Daily Mains Question · தினம் ஒரு வினா

9 நவம்பர் 2026குரூப் 2 Mainsஅலகு V – அரசியலமைப்பு, அரசியல், ஆளுகை (தமிழ்நாடு)பகுதி C15 மதிப்பெண் · 250 சொற்கள்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-இன் சாதிவாரிக் கணக்கெடுப்புக்குப் பின்னர் மாநிலத்தில் "சமூக நீதிக் கணக்கெடுப்பு" நடத்த ஆணையம் ஒன்றை அமைக்கத் தமிழ்நாடு அமைச்சரவை அண்மையில் முடிவு செய்துள்ளது. இதன் பின்னணியில், மாநிலங்கள் சாதித் தரவுகளைத் திரட்டுவதற்கும் இடஒதுக்கீடு வழங்குவதற்குமான அரசமைப்பு, நீதித்துறைக் கட்டமைப்பை ஆராய்ந்து, தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டுக்கு இத்தகைய கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.

The Tamil Nadu Cabinet has recently decided to set up a commission to conduct a 'social justice survey' in the State after the caste enumeration of Census 2027. In this context, examine the constitutional and judicial framework within which States collect caste data and provide reservation, and assess the significance of such a survey for Tamil Nadu's 69 per cent reservation.

Timed Test:12:00

➤ படிக்க வேண்டியவை – பாடக் குறிப்பு

முதலில் இதைப் படியுங்கள், பிறகு எழுதுங்கள். இது தகவல் குறிப்பு மட்டுமே – மாதிரி விடை நாளை.

1. செய்தி இணைப்பு – சமூக நீதிக் கணக்கெடுப்பு (29.10.2026)

  • 29.10.2026 (வியாழன்) – முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம்.
  • ஓய்வுபெற்ற நீதிபதி இடம்பெறும் ஆணையம் (சில செய்திகள்: ஓய்வுபெற்ற நீதிபதி, IAS அதிகாரிகள்) – கணக்கெடுப்புக்கான வழிகாட்டுதல்களை வகுக்கும்; ஆணையம் 2027 பிப்ரவரி–மார்ச்சில் அமைக்கப்படும்.
  • கணக்கெடுப்பில் இடம்பெறக்கூடியவை: குடும்ப வருமானம், தொழில், நில உடைமை, கல்வி, இடைநிற்றல், நலத்திட்டப் பயன் – 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் நலத்திட்டங்களைத் துல்லியமாக்கவும் இது உதவும் என அரசு தெரிவிப்பு.
  • ஒன்றிய அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நடைபெறும் சாதிவாரிக் கணக்கெடுப்புக்குப் பின்னர் மாநிலக் கணக்கெடுப்பு – விரிவான சமூக-பொருளாதாரக் கணக்கெடுப்பு.
  • சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு: ஆதிதிராவிடர் மக்களின் உண்மையான சமூக-பொருளாதார நிலையையும் முன்னேற்றத் தடைகளையும் கண்டறிவதில் கவனம்.

2. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027

  • சாதிவாரிக் கணக்கெடுப்பைச் சேர்க்க ஒன்றிய அமைச்சரவையின் அரசியல் விவகாரக் குழு முடிவு – 30.04.2025.
  • மேற்கோள் நாள் – 01.03.2027 (பனி சூழ் பகுதிகளுக்கு 01.10.2026).
  • முழுமையான சாதிக் கணக்கெடுப்பு கடைசியாக – 1931 (தமிழ்நாடு அரசுக் கொள்கை விளக்கக் குறிப்பு).

3. அரசமைப்பு விதிகள்

விதிஉள்ளடக்கம்
உறுப்பு 15(4)சமூக, கல்வியில் பின்தங்கியோர், SC, ST முன்னேற்றத்துக்குச் சிறப்பு ஏற்பாடு – முதல் திருத்தம் (நடைமுறை 18.06.1951).
உறுப்பு 16(4)போதிய பிரதிநிதித்துவம் இல்லாத பிற்படுத்தப்பட்டோருக்குப் பணி இடஒதுக்கீடு – மூல அரசமைப்பிலேயே உள்ளது.
உறுப்பு 46நலிந்த பிரிவினர், SC, ST-இன் கல்வி, பொருளாதார நலன் – வழிகாட்டு நெறி.
உறுப்பு 340பிற்படுத்தப்பட்டோர் நிலையை ஆராய ஆணையம்.
உறுப்பு 342A(3)105-ஆவது திருத்தம் (2021) – மாநிலங்கள் தமக்கான சமூக, கல்வியில் பின்தங்கியோர் பட்டியலைத் தயாரிக்கலாம்.
ஏழாம் அட்டவணைஒன்றியப் பட்டியல் பதிவு 69 – மக்கள்தொகைக் கணக்கெடுப்பு; பொதுப் பட்டியல் பதிவு 45 – மாநில / பொதுப் பட்டியல் விவகாரங்களுக்கான ஆய்வுகள், புள்ளிவிவரங்கள்.
உறுப்பு 31B + ஒன்பதாம் அட்டவணைதமிழ்நாடு சட்டம் 45/1994 – 76-ஆவது திருத்தம் (31.08.1994), பதிவு 257A.

4. தமிழ்நாடு இடஒதுக்கீடு – இன்றைய நிலை (69%, 1990 முதல்)

பிரிவுபங்கு
பிற்படுத்தப்பட்டோர் (BC)26.5%
பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் (BCM) – சட்டம் 33/20073.5%
மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் (MBC/DNC) – 198920%
பட்டியல் சாதியினர் (SC) – அருந்ததியருக்கு 3% முன்னுரிமை உட்பட (சட்டம் 4/2009)18%
பழங்குடியினர் (ST) – 19901%
  • சட்டம் 45/1994 – குடியரசுத் தலைவர் ஒப்புதல் 19.07.1994; பிரிவுகள் 4 (கல்வி), 5 (பணி) – 69%; பிரிவு 7 – பிற்படுத்தப்பட்டோர் ஆணைய ஆலோசனையுடன் உள்வகைப்பாடு.
  • மாநில மக்கள்தொகையில் 88%-க்கும் மேல் BC, MBC, DNC, SC, ST பிரிவுகள் (கொள்கை விளக்கக் குறிப்பு 2024-25).
  • நிரந்தரத் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் – 15.03.1993 முதல்.

5. முக்கியத் தீர்ப்புகள்

வழக்குநாள்தீர்ப்பு
சென்னை மாநிலம் எதிர் செண்பகம் துரைராஜன்09.04.1951வகுப்புவாரி அரசாணை உறுப்பு 29(2)-க்கு முரண் → முதல் திருத்தம்.
இந்திரா சாஹ்னி எதிர் இந்திய ஒன்றியம்16.11.1992இடஒதுக்கீடு பொதுவாக 50%-ஐத் தாண்டக் கூடாது.
ஐ.ஆர். கோயல்ஹோ எதிர் தமிழ்நாடு11.01.200724.04.1973-க்குப் பின் ஒன்பதாம் அட்டவணைச் சட்டங்களும் அடிப்படைக் கட்டமைப்புச் சோதனைக்கு உட்படும்.
பாட்டாளி மக்கள் கட்சி எதிர் ஏ. மயிலேறும்பெருமாள் (வன்னியர் 10.5%)31.03.2022மாநிலத்துக்குச் சட்டமியற்றும் அதிகாரம் உண்டு; சாதி தொடக்கப்புள்ளி, ஒரே அடிப்படை அல்ல; பிற 115 MBC/DNC சமூகங்களிலிருந்து தனியாகக் கருதப் போதிய அடிப்படை இல்லை; 105-ஆவது திருத்தம் முன்தேதியிட்டதல்ல. (சென்னை உயர் நீதிமன்றம் 01.11.2021 ரத்து செய்ததை உறுதி செய்தது.)
பஞ்சாப் மாநிலம் எதிர் தவீந்தர் சிங் (7 நீதிபதிகள்)01.08.2024பட்டியல் சாதிகளுக்குள் உள்வகைப்பாடு செல்லும் – அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக்கு வலு.
  • 69% சட்டத்தை எதிர்த்த மனுக்கள் பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன; 69% தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.
  • பல மாநிலங்கள் தமக்கான சாதிக் கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளன.

