இந்திய வரலாறு PYQ – விஜயநகர, பாமினி அரசுகள் – பகுதி 2 (வினா 27–52)
இந்திய வரலாறு PYQ – விஜயநகர, பாமினி அரசுகள் – பகுதி 2 (வினா 27–52) – 24 வினாக்கள், பாடம்: வரலாறு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: B [ஆந்திரகவிதா பிதாமகன்]
விளக்கம்:
அல்லசானி பெத்தண்ணா கிருஷ்ணதேவராயரின் அவையில் இருந்த அஷ்டதிக்கஜங்களில் முதன்மையானவர்; அவர் 'ஆந்திர கவிதா பிதாமகர்' என்று அழைக்கப்பட்டார். அவரது புகழ்பெற்ற நூல் மனுசரித்திரம்; 'ஆந்திர போஜா' என்பது கிருஷ்ணதேவராயரின் பட்டம்.
Correct Answer: B [குல்பர்கா]
விளக்கம்:
1347-இல் பாமன் ஷா அரசை நிறுவியது முதல் குல்பர்கா பாமினித் தலைநகர் (அஹ்சனாபாத் என்றும் பெயர்). பின்னர் முதலாம் அகமது ஷா தலைநகரைப் பீடாருக்கு மாற்றினார். கோல்கொண்டா, அகமதுநகர் பின்னர் தோன்றிய சுல்தானியங்களின் தலைநகரங்கள்.
- ஹொய்சாளர் – தேவகிரி
- யாதவர் – துவாரசமுத்திரம்
- காகதீயர் – வாரங்கல்
- பல்லவர் – மதுரை
Correct Answer: C [(3) மட்டும்]
விளக்கம்:
14-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தக்காணம் – தென்னிந்தியாவில் இருந்த நான்கு அரசுகள்: தேவகிரியின் யாதவர் , துவாரசமுத்திரத்தின் ஹொய்சாளர் , வாரங்கலின் காகதீயர் , மதுரையின் பாண்டியர் . 1, 2 இல் தலைநகரங்கள் இடம் மாறியுள்ளன; பல்லவர் தலைநகர் காஞ்சிபுரம் .
Correct Answer: C [பீடார்]
விளக்கம்:
மஹ்மூத் கவான் பீடாரில் ஒரு மதரசாவை நிறுவி (1472) அதில் 3000 கையெழுத்து நூல்கள் கொண்ட பெரிய நூலகத்தை அமைத்தார். மூன்று மாடிக் கட்டடமான இது இன்று இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது.
Correct Answer: A [காஸ்-இ-கேல்]
விளக்கம்:
பாமினி சுல்தான்களின் தனிப்பட்ட மெய்க்காப்பாளர்கள் காஸா-கேல் (காஸ்-இ-கேல்) எனப்பட்டனர். அமீர்-உல்-உம்ரா – படைத்தலைவர் (பிரபுக்களின் தலைவர்); கிலேதார் – கோட்டைத் தலைவர்; மன்சப் – முகலாயர் காலப் பதவித் தரநிலை.
Correct Answer: A [2, 3, 1, 4]
விளக்கம்:
விஜயநகரத்தை நான்கு மரபுகள் ஆண்டன: சங்கமர் → சாளுவர் → துளுவர் → அரவீடு . எனவே 2, 3, 1, 4 .
Correct Answer: D [தங்கம்]
விளக்கம்:
பகோடா (வராகன்) விஜயநகரத்தின் தரநிலைத் தங்க நாணயம்; தமிழில் "பொன்", கன்னடத்தில் "ஹொன்னு". இதில் இந்துக் கடவுள்கள், காளை, யானை, கண்டபேருண்டப் பறவை (இருதலைக் கழுகு) உருவங்கள் பொறிக்கப்பட்டன. நாணயம் உலோகம் வராகன் / பகோடா தங்கம் தாரா வெள்ளி ஜிட்டல் செம்பு
Correct Answer: D [குஜராத் அரசைத் தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்]
விளக்கம்:
அகமது ஷா குஜராத் அரசைத் தன் பேரரசுடன் இணைக்கவில்லை, எனவே (d) தவறான கூற்று. அவர் தலைநகரைக் குல்பர்காவிலிருந்து பீடாருக்கு மாற்றினார், வாரங்கலைக் கைப்பற்றினார்; அவர் காலத்தில் தக்காணிகள்–அயலவர் மோதல் தீவிரமானது.
Correct Answer: A [கோல்கொண்டா]
விளக்கம்:
குதுப் ஷாஹி சுல்தான்களின் தலைநகர் கோல்கொண்டா . இவர்கள் தக்கினி (தக்காண உருது) இலக்கியத்தை ஆதரித்தனர்; சுல்தான் முகமது குலி குதுப் ஷா தக்கினிக் கவிஞர், ஹைதராபாத் நகரையும் சார்மினாரையும் அமைத்தவர்.
Correct Answer: D [துளுவ]
விளக்கம்:
கிருஷ்ணதேவராயர் (1509 – 1529) துளுவ மரபைச் சேர்ந்தவர்; அம்மரபைத் தோற்றுவித்த வீர நரசிம்மரின் (துளுவ நரச நாயக்கரின் மகன்) இளைய சகோதரர். நாயக்க முறையை மறுசீரமைத்து அதற்குச் சட்ட அங்கீகாரம் அளித்தவர் இவரே (பாடநூல்).
Correct Answer: B [நந்தி திம்மண்ணா]
விளக்கம்:
கிருஷ்ணதேவராயரின் அவையை அணிசெய்த எட்டுத் தெலுங்குப் புலவர்கள் அஷ்டதிக்கஜங்கள் எனப்பட்டனர். அவர்களுள் நந்தி திம்மண்ணா பாரிஜாதாபஹரணமு என்ற நூலை எழுதினார்.
Correct Answer: C [4 1 5 3 2]
விளக்கம்:
பாமினி அரசு சிதைந்து உருவான ஐந்து சுல்தானியங்கள் : அடில் ஷாஹி – பீஜப்பூர் (4) , நிஜாம் ஷாஹி – அகமதுநகர் (1) , இமாத் ஷாஹி – பெரார் (5) , குதுப் ஷாஹி – கோல்கொண்டா (3) , பரீத் ஷாஹி – பீடார் (2) . குறியீடு 4 1 5 3 2 .
Correct Answer: A [தாமரை மகால் மற்றும் யானைக் கொட்டில்]
விளக்கம்:
ஹம்பியின் தாமரை மகால் , யானைக் கொட்டில் போன்ற சமயச் சார்பற்ற (அரண்மனை சார்ந்த) கட்டடங்களில் இந்து அமைப்போடு இஸ்லாமிய வளைவுகள், குவிமாடங்கள் இணைந்த இந்தோ-சாரசெனிக் பாணியைக் காணலாம். மற்ற விடைகள் அனைத்தும் கோயில் (சமயக்) கட்டடங்கள்.
Correct Answer: B [ஹரிஹரன் – II]
விளக்கம்:
இரண்டாம் ஹரிஹரர் (1377 – 1404) காலத்தில் விஜயநகரம் பாமினிகளிடமிருந்து கோவாவைக் கைப்பற்றியது. பின்னர் 1510-இல் போர்த்துகீசியர் கோவாவைப் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கைப்பற்றினர் (அப்போது கிருஷ்ணதேவராயர் ஆட்சி).
Correct Answer: B [(ii) மற்றும் (iii) மட்டும்]
விளக்கம்:
கிருஷ்ணதேவராயர் துளுவ மரபினர் – (i) தவறு. அவர் " ஆந்திர போஜர் " எனப் போற்றப்பட்டார் – (ii) சரி. அமுக்தமால்யதா தெலுங்கில் எழுதினார் – (iii) சரி. அவரது ஆட்சி 1509 – 1529 ; அவர் 1529-இல் மறைந்தார் – (iv) தவறு. எனவே (ii), (iii) மட்டும்.
Correct Answer: D [விசயநகரர்கள்]
விளக்கம்:
விஜயநகரக் கோயில் கட்டடக் கலையில் கல்யாண மண்டபம் ஒரு தனிச்சிறப்பான அமைப்பாகும். உயர்ந்த ராய கோபுரங்கள், குதிரை வடிவத் தூண்கள் ஆகியவையும் விஜயநகரப் பாணியின் சிறப்புகள்.
Correct Answer: C [கம்பண்ணா]
விளக்கம்:
முதலாம் புக்கரின் மகன் குமார கம்பண்ணா மதுரைச் சுல்தானியத்தை வீழ்த்தி, விஜயநகர ஆட்சியில் தமிழ்ப் பகுதியின் முதல் மகாமண்டலேஸ்வரராக இருந்தார். அவரது மதுரை வெற்றியை அவர் மனைவி கங்காதேவி 'மதுரா விஜயம்' என்ற நூலில் விவரித்தார்.
