வினா விடை · TET – கணிதம்
ஒருவர் தனது சதுர வடிவ நிலத்தைச் சுற்றி வேலி அமைக்க ஒவ்வொரு பக்கத்திலும் (மூலைகள் உட்பட) 27 கம்புகளைப் பயன்படுத்தினால், மொத்தம் எத்தனை கம்புகள் தேவைப்படும்?
சரியான விடை: (B) 104
விளக்கம்: ஒவ்வொரு பக்கத்திலும் 27 கம்புகள் எனில் நான்கு மூலைக் கம்புகளும் இரண்டு பக்கங்களுக்குப் பொதுவானவை; எனவே 4 × 27 − 4 = 104. மூலைகளில் உள்ள கம்புகளை இருமுறை எண்ணக் கூடாது என்பதே இதன் நுட்பம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு ஆப்பிளின் விலை ₹7, ஒரு ஆரஞ்சின் விலை ₹5. ஒருவர் மொத்தம் ₹38-க்கு இந்த இரு பழங்களையும் வாங்கினால், அவர் எத்தனை ஆப்பிள்களை வாங்கியிருப்பார்?விடை: 4
- ஒரு நகரத்தில் வாலிபர்களில் 40% பேர் படிக்காதவர்கள்; குழந்தைகளில் 85% பேர் படித்தவர்கள். வாலிபர்களுக்கும் குழந்தைகளுக்கும் உள்ள விகிதம் 2 : 3 எனில், மொத்தத்தில் எத்தனை சதவீதம் பேர்...விடை: 75%
- ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை மாணவிகளின் எண்ணிக்கையைப் போல் மூன்று மடங்கு எனில், கீழ்க்கண்டவற்றுள் எது மொத்த எண்ணிக்கையாக இருக்க முடியாது?விடை: 42
- 15 பேர் கொண்ட குழுவில் 7 பேர் தமிழ் படிப்பவர்கள், 6 பேர் ஆங்கிலம் படிப்பவர்கள், 3 பேர் இரண்டையுமே படிக்காதவர்கள் எனில், தமிழ், ஆங்கிலம் இரண்டையும் படிப்பவர்கள் எத்தனை பேர்?விடை: 1
- பத்து பேர் ஒவ்வொருவரும் மற்ற ஒவ்வொருவருடனும் ஒருமுறை கைகுலுக்குகின்றனர் எனில், மொத்தம் எத்தனை கைகுலுக்கல்கள் நடைபெறும்?விடை: 45
- ஒரு மந்தையில் உள்ள 17 ஆடுகளில் 9 அல்லாது எல்லாம் இறந்துவிட்டன (All but 9 died) எனில், எத்தனை ஆடுகள் மீதம் உள்ளன?விடை: 9
- ஒருவரின் ஊதியத்தில் சம்பளமும் படியும் அடங்கும். ஒரு வாரத்தில் அவருக்குக் கிடைக்கும் படி, அவரது சம்பளத்தின் 5/4 பங்கு எனில், அவரது மொத்த ஊதியத்தில் படி எத்தனை பங்காகும்?விடை: 5/9
- ஒருவர் தனது ஊதியத்தில் 75% செலவு செய்கிறார். அவரது ஊதியம் 20% உயர்கிறது; அவரது செலவும் 10% உயர்கிறது எனில், அவரது சேமிப்பு எத்தனை சதவீதம் உயரும்?விடை: 50%
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
