வினா விடை · காரணவியல்
மாலை 5 மணிக்குச் சீதாவின் நிழல் அவளுக்கு நேர் முன்னால் விழுகிறது. அவள் எந்தத் திசையை நோக்குகிறாள்?
சரியான விடை: (C) கிழக்கு
விளக்கம்: மாலைச் சூரியன் மேற்கில் → நிழல் கிழக்கே; நிழல் முன்னால் உள்ளதால் அவள் கிழக்கை நோக்குகிறாள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குரூப் 2A Mains காரணவியல் அத்.6: திசையும் தொலைவும் (40 வினா). TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு நாள் காலை சூரிய உதயத்துக்குப் பின் ரவியின் நிழல் அவனது இடப்பக்கம் விழுந்தது. அவன் எந்தத் திசையை நோக்கியிருந்தான்?விடை: வடக்கு
- ஒரு நாள் காலை சேகரும் ஹரியும் நேருக்கு நேர் நின்றனர். சேகரின் நிழல் சரியாக அவனது இடப்பக்கம் விழுந்தது. ஹரி எந்தத் திசையை நோக்கியிருந்தான்?விடை: தெற்கு
- P புள்ளியிலிருந்து ராணி 10 மீ. மேற்கே Q-க்கும், பின் 10 மீ. தெற்கே R-க்கும், பின் 10 மீ. கிழக்கே S-க்கும் நடக்கிறாள். S-இலிருந்து P எந்தத் திசையில் உள்ளது?விடை: வடக்கு
- சூரிய மறைவுக்குச் சற்று முன், செங்குத்தான ஒரு கம்பத்தின் நிழல் எந்தத் திசையில் விழும்?விடை: கிழக்கு
- Q-க்குக் கிழக்கே 8 மீ. தொலைவில் P உள்ளது. Q-க்கு வடக்கே 6 மீ. தொலைவில் R உள்ளது. P-இலிருந்து R எவ்வளவு தொலைவில், எந்தத் திசையில் உள்ளது?விடை: 10 மீ., வடமேற்கு
- காலை 7 மணிக்குக் குமார் சூரியனை நோக்கி நடக்கிறான். பின் வலப்புறம் திரும்பிச் சிறிது தூரம் நடந்து, மீண்டும் வலப்புறம் திரும்புகிறான். இப்போது அவன் எந்தத் திசையை நோக்குகிறான்?விடை: மேற்கு
- A ஆனது B-க்கு வடகிழக்குத் திசையில் 50 மீ. தூரத்திலும், B ஆனது C-க்கு வடமேற்குத் திசையில் 50 மீ. தூரத்திலும் இருப்பின், A-க்கு எந்தத் திசையில் C இருக்கும்? (குரூப் 2A முதன்மை 2025,...விடை: தெற்கு
- ஜெயஸ்ரீ வடமேற்குத் திசையை நோக்கியிருந்தாள். எதிரெதிரே அமரும் முறையில் ஹேமலதாவுடன் கேரம் விளையாடிக்கொண்டிருந்தால், ஹேமலதா எந்தத் திசையை நோக்கியிருந்தார்? (குரூப் 2A முதன்மை 2026, வி...விடை: தென் கிழக்கு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
