இந்தியப் புவியியல் PYQ – மக்கள் தொகை
இந்தியப் புவியியல் PYQ – மக்கள் தொகை – 14 வினாக்கள், பாடம்: புவியியல். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
Correct Answer: A [ஒரு சதுர கி.மீ.க்கு எத்தனை நபர்கள் வாழ்கிறார்கள்]
விளக்கம்:
மக்கள் தொகை அடர்த்தி = மொத்த மக்கள் தொகை ÷ நிலப்பரப்பு (ச.கி.மீ.); அதாவது ஒரு சதுர கிலோமீட்டரில் வாழும் சராசரி மக்கள் எண்ணிக்கை. 2011 கணக்கெடுப்பில் இந்தியாவின் அடர்த்தி 382.
Correct Answer: A [லட்சத்தீவுகள்]
விளக்கம்:
2011 கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் பழங்குடியினர் விகிதம் : லட்சத்தீவு 94.8%, மிசோரம் 94.4%, நாகாலாந்து 86.5%, மேகாலயா 86.1%. எனவே லட்சத்தீவு முதலிடம். (எண்ணிக்கை அடிப்படையில் மத்தியப் பிரதேசத்தில் அதிகப் பழங்குடியினர் வாழ்கின்றனர்.)
Correct Answer: B [3 1 4 2]
விளக்கம்:
2011 கணக்கெடுப்பு : மகாராஷ்டிரம் 11,23,74,333 (3); பீகார் 10,40,99,452 (1); மேற்கு வங்கம் 9,12,76,115 (4); பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசம் 8,45,80,777 (2). எனவே 3 1 4 2. மக்கள் தொகை வரிசை : உ.பி., மகாராஷ்டிரம், பீகார், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம்.
Correct Answer: B [50,000 – 99,999]
விளக்கம்:
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் நகர வகைப்பாட்டில் இரண்டாம் தர (Class II) நகரங்களின் மக்கள் தொகை 50,000 – 99,999. வகுப்பு I – 1,00,000-க்கு மேல்; III – 20,000 – 49,999; IV – 10,000 – 19,999; V – 5,000 – 9,999; VI – 5,000-க்குக் குறைவு.
Correct Answer: B [புது டெல்லி, அந்தமான் நிக்கோபார் தீவுகள்]
விளக்கம்:
2011 கணக்கெடுப்பின்படி டெல்லி (தேசியத் தலைநகரப் பகுதி) அடர்த்தி 11,320 – நாட்டிலேயே அதிகம்; அந்தமான் – நிக்கோபார் தீவுகள் 46 – யூனியன் பிரதேசங்களில் மிகக் குறைவு. கோவா மாநிலம்; ஏனாம் புதுச்சேரியின் ஒரு பகுதி.
Correct Answer: D [மத்தியப் பிரதேசம்]
விளக்கம்:
பரப்பளவில் இந்திய மாநிலங்களின் வரிசை : ராஜஸ்தான் (3,42,239 ச.கி.மீ.), மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம். தமிழ்நாடு பரப்பளவில் 10-ஆவது இடம்.
Correct Answer: D [வாக்கியம் III சரி; I, II தவறு]
விளக்கம்:
வளங்களை முழுமையாகப் பயன்படுத்தப் போதுமான மக்கள் இல்லாமல், வளங்களைவிட மக்கள் தொகை குறைவாக இருக்கும் நிலையே குறைந்த மக்கள் தொகை (under-population) – எனவே வாக்கியம் 3 மட்டும் சரி. வளங்களுக்கு ஏற்ற அளவில் மக்கள் இருப்பது உகந்த மக்கள் தொகை (optimum – வாக்கியம் 1); வளங்களைவிட மக்கள் அதிகம் இருப்பது மிகை மக்கள் தொகை (over-population – வாக்கியம் 2).
Correct Answer: B [தமிழ்நாடு]
விளக்கம்:
2011 கணக்கெடுப்பில் நகர்ப்புற மக்கள் விகிதம் : தமிழ்நாடு 48.4%, கேரளம் 47.7%, மகாராஷ்டிரம் 45.2%, குஜராத் 42.6%. கொடுக்கப்பட்டவற்றுள் தமிழ்நாடு முதலிடம்; பெரிய மாநிலங்களிலும் தமிழ்நாடே அதிக நகரமயமான மாநிலம்.
Correct Answer: A [அருணாச்சலப் பிரதேசம்]
விளக்கம்:
2001-இல் அருணாச்சலப் பிரதேசத்தின் அடர்த்தி 13; 2011-இல் 17 – இரு கணக்கெடுப்புகளிலும் மிகக் குறைந்த அடர்த்தி கொண்ட மாநிலம் இதுவே. அடர்ந்த காடுகளும் உயர்ந்த மலைகளும் இதற்குக் காரணம்.
Correct Answer: D [1989]
விளக்கம்:
11 ஜூலை 1987 அன்று உலக மக்கள் தொகை 500 கோடியைத் தொட்டது ("ஐந்நூறு கோடி நாள்"). இதன் நினைவாக 1989-இல் ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) ஆளுகைக் குழு ஜூலை 11-ஐ உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது.
Correct Answer: B [பீகார்]
விளக்கம்:
2011 கணக்கெடுப்பின்படி பீகார் (1,106) மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலம்; அடுத்து மேற்கு வங்கம் (1,028), கேரளம் (860), உத்தரப் பிரதேசம் (829). தமிழ்நாட்டின் அடர்த்தி 555.
Correct Answer: D [(1), (2), (3), (4)]
விளக்கம்:
பீகார் 1,106 > மேற்கு வங்கம் 1,028 > கேரளம் 860 > உத்தரப் பிரதேசம் 829. எனவே (1), (2), (3), (4).
Correct Answer: C [மக்கள் அடர்த்தி]
விளக்கம்:
மக்கள் அடர்த்தி என்பது மக்கள் தொகைக்கும் நிலப்பரப்புக்கும் இடையிலான விகிதம்; வளமான சமவெளிகள், நீர்வளம் உள்ள பகுதிகளில் அடர்த்தி அதிகம், மலை, பாலைவனப் பகுதிகளில் குறைவு. கல்வியறிவு, பாலின விகிதம் சமூகக் காரணிகளைச் சார்ந்தவை.
Correct Answer: C [P 0 + n·X]
விளக்கம்:
எண்கணித அதிகரிப்பு முறையில் ஒவ்வொரு பத்தாண்டிலும் மக்கள் தொகை ஒரே அளவு (X) அதிகரிக்கும் என்று கொள்ளப்படுகிறது : P n = P 0 + n·X (P 0 – தற்போதைய மக்கள் தொகை; n – பத்தாண்டுகளின் எண்ணிக்கை; X – சராசரிப் பத்தாண்டு அதிகரிப்பு).
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் புவியியல் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-geography-pyq
Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 4 / 2 / 2A – பொதுத்தமிழ், பொது அறிவு நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
₹199
TNPSC முழுமையான பாடநூல்கள் – முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
₹1599
பொதுத் தமிழ் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (புதிய பாடத்திட்டம்)
₹199
TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability) – முழுமையான பாடநூல்
₹199TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai
