மன்னார் வளைகுடா, பாக் விரிகுடா ஆகியவற்றின் சூழலியல், பொருளாதார முக்கியத்துவத்தை விளக்கி, இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்புக் காப்பகம் உள்ளிட்ட அவற்றைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மதிப்பிடுக.
Explain the ecological and economic importance of the Gulf of Mannar and Palk Bay for Tamil Nadu, and evaluate the measures taken to protect them, including India's first Dugong Conservation Reserve.
➤ படிக்க வேண்டியவை – பாடக் குறிப்பு
முதலில் இதைப் படியுங்கள், பிறகு எழுதுங்கள். இது தகவல் குறிப்பு மட்டுமே – மாதிரி விடை நாளை.
1. பின்னணி
- மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்கா – 1986; தூத்துக்குடி முதல் தனுஷ்கோடி வரை 21 தீவுகள்.
- மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் – 1989; 10,500 ச.கி.மீ. கடல் பரப்பு + 21 தீவுகள் + கடற்கரை.
- கடற்பசு பாதுகாப்புக் காப்பகம் – அ.ஆ.(நிலை) எண் 165, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத் துறை, 21.09.2022; அறிவிப்பு சட்டமன்றத்தில் 03.09.2021.
2. முக்கியத் தரவு
| குறியீடு | விவரம் |
|---|---|
| உயிரினங்கள் | 3,600-க்கும் மேல்; 117 கடின பவள இனங்கள் |
| கடற்பசு காப்பகம் | 448.34 ச.கி.மீ.; தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டக் கடல் பகுதி; இரு மாவட்டங்களிலும் சுமார் 12,250 ஹெக்டேர் கடற்புல் |
| கடற்பசு | நாடு முழுவதும் சுமார் 240 (2022 மதிப்பீடு), பெரும்பாலானவை பாக் விரிகுடாவில்; வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972 – அட்டவணை I |
| பன்னாட்டு அங்கீகாரம் | IUCN உலகப் பாதுகாப்பு மாநாடு 2025 (அபுதாபி, அக்டோபர் 2025) – தீர்மானம் 25 |
3. பாடத்திட்டத் தொடர்பு
- அலகு VI – சுற்றுச்சூழல், உயிர்ப்பன்மை; ஆலிவ் ரிட்லி ஆமைகள் (07.11 வினா), மேற்குத் தொடர்ச்சி மலை (17.11 வினா), சுனாமி ஆயத்தம் (05.11 வினா) ஆகியவற்றுடன் இணைத்து எழுதலாம்.
4. விடையை உயர்த்தும் சொற்கள்
- பவள வெளுப்பு (coral bleaching), கடற்புல் படுகை (seagrass meadow), நீலக் கார்பன் (blue carbon), உயிர்க்கோளக் காப்பகம் (biosphere reserve), சமூகப் பங்கேற்புப் பாதுகாப்பு (community conservation), எல்லை கடந்த பாதுகாப்பு (transboundary conservation).
Reference note in English
Key facts
- Gulf of Mannar Marine National Park – 1986; 21 islands between Thoothukudi and Dhanushkodi.
- Gulf of Mannar Biosphere Reserve – 1989; 10,500 sq km of sea plus the 21 islands and adjoining coast; over 3,600 species, 117 hard coral species.
- Dugong Conservation Reserve – G.O.(Ms) No. 165, Environment, Climate Change and Forest Department, 21.09.2022 (announced in the Assembly on 03.09.2021); 448.34 sq km off Thanjavur and Pudukkottai; about 12,250 ha of seagrass in the two districts.
- About 240 dugongs in India (2022 estimate), mostly in Palk Bay; Schedule I of the Wild Life (Protection) Act 1972.
- Recognised by IUCN World Conservation Congress 2025 (Abu Dhabi, October 2025) – Resolution 25.
- Answer-boosting terms: coral bleaching, seagrass meadow, blue carbon, biosphere reserve, community conservation, transboundary conservation.
Official Sources:
- இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்புக் காப்பகம் – தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் 1645 (21.09.2022)
- Palk Bay Dugong Conservation Reserve – Tamil Nadu Gazette notification (21.09.2022)
- IUCN recognises India's first Dugong Conservation Reserve in Palk Bay (Deccan Herald)
இந்தப் பாடத்தை முழுமையாகப் படிக்க – எங்கள் புத்தகம்:
எப்படி அணுகுவது? (குறிப்புகள்)
- செயல்வினை "விளக்கி, மதிப்பிடுக" – முக்கியத்துவம், அச்சுறுத்தல் – நடவடிக்கை (மதிப்பீட்டுடன்), முன்னோக்கிய வழி என மூன்று தலைப்புகள்.
- "பவளப்பாறை + கடற்புல் → மீன் இனப்பெருக்கம் → மீனவர் வாழ்வாதாரம் → கடலோரப் பாதுகாப்பு" flowchart வரையுங்கள்.
- தரவு: 1986 தேசியப் பூங்கா (21 தீவுகள்); 1989 உயிர்க்கோளக் காப்பகம் (10,500 ச.கி.மீ.); 117 கடின பவள இனங்கள்; கடற்பசு காப்பகம் 448.34 ச.கி.மீ. (21.09.2022).
- இந்தியா – இலங்கை கூட்டுப் பாதுகாப்பு, மீனவர் பங்கேற்பு ஆகியவற்றுடன் முடியுங்கள்.
In English: Directive verbs "explain" and "evaluate" – three headings: importance, threats–measures (with evaluation), way forward · draw the flowchart corals + seagrass → fish breeding → fishers' livelihood → coastal protection · data: National Park 1986 (21 islands); Biosphere Reserve 1989 (10,500 sq km); 117 hard coral species; dugong reserve 448.34 sq km (21.09.2022) · end with India–Sri Lanka cooperation and fishers' participation
Send Your Answer
காகிதத்தில் எழுதி, தெளிவான படம் எடுத்து WhatsApp-இல் அனுப்புங்கள் (பெயர், ஊர் குறிப்பிடுங்கள்). சிறந்த விடைகள் உங்கள் அனுமதியுடன் இங்கே வெளியிடப்படும்.
WhatsApp-இல் அனுப்பு (99941 46662) Evaluation Rubric · மதிப்பீட்டு அளவுகோல்மாதிரி விடை வடிவம் – Shanmugam IAS Academy
முன்னுரை
இராமேசுவரம் – தூத்துக்குடி இடையிலான மன்னார் வளைகுடாவும் அதன் வடக்கே உள்ள பாக் விரிகுடாவும் தமிழ்நாட்டின் கடல் உயிர்ப்பன்மையின் கருவூலங்கள். 1986-இல் 21 தீவுகள் கடல் தேசியப் பூங்காவாகவும், 1989-இல் 10,500 ச.கி.மீ. பரப்பு உயிர்க்கோளக் காப்பகமாகவும் அறிவிக்கப்பட்டன; 21.09.2022-இல் பாக் விரிகுடாவில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்புக் காப்பகம்.
அ) முக்கியத்துவம்
| கோணம் | விவரம் |
|---|---|
| உயிர்ப்பன்மை | 3,600-க்கும் மேற்பட்ட உயிரினங்கள்; 117 கடின பவள இனங்கள்; கடற்பசு, கடல் ஆமை, டால்பின். |
| பொருளாதாரம் | மீன்பிடி, கடற்பாசி வளர்ப்பு, சூழல் சுற்றுலா – கடலோர மீனவ ஊர்களின் வாழ்வாதாரம். |
| சூழல் சேவை | பவளப்பாறைகள் அலைச் சக்தியைக் குறைக்கின்றன; கடற்புல் படுகைகள் கார்பனைச் சேமிக்கின்றன (நீலக் கார்பன்). |
ஆ) அச்சுறுத்தல் – நடவடிக்கை: மதிப்பீடு
| அச்சுறுத்தல் | நடவடிக்கை | மதிப்பீடு |
|---|---|---|
| கடல் வெப்பம் – பவள வெளுப்பு | பவள மறுசீரமைப்பு, செயற்கைப் பாறைகள் | சிறு அளவு; காலநிலை மாற்றம் தொடர்கிறது |
| இழுவலை மீன்பிடி, பவளச் சுரங்கம் | தேசியப் பூங்காவில் தடை; பவளம் எடுப்பதற்குத் தடை | கண்காணிப்புக் குறைவு; மீனவர் எல்லைச் சிக்கல் |
| கடற்புல் அழிவு, கடற்பசு வலையில் சிக்குதல் | கடற்பசு காப்பகம் – 448.34 ச.கி.மீ., தஞ்சாவூர், புதுக்கோட்டை (அ.ஆ. 165); IUCN உலகப் பாதுகாப்பு மாநாடு 2025 அங்கீகாரம் | முன்னோடி; ~240 கடற்பசுக்களே (2022, நாடு முழுவதும்) |
| தொழிற்சாலை, நகரக் கழிவு | கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகள் | நடைமுறை பலவீனம் |
இ) முன்னோக்கிய வழி
- மீனவர் பங்கேற்புப் பாதுகாப்பு – கடற்பசு காவலர்கள், வலையில் சிக்கியதை விடுவித்தால் இழப்பீடு.
- இழுவலையிலிருந்து ஆழ்கடல் மீன்பிடி, கடற்பாசி வளர்ப்புக்கு மாற்றம்.
- பவள வெளுப்பு – செயற்கைக்கோள் கடல் வெப்பக் கண்காணிப்பு, எச்சரிக்கை.
- இந்தியா – இலங்கை கூட்டுக் கடல் பாதுகாப்பு; பெருந்திட்டங்களுக்கு முழுமையான சூழல் தாக்க மதிப்பீடு.
