TN நிர்வாகம் PYQ – பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டின் சாதனைகள் (பகுதி 2: வினா 14–26)

← திரும்பச் செல்ல

TN நிர்வாகம் PYQ – பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டின் சாதனைகள் (பகுதி 2: வினா 14–26) – 13 வினாக்கள், பாடம்: தமிழக பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் இரண்டு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
மூன்றாம் பாலின நல வாரியத்தை நிறுவிய முதல் மாநிலம் எது?

Correct Answer: A [தமிழ்நாடு]

விளக்கம்:

நாட்டில் முதன்முதலில் 2008இல் மூன்றாம் பாலின நல வாரியம் அமைத்த மாநிலம் தமிழ்நாடு. [FA 2022, Asst. Conservator of Forests 2023, CTS (Interview Posts) 2026]

2.  
கோட்டை அமீர் விருது 2022ஆம் ஆண்டில் திரு. ஜே. முகமது ரஃபி பெற்றார். இவர் _____ மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

Correct Answer: B [கோயம்புத்தூர்]

விளக்கம்:

2022 கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜே. முகமது ரஃபிக்கு. [Jailor 2022]

3.  
கலைத்துறையில் சாதனைகள் செய்தமைக்காக 2021ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷண் விருதைத் தமிழ்நாட்டிலிருந்து பெற்றவர் யார்?

Correct Answer: D [எஸ்.பி. பாலசுப்பிரமணியம்]

விளக்கம்:

2021 கலைத்துறைப் பத்ம விபூஷண் (தமிழ்நாடு) எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு மறைவுக்குப் பின் வழங்கப்பட்டது. [Group 3A 2023]

4.  
கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட விருது அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

Correct Answer: C [2018]

விளக்கம்:

கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட (GPDP) விருது 2018இல் அறிமுகப்படுத்தப்பட்டது. [Asst. Conservator of Forests 2023]

5.  
2022ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் ஔவையார் விருது _____ அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Correct Answer: B [திருமதி கிரிஜா குமார்பாபு]

விளக்கம்:

2022 ஔவையார் விருது சமூக சேவகர் கிரிஜா குமார்பாபுவுக்கு வழங்கப்பட்டது. [Library Service 2023]

6.  
ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் நிறுவனம் நடத்திய அண்மைக்கால ஆய்வின்படி உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் முதல் பத்து இடங்களை இந்திய மாநகரங்கள் பிடித்துள்ளன. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ள நகரம்

Correct Answer: B [திருப்பூர்]

விளக்கம்:

ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் (2018) பட்டியலில் வேகமாக வளரும் நகரங்களில் திருப்பூர் 6ஆவது இடம். [Combined Research Assistant 2023]

7.  
இந்தியாவில், ஒரே இடத்தில் அமைந்த உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம் (2016) அமைந்துள்ள மாநிலம்

Correct Answer: D [தமிழ்நாடு]

விளக்கம்:

2016இல் கமுதியில் (இராமநாதபுரம்) அமைந்த 648 மெ.வா. சூரிய மின் நிலையம் அப்போது உலகின் பெரியது. [Research Asst. (Animal Husbandry) 2023]

8.  
108 அவசர மருத்துவ ஊர்திக்கு நாட்டிலேயே முதன்முதலாக நியமிக்கப்பட்ட பெண் ஓட்டுநர் யார்?

Correct Answer: C [திருமதி. வீரலட்சுமி]

விளக்கம்:

நாட்டின் முதல் பெண் 108 அவசர ஊர்தி ஓட்டுநர் தமிழ்நாட்டின் வீரலட்சுமி (2019). [Mass Interviewer 2023]

9.  
பொருத்துக :
(a) டாக்டர் அம்பேத்கர் விருது – 1. எஸ். ஜெயசீலா ஸ்டீபன்
(b) தந்தை பெரியார் விருது – 2. உ. பலராமன்
(c) காமராசர் விருது – 3. சுப. வீரபாண்டியன்
(d) தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – 4. பெ. சண்முகம்

Correct Answer: C [4 3 2 1]

விளக்கம்:

அம்பேத்கர் விருது பெ. சண்முகம், பெரியார் விருது சுப. வீரபாண்டியன், காமராசர் விருது உ. பலராமன். [Group 1 2024]

10.  
தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தளம் எது?

Correct Answer: C [அரிட்டாபட்டி]

விளக்கம்:

தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தளம் மதுரை அரிட்டாபட்டி (2022). [CTS (ITI Posts) 2024]

11.  
கலைத்துறையில் சாதனை படைத்ததற்காக 2022ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர் யார்?

Correct Answer: B [திருமதி முத்துக்கண்ணம்மாள்]

விளக்கம்:

விராலிமலை சதிர் நடனக் கலைஞர் முத்துக்கண்ணம்மாள் 2022இல் பத்மஸ்ரீ பெற்றார். [Group 1B/1C 2024]

12.  
2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருது பெற்றவர் யார்?

Correct Answer: B [கி. வீரமணி]

விளக்கம்:

2023 தகைசால் தமிழர் விருது கி. வீரமணிக்கு; முதல் விருது என். சங்கரய்யா (2021). [Special Competitive Exam 2025]

13.  
2024–2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விருதாளர்களை அவர்கள் பெற்ற விருதுகளுடன் பொருத்திக் காட்டுக :
விருது பெயர் – விருது பெற்றவர்
(a) அய்யன் திருவள்ளுவர் விருது – (1) ஜி.ஆர். இரவீந்திரநாத்
(b) பாவேந்தர் பாரதிதாசன் விருது – (2) மு. படிக்கராமு
(c) தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – (3) எல். கணேசன்
(d) அண்ணா விருது – (4) பொன். செல்வகணபதி

Correct Answer: A [(2) (4) (1) (3)]

விளக்கம்:

திருவள்ளுவர் விருது மு. படிக்கராமு, பாரதிதாசன் விருது பொன். செல்வகணபதி, அண்ணா விருது எல். கணேசன். [CTS (ITI Posts) 2025]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

📘 TNPSC தமிழ்நாடு நிர்வாகம் PYQ 2020–2026 – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 601 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம்
புத்தகத்தைப் பெற →
மேலும் வினாடி வினாக்கள்
› தமிழக பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 1 › தமிழகப் பொருளாதாரம் – 11ஆம் வகுப்பு – வினா விடை › தமிழகப் பொருளாதாரம் – 9ஆம் வகுப்பு – வினா விடை › தமிழ்நாட்டின் தொழில்கள், போக்குவரத்து – 10ஆம் வகுப்பு – வினா விடை › தமிழ்நாடு திருத்த வரவு–செலவுத் திட்டம் 2026–27 – வினா விடை › தமிழக பொருளாதாரம் – பயிற்சி வினா வங்கி 01 (26 வினா)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0