தமிழ் இலக்கியம் – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 4)

← திரும்பச் செல்ல

தமிழ் இலக்கியம் – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 4) – 30 வினாக்கள், பாடம்: தமிழக வரலாறு, பண்பாடு. ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
[SPECIAL COMPETITIVE-2025] "மதிபெற்ற மைனர்" நாவலாசிரியர்

Correct Answer: A [ராமாமிர்தம்]

விளக்கம்:

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறையை எதிர்த்து 'தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்' (1936) என்ற நாவலை எழுதினார். இவர் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றியவர்.

2.  
[GROUP 1&1A-2025] 'பகைவர் புல் ஆர்க' எனும் தொடர் இடம்பெற்றுள்ள நூல்.

Correct Answer: C [ஐங்குறுநூறு]

விளக்கம்:

'பகைவர் புல் ஆர்க' என்ற தொடர் ஐங்குறுநூற்றின் மருதத் திணையில் ஓரம்போகியார் பாடிய வேட்கைப் பத்தில் இடம்பெறுகிறது. 'வாழி ஆதன் வாழி அவினி' எனத் தொடங்கும் அப்பாடல்களில் தலைவி அரசனுக்கு நலமும் பகைவர் நாடு பாழாகவும் வேண்டுகிறாள்.

3.  
[GROUP 4-2025] கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
(a) காரைக்கால் அம்மையார்
(b) ஆண்டாள்
(c) அரங்கநாத முதலியார்
(d) சேரமான் பெருமாள் நாயனார்
1. திருவந்தாதி
2. கச்சிக்கலம்பகம்
3. பாவைப்பாட்டு
4. மூத்ததிருப்பதிகங்கள்

Correct Answer: C [4 3 2 1]

விளக்கம்:

காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்களையும், ஆண்டாள் திருப்பாவையையும், அரங்கநாத முதலியார் கச்சிக் கலம்பகத்தையும், சேரமான் பெருமாள் நாயனார் திருவந்தாதியையும் (பொன்வண்ணத்து அந்தாதி) பாடினர்; எனவே 4 3 2 1. காரைக்கால் அம்மையார் சைவ பக்தி இலக்கியத்தின் முன்னோடியாகப் போற்றப்படுகிறார்.

4.  
[GROUP4-2025] கீழ்க்கண்ட நூல்களை ஆசிரியர்களோடு பொருத்தவும்.
(a) வெற்றிவேற்கை - 1. ஔவையார்
(b) நன்னெறி - 2. குமரகுருபரர்
(c) நீதிநெறி விளக்கம் - 3. அதிவீரராம பாண்டியர்
(d) நல்வழி - 4. துறைமங்கலம் சிவப்பிரகாசர்

Correct Answer: C [3 4 2 1]

விளக்கம்:

வெற்றிவேற்கையை அதிவீரராம பாண்டியரும், நன்னெறியைத் துறைமங்கலம் சிவப்பிரகாசரும், நீதிநெறி விளக்கத்தைக் குமரகுருபரரும், நல்வழியை ஔவையாரும் இயற்றினர்; எனவே விடை 3 4 2 1. வெற்றிவேற்கைக்கு 'நறுந்தொகை' என்ற பெயரும் உண்டு.

5.  
[CTS-IV-POST-2025] கிரேக்க இலக்கியங்களில் நீதி நூல்களின் தோற்றத்தை எவரின் வழி அறிய முடிகிறது?

Correct Answer: C [ஹீசியட்]

விளக்கம்:

கிரேக்க இலக்கியத்தில் நீதி நூல்களின் தோற்றம் ஹீசியடின் 'Works and Days' நூலிலிருந்து அறியப்படுகிறது; அதுவே முதல் கிரேக்க அறநூலாகக் கருதப்படுகிறது. (தேர்வாணைய விடைக்குறிப்பில் 'ஹோமர்' எனக் குறிக்கப்பட்டிருந்தது.)

6.  
[CTS-IV-POST-2025] 'இதழகலந்தாதி' என்று கூறப்படும் அந்தாதி இலக்கிய வகை

Correct Answer: B [நீரோட்ட யமக அந்தாதி]

விளக்கம்:

இதழகல் அந்தாதி என்பது நிரோட்ட யமக அந்தாதி ஆகும்; இதன் பாடல்களைப் படிக்கும்போது மேல் உதடும் கீழ் உதடும் ஒன்றையொன்று தொடுவதில்லை. சிவப்பிரகாசர் இயற்றிய நிரோட்ட யமக அந்தாதி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

7.  
[CTS-NON-IV-POST-2025] "அன்பளிப்பு" என்ற சிறுகதை நூலின் ஆசிரியர்

Correct Answer: D [கு. அழகிரிசாமி]

விளக்கம்:

'அன்பளிப்பு' சிறுகதைத் தொகுப்பை எழுதியவர் கு. அழகிரிசாமி; இந்நூலுக்கு 1970-இல் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

8.  
[CTS-NON-IV-POST-2025] பொருத்துக (தொல்காப்பியர் காலம் குறித்த கருத்துகள்):
(a) க. வெள்ளைவாரணர் - 1. கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை
(b) கே. கனகசபாபதிப் பிள்ளை - 2. கி.மு. 5320
(c) என். சுப்பிரமணியன் - 3. கி.பி. 4 ஆம் நூற்றாண்டு
(d) எஸ். வையாபுரிப் பிள்ளை - 4. கி.மு. 2 ஆம் நூற்றாண்டு

Correct Answer: A [2 4 1 3]

விளக்கம்:

தொல்காப்பியர் காலத்தை க. வெள்ளைவாரணர் கி.மு. 5320 எனவும், கனகசபாபதிப் பிள்ளை கி.மு. 2 ஆம் நூற்றாண்டு எனவும், என். சுப்பிரமணியன் கி.மு. 4–3 ஆம் நூற்றாண்டு எனவும், வையாபுரிப் பிள்ளை கி.பி. 4 ஆம் நூற்றாண்டு எனவும் கணித்தனர்.

9.  
[CTS-ITI-POST-2025] கொடுக்கப்பட்டனவற்றுள் சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
(1) சங்கரதாஸ் சுவாமிகள் - ஞானக் கோயில்
(2) கால்டுவெல் - ஞானக் கண்ணாடி
(3) படிக்காசுப் புலவர் - தொண்டைமண்டல சதகம்
(4) வேதநாயகம் பிள்ளை - பெண்மதி மாலை

Correct Answer: D [(3) மற்றும் (4) சரியானவை]

விளக்கம்:

தொண்டைமண்டல சதகத்தை இயற்றியவர் படிக்காசுப் புலவர், பெண்மதி மாலையை இயற்றியவர் வேதநாயகம் பிள்ளை; எனவே (3), (4) சரியானவை. ஞானக் கண்ணாடி வீரமாமுனிவரின் உரைநடை நூல், கால்டுவெல்லுடையது அன்று.

10.  
[GROUP2-2A-2025] பொருத்துக:
(a) பாரதியார் - 1. பாண்டியன் பரிசு
(b) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - 2. தமிழன் இதயம்
(c) பாரதிதாசன் - 3. கண்ணன் பாட்டு
(d) இராமலிங்கம் பிள்ளை - 4. ஆசிய ஜோதி

Correct Answer: C [3 4 1 2]

விளக்கம்:

கண்ணன் பாட்டு பாரதியாருடையது, ஆசிய ஜோதி கவிமணியுடையது, பாண்டியன் பரிசு பாரதிதாசனுடையது, தமிழன் இதயம் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையுடையது; எனவே விடை 3 4 1 2. ஆசிய ஜோதி எட்வின் அர்னால்டின் 'Light of Asia' நூலைத் தழுவிய புத்தர் வரலாறு.

11.  
[CTS-ITI-LEVEL-II-2025] சரியான இணையைக் கண்டறிக.
1. குன்றக்குரவை - முல்லை நில பெண்கள் திருமாலுக்காக ஆடல்
2. ஆய்ச்சியர் குரவை - குறிஞ்சி நில பெண்கள் முருகனுக்காக ஆடல்
3. மரக்கால் - கொற்றவை அசுரரை கொல்வதற்காக ஆடிய ஆடல்
4. பாவை - அசுரரை வெல்ல திருமகள் ஆடிய ஆடல்

Correct Answer: D [[3] மற்றும் [4] சரி]

விளக்கம்:

குன்றக்குரவை குறிஞ்சி நிலப் பெண்கள் முருகனுக்கும், ஆய்ச்சியர் குரவை முல்லை நிலப் பெண்கள் திருமாலுக்கும் ஆடியவை; எனவே 1, 2 தவறு. மரக்கால் ஆடல் கொற்றவையும், பாவைக்கூத்து திருமகளும் அசுரரை வெல்ல ஆடியவை.