முடிவுரை
மன்னார் வளைகுடாவும் பாக் விரிகுடாவும் தமிழ்நாட்டின் "கடல் மழைக்காடுகள்"; சட்டப் பாதுகாப்புடன் மீனவர் வாழ்வாதாரத்தையும் இணைக்கும் "மக்கள் – கடல்" கூட்டுப் பாதுகாப்பே நீடித்த தீர்வு.
- "விளக்கி, மதிப்பிடுக" – முக்கியத்துவம், அச்சுறுத்தல் – நடவடிக்கை – மதிப்பீடு (மூன்று நெடுவரிசை), வழிமுறைகள்.
- ஆண்டுகள் (1986, 1989, 21.09.2022), எண்கள் (21 தீவுகள், 10,500 ச.கி.மீ., 448.34 ச.கி.மீ., 117 பவள இனங்கள்) சரியாக இருக்க வேண்டும்.
- சிறு வரைபடம்: இராமேசுவரம் – தூத்துக்குடி (மன்னார் வளைகுடா), தஞ்சாவூர் – புதுக்கோட்டைக் கடற்கரை (கடற்பசு காப்பகம்) – கூடுதல் மதிப்பெண்.
சுமார் 230 சொற்கள் (அட்டவணைகள் உட்பட; குறிப்புப் பெட்டி நீங்கலாக) · 2 அட்டவணை + 1 flowchart · நேரம்: 12 நிமிடம்.
இன்றைய 3 வினாக்களின் மாதிரி விடைகள் – PDF பதிவிறக்கம்
Model answer framework in English
Introduction
The Gulf of Mannar between Rameswaram and Thoothukudi, and Palk Bay to its north, are treasure-houses of Tamil Nadu's marine biodiversity. Twenty-one islands were declared a Marine National Park in 1986 and 10,500 sq km a Biosphere Reserve in 1989; on 21.09.2022 India's first Dugong Conservation Reserve was notified in Palk Bay.
A) Importance
| Aspect | Details |
|---|---|
| Biodiversity | Over 3,600 species; 117 hard coral species; dugong, sea turtles, dolphins. |
| Economy | Fishing, seaweed farming, eco-tourism – livelihood of coastal fishing villages. |
| Ecosystem services | Reefs reduce wave energy; seagrass beds store carbon (blue carbon). |
B) Threats and measures: evaluation
| Threat | Measure | Evaluation |
|---|---|---|
| Warming seas – coral bleaching | Coral restoration, artificial reefs | Small scale; climate change continues |
| Trawling, coral mining | Bans inside the National Park; coral collection banned | Weak patrolling; fishers' boundary issue |
| Seagrass loss, dugong by-catch | Dugong reserve – 448.34 sq km off Thanjavur and Pudukkottai (G.O. 165); recognised at the IUCN World Conservation Congress 2025 | Pioneering; only ~240 dugongs in India (2022) |
| Industrial and urban waste | Coastal Regulation Zone (CRZ) rules | Weak enforcement |
C) Way forward
- Community conservation – dugong guardians, compensation for releasing entangled animals.
- Shift from trawling to deep-sea fishing and seaweed farming.
- Satellite sea-temperature monitoring and bleaching alerts.
- India–Sri Lanka marine cooperation; full environmental impact assessment for big projects.
Conclusion
The Gulf of Mannar and Palk Bay are Tamil Nadu's "rainforests of the sea"; a people-and-sea partnership that joins legal protection with fishers' livelihoods is the lasting answer.
About 260 words (including tables, excluding the tip box) · 2 tables + 1 flowchart · time: 12 minutes.
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
குரூப் 2 Mains பயிற்சி
புதிய பாடத்திட்டப்படி வகுப்புகள், test series, விடை திருத்தம் – கோவை, மதுரை, ஆன்லைன்.
Details 99941 46662Today Current Affairs in Tamil | 23 நவம்பர் 2026 | TNPSC Group 4 முக்கிய வினாக்கள்
📚 TNPSC குரூப் 2 / 2A Mains – மாதிரி விடைகளுடன் நூல்கள்
PDF நூல்கள் · ₹149 முதல் · ஒவ்வொன்றுக்கும் 50 பக்க இலவச மாதிரி · UPI-இல் பணம் செலுத்தியதும் உடனே பதிவிறக்கம்
M04-E · Science & Technology – TNPSC Group 2/2A Mains (English)
₹249
M06-E · Geography & Environment – TNPSC Group 2/2A Mains (English)
₹249
M07-த · இந்தியப் பொருளாதாரம் – TNPSC குரூப் 2/2A Mains (தமிழ்)
₹249
M10-த · குரூப் 2/2A Mains முந்தைய வினா & மாதிரி விடை (தமிழ்)
₹249TNPSC குரூப் 1, 2/2A, 4 – நேரடி வகுப்புகள் · கோவை & மதுரை
2006 முதல் சண்முகம் IAS அகாடமி · Classroom & online coaching in Coimbatore and Madurai