Correct Answer: B [ராக்சஷி – தங்கடி போர்]
விளக்கம்:
23 ஜனவரி 1565 -இல் நடந்த தலைக்கோட்டைப் போர் , போர் நடந்த இடத்துக்கு அருகே உள்ள ராக்சஷி, தங்கடி என்ற இரு கிராமங்களின் பெயரால் " ராக்சஷி–தங்கடி போர் " என்றும் அழைக்கப்படுகிறது (பாடநூல்). இதில் தக்காணச் சுல்தான்களின் கூட்டணி அலிய ராமராயரைத் தோற்கடித்தது.
Correct Answer: C [I, II மற்றும் IV சரியானவை]
விளக்கம்:
அமுக்தமால்யதா கிருஷ்ணதேவராயர் எழுதியது, அவர் போர்த்துகீசியருடன் நட்புறவு கொண்டிருந்தார், அவர் ஒரு வைணவர் என்பதால் I, II, IV சரியானவை. அப்பாஜி எனப்படும் சாளுவ திம்மர் அவருடைய முதன்மை அமைச்சர், புதல்வர் அல்ல.
Correct Answer: B [மாலிக் அகமது]
விளக்கம்:
அகமதுநகர் நிஜாம் ஷாஹி அரசைத் தோற்றுவித்தவர் மாலிக் அகமது (அகமது நிஜாம் ஷா, 1490); அவரே அகமதுநகர் நகரை நிறுவினார். அவரது தந்தை மாலிக் ஹசன் பாமினி அரசில் "நிஜாம்-உல்-முல்க்" பட்டம் பெற்ற அமைச்சர் – அதனாலேயே மரபுக்கு "நிஜாம் ஷாஹி" என்ற பெயர்.
- இரண்டாம் அலாவுதீன் அகமது ஷா காலத்தில் முகமது கவான் புகழ் பெற்றவராக இருந்தார்
- ஹுமாயூன் காலத்தில் இவர் முதல் மந்திரியாக இருந்தார்
- முகமது கவான் ஒரு அஃபாகி
- 1481-ஆம் ஆண்டு சுல்தானால் முகமது கவான் தூக்கிலிடப்பட்டார்
Correct Answer: D [அனைத்தும் சரி]
விளக்கம்:
இங்கு "ஹுமாயூன்" என்பது முகலாயப் பேரரசர் அல்ல; பாமினி சுல்தான் ஹுமாயூன் ஷா . பாரசீகத்தில் பிறந்த மஹ்மூத் கவான் இரண்டாம் (அலாவுதீன்) அகமது ஷா காலத்தில் உயர்வு பெற்றார்; ஹுமாயூன் ஷா அவரை முதல் அமைச்சராக நியமித்தார்.
Correct Answer: A [பிஜப்பூர்]
விளக்கம்:
இங்கு ஹுமாயூன் என்பது பாமினி சுல்தான் ஹுமாயூன் ஷா . அவர் மஹ்மூத் கவானை முதல் அமைச்சராக்கியதோடு பீஜப்பூரின் ஆளுநராகவும் (தரஃப்தார்) நியமித்தார். பீடார் அப்போது பாமினியின் தலைநகரம்; கோல்கொண்டா பின்னர் குதுப் ஷாஹி அரசின் மையமானது.
Correct Answer: A [இரண்டாம் இப்ராகிம் அடில் ஷா]
விளக்கம்:
கிதாப்-இ-நவ்ரஸ் என்பது பீஜப்பூர் சுல்தான் இரண்டாம் இப்ராகிம் அடில் ஷா (1580–1627) தக்காணி (Dakhni) மொழியில் இயற்றிய இசைப் பாடல்களின் தொகுப்பு . இசையிலும் கலையிலும் ஈடுபாடு கொண்ட அவர் "ஜகத்குரு" எனவும் அழைக்கப்பட்டார். மற்ற மூவரும் பாமினி சுல்தான்கள்.
Correct Answer: A [(b) மற்றும் (c)]
விளக்கம்:
விஜயநகரக் கிராம நிர்வாகத்தில் தலாரா – கிராமக் காவலர் (Watchman) , பேகாரா – கட்டாய உழைப்பைக் கண்காணிப்பவர் (Superintendent of forced labour) , சேனடேயோவா (நூல்களில் Senteova; கன்னட Shanbhog) – கிராமக் கணக்கர் .
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்திய வரலாறு PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-history-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
