பதினாறாவது நிதிக் குழு (2026-31) மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 41%-ஆகவே தக்கவைத்து, கிடைமட்டப் பகிர்வுச் சூத்திரத்தில் "நாட்டின் GDP-க்கான பங்களிப்பு" என்ற புதிய அளவுகோலைச் சேர்த்துள்ளது. ஒன்றிய-மாநில வருவாய்ப் பகிர்வில் நிதிக் குழுவின் பங்கை விளக்கி, அதன் அண்மைப் பரிந்துரைகள் தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பிடுக.
The Sixteenth Finance Commission (2026-31) has kept the States' share of tax devolution at 41% and added a new criterion, "contribution to the national GDP", to the horizontal devolution formula. Explain the role of the Finance Commission in Union–State revenue sharing and assess the impact of its recent recommendations on Tamil Nadu.
➤ படிக்க வேண்டியவை – பாடக் குறிப்பு
முதலில் இதைப் படியுங்கள், பிறகு எழுதுங்கள். இது தகவல் குறிப்பு மட்டுமே – மாதிரி விடை நாளை.
1. செய்தி இணைப்பு
- 16-ஆவது நிதிக் குழு அறிக்கை – குடியரசுத் தலைவரிடம் 17.11.2025; நடவடிக்கை அறிக்கையுடன் (Explanatory Memorandum) 01.02.2026 அன்று நாடாளுமன்றத்தில்; பரிந்துரைக் காலம் 01.04.2026 முதல் 2026-27 – 2030-31; மாநிலங்களின் பங்கு 41%; வருவாய்ப் பற்றாக்குறை, துறை சார், மாநில சார் மானியங்கள் இல்லை (ஒன்றிய நிதி அமைச்சகம் – indiabudget.gov.in).
- தமிழ்நாட்டின் பங்கு 4.079% (15-ஆவது குழு) → 4.097% (16-ஆவது குழு); கர்நாடகம் 3.647 → 4.131; கேரளம் 1.925 → 2.382; ஆந்திரம் 4.047 → 4.217; தெலங்கானா 2.102 → 2.174 (The South First, 01.02.2026; Deccan Herald).
- மாநில அரசின் எதிர்வினை (இடைக்கால வரவுசெலவுத் திட்டம், பிப்ரவரி 2026): "பெரும் ஏமாற்றம்"; தமிழ்நாட்டுக்கு 0.44% மட்டுமே உயர்வு; செஸ், கூடுதல் வரி குறித்த கவலைகள் பிரதிபலிக்கவில்லை; தொடர்ந்த பங்குக் குறைவால் ₹3.17 லட்சம் கோடி இழப்பு என மாநில அரசு கணக்கிட்டது (Asianet Newsable, 17.02.2026).
2. கிடைமட்ட அளவுகோல்கள் (Business Today, 01.02.2026)
| அளவுகோல் | 15-ஆவது | 16-ஆவது |
|---|---|---|
| வருமான இடைவெளி | 45 | 42.5 |
| மக்கள்தொகை (2011) | 15 | 17.5 |
| மக்கள்தொகைச் செயல்திறன் | 12.5 | 10 |
| பரப்பளவு | 15 | 10 |
| காடு | 10 | 10 |
| வரி, நிதி முயற்சி | 2.5 | – |
| GDP-க்கான பங்களிப்பு | – | 10 |
3. மானியங்கள், நிதி ஒழுங்கு (2026-31)
- உள்ளாட்சி மானியம் ₹7,91,493 கோடி – அடிப்படை, செயல்திறன் கூறுகள் ஊரக:நகர்ப்புறம் 60:40; அவற்றுள் அடிப்படை:செயல்திறன் 80:20; நகரமயமாக்கல் ஊக்கத்தொகை ₹10,000 கோடி; சிறப்புக் கட்டமைப்புக் கூறு ₹56,100 கோடி.
- பேரிடர்: SDRF + SDMF ₹2,04,401 கோடி (SDRF ₹1,63,521 கோடி; SDMF ₹40,880 கோடி); ஒன்றியப் பங்கு ₹1,55,915.85 கோடி; NDRF + NDMF ₹79,406 கோடி; பங்கீடு 75:25 (வடகிழக்கு, இமயமலை மாநிலங்கள் 90:10).
- மாநில நிதிப் பற்றாக்குறை GSDP-இல் 3% (SASCI கடன் நீங்கலாக); ஒன்றியம் 2030-31-க்குள் 3.5%.
4. அரசமைப்பு அடிப்படை
- உறுப்பு 270 – ஒன்றிய வரிகளின் பகிர்வு; உறுப்பு 275 – மானியங்கள்; உறுப்பு 280 – நிதிக் குழு (280(3)(bb), (c) – ஊராட்சி, நகராட்சி நிதி வலுப்படுத்தல்); உறுப்பு 243-I, 243Y – மாநில நிதிக் குழு.
5. விடையை உயர்த்தும் சொற்கள்
- பகிர்வுக்குரிய தொகுப்பு (divisible pool), செங்குத்து / கிடைமட்டப் பகிர்வு (vertical / horizontal devolution), நிதிக் கூட்டாட்சி (fiscal federalism), சமத்துவம்-செயல்திறன் சமநிலை (equity–efficiency balance), கூட்டுறவுக் கூட்டாட்சி (cooperative federalism).
Reference note in English
Key facts
- Sixteenth Finance Commission (Chair: Dr Arvind Panagariya): report to the President 17.11.2025; laid in Parliament with the Explanatory Memorandum (Action Taken Report) on 01.02.2026; award 2026-27 to 2030-31 from 01.04.2026; States' share 41%; no revenue deficit, sector-specific or State-specific grants (Union Ministry of Finance – indiabudget.gov.in).
- Inter-se shares, 15th → 16th FC: Tamil Nadu 4.079 → 4.097; Karnataka 3.647 → 4.131; Kerala 1.925 → 2.382; Andhra Pradesh 4.047 → 4.217; Telangana 2.102 → 2.174 (The South First, 01.02.2026; Deccan Herald).
- State Government reaction (interim Budget, February 2026): "a great disappointment"; only a 0.44% rise for Tamil Nadu; concerns on cesses and surcharges not reflected; the State estimated a loss of ₹3.17 lakh crore from the long fall in its share (Asianet Newsable, 17.02.2026).
- Horizontal criteria, 15th → 16th FC (%): income distance 45 → 42.5; population (2011) 15 → 17.5; demographic performance 12.5 → 10; area 15 → 10; forest 10 → 10; tax and fiscal effort 2.5 → dropped; contribution to GDP – → 10 (Business Today, 01.02.2026).
- Grants 2026-31: local bodies ₹7,91,493 crore – basic and performance components split 60:40 rural:urban, 80:20 basic:performance; urbanisation premium ₹10,000 crore; special infrastructure component ₹56,100 crore. Disaster: SDRF + SDMF ₹2,04,401 crore (SDRF ₹1,63,521 crore; SDMF ₹40,880 crore), Union share ₹1,55,915.85 crore; NDRF + NDMF ₹79,406 crore; cost sharing 75:25 (90:10 for north-eastern and Himalayan States).
- Fiscal path: State fiscal deficit 3% of GSDP (excluding SASCI loans); Union 3.5% of GDP by 2030-31.
- Constitution: Art. 270 (sharing of Union taxes), Art. 275 (grants), Art. 280 (Finance Commission; 280(3)(bb), (c) – resources of panchayats and municipalities), Arts. 243-I and 243Y (State Finance Commission).
- Value-add terms: divisible pool, vertical / horizontal devolution, fiscal federalism, equity–efficiency balance, cooperative federalism.
Official Sources:
- 16-ஆவது நிதிக் குழு பரிந்துரைகள் மீதான நடவடிக்கை விளக்கக் குறிப்பு, 01.02.2026 (ஒன்றிய நிதி அமைச்சகம் – அதிகாரப்பூர்வ PDF)
- 16-ஆவது நிதிக் குழு – தென் மாநிலங்களின் பங்கு ஒப்பீடு (Deccan Herald)
- கிடைமட்டப் பகிர்வில் "GDP பங்களிப்பு" புதிய அளவுகோல் (Business Today, 01.02.2026)
இந்தப் பாடத்தை முழுமையாகப் படிக்க – எங்கள் புத்தகம்:
எப்படி அணுகுவது? (குறிப்புகள்)
- இரண்டு செயல்வினைகள் – "விளக்கி" (நிதிக் குழுவின் பங்கு), "மதிப்பிடுக" (தமிழ்நாட்டுக்குத் தாக்கம்): முன்னுரை, பங்கு, சூத்திர மாற்றம், தாக்கம், முன்னோக்கிய வழி, முடிவுரை.
- 15, 16-ஆவது குழுக்களின் அளவுகோல் ஒப்பீட்டு அட்டவணையும், "மொத்த வரி → பகிர்வுக்குரிய தொகுப்பு → 41% → சூத்திரம் → தமிழ்நாடு 4.097%" என்ற flowchart-உம் வரையுங்கள்.
- தமிழ்நாடு 4.079 → 4.097% (விகித அளவில் 0.44% உயர்வு), கர்நாடகம், கேரளம் ஒப்பீடு, உள்ளாட்சி மானியம் ₹7,91,493 கோடி, 3% GSDP வரம்பு ஆகிய தரவுகளைப் பயன்படுத்துங்கள்.
- சாதகம், கவலை இரண்டையும் காட்டி, செஸ்-கூடுதல் வரி சீரமைப்பு, உள்ளாட்சி நிபந்தனைகள், சொந்த வருவாய் உயர்வு என்ற முன்னோக்கிய வழியுடன் முடியுங்கள்; நடுநிலையாக எழுதுங்கள்.
In English: Two directive verbs – "explain" (role of the FC) and "assess" (impact on Tamil Nadu); headings for the introduction, role, change in formula, impact, way forward and conclusion · draw a 15th vs 16th FC criteria table and the flowchart gross tax → divisible pool → 41% → formula → Tamil Nadu 4.097% · use Tamil Nadu 4.079 → 4.097% (a relative rise of 0.44%), the Karnataka and Kerala comparison, local body grants of ₹7,91,493 crore and the 3% of GSDP cap · show both gains and concerns and end with the way forward – cesses and surcharges, local body conditions, own revenue; stay neutral
Send Your Answer
காகிதத்தில் எழுதி, தெளிவான படம் எடுத்து WhatsApp-இல் அனுப்புங்கள் (பெயர், ஊர் குறிப்பிடுங்கள்). சிறந்த விடைகள் உங்கள் அனுமதியுடன் இங்கே வெளியிடப்படும்.
WhatsApp-இல் அனுப்பு (99941 46662) Evaluation Rubric · மதிப்பீட்டு அளவுகோல்மாதிரி விடை வடிவம் – Shanmugam IAS Academy
முன்னுரை
அரசமைப்பு உறுப்பு 280-இன் கீழ் ஐந்தாண்டுக்கு ஒருமுறை அமைக்கப்படும் நிதிக் குழு ஒன்றிய-மாநில வருவாய்ப் பகிர்வின் "சமநிலைச் சக்கரம்". முனைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-ஆவது நிதிக் குழு அறிக்கையைக் குடியரசுத் தலைவரிடம் 17.11.2025 அன்று அளித்தது; நடவடிக்கை அறிக்கையுடன் 01.02.2026 அன்று நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. பரிந்துரைக் காலம் 2026-27 முதல் 2030-31 வரை.
அ) வருவாய்ப் பகிர்வில் நிதிக் குழுவின் பங்கு
| பணி | விளக்கம் |
|---|---|
| செங்குத்துப் பகிர்வு | பகிர்வுக்குரிய வரித் தொகுப்பில் மாநிலங்களின் பங்கு – 16-ஆவது குழுவும் 41%. |
| கிடைமட்டப் பகிர்வு | மாநிலங்களுக்கு இடையே பங்கீட்டுச் சூத்திரம் (தேவை + சமத்துவம் + செயல்திறன்). |
| மானியங்கள் (உறுப்பு 275) | உள்ளாட்சி, பேரிடர் மானியங்கள்; 16-ஆவது குழு வருவாய்ப் பற்றாக்குறை, துறை சார், மாநில சார் மானியங்களைப் பரிந்துரைக்கவில்லை. |
| நிதி ஒழுங்கு | மாநில நிதிப் பற்றாக்குறை GSDP-இல் 3%; ஒன்றியம் 2030-31-க்குள் GDP-இல் 3.5% (பரிந்துரை; ஒன்றிய அரசு தனியே பரிசீலிக்கும்); வரவுசெலவுக்கு வெளியிலான கடன் நிறுத்தம். |
ஆ) கிடைமட்டச் சூத்திர மாற்றம்
| அளவுகோல் | 15-ஆவது குழு | 16-ஆவது குழு |
|---|---|---|
| வருமான இடைவெளி | 45% | 42.5% |
| மக்கள்தொகை (2011) | 15% | 17.5% |
| மக்கள்தொகைச் செயல்திறன் | 12.5% | 10% |
| பரப்பளவு | 15% | 10% |
| காடு | 10% | 10% |
| வரி, நிதி முயற்சி | 2.5% | நீக்கம் |
| GDP-க்கான பங்களிப்பு | – | 10% (புதிது) |
இ) தமிழ்நாட்டுக்கான தாக்கம் – மதிப்பீடு
| சாதகம் | கவலை |
|---|---|
| பங்கு 4.079% → 4.097% – சிறிய உயர்வு; "GDP பங்களிப்பு" அளவுகோல் தொழில்மயமான தமிழ்நாட்டின் உழைப்பை முதன்முறையாக அங்கீகரிக்கிறது. | உயர்வு வெறும் 0.44% (விகித அளவில்; 0.018 சதவீதப் புள்ளி மட்டுமே); கர்நாடகம் (3.647 → 4.131%), கேரளம் (1.925 → 2.382%) அதிகம் பெற்றன; வருமான இடைவெளிக்கு 42.5% எடை இன்னும் வளமான மாநிலங்களுக்குப் பாதகம். |
| மக்கள்தொகைச் செயல்திறனுக்கு 10% எடை – மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டுக்குப் பயன். | செஸ், கூடுதல் வரிகள் பகிர்வுத் தொகுப்புக்கு வெளியே – மாநில அரசு (பிப்ரவரி 2026) இந்த அறிக்கையை "பெரும் ஏமாற்றம்" என்றது. |
| உள்ளாட்சி மானியம் ₹7,91,493 கோடி; பேரிடர் நிதி (SDRF+SDMF) ₹2,04,401 கோடி – புயல் பாதிப்புள்ள தமிழ்நாட்டுக்கு முக்கியம். | உள்ளாட்சி மானியம் பெற உள்ளாட்சி அமைப்புகள் அமைக்கப்பட்டிருத்தல், கணக்கு வெளியீடு, மாநில நிதிக் குழு – முன்நிபந்தனைகள்; 3% நிதிப் பற்றாக்குறை வரம்பு. |
ஈ) முன்னோக்கிய வழி
- செஸ், கூடுதல் வரிகளுக்கு உச்சவரம்பு அல்லது பகிர்வுத் தொகுப்பில் சேர்ப்பு – GST மன்றம், மாநிலங்களுக்கு இடையேயான மன்றம் வழி கூட்டு உரையாடல்.
- உள்ளாட்சித் தேர்தல், மாநில நிதிக் குழு, கணக்குத் தணிக்கை ஆகியவற்றை உரிய காலத்தில் முடித்து மானியங்களை முழுமையாகப் பெறுதல்.
- சொந்த வரி வருவாய் உயர்வு, மானியச் சீரமைப்பு, கடன் மேலாண்மை.
முடிவுரை
16-ஆவது நிதிக் குழு "சமத்துவம்" என்ற கொள்கையோடு "செயல்திறன்" என்பதையும் சேர்த்திருப்பது சரியான திசை; ஆனால் அதிக வருவாய் ஈட்டும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு நியாயமான பங்கு கிடைக்கும் வகையில் கூட்டுறவுக் கூட்டாட்சி வலுப்பட வேண்டும்.
- "விளக்கி" (நிதிக் குழுவின் பங்கு) + "மதிப்பிடுக" (தமிழ்நாட்டுக்குத் தாக்கம்) – தனித் தலைப்புகள்; சாதகம், கவலை இரண்டும் கட்டாயம்.
- 15 vs 16 அளவுகோல் அட்டவணை இந்த விடையின் மையம்; எண்கள்: 41%, 4.079 → 4.097%, 42.5 / 17.5 / 10, ₹7,91,493 கோடி, 3% GSDP.
