வினா விடை · அறிவியல்
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். எண் மதிப்பு மட்டும் கொண்ட அளவு வெக்டர் அளவாகும். எண் மதிப்பு மற்றும் திசை பண்பு கொண்டது ஸ்கேலர் அளவாகும்.
சரியான விடை: (D) இரண்டும் தவறு
விளக்கம்: எண் மதிப்பு மட்டும் கொண்ட அளவு ஸ்கேலர் (எ.கா. நிறை, காலம்); எண் மதிப்பும் திசையும் கொண்டது வெக்டர் (எ.கா. விசை, திசைவேகம்). கூற்றுகள் இடம் மாறியுள்ளதால் இரண்டும் தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: 9ஆம் வகுப்பு அறிவியல் – அளவீடு, இயக்கம், பாய்மங்கள் – வினா விடை. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1960ஆம் ஆண்டு SI அலகு முறையானது எங்கு நடைபெற்ற எடைகள் மற்றும் அளவுக்கான பொது மாநாட்டில் பரிந்துரைக்கப்பட்டது?விடை: பாரிஸ்
- பரப்பு இழுவிசை(Surface tension) அலகு என்ன?விடை: நியூட்டன் / மீட்டர்
- கீழ்க்கண்டவற்றுள் நிறையின் அலகு எது?விடை: பவுண்ட்
- பொருத்துக: a) உந்தம் – 1. நிறை × முடுக்கம் b) முடுக்கம் – 2. நிறை × திசைவேகம் c) விசை – 3. விசை / பரப்பளவு d) அழுத்தம் – 4. திசைவேக மாற்றம் / காலம்விடை: 2 4 1 3
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. அறிவியல் சார்ந்த பிரிவுகள் அனைத்திற்கும் அளவீடுகள் அடிப்படை. 2. ஒரு பொருளின் அளவு மற்றும் எண் மதிப்பைத் தீர்மானிப்பதே அளவீடு.விடை: இரண்டும் சரி
- விசை(Force) அலகு என்ன?விடை: நியூட்டன்
- கீழ்க்கண்ட எது வழி அளவு(derived quantities)?விடை: பரப்பளவு
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்ளும் ஒரு பொருள் மையநோக்கு விசையைப் பெறுகிறது. 2. மையவிலக்கு விசை, மையநோக்கு விசை செயல்படும் அதே திசையில் செயல்படு...விடை: 1 மட்டும் சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
