TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – திருக்குறள்: சமூகம், அரசியல், பொருளாதாரம்; மானுடத்தின் மீதான தாக்கம்

← திரும்பச் செல்ல

TNPSC பாடநூல் பயிற்சி – அலகு VI – திருக்குறள்: சமூகம், அரசியல், பொருளாதாரம்; மானுடத்தின் மீதான தாக்கம் – 29 வினாக்கள், பாடம்: தமிழக வரலாறு, பண்பாடு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
“வேந்தர்க்கு ஒளி” எனக் குறள் 390 கூறும் நான்கில் இடம்பெறாதது எது?

Correct Answer: C [அஞ்சாமை]

விளக்கம்:

குறள் 390 வேந்தர்க்கு ஒளி எனக் கூறுவது கொடை, அளி, செங்கோல், குடியோம்பல் ஆகிய நான்கு. அஞ்சாமை இதில் இல்லை; அது குறள் 382இல் அரசனின் இயல்புகளுள் ஒன்றாக வருகிறது.

2.  
“அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே” என்ற குறள் இடம்பெறும் அதிகாரம்?

Correct Answer: A [கொடுங்கோன்மை]

விளக்கம்:

"அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை" (குறள் 555) கொடுங்கோன்மை அதிகாரத்தில் உள்ளது. கொடுங்கோலால் துன்புற்ற மக்களின் கண்ணீரே அரசனின் செல்வத்தை அழிக்கும் படை என்பது பொருள்.

3.  
“படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு” – குறள் எண்?

Correct Answer: D [381]

விளக்கம்:

"படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு" என்பது குறள் 381. இது இறைமாட்சி அதிகாரத்தின் முதல் குறள்; படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகிய ஆறு அங்கங்களைக் கூறுகிறது.

4.  
குறள் 390இல் வரும் ‘அளி’ என்ற சொல்லின் பொருள்?

Correct Answer: B [இரக்கம்]

விளக்கம்:

"கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி" (குறள் 390) என்பதில் 'அளி' என்பது இரக்கம் (தண்ணளி). கொடை, அளி, செங்கோல், குடியோம்பல் நான்கும் உடைய அரசனே அரசருக்கு ஒளி போன்றவன்.

5.  
குறள் 541இல் ‘இறை’ என்ற சொல்லின் பொருள்?

Correct Answer: A [நடுநிலை]

விளக்கம்:

"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை" (குறள் 541) என்பதில் 'இறை' என்பது நடுநிலை என்று பொருள்படும். இது செங்கோன்மை அதிகாரத்தின் முதல் குறள்.

6.  
குறள் 385 கூறும் அரசின் கடமைகளின் சரியான வரிசை?

Correct Answer: D [இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்]

விளக்கம்:

குறள் 385 “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு” எனக் கூறுகிறது; பொருள் வரும் வழிகளை உருவாக்குதல், ஈட்டுதல், காத்தல், முறையாகப் பகிர்தல் என்பது அரசின் கடமை வரிசை. இது ‘இறைமாட்சி’ அதிகாரத்தில் உள்ளது.

7.  
அயல்நாட்டு, உள்நாட்டு வணிகத்தால் அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாய் எது?

Correct Answer: B [உல்குபொருள்]

விளக்கம்:

"உறுபொருளும் உல்கு பொருளுந்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்" (குறள் 756) கூறும் 'உல்குபொருள்' வணிகத்தின் மீது விதிக்கப்படும் சுங்க வரி வருவாய். உறுபொருள் என்பது உரிமையில்லாமல் தானே வந்து சேரும் பொருள்; தெறுபொருள் பகைவரிடமிருந்து பெறும் பொருள்.

8.  
நாள்தோறும் ஆராய்ந்து முறைசெய்யாத மன்னவனுக்கு என்ன நிகழும்?

Correct Answer: C [நாடு நாள்தோறும் கெடும்]

விளக்கம்:

"நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்" (குறள் 553) நாள்தோறும் ஆராய்ந்து நீதி செய்யாத மன்னனின் நாடு நாள்தோறும் கெடும் என்கிறது. இது கொடுங்கோன்மை அதிகாரத்தில் உள்ளது.

9.  
“உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி” என்னும் குறள் இடம்பெறும் அதிகாரம்?

Correct Answer: B [வலியறிதல்]

விளக்கம்:

"உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்" (குறள் 473) வலியறிதல் அதிகாரத்தில் உள்ளது. தம் வலிமை அறியாமல் ஊக்கத்தால் மட்டும் தொடங்கி இடையில் தோற்றவர் பலர் என்பது பொருள்.

10.  
“ஞாலம் கருதினும் கைகூடும்” – உலகையே பெற எண்ணுபவர் கருத வேண்டிய இரண்டு?