- உறுப்பு 270, 275, 280 – அரசமைப்பு அடிப்படையைச் சுட்டுங்கள்; "பகிர்வுக்குரிய தொகுப்பு (divisible pool)", "நிதிக் கூட்டாட்சி (fiscal federalism)" போன்ற சொற்கள் மதிப்பெண் தரும்.
- கட்சி, தலைவர் பெயர்கள் வேண்டாம்; "மாநில அரசு" என்று குறிப்பிட்டு நடுநிலையாக எழுதுங்கள்.
சுமார் 350 சொற்கள் (அட்டவணைகள் உட்பட; குறிப்புப் பெட்டி நீங்கலாக) · 3 அட்டவணை + 1 flowchart · நேரம்: 12 நிமிடம்.
இன்றைய 3 வினாக்களின் மாதிரி விடைகள் – PDF பதிவிறக்கம்
Model answer framework in English
Introduction
The Finance Commission, set up every five years under Article 280, is the balancing wheel of Union–State revenue sharing. The Sixteenth Finance Commission, chaired by Dr Arvind Panagariya, submitted its report to the President on 17.11.2025; it was laid in Parliament with the Action Taken Report on 01.02.2026. Its award covers 2026-27 to 2030-31.
A) Role of the Finance Commission in revenue sharing
| Function | Explanation |
|---|---|
| Vertical devolution | States' share of the divisible pool of Union taxes – kept at 41% by the 16th FC. |
| Horizontal devolution | A formula to share among States (need + equity + performance). |
| Grants (Article 275) | Local body and disaster grants; the 16th FC recommended no revenue deficit, sector-specific or State-specific grants. |
| Fiscal discipline | State fiscal deficit at 3% of GSDP; the Union at 3.5% of GDP by 2030-31 (recommended; the Union will examine it separately); off-budget borrowing to end. |
B) Change in the horizontal formula
| Criterion | 15th FC | 16th FC |
|---|---|---|
| Income distance | 45% | 42.5% |
| Population (2011) | 15% | 17.5% |
| Demographic performance | 12.5% | 10% |
| Area | 15% | 10% |
| Forest | 10% | 10% |
| Tax and fiscal effort | 2.5% | Dropped |
| Contribution to GDP | – | 10% (new) |
C) Impact on Tamil Nadu – an assessment
| Gains | Concerns |
|---|---|
| Share 4.079% → 4.097% – a small rise; the "contribution to GDP" criterion rewards industrialised Tamil Nadu for the first time. | The rise is only 0.44% (a relative rise – just 0.018 percentage point); Karnataka (3.647 → 4.131%) and Kerala (1.925 → 2.382%) gained more; 42.5% weight for income distance still hurts richer States. |
| 10% for demographic performance rewards Tamil Nadu's success in population control. | Cesses and surcharges stay outside the divisible pool – the State Government (February 2026) called the report "a great disappointment". |
| Local body grants of ₹7,91,493 crore; disaster funds (SDRF + SDMF) of ₹2,04,401 crore – vital for cyclone-prone Tamil Nadu. | Local body grants need entry conditions – constituted local bodies, published accounts, a State Finance Commission; the 3% fiscal deficit cap. |
D) Way forward
- Cap cesses and surcharges or bring them into the divisible pool – joint dialogue through the GST Council and the Inter-State Council.
- Complete local body elections, the State Finance Commission and audits on time to draw the full grants.
- Raise own tax revenue, rationalise subsidies and manage debt.
Conclusion
Adding "efficiency" to "equity" is the right direction for the 16th FC; but cooperative federalism must grow so that high-contributing States like Tamil Nadu receive a fair share.
About 420 words (including tables, excluding the tip box) · 3 tables + 1 flowchart · time: 12 minutes.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
குரூப் 2 Mains பயிற்சி
புதிய பாடத்திட்டப்படி வகுப்புகள், test series, விடை திருத்தம் – கோவை, மதுரை, ஆன்லைன்.
Details 99941 46662Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 2 / 2A Mains – மாதிரி விடைகளுடன் நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
M04-E · Science & Technology – TNPSC Group 2/2A Mains (English)
₹249
M06-E · Geography & Environment – TNPSC Group 2/2A Mains (English)
₹249
M07-த · இந்தியப் பொருளாதாரம் – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)
₹249
M10-த · குரூப் 2/2A Mains முந்தைய வினா & மாதிரி விடை (தமிழ்)
₹249TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai

