வினா விடை · பொதுத் தமிழ்
'திருவள்ளுவர், ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாய் ஓம்ப வேண்டும் எனக் கூறினார்' – இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
சரியான விடை: (D) கலவை வாக்கியம்
விளக்கம்: 'திருவள்ளுவர் … எனக் கூறினார்' என்ற முதன்மை வாக்கியத்துடன் 'ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை … ஓம்ப வேண்டும்' என்ற சார்பு வாக்கியம் இணைந்து வருவதால் இது கலவை வாக்கியம். 'ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்' என்பது திருக்குறள் (131).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 84. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'நாகம் இடியோசையைக் கேட்டது; அதனால், நடுநடுங்கியது' – இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.விடை: தொடர் வாக்கியம்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களைக் கொண்டது'விடை: சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
- 'உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின்' – இக்குறளில் அமைந்த மோனையைத் தேர்க.விடை: உள்ளிய - உள்ளான்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'குறளை அற இலக்கியம் என்று கூறுவர்'விடை: அற இலக்கியம் என்று கூறப்படும் நூல் எது?
- 'அங்கொன்றும் இங்கொன்றும் முன்னர்த் தோன்றி அடுத்த நொடி வான்நிறையும் விண்மீன் கூட்டம்' – இதில் அமைந்துள்ள எதுகையைக் கண்டறிக.விடை: அங்கொன்றும் – இங்கொன்றும்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்'விடை: நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் யார்?
- 'இராமனும் சீதையும் இலக்குவனும் வனம் சென்றனர்' – இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிந்து தேர்க.விடை: தனி வாக்கியம்
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்கவிடை: ஆயிரம், இருள், எளியவர், ஓடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