Correct Answer: C [காலம், இடம்]

விளக்கம்:

"ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்" (குறள் 484) ஏற்ற காலமும் இடமும் அறிந்து செய்தால் உலகையே பெறலாம் என்கிறது. இது காலமறிதல் அதிகாரத்தில் உள்ளது.

11.  
கேடு சூழும் ஒரு மந்திரியைவிட நல்லவர் எனப்படும் ‘எழுபது கோடி’ யார்?

Correct Answer: D [பகைவர்கள்]

விளக்கம்:

"பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்" (குறள் 639) கேடு எண்ணும் ஓர் அமைச்சரைவிட எழுபது கோடி பகைவர் நல்லவர் என்கிறது. இது அமைச்சு அதிகாரத்தில் உள்ளது.

12.  
“அகலா தணுகாது தீக்காய்வார் போல்க” – இதில் அமைந்துள்ள அணி?

Correct Answer: A [தொழில் உவமை அணி]

விளக்கம்:

"அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க" (குறள் 691) அரசரைச் சார்ந்து வாழ்வோர் தீக் காய்பவர் போல மிக அகலாமலும் மிக நெருங்காமலும் இருக்க வேண்டும் என்கிறது. தீக்காய்தல் என்ற தொழிலை உவமையாகக் கொண்டதால் இது தொழில் உவமை அணி.

13.  
“குன்றேறி யானைப்போர் கண்டற்றால்” என்னும் குறள் இடம்பெறும் அதிகாரம்?

Correct Answer: C [பொருள் செயல்வகை]

விளக்கம்:

"குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை" (குறள் 758) பொருள்செயல்வகை அதிகாரத்தில் உள்ளது. கையில் பொருள் உடையவன் செயல் செய்வது மலைமேல் நின்று யானைப்போர் காண்பது போலப் பாதுகாப்பானது என்பது பொருள்.

14.  
“பகல்வெல்லும் கூகையைக் காக்கை” – காக்கை பகலில் வெல்லும் பறவை எது?

Correct Answer: B [கூகை]

விளக்கம்:

"பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது" (குறள் 481) பகலில் காக்கை கூகையை (ஆந்தை) வெல்லும் என்கிறது. பகைவரை வெல்ல அரசர்க்கு ஏற்ற காலம் வேண்டும் என்பதே கருத்து (காலமறிதல்).

15.  
அன்பு, அறிவு, தெளிந்த பேச்சுவன்மை ஆகிய மூன்றும் யாருக்கு இன்றியமையாதவை?

Correct Answer: A [தூதுவர்]

விளக்கம்:

"அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று" (குறள் 682) அன்பு, அறிவு, சொல்வன்மை மூன்றும் தூதுவருக்கு இன்றியமையாதவை என்கிறது. இது தூது அதிகாரத்தில் உள்ளது.

16.  
“கவறும் கழகமும் கையும் தருக்கி” என்னும் குறள் இடம்பெறும் அதிகாரம்?

Correct Answer: D [சூது]

விளக்கம்:

"கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்" (குறள் 935) சூது அதிகாரத்தில் உள்ளது. கவறு (சூதுக்காய்), கழகம் (சூதாடும் இடம்) ஆகியவற்றை விரும்பியவர் செல்வம் இழப்பர் என்பது பொருள்.

17.  
பகைவரின் செருக்கை அறுக்கும் கூரிய எஃகு எனப்படுவது?

Correct Answer: A [பொருள்]

விளக்கம்:

"செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்" (குறள் 759) பகைவரின் செருக்கை அறுக்கும் கூரிய வாள் பொருளே என்கிறது. எனவே பொருளை ஈட்டுக என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

18.  
“ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை” — எப்போது?

Correct Answer: B [செலவு விரியாதபோது]

விளக்கம்:

"ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை" (குறள் 478) வருவாய் குறைவாக இருந்தாலும் செலவு வழி விரியாவிட்டால் கேடில்லை என்கிறது. இது வலியறிதல் அதிகாரத்தில் உள்ளது.

19.  
பெருஞ்செல்வம் வந்துபோவதற்கு வள்ளுவர் கூறும் உவமை?

Correct Answer: D [நாடக அவைக் கூட்டம்]

விளக்கம்:

"கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று" (குறள் 332) பெருஞ்செல்வம் வருவதையும் போவதையும் நாடக அவைக் கூட்டம் கூடிக் கலைவதற்கு ஒப்பிடுகிறது. இது நிலையாமை அதிகாரத்தில் உள்ளது.

20.  
“சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம்” — குறள் எண்?

Correct Answer: A [1031]

விளக்கம்:

"சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை" என்பது குறள் 1031. இது உழவு அதிகாரத்தின் முதல் குறள்; உலகம் எத்தொழில் செய்தாலும் ஏர்த்தொழிலைச் சார்ந்தே இருக்கிறது என்கிறது.

21.  
வள்ளுவர் கருத்துப்படி வறுமையைவிடத் துன்பம் தருவது எது?

Correct Answer: D [வறுமையே]

விளக்கம்:

"இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது" (குறள் 1041) வறுமையைவிடத் துன்பம் தருவது வறுமையே என்கிறது. இது நல்குரவு அதிகாரத்தின் முதல் குறள்.

22.  
“பொருளென்னும் பொய்யா விளக்கம்” இடம்பெறும் அதிகாரம்?

Correct Answer: B [பொருள் செயல்வகை]

விளக்கம்:

"பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று" (குறள் 753) பொருள்செயல்வகை அதிகாரத்தில் உள்ளது. பொருள் அணையாத விளக்குப்போல் எங்குச் சென்றாலும் துன்ப இருளை நீக்கும் என்பது பொருள்.

23.  
யாராலும் விரும்பப்படாதவனது செல்வம் எதைப் போன்றது?

Correct Answer: C [நடுவூரில் பழுத்த நச்சுமரம்]

விளக்கம்:

குறள் 1008 “நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று” எனக் கூறுகிறது; யாராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊர் நடுவே பழுத்த நச்சுமரம் போலப் பயனற்றது. இக்குறள் ‘நன்றியில் செல்வம்’ அதிகாரத்தில் உள்ளது.

24.  
நாட்டின் ஐந்து அணிகளைக் கூறும் குறள் எண்?

Correct Answer: D [738]

விளக்கம்:

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து" (குறள் 738) நோயின்மை, செல்வம், விளைச்சல், இன்பம், பாதுகாப்பு ஆகிய ஐந்தையும் நாட்டின் அணிகள் என்கிறது. இது நாடு அதிகாரத்தில் உள்ளது.

25.  
குமரியில் திருவள்ளுவர் சிலையும் பீடமும் சேர்ந்த மொத்த உயரம்?

Correct Answer: A [133 அடி]

விளக்கம்:

கன்னியாகுமரித் திருவள்ளுவர் சிலை 95 அடி, பீடம் 38 அடி சேர்த்து மொத்தம் 133 அடி உயரம் கொண்டது. இது திருக்குறளின் 133 அதிகாரங்களைக் குறிக்கும்; 2000 ஜனவரி 1 அன்று திறக்கப்பட்டது.

26.  
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” — சிறப்பு ஒவ்வாமைக்குக் காரணம்?

Correct Answer: C [செய்தொழில்]

விளக்கம்:

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" (குறள் 972) பிறப்பால் அனைவரும் சமம், செய்யும் தொழிலின் வேறுபாட்டால் மட்டுமே சிறப்பு மாறுபடும் என்கிறது. குடிப்பிறப்பை வள்ளுவர் சிறப்புக்குக் காரணமாகக் கூறவில்லை.

27.  
“நாடென்ப நாடா வளத்தன” – வள்ளுவர் கூறும் நாடு எது?

Correct Answer: C [செல்வம் தேடி மக்களைப் பிற இடங்களில் அலையவிடாதது]

விளக்கம்:

குறள் 739 “நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு” எனக் கூறுகிறது; வளம் தேடி மக்கள் பிற இடங்களுக்கு அலையாமல், தானே வளம் தரும் நாடே நாடு. தேடி அலைந்தால்தான் வளம் தரும் நிலம் நாடு அல்ல என்பது பொருள்.

28.  
குமரிச் சிலையின் 38 அடி பீடம் எப்பாலின் அதிகாரங்களைக் குறிக்கிறது?

Correct Answer: A [அறத்துப்பால்]

விளக்கம்:

கன்னியாகுமரித் திருவள்ளுவர் சிலையின் 38 அடி பீடம் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களைக் குறிக்கிறது. அதன் மேல் உள்ள 95 அடிச் சிலை பொருட்பால் (70), காமத்துப்பால் (25) அதிகாரங்களைக் குறிக்கிறது.

29.  
குறள் 735இன்படி நாட்டில் இருக்கக் கூடாதது எது?

Correct Answer: B [பல்குழு]

விளக்கம்:

குறள் 735 “பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு” எனக் கூறுகிறது; பல்குழு என்பது நாட்டைப் பிளக்கும் பல பிரிவுகள். வருபுனல், வல்லரண் போன்றவை நாட்டுக்கு வேண்டிய உறுப்புகள் (குறள் 737).
➤ இப்பாடத்தின் முழு விளக்கம், மனவரைபடங்கள், அட்டவணைகளுடன் – TNPSC அலகு VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-6-tamil-nadu-history-culture

📘 தமிழ்ச் சமூகம் & திருக்குறள் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 976 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 73 அட்டவணைகள் & குறிப்புகள் · 73 தேர்வுத் தாள்கள் (2020 – 2026)
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0