6. விடையை உயர்த்தும் சொற்கள்

  • அளவிடக்கூடிய தரவு (quantifiable data), சான்று அடிப்படைக் கொள்கை (evidence-based policy), உள் ஒதுக்கீடு (sub-classification), 50% உச்சவரம்பு (ceiling), அடிப்படைக் கட்டமைப்பு (basic structure), கணக்கெடுப்பு vs மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (survey vs census), தரவுத் தனியுரிமை (data privacy).
Reference note in English

Key facts

  • News hook: on 29.10.2026 (Thursday) the Tamil Nadu Cabinet chaired by CM C. Joseph Vijay decided to set up a commission including a retired judge (some reports: a retired judge and IAS officers) to frame guidelines for a State-wide "social justice survey"; the commission is to be constituted in February–March 2027; the survey – a detailed socio-economic survey covering items such as family income, occupation, land ownership, education, dropouts and access to welfare – will follow the Union's caste enumeration in the Census; the Government links it to protecting the 69% and better welfare targeting. Social Justice Minister Vanni Arasu said it would focus on the real socio-economic condition of the Adi Dravidar population and the factors holding it back.
  • Census 2027: the Union Cabinet Committee on Political Affairs decided on 30.04.2025 to include caste enumeration; reference date 01.03.2027 (01.10.2026 for snow-bound areas). The last full caste census was in 1931 (TN Policy Note).
  • Constitution: Art. 15(4) – special provisions for SEBCs, SCs and STs (First Amendment, in force 18.06.1951); Art. 16(4) – reservation in posts (original Constitution); Art. 46 – DPSP for weaker sections; Art. 340 – backward classes commission; Art. 342A(3) – inserted by the 105th Amendment (2021), States may prepare their own SEBC lists; Seventh Schedule – Union List entry 69 (Census), Concurrent List entry 45 (inquiries and statistics for List II / III matters); Art. 31B + Ninth Schedule – TN Act 45 of 1994 placed by the 76th Amendment (31.08.1994) as entry 257A.
  • Tamil Nadu today (69% since 1990): BC 26.5%, BC Muslims 3.5% (Act 33 of 2007), MBC/DNC 20% (1989), SC 18% incl. 3% preferential for Arunthathiyars (Act 4 of 2009), ST 1% (1990). Act 45 of 1994 – President's assent 19.07.1994; ss. 4 (education) and 5 (posts) fix 69%; s. 7 – sub-classification on the advice of the TN Backward Classes Commission (permanent since 15.03.1993). Over 88% of the State's population belongs to BC/MBC/DNC/SC/ST (Policy Note 2024-25).
  • Judgments: State of Madras v. Champakam Dorairajan (09.04.1951) – Communal G.O. violated Art. 29(2) → First Amendment; Indra Sawhney (16.11.1992) – reservation should not, as a rule, exceed 50%; I.R. Coelho (11.01.2007) – Ninth Schedule laws added after 24.04.1973 open to basic-structure review; Pattali Makkal Katchi v. A. Mayilerumperumal (31.03.2022, upholding the Madras HC verdict of 01.11.2021) – State competent, caste can be the starting point but not the sole basis, no substantial basis to treat Vanniakula Kshatriyas differently from the other 115 MBC/DNC communities, 105th Amendment prospective; State of Punjab v. Davinder Singh (01.08.2024, 7 judges) – sub-classification of SCs permitted.
  • Petitions against the 69% law have been pending in the Supreme Court for many years; the 69% continues. Several States have conducted their own caste surveys.
  • Value-add terms: quantifiable data, evidence-based policy, sub-classification, 50% ceiling, basic structure, survey vs census, data privacy.
Download Notes PDF

Official Sources:

இந்தப் பாடத்தை முழுமையாகப் படிக்க – எங்கள் புத்தகம்:

எப்படி அணுகுவது? (குறிப்புகள்)

  • இரண்டு செயல்வினைகள் – "ஆராய்ந்து" (அரசமைப்பு, நீதித்துறைக் கட்டமைப்பு), "மதிப்பிடுக" (முக்கியத்துவம்): முன்னுரை, அரசமைப்பு, தீர்ப்புகள், மதிப்பீடு, முன்னோக்கிய வழி – தனித் தலைப்புகள்.
  • உறுப்புகள் 15(4), 16(4), 340, 342A(3), ஒன்றியப் பட்டியல் பதிவு 69, பொதுப் பட்டியல் பதிவு 45, உறுப்பு 31B ஆகியவற்றை அட்டவணையாக்குங்கள்.
  • செண்பகம் துரைராஜன் → இந்திரா சாஹ்னி → சட்டம் 45/1994 → கோயல்ஹோ → வன்னியர் தீர்ப்பு என்ற காலவரிசையை flowchart-ஆக வரையுங்கள்.
  • மதிப்பீட்டில் 69%-ஐ நியாயப்படுத்தத் தற்காலத் தரவு, உள் ஒதுக்கீடு போன்ற வாய்ப்புகளையும், தரவுத் தனியுரிமை, சென்சஸுடன் முரண்பாடு போன்ற சவால்களையும் சேருங்கள்.

In English: Two directive verbs – "examine" (constitutional and judicial framework) and "assess" (significance); headings for the introduction, Constitution, judgments, assessment and the way forward · tabulate Articles 15(4), 16(4), 340, 342A(3), Union List entry 69, Concurrent List entry 45 and Article 31B · draw the chronology Champakam Dorairajan → Indra Sawhney → Act 45 of 1994 → I.R. Coelho → Vanniyar judgment as a flowchart · in the assessment add opportunities such as current data to defend the 69% and internal quotas, and challenges such as data privacy and mismatch with the Census

Send Your Answer

காகிதத்தில் எழுதி, தெளிவான படம் எடுத்து WhatsApp-இல் அனுப்புங்கள் (பெயர், ஊர் குறிப்பிடுங்கள்). சிறந்த விடைகள் உங்கள் அனுமதியுடன் இங்கே வெளியிடப்படும்.

Evaluation Rubric · மதிப்பீட்டு அளவுகோல்

மாதிரி விடை வடிவம் – Shanmugam IAS Academy

முன்னுரை

29.10.2026 அன்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை, ஓய்வுபெற்ற நீதிபதி இடம்பெறும் ஆணையம் ஒன்றை அமைத்து "சமூக நீதிக் கணக்கெடுப்பு" நடத்த முடிவு செய்தது. ஆணையம் 2027 பிப்ரவரி–மார்ச்சில் அமையும்; மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-இன் சாதிவாரிக் கணக்கெடுப்புக்குப் பின்னர் விரிவான சமூக-பொருளாதாரக் கணக்கெடுப்பு நடைபெறும். முழுமையான சாதிக் கணக்கெடுப்பு கடைசியாக நடந்தது 1931-இல்.

அ) அரசமைப்புக் கட்டமைப்பு

விதிஉள்ளடக்கம்
உறுப்பு 15(4), 16(4)சமூக, கல்வியில் பின்தங்கியோர், SC, ST-க்குச் சிறப்பு ஏற்பாடு, பணி இடஒதுக்கீடு; 15(4) – முதல் திருத்தம் (1951).
உறுப்பு 340, 342A(3)பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்; 105-ஆவது திருத்தம் (2021) – மாநிலங்கள் தம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைத் தாமே தயாரிக்கலாம்.
அதிகாரப் பகிர்வுமக்கள்தொகைக் கணக்கெடுப்பு – ஒன்றியப் பட்டியல் (பதிவு 69); மாநில / பொதுப் பட்டியல் விவகாரங்களுக்கான புள்ளிவிவர ஆய்வுகள் – பொதுப் பட்டியல் (பதிவு 45) → மாநிலம் நடத்துவது "கணக்கெடுப்பு" (survey), "சென்சஸ்" அல்ல.
உறுப்பு 31B, ஒன்பதாம் அட்டவணைதமிழ்நாடு சட்டம் 45/1994 (69%) – 76-ஆவது திருத்தம் (1994), பதிவு 257A.

ஆ) நீதித்துறைக் கட்டமைப்பு

செண்பகம் துரைராஜன் (1951)
➜
உறுப்பு 15(4)
➜
இந்திரா சாஹ்னி – 50% உச்சவரம்பு (1992)
➜
சட்டம் 45/1994 + 76-ஆவது திருத்தம்
➜
ஐ.ஆர். கோயல்ஹோ (2007)
➜
வன்னியர் தீர்ப்பு (2022)
  • இந்திரா சாஹ்னி (16.11.1992): இடஒதுக்கீடு பொதுவாக 50%-ஐத் தாண்டக் கூடாது.
  • ஐ.ஆர். கோயல்ஹோ (11.01.2007): 24.04.1973-க்குப் பின் ஒன்பதாம் அட்டவணையில் சேர்ந்த சட்டங்களும் அடிப்படைக் கட்டமைப்புச் சோதனைக்கு உட்படும் – 69% மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில்.
  • வன்னியர் 10.5% (31.03.2022): சாதி தொடக்கப்புள்ளியாகலாம், ஆனால் ஒரே அடிப்படையாகக் கூடாது; தனி வகைப்பாட்டுக்குப் போதிய அடிப்படை காட்டப்படவில்லை – சட்டம் ரத்து.
  • தவீந்தர் சிங் (01.08.2024): பட்டியல் சாதிகளுக்குள் உள்வகைப்பாடு செல்லும்.

இ) கணக்கெடுப்பின் முக்கியத்துவம் – மதிப்பீடு

வாய்ப்புகள்சவால்கள்
95 ஆண்டுப் பழைய தரவுக்குப் பதிலாகத் தற்காலச் சான்று – 50%-ஐத் தாண்டிய 69%-ஐ நீதிமன்றத்தில் நியாயப்படுத்த; 2022 தீர்ப்பு கோரும் அடிப்படையுடன் உள் ஒதுக்கீடு; மக்கள்தொகையில் 88%-க்கும் மேல் உள்ள பிற்படுத்தப்பட்ட, SC, ST பிரிவுகளின் உண்மை நிலை; ஆதிதிராவிடர் உள்ளிட்டோருக்கு இலக்கு நலத்திட்டங்கள்.சென்சஸ் தரவுடன் முரண்பாடு, இரட்டிப்பு; தனிநபர் தரவுப் பாதுகாப்பு; சாதி அடையாள அரசியல் தீவிரமாகும் அச்சம்; சுய அறிவிப்பின் துல்லியம்; புதிய வழக்குகள்; செலவு, காலம்.

ஈ) முன்னோக்கிய வழி

  • வெளிப்படையான அறிவியல் முறை, சட்ட ஆதரவு; தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் ஆலோசனையுடன் வகைப்பாடு.
  • தனிநபர் விவரங்கள் பாதுகாப்பு; அடையாளம் நீக்கிய தரவு வெளியீடு; முடிவுகளை நலத்திட்ட இலக்கிடலுக்கும் உச்ச நீதிமன்ற வழக்குக்கும் பயன்படுத்துதல்.

முடிவுரை

சமூக நீதி இனி உணர்வால் அல்ல, சான்றால் காக்கப்பட வேண்டும்; நம்பகமான கணக்கெடுப்பு, 1921 முதல் வளர்ந்த தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு மரபுக்குச் சட்டக் கவசமாக அமையும்.

மதிப்பெண் பெறும் நுட்பம் (ஆசிரியர் குறிப்பு):
  • "ஆராய்ந்து" (அரசமைப்பு + நீதித்துறை), "மதிப்பிடுக" (முக்கியத்துவம்) – மூன்று தனித் தலைப்புகள்; மதிப்பீட்டில் வாய்ப்பு + சவால் இரண்டும்.
  • உறுப்புகளை அட்டவணையிலும், தீர்ப்புகளைக் காலவரிசை flowchart-இலும் தருவது 250 சொற்களில் முழுமையைக் காட்டும்.
  • "சென்சஸ் – ஒன்றியப் பட்டியல் 69; மாநிலக் கணக்கெடுப்பு – புள்ளிவிவர ஆய்வு" என்ற வேறுபாடு, 2022 வன்னியர் தீர்ப்பின் "சாதி ஒரே அடிப்படையாகக் கூடாது" என்ற வரி – இவை உயர் மதிப்பெண் தரும் நுணுக்கங்கள்.
  • 16.11.1992, 31.08.1994, 11.01.2007, 31.03.2022 – தேதிகள் சரியாக இருக்கட்டும்; 69% = BC 26.5 + BCM 3.5 + MBC/DNC 20 + SC 18 + ST 1 என்ற பகுப்பை ஒரு வரியில் தரலாம்.

சுமார் 310 சொற்கள் (அட்டவணைகள் உட்பட; குறிப்புப் பெட்டி நீங்கலாக) · 2 அட்டவணை + 1 flowchart · நேரம்: 12 நிமிடம்.

Model answer framework in English

Introduction

On 29.10.2026 the Tamil Nadu Cabinet, chaired by Chief Minister C. Joseph Vijay, decided to conduct a "social justice survey" through a commission that will include a retired judge. The commission will be set up in February–March 2027, and a detailed socio-economic survey will follow the caste enumeration of Census 2027. The last full caste census was held in 1931.

A) Constitutional framework

ProvisionContent
Articles 15(4), 16(4)Special provisions for socially and educationally backward classes, SCs and STs; reservation in posts; 15(4) added by the First Amendment (1951).
Articles 340, 342A(3)Backward classes commission; the 105th Amendment (2021) lets States prepare their own lists of backward classes.
Division of powersCensus – Union List (entry 69); inquiries and statistics for State / Concurrent matters – Concurrent List (entry 45) → what a State conducts is a "survey", not a census.
Article 31B, Ninth ScheduleTamil Nadu Act 45 of 1994 (69%) – 76th Amendment (1994), entry 257A.

B) Judicial framework

Champakam Dorairajan (1951)
➜
Article 15(4)
➜
Indra Sawhney – 50% ceiling (1992)
➜
Act 45 of 1994 + 76th Amendment
➜
I.R. Coelho (2007)
➜
Vanniyar judgment (2022)
  • Indra Sawhney (16.11.1992): reservation should not, as a rule, exceed 50%.
  • I.R. Coelho (11.01.2007): laws placed in the Ninth Schedule after 24.04.1973 are open to basic-structure review – the challenge to the 69% is pending in the Supreme Court.
  • Vanniyar 10.5% (31.03.2022): caste can be the starting point but not the sole basis; no substantial basis was shown for a separate class – the law was struck down.
  • Davinder Singh (01.08.2024): sub-classification within the Scheduled Castes is valid.

C) Significance of the survey – an assessment

OpportunitiesChallenges
Current evidence in place of 95-year-old data – to justify the 69%, which exceeds 50%, in court; internal quotas with the basis the 2022 judgment demands; the real condition of the backward classes, SCs and STs who form over 88% of the population; targeted welfare for groups such as the Adi Dravidars.Mismatch or duplication with Census data; protection of personal data; fear of sharper caste-identity politics; accuracy of self-declaration; fresh litigation; cost and time.

D) Way forward

  • A transparent, scientific method with legal backing; classification on the advice of the Tamil Nadu Backward Classes Commission.
  • Protect personal details; publish anonymised data; use the results for welfare targeting and in the Supreme Court case.

Conclusion

Social justice must now be defended by evidence, not by sentiment; a credible survey can become the legal shield for Tamil Nadu's reservation tradition that has grown since 1921.

Scoring tips (faculty note): "Examine" (constitutional + judicial framework) and "assess" (significance) – three separate headings; in the assessment show both opportunities and challenges. Articles in a table and judgments in a chronological flowchart show completeness within 250 words. The distinction "Census – Union List entry 69; State survey – statistics" and the 2022 Vanniyar line "caste cannot be the sole basis" are the fine points that earn high marks. Get the dates right – 16.11.1992, 31.08.1994, 11.01.2007, 31.03.2022; the split 69% = BC 26.5 + BCM 3.5 + MBC/DNC 20 + SC 18 + ST 1 can be given in one line.

About 430 words (including tables, excluding the tip box) · 2 tables + 1 flowchart · time: 12 minutes.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)

குரூப் 2 Mains பயிற்சி

புதிய பாடத்திட்டப்படி வகுப்புகள், test series, விடை திருத்தம் – கோவை, மதுரை, ஆன்லைன்.

Details 99941 46662