct Answer: C [இந்திய அரசாங்கச் சட்டம் 1935]
விளக்கம்:
இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ஐ ஜவஹர்லால் நேரு 'அடிமைகளின் பட்டயம்' (Charter of Slavery) என்றும் 'பிரேக்குகள் நிறைந்த, இயந்திரம் இல்லாத வண்டி' என்றும் விமர்சித்தார். இச்சட்டம் மாகாண தன்னாட்சியையும் கூட்டாட்சி நீதிமன்றத்தையும் (1937) அறிமுகப்படுத்தியது.
Correct Answer: D [ஜவஹர்லால் நேரு]
விளக்கம்:
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 27 மே 1964 அன்று பிரதமர் பதவியில் இருந்தபோதே மறைந்தார் (பிரதமர் பதவிக்காலம் 1947 – 1964). அவர் பிறந்த 14 நவம்பர் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
Correct Answer: A [ஜவஹர்லால் நேரு]
விளக்கம்:
அக்பரை "இந்திய தேசியத்தின் தந்தை" என்று கருதலாம் என எழுதியவர் ஜவஹர்லால் நேரு ( இந்தியாவின் கண்டுபிடிப்பு ). மதம் பிளவுபடுத்திய காலத்தில், அக்பர் பொதுவான இந்திய தேசிய இலட்சியத்தை மதப் பிரிவினைக்கு மேலாக வைத்தார் என்பது நேருவின் மதிப்பீடு.
Correct Answer: B [ஜவஹர்லால் நேரு]
விளக்கம்:
இவ்வரிகள் ஜவஹர்லால் நேரு 14 – 15 ஆகஸ்ட் 1947 நள்ளிரவில் அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய "விதியுடன் ஒரு சந்திப்பு" (Tryst with Destiny) உரையின் பகுதி. அதே நேரத்தில் காந்தியடிகள் டெல்லியில் இல்லை; அவர் கல்கத்தாவில் அமைதிப் பணியில் இருந்தார்.
Correct Answer: A [(i) மட்டும்]
விளக்கம்:
1935 சட்டப்படி 1937-இல் நடந்த மாகாணத் தேர்தல்களில் , காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேரு நாடு முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார்; காங்கிரசின் வெற்றியில் அவரது முயற்சி பெரும்பங்கு வகித்தது. எனவே (i) சரி.
Correct Answer: B [(2), (1), (3), (4)]
விளக்கம்:
உலக வரலாறு ஒரு பார்வை (1934), ஒரு சுயசரிதை – சுதந்திரம் நோக்கி (1936), இந்தியாவின் கண்டுபிடிப்பு (1946), சுதந்திரத்திற்கு முன் (பின்னாளில் தொகுக்கப்பட்ட கடிதத் தொகுப்பு) என்பதால் (2), (1), (3), (4) சரியான வரிசை. 'இந்தியாவின் கண்டுபிடிப்பு' நூல் 1944-இல் அகமதுநகர் கோட்டைச் சிறையில் எழுதப்பட்டது.
Correct Answer: B [பண்டிட் ஜவஹர்லால் நேரு]
விளக்கம்:
"அறிவியல் மனப்பான்மை" (Scientific Temper) என்ற சொல்லை முதலில் பிரபலப்படுத்தியவர் ஜவஹர்லால் நேரு ; தமது "இந்தியாவின் கண்டுபிடிப்பு" (1946) நூலில் இதனை வலியுறுத்தினார். அறிவியல் ஆய்வுமுறையை அன்றாட வாழ்க்கைச் சிந்தனையிலும் பின்பற்றுவதே இதன் பொருள். சர் சி.வி.
Correct Answer: A [(i) மட்டும்]
விளக்கம்:
An Autobiography (1936) , Glimpses of World History (1934) இரண்டும் நேருவின் நூல்கள் . "My India My Nation" என்ற நூல் நேருவின் படைப்புகளில் இல்லை. நேருவின் பிற நூல்கள்: The Discovery of India (1946) , Letters from a Father to His Daughter . நூல் நேருவுடையதா?
Correct Answer: A [அகமதுநகர் கோட்டை சிறை]
விளக்கம்:
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது (ஆகஸ்ட் 1942) கைது செய்யப்பட்ட நேரு, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களுடன் அகமதுநகர் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் "இந்தியாவின் கண்டுபிடிப்பு" (The Discovery of India) நூலை எழுதினார்; அது 1946-இல் வெளியானது.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய தேசிய இயக்கம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-national-movement-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