12.  
[APP-GR-II-2026] பின்வருவனவற்றைப் பொருத்துக:
நூலின் பெயர் - ஆசிரியர்
(a) தென்னாட்டுப் போர்க்களங்கள் - 1. செ. திவான்
(b) விடுதலை வேள்வியில் தமிழகம் - 2. த. ஸ்டாலின் குணசேகரன்
(c) விடுதலைப் போரில் தமிழக முஸ்லீம்கள் - 3. கா. அப்பாத்துரை
(d) விடுதலைப் போரில் தமிழகம் - 4. மா.பொ. சிவஞானம்

Correct Answer: B [3 2 1 4]

விளக்கம்:

தென்னாட்டுப் போர்க்களங்கள் – கா. அப்பாத்துரை; விடுதலை வேள்வியில் தமிழகம் – த. ஸ்டாலின் குணசேகரன்; விடுதலைப் போரில் தமிழக முஸ்லீம்கள் – செ. திவான்; விடுதலைப் போரில் தமிழகம் – ம.பொ. சிவஞானம்.

13.  
[CTS-IV-POST-2026] சரியாகப் பொருந்துமாற்றைத் தேர்வு செய்க:
(1) காய் நெல் லறுத்துக் கவளம் கொளினே - கோவூர்கிழார்
(2) யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்
(3) வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற்போகி - பிசிராந்தையார்
(4) ஈயென இரத்தல் இழிந்தன்று - கழைதின் யானையார்

Correct Answer: B [(2) மற்றும் (4) சரியானவை]

விளக்கம்:

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' – கணியன் பூங்குன்றனார் (புறம் 192); 'ஈயென இரத்தல் இழிந்தன்று' – கழைதின் யானையார் (புறம் 204). 'காய் நெல் அறுத்து' பிசிராந்தையார் பாடல்; 'வள்ளியோர்ப் படர்ந்து' கோவூர் கிழார் பாடல்.

14.  
[CTS-IV-POST-2026] தவறான இணையைக் கண்டறிக.
(1) கந்தபுராணம் - சங்கர சங்கிதையின் முதற்காண்டத் தழுவல்
(2) யசோதர காவியம் - வடமொழி யசோதர சரிதத்தின் தழுவல்
(3) பெரிய புராணம் - வடமொழி உத்தர மாபுராணத்தின் தழுவல்
(4) ஸ்ரீபுராணம் - நாக பஞ்சமிக் கதையின் தழுவல்

Correct Answer: C [(3) மற்றும் (4)]

விளக்கம்:

பெரியபுராணம் சேக்கிழார் இயற்றிய தமிழ்ச் சைவ நூல், உத்தர மாபுராணத் தழுவல் அல்ல; ஸ்ரீபுராணம் சமண மாபுராணத்தின் தழுவல், நாக பஞ்சமிக் கதையின் தழுவல் நாககுமார காவியமே. எனவே (3), (4) தவறான இணைகள்.

15.  
[GROUP2A-MAINS-2025] பின்வரும் தமிழறிஞர்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
(1) மாயூரம் வேதநாயகம் பிள்ளை
(2) வேதநாயக சாஸ்திரியார்
(3) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
(4) எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை

Correct Answer: C [(2), (1), (4), (3)]

விளக்கம்:

வேதநாயக சாஸ்திரியார் (1774), மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826), எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை (1827), ஆபிரகாம் பண்டிதர் (1859) என்பது பிறப்பு அடிப்படையிலான கால வரிசை.

16.  
[GROUP2A-MAINS-RE-2026] உ.வே.சா. பதிப்பித்த சங்க நூல்களை அதன் ஆண்டுகளோடு பொருத்துக.
(a) பத்துப்பாட்டு - 1. 1903
(b) புறநானூறு - 2. 1889
(c) ஐங்குறுநூறு - 3. 1904
(d) பதிற்றுப்பத்து - 4. 1894

Correct Answer: B [2 4 1 3]

விளக்கம்:

உ.வே.சா. பத்துப்பாட்டை 1889-இலும், புறநானூற்றை 1894-இலும், ஐங்குறுநூற்றை 1903-இலும், பதிற்றுப்பத்தை 1904-இலும் பதிப்பித்தார்; எனவே விடை 2 4 1 3. அவர் முதலில் பதிப்பித்த பெருநூல் சீவக சிந்தாமணி (1887).

17.  
[GROUP2A-MAINS-REVOKED-2026] பின்வருவனவற்றில் எது சுப்ரமண்ய பாரதியைப் பற்றிய சரியான கூற்று அல்ல?
(i) அவர் ஒரு தேசியவாத தேசபக்தியை வெளிப்படுத்தியவர்
(ii) அவர் எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரால்டின் உமர்கய்யாமை மொழிபெயர்த்தார்
(iii) அவர் ஆசிய ஜோதி என்றும் அழைக்கப்பட்டார்
(iv) அவரது படைப்புகள் அழகின் சிரிப்பு மற்றும் பாண்டியன் பரிசு ஆகும்

Correct Answer: D [(ii), (iii) மற்றும் (iv) மட்டும்]

விளக்கம்:

பாரதியார் தேசபக்திப் பாடல்கள் பாடியவர் என்பது மட்டுமே சரி. உமர் கய்யாம் மொழிபெயர்ப்பும் 'ஆசிய ஜோதி'யும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையுடையவை; அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு பாரதிதாசனின் படைப்புகள். எனவே (ii), (iii), (iv) தவறு. (தேர்வாணைய விடைக்குறிப்பில் (ii), (iii) மட்டும் எனக் குறிக்கப்பட்டிருந்தது.)

18.  
[GROUP2A-MAINS-REVOKED-2026] அதிக எண்ணிக்கையில் சங்கப் பாடல்களைப் பாடிய புலவர்களை வரிசைப்படுத்துக.
(1) ஓரம்போகியார்
(2) அம்மூவனார்
(3) பேயனார்
(4) கபிலர்

Correct Answer: D [(4), (2), (1), (3)]

விளக்கம்:

சங்கப் பாடல்கள் எண்ணிக்கையில் கபிலர் (சுமார் 235), அம்மூவனார் (சுமார் 127), ஓரம்போகியார் (சுமார் 110), பேயனார் (சுமார் 105) என்ற வரிசையில் உள்ளனர்; எனவே (4), (2), (1), (3). கபிலர் ஐங்குறுநூற்றின் குறிஞ்சிப் பகுதியையும் குறிஞ்சிப்பாட்டையும் பாடியவர்.

19.  
[GSASO-2020] முதலில் பகவத் கீதையை சமஸ்கிருத மொழியில் இருந்து ஆங்கில மொழிக்கு மாற்றி கொடுத்தவர் யார்?

Correct Answer: A [சார்லஸ் வில்கின்ஸ்]

விளக்கம்:

சார்லஸ் வில்கின்ஸ் 1785-இல் பகவத் கீதையை முதன்முதலில் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்; இதற்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆதரவு அளித்தார். வில்லியம் ஜோன்ஸ் 1784-இல் ஆசியக் கழகத்தை (Asiatic Society) நிறுவியவர்.

20.  
[ARGS-2020] "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" இந்த வரிகள் எந்த தமிழ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன?

Correct Answer: B [தொல்காப்பியம்]

விளக்கம்:

இவ்வரிகள் தொல்காப்பியருடன் பயின்ற பனம்பாரனார் இயற்றிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் உள்ளன. வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும் தமிழ் வழங்கும் நிலத்தின் எல்லைகள் என்று அவை குறிப்பிடுகின்றன.

21.  
[PTGS-2021] 'செல்வம் சகடக் கால்போல வரும்' – என்று கூறும் நூல்?

Correct Answer: B [நாலடியார்]

விளக்கம்:

'செல்வம் சகடக்கால் போல வரும்' என்ற தொடர் நாலடியாரின் 'செல்வம் நிலையாமை' அதிகாரத்தில் உள்ளது; செல்வம் வண்டிச் சக்கரம் போல மேலும் கீழுமாக மாறி வரும் என்பது இதன் பொருள். நாலடியார் சமண முனிவர்கள் இயற்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூலாகும்.

22.  
[GSCE-2021] கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
கூற்று (A): பெரியபுராணம் சேக்கிழாரால் எழுதப்பட்டது. மேலும் சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவை சோழர் காலத்தில் படைக்கப்பட்டன.
காரணம் (R): சோழர் காலம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு புத்துணர்வு தந்தது.

Correct Answer: C [(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்]

விளக்கம்:

பெரியபுராணம் (இரண்டாம் குலோத்துங்கன் காலம்), சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் ஆகியவை சோழர் காலத்தில் தோன்றியவை. சோழர் ஆட்சியில் தமிழ் இலக்கியம் செழித்ததே இதற்குக் காரணம்.

23.  
[AHGS-2021] தன்நாட்டைக் காத்துக் கொள்ளப் போரிடும் புறத்திணை எது?

Correct Answer: D [காஞ்சி]

விளக்கம்:

பகைவர் படையெடுத்து வரும்போது தன் நாட்டைக் காக்க எதிர்த்து நின்று போரிடுவது காஞ்சித் திணை. வஞ்சி என்பது பகை நாட்டின்மீது படையெடுத்துச் செல்வது.

24.  
[AHGS-2021] பாணன் என்பவர் யார்?

Correct Answer: A [பாட்டுப்பாடுபவர்]

விளக்கம்:

சங்க இலக்கியத்தில் பாணர் என்போர் யாழ் இசைத்துப் பாடல் பாடிப் புரவலரிடம் பரிசில் பெற்ற இசைக் கலைஞர்கள் ஆவர். பறை அடிப்பவர் துடியன், பறையன் எனப்பட்டனர்; பாணரை ஆற்றுப்படுத்தும் நூல்கள் பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை.

25.  
[AHGS-2021] வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது ________ ஆகும்.

Correct Answer: D [முதல்நூல்]

விளக்கம்:

தொல்காப்பியம் மரபியலில் 'வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்' என்று முதல்நூலுக்கு இலக்கணம் கூறப்படுகிறது. முதல்நூலைப் பின்பற்றி எழுதப்படுவது வழிநூல் எனப்படும்.

26.  
[AGGS-2021] "நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே"
— நுவ்வை என்பது

Correct Answer: A [தங்கை]

விளக்கம்:

நற்றிணை 172-இல், தலைவி சிறுமியாக இருந்தபோது விதைத்து வளர்த்த புன்னை மரத்தை 'நுவ்வை' (உன் தங்கை) எனத் தாய் கூறினாள் என்பதே உரையாசிரியர்களின் பொருள். (தேர்வாணைய விடைக்குறிப்பில் 'தமக்கை' எனக் குறிக்கப்பட்டிருந்தது.)

27.  
[ADGS-2021] கிறிஸ்துவ காலத்திற்கு முன் எழுதப்பட்ட கவிதை மற்றும் இலக்கண நூல்

Correct Answer: A [தொல்காப்பியம்]

விளக்கம்:

தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியமே இன்று கிடைக்கும் மிகப் பழமையான தமிழ் இலக்கண நூல்; இது கி.மு. காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

28.  
[ADGS-2021] சோழர்களின் சமூக-அரசியல் நிலை பற்றி கூறும் நூல் எது?

Correct Answer: C [கலிங்கத்துப்பரணி]

விளக்கம்:

செயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணி, முதலாம் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் பாடுவதோடு சோழர் கால அரசியல், சமூக நிலைகளையும் விரிவாகக் காட்டுகிறது. திருக்குறளும் நாலடியாரும் எந்த அரச மரபையும் விவரிக்காத அற நூல்கள்.

29.  
[EO-G3-2022] கீழ்க்கண்ட இணைகளில் எது தவறானது?
(i) பட்டினப்பாலை — கடியலூர் உருத்திரங் கண்ணனார்
(ii) பதிற்றுப்பத்து — எட்டு சேர மன்னர்கள் குறித்து பேசுகிறது
(iii) மதுரைக் காஞ்சி — முதுகுடுமி பெருவழுதி பற்றி குறிப்பிடுகிறது
(iv) திருவஞ்சைக்களம் — கரிகால சோழனை பற்றி கூறுகிறது

Correct Answer: D [(iv) மட்டும்]

விளக்கம்:

திருவஞ்சைக்களம் சேரநாட்டுத் தலம் (சுந்தரர், சேரமான் பெருமாள் தொடர்புடையது); கரிகால் சோழனுக்கும் அதற்கும் தொடர்பில்லை. மற்ற இணைகள் சரியானவை.

30.  
[PSY-2022] (63) அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையை விவரிக்கும் நூல்

Correct Answer: C [பெரிய புராணம்]

விளக்கம்:

சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்) அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. இது பன்னிரண்டாம் திருமுறையாகும்; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆழ்வார்களின் பாடல் தொகுப்பு.

📘 TNPSC பொது அறிவு அலகு V (பகுதி 2) — தமிழகப் பொருளாதாரம் (Tamil Nadu Economy) – முழுமையான பாடநூல்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். NPSC பொது அறிவு அலகு V — தமிழகப் பொருளாதாரம் முழுவதும் · 10 அத்தியாயங்கள் · 400 பயிற்சி வினாக்கள் விடை + விளக்கத்துடன் · அட்டவணைகள், காலவரிசைகள், மனவரைபடங்கள் · அக்டோபர் 2026 வரையிலான தரவுகள்
புத்தகத்தைப் பெற – ₹299 ₹599 →
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0