Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கீழ்க்காணும் பாடலில் உள்ள அடி எதுகையைச் சுட்டுக: “இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும் / உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு”

சரியான விடை: (A) இன்னரும் - உன்னத
விளக்கம்: இரண்டு அடிகளின் முதல் சீர்களான இன்னரும், உன்னத ஆகியவற்றில் இரண்டாம் எழுத்து 'ன்' ஒன்றி வருவதால் இது அடி எதுகை. அடிகளின் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 69. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும்பாய்ந் / தோடினன் உலாவினன் உவகைத்தேன் உண்டான்” – அடி எதுகையைத் தேர்க.விடை: ஆடினன் - தோடினன்
  2. பின்வரும் தொடரில் அமைந்துள்ள இயைபுத்தொடையைக் காண்க. “புதர்களை நாம் அழிப்பதிலே மகிழ வேண்டும் / புத்துலகை உருவாக்க முயல வேண்டும்”.விடை: வேண்டும் - வேண்டும்
  3. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.விடை: இயற்கை, ஈரம், உச்சி, ஊடல்
  4. பின்வரும் தொடரில் அமைந்துள்ள எதுகையைக் காண்க. “குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன் / அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்”.விடை: குன்றம் - அன்று
  5. ‘பாரதியார் குயில்பாட்டைப் பாடினார்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.விடை: செய்வினை வாக்கியம்
  6. “பேயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி / நாயென்றாள் நீயென்றேன் நான்” – அடி எதுகையைத் தேர்க.விடை: பேயென்றாள் - நாயென்றாள்
  7. ‘தீ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: நெருப்பு
  8. இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுபவைவிடை: சிலப்பதிகாரம், மணிமேகலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions